Friday, November 30, 2018

ஹிந்து தர்மம், ஒரு மதமா?

முந்தாநேத்து   மாலை நம்ம  ஊரில் ஹிந்து ஸ்வயம்சேவக் ஸிம்போஸியம் நடந்தது.  'வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் இந்த கருத்தரங்குக்கு வருகை தர்றாங்க. நீங்க அவசியம் கலந்துகொள்ளணுமு'ன்னு அழைப்பு வந்தது.

மேலும் அன்றைக்குப் பகல் சாப்பாடு, விருந்தினருடன் சேர்ந்து சாப்பிடணுமுன்னு இன்னுமொரு கூடுதல் அழைப்பும்.  நம்ம இந்தியன் கம்யூனிட்டியில் முக்கியஸ்தர்களாக இருக்கும் நபர்களை அழைச்சுருந்தாங்க. (என்ன இருந்தாலும் நாம்தான், ஊரின் பழம்பெருச்சாளிகளாச்சே !)  பனிரெண்டரைக்கு லஞ்ச்.  புதுசாத் திறந்திருக்கும்  உணவகத்தில் (பிக்கானிர்வாலா) ஏற்பாடு. போயிட்டு வந்தோம்.


டாக்டர் மன்மோகன் வைத்யா, ஆர் எஸ் எஸ், புதுதில்லி,  திரு சௌமித்ரா கோகலே, ஹெச் எஸ் எஸ்,  யூ எஸ் ஏ வந்துருந்தாங்க. அஸ்ட்ராலியாவில் சிலபல நகரங்களில் கருத்தரங்கு நடத்திட்டு இப்போ நியூஸி  வந்துருக்காங்க.

அன்றைக்கு மாலை நடக்கும் கருத்தரங்கு சமாச்சாரம் 'Moving forward together with one voice'
நம்ம நியூஸியில் Hindu Swayamsevak Sangh New Zealand,  2007 இல் ஆக்லாந்து நகரில் ஆரம்பிச்சு நடந்துக்கிட்டு இருக்கு.  எங்க ஊருக்கு இப்ப இந்த வருஷம்தான் கிளை ஆரம்பிச்சுருக்காங்க. அதுலேதான் புள்ளையார் பண்ணும் வொர்க்‌ஷாப் போயிட்டு வந்து இங்கே போஸ்டும் போட்டேன். நினைவிருக்கோ?
மாலை ஆறுக்குக் கருத்தரங்கு நடக்கும் ஹாலுக்குப்போய்ச் சேர்ந்தோம். உள்ளூர் ஆக்டிவ் மெம்பர் திரு ஆன்ட்டனி, எல்லோரையும் வரவேற்றுப்பேசினதும், நியூஸி ஹெச் எஸ் எஸ் தலைவர் ஹனுமந்தராவ் (ஆக்லாந்துலே இருக்கார்) இங்கத்துப் பரிபாடிகள் எப்படி எங்கே நடக்குதுன்னு சொன்னார்.  எட்டு கிளைகள் இதுவரை நியூஸியின் நகரங்களில் ஆரம்பிச்சுருக்காமே!

அப்புறம்  நம்ம சௌமித்ரா கோகலே,  வெளிநாட்டு ஹிந்துக்கள், மொழி, மாநிலம் இப்படியெல்லாம் பிரிச்சுப் பார்த்து பேதப்படுத்திக்காமல் ஒற்றுமையா இருந்து அடுத்துவரும் தலைமுறைகளுக்கு நம்முடைய கலை, கலாச்சாரம், கடவுள் பக்தி இதையெல்லாம்  கடத்தி விடுவதன் முக்கியம் பற்றிச் சொன்னார்.
கடைசியாகப் பேசிய மன்மோகன் ஜி, சுய ஒழுக்கம், கட்டுப்பாடு இதெல்லாமும் இளைய தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம், இளைஞர்கள், தங்கள் மதம் பற்றிய  அறிவை வளர்த்துக்கணும், ஹிந்துவாக இருப்பதில் ஒரு பெருமிதம் கொள்ளவேணும் என்றதோடு  இந்தியாவில் அஞ்சு வருஷத்துக்கொருமுறை ஹிந்து சம்மேளனம் நடக்குதுன்னும் சொன்னார். 1995 இல்  200 அங்கத்தினர்களுடன் ஆரம்பம்.  இப்போ கடந்த 2015 இல் நாப்பத்தியஞ்சு நாடுகளில் இருந்து  அறுபத்தி ஆறாயிரம் நபர்கள் கலந்துகொண்டார்களாம்!  ஹா....


'வசுந்தரா  பரிவார் ஹமாரா'ன்ற  சங்கப்பாடலை, தோழி வீணா ஜோஷி பாடுனாங்க.

பெரிய கூட்டமுன்னு சொல்ல முடியாது. ஒரு அறுபது பேர்தான்.  மக்கள் கேள்விகள் கேட்கத் தலைவர்கள் பதில் சொன்னாங்க.

அப்புறம்?  டின்னரும் அங்கேயே!  சப்பாத்தி, ஸாலட், ஜீரா ரைஸ், ஆலுமட்டர் கறி, தட்கா தால், ரவா கேஸரி....  தாராளம்!




மாசத்தின் இரண்டாம், நாலாம் ஞாயிறன்று  ஒன்றுகூடி நம் இளைய தலைமுறைக்கு நம்ம கலை, கலாச்சாரம், பாடல்கள், விளையாட்டு, கதை சொல்லல் இப்படி  நடத்துறதை நாம்  ஊக்குவிக்கணும்.

உண்மையிலேயே.... ஹிந்து என்றொரு மதமே ஆரம்பத்தில் இல்லை. வெள்ளைக்காரன் வச்ச பெயர்தான் இது.  ஹிந்து என்பது மதம் இல்லை. இது ஒரு வாழ்க்கை முறை.  சனாதனதர்மம் விதித்த வழியில் நடத்தும் வாழ்க்கை. ஹிந்து தர்மம் என்று கூட இனி சொல்லிக்கலாம்.


இந்த வாழ்க்கை முறையைப் பார்த்து அதில் ஈடுபட்டு ஹிந்துமதக் கடவுளர்களை வழிபடும் மற்ற நாட்டினரும் உண்டு. 

பொதுவா சஹிப்புத்தன்மை அதிகம் உள்ள  மதம்  என்பதால் எல்லாவிதமான கொடுமைகளும் மற்ற மதத்தினரால்  ஹிந்துக்களுக்கே நடக்குதுன்றது உங்களுக்கே புரியும்.  காய்ச்சமரம்தான் கல்லடி படும், இல்லே?

நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்றங்களும்....  பாரபட்சமில்லாத ஆட்சியை வழங்க வேண்டிய  அரசும் கூட  ஹிந்து மதத்தைத் தவிர  மற்ற மத விவகாரங்களில் தலையிடுவதில்லை..... இளிச்சவாயர்கள், ஏமாத்த எளிதானவர்கள் என்ற  காரணம் ஒன்னு போதாதா?

சமீபகாலமாக இந்த மதமாற்றம், நாத்திகம் பேசும் கும்பல்கள் (இதிலும் ஹிந்து மதக் கடவுளர்கள் மட்டுமே இல்லாமல் ஒழிஞ்சுட்டாங்க. மற்ற மதத் தெய்வங்களுக்கு ஆபத்து ஒன்னும் இல்லை) எல்லாம் அதிக அளவில் இந்தியாவில் பெருகி, ஹிந்துக்கள் சிறுபான்மையராகும் அளவுக்குக் கொண்டு போயிருப்பதில் மனம் கசந்து கிடக்கும்  எனக்கு இந்த ஹெச் எஸ் எஸ்  தேவையானதொன்றாகத்தான் தெரியுது!

இப்படி எழுதினதாலே  மற்ற மதத்தை இழிவு படுத்தலை. அவரவருக்கு அவரவர் மதம் உயர்வு. அதுக்காக மற்ற மதங்களைத் தாழ்வாக நினைக்க வேண்டிய  அவசியம்  இல்லை.  கடைசிப்புள்ளிவரை யோசிச்சுப்பார்த்தால்  மனிதர் யாவரும் ஓரினமே!  அனைவரும் மனித தர்மத்தைக் கடைப்பிடிப்போம்.


13 comments:

said...

ஹல்வாவ்

said...

>>> ஹிந்துக்கள் சிறுபான்மையராகும் அளவுக்குக் கொண்டு போயிருப்பதில் மனம் கசந்து கிடக்கும்... <<<

நிதர்சனம்...

வாழ்க ஹிந்து தர்மம்..

said...


கடைசிப்புள்ளிவரை யோசிச்சுப்பார்த்தால் மனிதர் யாவரும் ஓரினமே! ....

நல்ல கருத்துக்கள் மா..அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்..

said...

சகிப்புத் தன்மை வேண்டும் என்றுசொல்வது ஹிந்து மத்ம் ஆனால்ஹிந்துஸ்வயம்சேவக் இவர்கள்ஹிந்துத்துவா பேசுபவர்களா சகிப்புத்தன்மைஉள்ளவர்களா

said...

மனிதர் அனைவரும் ஓரினமே. முத்தாய்ப்பாக நிறைவு செய்துள்ளீர்கள்.

said...

நல்ல பகிர்வு.

உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி :-)

said...

வாங்க துரை செல்வராஜூ.

நன்றி !

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

கடைசியில் மானுட தர்மமே வெல்லணும்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அனுபவங்கள் வெவ்வேறு ! அதையொட்டியே கருத்துகளும். இல்லையோ?

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

இந்த எண்ணமும் ஒற்றுமை உணர்வும் மனதில் இருந்தால் போதும்தானே?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அனுபவங்களின் தொகுப்புதானே வாழ்க்கை? அதான் நடந்தது... நடந்தபடி..... பகிர்ந்துகொண்டேன்.

said...

//அவரவருக்கு அவரவர் மதம் உயர்வு. அதுக்காக மற்ற மதங்களைத் தாழ்வாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. கடைசிப்புள்ளிவரை யோசிச்சுப்பார்த்தால் மனிதர் யாவரும் ஓரினமே!//

இதைப்புரிஞ்சுக்காம இருக்கறதாலதான் பிரச்சினையே ஆரம்பிக்குது.