Wednesday, March 27, 2019

ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் மங்களம் !!!! (பயணத்தொடர், பகுதி 84 )

ஊருக்கே பெயர் கொடுத்த  கும்பேஸ்வரரை தரிசனம் பண்ணிக்கலாமுன்னு தோணுச்சு. சரியா பத்து வருசத்துக்கு முன்னால் ஒரு மட்ட மத்தியானத்துலே  இந்தக் கோவிலுக்குப் போயிருந்தோம்.  சரியாப் பார்க்கலைன்னு ஒரு குறை.
சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிப்போய் கடைவீதியில்  எனக்கொரு விக்ரஹம் வாங்கிக்கணும். 'என்ன.... என்ன.... பெருசா வாங்குனா நீதான் அதுக்கான எக்ஸ்ட்ரா வெயிட்டுக்கான  செலவு செய்யணுமு'ன்னு ஒரு மிரட்டல்  கிடைச்சது :-)
பளபளன்னு மின்னும் சாமிச்சாமான்கள் பார்த்தால் ஆசையாத்தான் இருக்கு. ஒரு திருவாசி இருந்தால் கொள்ளாம்.  ஒரு கடையில் போய் விவரம் கேட்டோம்.  சிங்கிள் பீஸ். பிரிச்சுக் கோர்த்துக்க முடியாதாம். அப்ப பேக்கிங் நமக்குக் கஷ்டம்.  நாங்க நியூஸிக்கு அனுப்பறோமுன்னு உத்திரவாதம் கொடுத்தார் கடைக்காரர்.  சுண்டைக்காய்  &  சுமைகூலி   நினைவுக்கு வருது.
கடைக்குள்ளே போனதும்  ஊஞ்சல் புள்ளையாரைக் கண்டேன். ஹைய்யோ!!!!  'நம்மவருக்கும்' பிடிச்சுப் போச்சு. ஆனால் கனம் அதிகம்.  ரெண்டு மூணு மாசத்துலே ஒரு வேலையா  பாண்டிச்சேரி போகணும். அப்போ வாங்கி வரேன்னு வாக்கு கொடுத்தார்.  வாக்கு மீறும் பழிபாவம் வேண்டாமுன்னு இதுவரை  இன்னும் பாண்டிச்சேரி போகலை :-)
சரி.... வாங்க நினைச்சு வந்ததை வாங்கிக்கலாமுன்னு 'காமதேனு'  இருக்கான்னதும், ஒரு ஊழியர்  உள்ளே போய்க் கொண்டு வந்தார்.

ரொம்பநாளா எனக்கொரு ஆசை இந்தக் காமதேனு மேலே. ஒன்னு இருந்தால் நமக்கு வேண்டியதை எல்லாம் சட்னு  நிறைவேத்திக்கலாம்.  பயணம், சமையல், வீடு சுத்தம் செய்ய ஆட்கள் இப்படி.... ஏன்.... பதிவு எழுதக்கூட  (கோஸ்ட்) ரைட்டர்ஸ் கிடைச்சுறமாட்டாங்க? ஹாஹா....
'நம்மவர்' வழக்கம்போல்  முகம் அவ்ளோ சரியா இல்லையேம்மான்னு ஆரம்பிச்சார்.  லக்ஷணம் போதாதாம் !!!   ஆங்......    வாங்குற சைஸுக்கும் கொடுக்கற காசுக்கும் இவ்ளோதான் வரும் (என் பதில்! )
ராயாஸ்லே ஒவ்வொரு தளத்திலும் நடுவில் இருக்கும் ஹாலில் ரொம்பப்பெரிய பெரிய  விக்ரஹங்கள்   வச்சுருக்காங்க. அதுலே காமதேனுவும் ஒன்னு!  (ஒருவேளை நந்தினியோ? )குத்துவிளக்குகள், கீதோபதேசம்னு எல்லாமே அருமை! ஆனால் ஒவ்வொன்னும் சுமார் அம்பது கிலோ கனம் இருக்கும் !

நம்ம காமதேனுவையும்  எடைபோட்டு வாங்கியாச்சு.  ஒன்னரைக்கிலோவில் நல்லாவே கிண்ணுன்னு இருக்காள்!  கூடவே ஒரு காமதேனு பாப்பா அவள் காலடியில் !
காமதேனு இருக்கும் தைரியத்துலே கவலையை விட்டொழிச்சேன். ஹேண்ட் லக்கேஜில் வச்சால் ஆச்சு !
அடுத்துப்போய் இறங்குனது நம்ம கும்பேஸ்வர் கோவில் வாசலில்.  இது ப்ரொப்பர் வாசல் இல்லை கேட்டோ.....  கசகசன்னு இருக்கும் கடைகளுக்கிடையில் ஒளிஞ்சுருக்கு. அதுவழியா உள்ளே போனால்  கோவில்கடைகள்தான் ரெண்டு பக்கமும்.

எனக்குக் கோவில்கடைகளைப் பார்க்கப் பிடிக்கும். வேடிக்கைதான்.....  ஆனால் கோவில் வாசல் தனியா கம்பீரமா இருக்கணுமுன்னு நினைப்பேன்.  இது ராஜகோபுரவாசல் இல்லை.  போனமுறையும் வேறேதோ வாசலில்தான் போய் இறங்கினோம்.இந்த முறையும் இப்படி.....   அடுத்த முறை ராஜகோபுர வாசலாண்டை போகணும்.

ச்சும்மாச் சொல்லக்கூடாது.....  கும்மோணத்துலேயே பெரிய கோவில் இதுதான்..... முப்பதாயிரத்து நூத்தியெண்பத்தோரு  சதுர அடி!!  மதிள் சுவரின் நீளம் பார்த்தே அசந்து போயிருந்தேன் போனமுறை.....
இப்பக் கோவிலில் திருப்பணி நடக்குது போல..... எல்லாத் தரைகளையும் தோண்டிப்போட்டு வச்சுருக்காங்க. மண்டபத்தில் மங்களம் நிக்கறாள்.   அவளைப் போய் குசலம் விசாரிச்சுட்டு அந்த ராஜகோபுர வாசலுக்குப் போனோம்.


வெளியே  போய் நின்னால்  இதுவும் கடைவீதியே.....    அந்தாண்டைத்தெருவைக் கடந்து போனால்தான் கோபுர அழகைப் பார்க்க முடியும்.  பயங்கரமா ட்ராஃபிக். அதனால் போகலை....
திரும்ப வந்து கொடிமரம் ஸேவிச்சுட்டுக் கோவிலுக்குள் போய்  ஸ்ரீ கும்பேஸ்வரரையும்,   அம்பாள் மங்களநாயகியையும்  தரிசனம் பண்ணினோம்.
கோவில் புஷ்கரணியில் சொட்டுத்தண்ணி இல்லை.
இங்கேயும் ஒரு மொட்டைக்கோபுர வாசல் இருக்கு, தெரியுமோ?

எனக்கென்னமோ கோவிலை நல்லாவே பார்க்காம வந்ததுபோல்தான் தோணிக்கிட்டே இருக்கு.   ப்ச்....

சிற்பங்களை இன்னும் நல்லா கவனிக்கலை. கழுத்துலே கத்தியை வச்சா எப்படி? பயமா இருக்காது?

பாடல்பெற்ற  கோவில் இது!  மஹாப்ரளயத்தில் எல்லாமே அழிஞ்சு போகுமுன்  பிரம்மன் தன் அடுத்தமுறை  படைப்புக்கான  சமாச்சாரங்களையெல்லாம் கும்பத்துக்குள் வச்சு அதை ஹிமயமலையின் உச்சியில் கொண்டு போய்  வச்சுட்டார்.   ப்ரளயம் நடந்தப்ப வெள்ளத்தில் மிதந்துவந்த கும்பம் தங்கிய இடம்  இது!  அப்புறம் சிவன் தனது அம்பால் அந்தக் கும்பத்தை உடைச்சதும்  அதிலிருந்து  மணலில் சிந்திய அமுதத்தை மணலோடு வாரி எடுத்து அதை ஒரு சிவலிங்கமாப் பிடிச்சு வச்சு அதுலே ஐக்கியமாகி இங்கேயே தங்கிட்டார்.  மணல் லிங்கம் என்றபடியால் அபிஷேகம் கிடையாது!  அபிஷேகப்பிரியன்... இப்படித் தனக்கே ஆப்பு வச்சுக்கலாமோ?  பிடிச்ச பிடியில்   உச்சி நுனி குவிஞ்சுருச்சு!
 அம்பாள் மங்களநாயகி, அம்பத்தியொரு சக்திபீடங்களில் இருக்கும் அனைத்து சக்திகளும் (எழுபத்தி ரெண்டாயிரம் கோடியாம்!) ஒன்னாச் சேர்ந்த மஹாசக்தி பீடமுன்னும் சகல சக்திகளுக்கும் அதிபதியான மங்களநாயகியை மட்டும் தரிசனம் செஞ்சாலே போதும், அனைத்துப்பலன்களும் நமக்குன்னும் சொல்றாங்க.!  அப்படியே ஆகட்டும்!

இங்கே சந்நிதித்தெருவில்  மங்களாம்பிகாவிலாஸ்  காபிஹோட்டல்  ரொம்பப் பிரசித்தியானதுன்னு  பதிவில்  வாசிச்ச நினைவு. அதைத் தேடினப்பக் கிடைச்சது.  கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கு. விசாரிச்சுத்தான்போனோம்.
ஏனோ உள்ளே போய் சாப்பிடணுமுன்னு தோணலை. சாம்ப்ராணி போட்டுக்கிட்டு இருந்தார் ஒருவர்!
 ஆரம்பிச்ச வருஷம் 1914 !  நூறைத்தாண்டிப் போயிருக்கு!  இன்னொரு 'பார்த்தசாரதி விலாஸ்' போல இருக்கலாம்.....   எதுக்கும் அடுத்த முறை ராஜகோபுர வாசலில் வந்திறங்கி வரப்போறோமே அப்போ பார்த்துக்கலாம்....   காஃபிதான் பெஸ்ட்டாம்!
வாங்க இன்னும் ரெண்டு மூணு கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாம்.....  ஏற்கெனவே இருட்டிக்கிட்டு வருது.....

ஆமாம்.... அது ஏன் பெரும்பாலான கோவில்களில் பெண்யானையை  வச்சுருக்காங்க?  அதுதான்  அடக்க ஒடுக்கமா வாயை மூடிக்கிட்டு இருக்குமுன்னா?

தொடரும்........ :-)


20 comments:

said...

அருமை நன்றி

said...

//
ஆமாம்.... அது ஏன் பெரும்பாலான கோவில்களில் பெண்யானையை வச்சுருக்காங்க? அதுதான் அடக்க ஒடுக்கமா வாயை மூடிக்கிட்டு இருக்குமுன்னா?//
ஆண் யானைக்குத் தான் மதம் பிடிக்கும். அதுவும் தமிழ்நாடு வெயிலுக்கு அவை சரியாகாது.
​​

said...

அந்த நாள் கும்ப கோணப் பயணம்நினைவுக்கு வருகிறதே கோவில் பற்றி சுவர்களில் ஓவியமாக இருக்கும் இல்லையா

said...

பெண் யானைனா குட்டிபோட வேண்டிய அவசியமில்லை. குழந்தை இல்லாமலேயே ஆயுள் வரை வைத்துக்கொள்ளலாம். ஆண் யானைனா, அதற்கான பருவம் வரும்போது கட்டுப்படுத்துவது சிரமம் என்பதால் இருக்கலாம்.

ஆமாம்... இப்போ மங்களவிலாஸ், கும்பேஸ்வரர் கோவிலில் யானை இருக்கும் இடத்திற்குப் பின்னால் உள்ள தெருவில் அல்லவா ஆரம்பித்திருக்கிறார்கள். நல்லாவே இருக்கு.

said...

காலையில் கும்பேஸ்வரர் திவ்ய தரிசனம். நன்றி.

said...

இக்கோயிலுக்கு அருகேதான் எங்களின்வீடு இருந்தது. தொடக்கக்காலப் பள்ளிக் காலத்தில் (திருமஞ்சனவீதி பள்ளி) பள்ளிக்குச் செல்லாமல் மறைந்துகொண்டது (அப்போதே மாட்டிக்கொண்டது), பள்ளிக்காலத்தில் பாடங்கள் படித்தது, வளர வளர விழாக்களின்போது அடிக்கடி வருவது என்று அனைத்துமே என் வாழ்வில் பெரும்பாலும் இக்கோயிலையும், இக்கோயிலின் இரு பிரகாரங்களையும்தான் ஆட்கொண்டிருந்தன. வெளிப்பிரகாரத்தில் நாங்கள் ஓடி விளையாண்ட நாட்களை மறக்க முடியாது. மற்றொரு வியப்பு. நான் பௌத்த ஆய்வு மேற்கொண்டபோது, தமிழகத்திலேயே பௌத்தத்தின் இறுதிச்சுவட்டினைக் கொண்ட கி.பி.1580ஆம் ஆண்டைச் சேர்ந்த நாயக்கர் காலக் கல்வெட்டு இங்குதான் இருந்தது என்பதை அறிந்தேன். கும்பகோணத்தில் அனைத்துக்கோயில்களுக்கும் சென்றிருந்தாலும் இக்கோயிலும் சற்று அதிகமாக தொடர்பு....என்றும் நினைவில் நிற்கும் நினைவினைத் தூண்டிவிட்டீர்கள் இப்பதிவு மூலமாக.

said...

பல ஆண்டுகளுக்கு முன்னாடி இந்தக் கோயிலுக்குப் போயிருக்கேன். படங்களைப் பாத்தா அப்ப இருந்த மாதிரியேதான் இப்பயும் இருக்கு.

காமதேனு சிலை அழகு.

அமுதம் விழுந்த குளம்னு சொல்றாங்க. உண்மையிலேயே அமுதம் விழுந்திருந்தா இப்படி வத்திப் போகுமான்னும் தோணுது. என்ன சொல்றது? ப்ப்ப்ச். :(

said...

கும்மோணத்துலேயே பெரிய கோவில் இதுதான்..... முப்பதாயிரத்து நூத்தியெண்பத்தோரு சதுர அடி!...

அட ரொம்ப பெரிய கோவில்

காமதேனு - அழகு

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜெகே,

பெண்கள்தான் அடங்கி இருப்பாங்கன்றது உண்மை !

ஆண்களுக்கு அடக்கம் போதாது..... :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நீங்க சொல்லும் சுவர் சித்திரங்கள் ராமர் கோவிலில் என்று நினைக்கிறேன் !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தாய்மையைப் பாராட்டி ஆஹா ஓஹோன்னு எழுதும் மனிதர்கள், அந்த பெண் யானைகள் தாயாக் கூடாதுன்னு சொன்னால் எப்படி? ப்ச்.... பாவம் இல்லையோ....


மங்களவிலாஸ் இடம் மாறியாச்சா? பார்க்கலாம் அடுத்த முறை ! காஃபி நல்லா இருந்ததோ?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நல்ல பெரிய கோவில் இது! நிதானமாப் பார்த்துட்டு வரணும் !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.


பழைய நினைவுகளை அசை போடுவது தனி சுகம்!

உங்கள் பதிவும் வாசித்தேன். அதில் பௌத்தம் சம்பந்தமான கல்வெட்டு இங்கே இருக்குன்னு எழுதி இருந்தீங்க.

said...

வாங்க ஜிரா.

எல்லாத்துக்கும் ரெடிமேடா பதில் இருக்கு!


இப்பக் கலிகாலம் நடக்குது. அதிலும் கலி ரொம்பவே முத்திப்போச்சு. அதுதான்..... காய்ஞ்சு வத்திக்கிடக்கு எல்லாமே..... :-(

said...

வாங்க அனுராதா ப்ரேம்,

நிதானமா அடுத்த முறை பார்க்கணும். அதுக்குள்ளே சீரமைப்பு நடந்துருக்கலாம்.....

said...

நாங்க போங்க சிவாச்சாரியார் இதே கதையை விஸ்தாரமா சொன்னார் டீச்சர்...
கதையில் ஒரு டிவிஸ்ட் சேர்த்து இருக்காங்கம்மா...
பிரம்மன் சேர்த்த வஸ்துக்களை மிதக்க விட்ட பிரளய நீர்...
அதில் மிதந்த கும்பமே ஈஸ்வர ரூபம்...
அந்த காலத்து கும்பம் - சுரக்குடுவை
-- இங்க ஒரு சின்ன இடைவெளி விட்டு, இன்னொரு முறை தீபாராதனை காட்டுறேன்...
இப்ப பாருங்கன்னு சொல்லிட்டு கருவறை உள்ள போனவர்
லிங்கத்தின் தலைமேல் இருந்த வில்வ தொடரை நீக்கிட்டு "கவனிச்சு பாருங்கோ" சொல்லி
ருத்ர காயத்ரி உச்சரிச்சு தீபாராதனை காட்டிட்டு வெளிய வந்தார்! ஆராதனை சுற்றுல உச்சிக்கு மட்டும் ஒரு வினாடி தாமதம்... குடுவை வடிவம் நிதானிச்சு பார்க்க (அப்போதைக்கு கெமிஸ்டரி லேப்ல இருக்கும் ரவுண்டு பாட்டம் பிளாஸ்க் நியாபகம்)

முக்கியமா பிரகாரம் சுத்தும் போது கும்பமுனி பார்த்து வேண்டுதல் சொல்லிட்டு போக சொன்னார்! கும்பமுனி தான் நம்ம குறைகளை கேட்டு கனவில் / வேறு பேச்சுக்கு மத்தியிலோ - நிவர்த்தி பண்ணும் வழிகளை சொல்லுவார்னு நம்பிக்கை...

நீங்க பார்த்தீங்க தானே அம்மா?

said...

Hmm, the inscription plate seems wrong- typo in the Pontiff's name is Maha Devendra Sarawathy
.
As per https://kamakoti.org/peeth/origin.html#appendix2, the Maha Deva Indra Sarawathy is 63rd not 62nd - if we count back from the 68th(Maha Periyava). Typical government callousness.

said...

வாங்க ரமேஷ்,

தலையில் கும்மாச்சியா இருப்பதைப் படத்தில்தான் பார்த்தேன். பூக்கள் அலங்காரத்தில் மூலவர் தலை தெரியலை.

கும்பமுனியையும் தரிசிக்கலையே...

விளக்கம் சொல்ல யாரும் இல்லையே... நாங்க போனபோது.... ப்ச்....

said...

வாங்க Strada Roseville ,

அரசின் அலட்சியம்...... ப்ச்......