Friday, March 08, 2019

அழகாக இருக்கிறான் ! எனக்கு பயமாவே இல்லை ! !!!!!(பயணத்தொடர், பகுதி 76 )

இங்கே கோழிக்குத்தியில் இருந்து வெறும் அஞ்சே கிமீ தூரத்தில் 'மருவினிய மைந்தன்'  பள்ளிகொண்டு இருக்கிறார்! சுகந்தவனநாதர்!  கமகமன்னு மணம் வீசும் காட்டுக்குள்ளில் கிடப்பு !   க்க்கும்.....  இப்போ?  காடு எங்கே?  எல்லா இடமும் ஊர் ஆகிப்போய்க் கிடக்கே.....  நறுமணம் எங்கேன்னுதான் தேடணும்....
போகட்டும்....  இவனுக்கு இன்னொரு பெயர் இருக்கே.... அதைச் சொன்னால் அவனா இவன்? னு தோணும்... பரிமளரெங்கநாதர். திரு இந்தளூர் பரிமளரெங்கநாதர்!

ஏற்கெனவே ரெண்டுமுறை இங்கே வந்துபோய் பதிவும் போட்டாச்சு.  முதல்முறை வந்தப்ப.....  தைலக்காப்புன்னு சொல்லி ஒளிஞ்சுருந்தார். புரட்டாசி மாதம்!  அடடா..... புண்ணியமாசமாச்சேன்னு.... போயிடக்கூடாது நாம்....

(ஃபிஜித்தீவு தமிழர்கள் இந்த புரட்டாசியை எப்படிக் குறிப்பிடுவாங்கன்னு சொல்லவா?  கோவிந்தா மாசம்!  மாதங்களில் இவர் மார்கழின்ற கதையெல்லாம் அங்கே இல்லையாக்கும்..... )
இந்த  ரங்கன் நல்லா நம்ம திருமங்கை ஆழ்வாரிடம் வாங்கிக் கட்டிக்கிட்ட கதை தெரியுமோ?

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து; அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு,
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்!
வாசி வல்லீர் இந்தளூரீரே! - வாழ்ந்தே போம் நீரே!


ஏகாதசி விரதத்தின் முக்கியம் குறித்தும் இவராண்டை கதை இருக்கு!  ஏற்கெனவே எழுதிட்டதால்.... இன்னொருக்கா எழுதும் எண்ணம் வரலை. கோவில்கதைகள் அப்படிக்கப்படியேதான் எப்பவும் ........ கொஞ்சம் புதுமைகள் இருக்கப்டாதோ? :-)




முதல்முறை 


ரெண்டாம்முறை

க்ளிக்கினால் வாசிக்கலாம். உங்க விருப்பம்....

வீரசயனத்தில் இருந்தவரைக் கண்குளிர தரிசிக்க முடிஞ்சது இந்தமுறை!  தலைமாட்டில் சூரியன், கால்மாட்டில் சந்திரன்,  முதுகுப்பக்கம்  கங்கையும் காவேரியும்......!!!

அழகாக இருக்கிறான் !  எனக்கு பயமாவே இல்லை ! தீபாராதனை காமிச்சுப் பிரஸாதம் கொடுத்தார் பட்டர் ஸ்வாமிகள்!  வெளியே யாரையுமே பார்க்காததால்   இவரிடமே படம் எடுத்துக்க அனுமதி வாங்கினோம்.

பிரகாரம் வலம்  வரணும். கோவில் சுத்தமாத்தான் இருக்கு!  கூட்டமே இல்லை....   ரெண்டுங்கெட்டான் நேரம் போல.....  மணி பத்தாறது.....
தாயார் பரிமள ரங்கநாயகி, வாடீம்மான்னு கூப்ட்டாப்ல தோணுச்சு!   தனிசந்நிதியில்  விக்விக்ன்னு உக்கார்ந்துண்டு இருக்காள்.
நம்ம ஆண்டாளம்மா.... இன்னும் சுத்தம். எப்பவுமே தனி என்பதால்  டோண்ட்கேர்ன்னு நிக்கறாள்.  இன்னும் சொல்லப்போனா நம்ம 'தூமணி மாடத்து'க்குக் காத்து நிக்கற மாதிரி.  சரியாப் பாடலைன்னு என்னைக்குத் தலையில் குட்டு வைக்கப்போறாளோ?

ரெண்டுபேரும் கம்பிக்கதவுக்குப் பின்னாலேதான்....    பட்டர்ஸ்வாமிகளிடம் திறக்கச் சொல்லி இருக்கலாமேன்னு இப்போ தோணுது.....

மண்டபத்தூண்களில் சிற்பங்கள் கொட்டிக்கிடக்குன்னு சொல்லலாம்.  ஏதோ  விசேஷ கற்களால் ஆன தூண்களோ?  சிற்பங்கள் ஒரு மினுமினுப்பில் அப்படியே நம்மை இழுத்துருது!   ராமனும் க்ருஷ்ணனும்தான் அதிகம். ராமாயண சீன்ஸ் அருமை!
அதிலும்.....   இந்தத் தாயும் மகனும்......     ஹாஹா   அற்புதம்!
ரவிவர்மாவில் பார்த்த  மஹாலக்ஷ்மியை இப்போ நேரில்   கண்டேன்!

எடுத்தது கண்டார், இற்றது கேட்டார் !!!!

பேசாம இந்த சிற்பங்களுக்கு ஒரு ஆல்பம் போட்டுற வேண்டியதுதான்!

ஆல்பம் இங்கே!


இந்தக் கோவில் நூத்தியெட்டு திவ்யதேசக் கோவில்களில் ஒன்னு!  எத்தனை முறை வந்தாலும் அலுக்கவே அலுக்காத கோவில்களில் இதுவும் சேர்த்தி!
பஞ்சரங்கத்தலங்களில் இது பரிமளரங்கம்!
முக்கால்மணி நேரம் போனதே தெரியலை......  கோவில் காலை  ஆறரை முதல் பகல் பதினொன்னரை வரை, அப்புறம் மாலையில் அஞ்சு முதல் எட்டரைவரைன்னு திறந்துருக்கும்.
ஞாபகம் வச்சுக்கணும்.... புரட்டாசியில் போகப்டாது :-)
அதிலும் மாயூரம் வந்துட்டு அபி அம்மாவைப் பார்க்காமல் போறோமேன்னு  ஒரு நினைப்பு.  நம்மவரின் ஃபோன் மாத்தும்படி  ஆனதில் பழைய செல்லில் இருந்த  எண்கள் எல்லாம்  அழிஞ்சே போயிருச்சு...ப்ச்.  இதுக்குத்தான் நம்ம சீனிவாசன்  இருந்துருக்கணும். டாண்னு கொண்டுபோய் வீட்டில் விட்டுருப்பார்....

அடுத்த கோவிலுக்குப் போகலாமா?  இதுவரை போகாத கோவில்!!!

தொடரும்....... :-)

8 comments:

said...

// அடுத்த கோவிலுக்குப் போகலாமா? இதுவரை போகாத கோவில்!!! //

டீச்சர் போன பல கோயில்கள் இதுவரைக்கும் நான் போகாத கோயில்கள்தான். ஆனா டீச்சரே போகாத ஒரு கோயில் உண்டெங்ஙில் அது என்ன கோயில்னு தெரியலையே. அடுத்த பதிவுக்கு காத்திருக்க வேண்டியதுதான்.

said...

திருஇந்தளூர் பல முறை சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு. நன்றி.

said...

சுகந்தவனநாதர்! கமகமன்னு மணம் வீசும் காட்டுக்குள்ளில் கிடப்பு ...

ஆஹா அழகன்


அந்த ஆல்பத்தில் ..அட எத்துனை அழகிய சிற்பங்கள் அனைத்தும் அற்புதம்

said...

சிற்பங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கின்றன.

சிறப்பான கோவிலுக்கு எங்களை மீண்டும் அழைத்துச் சென்றதில் மகிழ்ச்சி.

said...

வாங்க ஜிரா,

இந்தக் கற்றது கை அளவு பழமொழி கண்டது கை அளவுன்னு கோவிலுக்கும் பொருந்தும். இந்தியா அதுவும் கும்பகோணம் என்ன கிறைஸ்ட்சர்ச்சா? ரெண்டே கோவில்னு சொல்லிக்க :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

இதெல்லாம் உங்க ஏரியா இல்லையோ !!!!

said...

வாங்க அனுராதா ப்ரேம்,


உண்மை! அழகனே !!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்..


திவ்யதேசக்கோவில் ! தவற விடாதீங்க !