Monday, November 12, 2018

லேக்வியூ ரிஸ்ஸார்டில்...... !!!!!(பயணத்தொடர், பகுதி 32

கரும்புலி  கண்டதை, அசோக்கிடம்  சொல்லிக்கிட்டே.... அடுத்த காமணியில் லேக்வியூ ரிஸார்ட் வந்தாச்சு. பெரிய வளாகம்தான்.  மெயின் கேட்டைக் கடந்து உள்ளே போகும்போதே....  ஏரிக்கரையில் சின்ன கூட்டம். (எங்கூர் கணக்கு. நாலு பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்க !) 
பரிசல் பயணம் நடக்குது!  எல்லாம் இங்கத்துப் பொழுதுபோக்கும் விளையாட்டுதான்.  அறை வாடகையில் இதெல்லாமும் சேர்த்தியே!




'நீங்களும் வாங்க'ன்னார் பரிசல்காரர்.  தாங்குமான்னு ஒரு சந்தேகம். வெயிட்டான பார்ட்டிகள் எல்லாம் போறாங்க....  ஆனாலும்  பரிசலை இம்சிக்க வேணாமுன்னு..... போகலை. வேடிக்கை மதி, கேட்டோ!
நல்ல வேளையா லைஃப் ஜாக்கெட் எல்லாமும் கூட போட்டுருந்ததால்  மனசுக்கு நிம்மதியா இருந்தது  எனக்கு. ஆனாலும்  சின்னக்குழந்தையை மடியில் வச்சுக்கிட்டு அதில் போறதெல்லாம்  டூ மச் இல்லையோ?
நாங்க காட்டேஜுக்கு வந்துட்டோம் (காரில்தான்)  உள்ளேயே ரொம்ப தூரம் நடக்கவேண்டி இருக்கு!  நான் சொல்லலை...பெரிய வளாகமுன்னு!


டைனிங் ஏரியாவுக்குப்போய்  ஆளுக்கொரு டீ ஆச்சு.
ரொம்ப தூரத்துலே பரிசல்கள் போறது தெரியுதே!  (போதும். பத்திரமாத் திரும்பி வாங்க...... )
ஏரிக்கரையையொட்டி  கேம் ஃபயர்  கொளுத்திட்டு,  கும்மாளம் போட ஒரு தனி அமைப்பு வச்சுருக்காங்க.  வெள்ளி, சனி இரவுகள் ....... இப்படித்தானாம்.
பயணத்துலே அன்றன்று எடுத்த படங்களை 'நம்மவரின்'  ஸர்ஃபேஸ் ப்ரோலே லோட் பண்ணிட்டு, ஒரு காப்பியை என்னோட நோட்பேடிலும் சேமிச்சு வச்சுக்கறது  வழக்கம்.  அப்படியே  படங்களையும் பார்த்துக்குவோம். அப்பதான் அந்தநாளில் நாம் எடுத்த படங்களின் லட்சணம் தெரியும். அப்புறம் கெமெரா பேட்டரி, செல்ஃபோன்ஸ் எல்லாம் சார்ஜ் பண்ணிக்கணும்.  இதெல்லாம்  'நம்மவரின்' தலையாயத் தினக்கடமைகளில் ஒன்னு!
எட்டேகால் மணி போல.... ரிஸார்ட் பாய்ஸில் ஒருவர் வந்து  டின்னர் ரெடின்னு சொல்லிட்டுப் போனார்.  எட்டரை மணிக்குப்போய்  சாப்பிட்டுட்டு வந்தோம். வெஜ்  அண்ட் நான் வெஜ் செஞ்சுருந்தாங்க.  லஞ்சு, டின்னர் கூடவே எதாவது ஒரு.   இனிப்பும்  உண்டு. மத்யானம் பாயஸம் இருந்தது.  இப்போ கேஸரி போல ஒன்னு.


மறுநாள் காலையில் முழிப்பு வந்ததும் குளிச்சுட்டு ரெடி ஆனேன்.   காஃபி கேக்குது நாக்கு. இங்கெதான் ஃபோன் இல்லையே.....  'நம்மவர்'  டைனிங் குடிலுக்குப்போய் சொல்லிட்டு வரேன்னு கிளம்பி வெளியே  இறங்குனதும்,  அந்தப் பக்கமாப் போன பணியாளர்  என்ன வேணுமுன்னு விசாரிச்சுட்டு,  அவரே போய் காஃபியைக் கொண்டு வந்தார்.  நல்ல உபசரிப்புதான்!
வைஃபை வேலையே செய்யலைன்னதுக்கு  ராத்ரி 11 மணிக்கு ஆஃப் செஞ்சுருவாங்களாம்.  இப்பப்போய் ஆன் செய்யறேன்னு சொல்லிட்டுப் போனார்.  காலையில் எப்ப நினைவுவருதோ அப்ப ஆன் செய்வாங்க போல!  அது என்ன கணக்கு இந்த 11 மணி? ஒருவிதத்தில் நல்லதுதான்.  கொட்டுகொட்டுன்னு முழிச்சுக்கிட்டு செல் பார்த்துக்கிட்டு இருக்காமத் தூங்கறது உத்தமம். எட்டரைக்கு ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியாகுமாம்.

காஃபியைக் குடிச்சுட்டு ஒரு மார்னிங் வாக். இப்பதான் அக்கம்பக்கம் பார்க்கிறேன். அப்படியே கொஞ்சம் க்ளிக்ஸ் ஆச்சு.    ஏரிக்கரையாண்டை சிலர் பரிசல் பயணத்துலே பிஸி.  வெளியாட்கள் போல....   ரெண்டுமூணு டுவீலர்ஸ் அங்கே. டைனிங் ஏரியாவில் உக்கார்ந்து  கொஞ்சம் மெயில் பார்த்து, அவைகளுக்குப் பதில் அனுப்பி, ரெண்டு ஃபேஸ் புக் பதிவு போட்டுக் கடமையாத்திட்டு எட்டுமணிக்கு அறைக்கு வந்தோம்.  'நம்மவர்' ஷவர் எடுத்துட்டு,  பேக்கிங் எல்லாம் செஞ்சதும் சாப்பிடப் போனோம்.
ராத்ரி சில கெஸ்ட் வந்துருக்காங்க போல.  கார்பார்க்கில் நாலைஞ்சு வண்டிகள். அசோக் வண்டியிலேயே தூங்கிக்கிட்டு  இருந்தார்.  டிரைவர்களுக்கெல்லாம்  அடுக்களை பக்கத்துலே  ஒரு டைனிங்  ரூமும், படுத்துக்க  அறையும்  இருக்காம்.  ஆனால் அங்கே  காலை நேர பிஸி ஆரம்பிச்சதால்  வண்டிக்கு வந்து படுத்துட்டாராம்.
டைனிங் ஏரியாவுக்குப் பக்கம்தான் கார் பார்க்கிங்  ஏரியா.  காட்டேஜ் பக்கம் எல்லாம் நிறுத்தும் வகையில் இல்லை.  அங்கிருந்து  அறைகளுக்குப் போக  கல்பாவிய ரெட்டையடிப்பாதைகள் :-)
ரொம்ப அமைதியா இருக்கே இந்த இடம். எல்லோரும் காலை ஆறுமணி ஸஃபாரிக்குப் போயிட்டாங்களோ?  இல்லையாம்.  ராத்திரி லேட்டா  வந்த மக்கள்ஸ்,   கேம் ஃபயர் கொளுத்திக் கொண்டாட்டம் போட்டு, காலை நாலரைக்குத்தான்  உறங்கப் போனாங்களாம். அதான் இன்னும் யாரும் எழுந்திருக்கலைன்னார் அசோக்.

மஸால் தோசைக்கான சமாச்சாரங்களும், தோசைகளும் தயார்.  பாயஸம் போல ஒன்னு..... வெண்பொங்கலாம்.  கல்யாணப்பொங்கல் போல.... மஞ்சள் நிறம். ஆனால் இவ்ளோ  ஓட ஓட இருக்க வேணாம் :-)  யாரு சமைச்சதுன்னு கேட்டு, அவருக்கு வெண்பொங்கல் எப்படி இருக்கணுமென்ற    நம்ம பத்து சென்ட் ஐடியாவைக் கொடுத்தேன்.

ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சதும் கிளம்பிடலாமுன்னு  இருந்தோம்.  அசோக் ரெடியாகணுமுல்லே?  கொஞ்ச நேரத்துலே அவரும்  வந்துட்டார்.  நாங்க செக்கவுட் செஞ்சுட்டுப் புறப்பட்டாச்சு.
லேக்வ்யூவில் நல்ல உபசரிப்பு. கார்த்திக், இந்த்ரன், விஷ்ணு, ப்ரதாப் ஜி.எம் (இனிஷியல்தான். நோ ஒர்ரீஸ்!) எல்லோரும் நல்லாவே கவனிச்சுக்கிட்டாங்க.

 காகா கத்துச்சு. உங்களுக்கு விருந்தாளிகள் வரப்போறாங்கன்னு சொன்னேன் :-)
இன்றைக்குத் தங்கல் வேற ஊரில்.  அதுக்குப் போகும் வழியில் இன்னொரு முக்கியமான இடத்துக்குப் போயிட்டுப் போகணும்.
ரிஸார்ட் மெயின் கேட்டுக்குக் கொஞ்சம் அந்தாண்டை, ஒரு கட்டடத்துலே, காவேரி இர்ரிகேஷன் கார்ப்பரேஷன்  லிமிட்டட், கவர்மென்ட் ஆஃப் கர்நாடகா என்ட்டர்ப்ரைஸ்,  தாரக லிஃப்ட் இர்ரிகேஷன் ப்ரொஜெக்ட்,  நொர்க்‌ஷாப்,  ஸொகஹள்ளி,  ஹெச் டி கோடே தாலுக்னு கன்னடத்துலே எழுதி இருக்கு!  (படத்தை நெருங்கிய தோழிக்கு அனுப்பி இந்த ஜிலேபி என்னன்னு கேட்டுக்கிட்டேன் :-) தோழிக்கு நன்றிகள்!!) பைப்லைன் எல்லாம் போட்டுருக்காங்க. நீர்ப்பாசனத்துக்கானது!   சும்மாச் சொல்லக்கூடாது.... இந்தப் பக்கங்களில் எல்லா இடங்களுமே  பசுமையாத்தான் இருக்கு! தண்ணிப்பஞ்சமே இல்லை, இல்லே?

ஹெக்கடா தேவன கோட்டே என்றதைத்தான்  ஹெச் டி, கோட்டேன்னு சுருக்கி இருக்காங்க. (வேணுமெங்கில் பலா வேரிலேயும் காய்க்கும்!) 

போறப்பதான்  ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டாரான்னு அசோக்கிடம் கேட்க, அவர் 'இல்லை வெறும் டீ குடிச்சேன்'னார்.  ட்ரைவர்களுக்கும், மற்ற பணியாட்களுக்கும்  ரிஸார்ட் கெஸ்ட் சாப்பிட்டப் பிறகு தனிப் பந்தியாம். அடப்பாவமே.....  ரிஸார்ட் கெஸ்ட்கள் எப்போ எழுந்து வருவாங்களோ.... அதுவரை காத்திருக்கணுமா?  இது சரியில்லைன்னு   எனக்குக் கொஞ்சம் கோபம். ஓனருக்குச் சொல்லணும். சீக்கிரம் கிளம்பும் ட்ரைவர்களுக்குச் சீக்கிரம் சாப்பாடு கொடுத்தால் என்ன?
இந்தப் பாதை மெயின் ரோட்லே சேர்ந்ததும்  வந்த முதல்  ஊரில் கனகாம்பரம் பார்த்துட்டு அசோக் வண்டியை நிறுத்தினார்.  அவரைப்போய் எதாவது சாப்பிட்டு வரச்சொல்லிட்டு, நாங்க வண்டியிலேயே  காத்திருந்தோம்.  கனகாம்பரமும் வாங்கியாச்சு :-)
அடுத்து வந்த இன்னொரு ஊரில், கொஞ்சம் வாழைப்பழம் வாங்கிக்கிட்டோம். எதுக்கு இவ்ளோன்னார் 'நம்மவர்'.  என்னமோ தோணித்துன்னேன்.
ஒரு இடத்தில்  சூரியகாந்திப் பூக்கள் !  எண்ணெய் எடுக்கும் தொழில் போல!  ஒன்னுபோல பூத்து நிக்கறது, பார்க்கவே ஒரு அழகு!
அங்கங்கே  சில கோவில்களைப் போறபோக்கில் க்ளிக்கிக்கிட்டே போறோம்.  பெரிய பெரிய சிலைகள் வைக்கறது இப்பெல்லாம் ஒரு ஃபேஷனாப் போயிருச்சு!
குண்ட்லுபெட்டே என்ற  ஊரைக்கடந்து போறோம்.

என்ன ஊர் என்ன பேருன்னு அடுத்த மாநில மக்கள் தெரிஞ்சுக்க முடியாம எல்லாமே  கன்னடத்துலே எழுதிவச்சுருக்காங்க.  மொழியை வச்சு அரசியல் செய்யறதுன்றது  இதுதான்.....  உள்ளுர் மொழியோடு இங்லிஷில்  எழுதி வைக்கலாம்.  நாட்டுக்கு ஒரு தேசியமொழி முடிவாகி, அது அமலுக்கு வந்து, நாட்டுமக்கள் அனைவருக்கும்  அந்த மொழியை படிக்கவும் வரும்வரை இங்லிஷ் பயன்படுத்தினால் தப்பு இருப்பதுபோல் எனக்குத் தெரியலை.....  வெள்ளைக்காரன் சங்காத்தமே வேணாமுன்னால்..... அவனுடைய கண்டுபிடிப்பு எதையும் பயன்படுத்தாமல் தூக்கிப்போட்டுட்டுப் பழைய காலத்துக்கே திரும்பிப் போக வேண்டியதுதானே? ப்ச்....

ஒரு மனுஷன் ரூபாய் நோட்டுலே இருக்கும் அத்தனை மொழிகளையும் கத்துக்க முடியுமா? என்னவோ போங்க.....
ஒரு  இடத்துலே இளநீர்க் கடையைப் பார்த்துட்டு ஆளுக்கு ஒரு இளநீர் ஆச்சு. கொஞ்சம் பத்ரகாளி வேஷமும் போட்டுப் பார்த்தேன்...  கையில் வீச்சரிவாளோடு  :-)  சகபயணிகள்  வாஹனம் கொடுத்து உதவுனாங்க !

இப்போ நாம் போகும் இந்த சாலையிலே நேராப்போனா நம்ம ஊட்டிக்கே போயிடலாம். வெறும் அறுபத்தியெட்டு கிமீ தானாம்!
நெடுஞ்சாலை முழுக்க மாடுகளும் ஆடுகளும் மந்தைமந்தையா....

மாடுகளுக்குக் கொடுமை செஞ்சு வச்சுருக்காங்க. கழுத்தையும் முன்னங்காலையும் இணைச்சு சின்னதா ஒரு கயிறு கட்டி விட்டுருக்காங்க. தலையையே தூக்க முடியாது.  குனிஞ்ச தலையோடு நடக்கணும், கல்யாணப்பொண்ணு போல..... இந்தக் காலத்துலே கல்யாணப்பொண்ணுகூட இப்படித் தலை குனியறதுல்லைதானே?
எங்கியாவது ஓடிப்போய்விடாமல் இருக்க இப்படியாம்.... ச்சீ.... மனம்  கசந்து போச்சு.... மனுசனைவிடக் கொடூரமனம் உடைய இனம் வேறே ஒன்னு இல்லவே இல்லை....  பின்னாலே மாட்டை ஓட்டிக்கிட்டுப் போற ஆளை இப்படிக் கட்டி வைக்கணுமுன்னு தோணுச்சு....

ஒரு திருப்பத்தில்  நாம் லெஃப்ட் எடுக்கறோம். ஒரு பத்து கிமீ தூரத்தில் நாம் போகவேண்டிய இடம் வந்துருது!  இதுவும் காட்டுப்பகுதிதான்.  ஒரு முக்கியமானவரைப் பார்த்துட்டுப் போகணும்.   வாங்க.... கூடவே.....

தொடரும்......  :-)


16 comments:

said...

வணக்கம்
படித்து பார்த்தவுடன் நாங்களும் போகனும் என்ற உணர்வு அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-த.ரூபன்-

said...

அருமை நன்றி

said...

டீச்சரோட ஹஸ்பண்டாபோறதுன்னா சும்மாவாஅப்புறம் கெமெரா பேட்டரி, செல்ஃபோன்ஸ் எல்லாம் சார்ஜ் பண்ணிக்கணும். இதெல்லாம் 'நம்மவரின்' தலையாயத் தினக்கடமைகளில் ஒன்னு!

said...

இளநீரும் வீச்சு அரிவாளும்சூப்பர்.

said...

தகவல்கள் நன்று..

ஓட்டுனர்களுக்கு தனி சாப்பாடு... அடப் பாவமே.....

said...

பரிசல் பயணத்தைப் பார்த்ததும் அங்கு செல்லவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

said...

ஏரி நல்ல பெரிய ஏரிதான். போய்ப் பாக்க ஆசையாத்தான் இருக்கு. போய் ஒரு நாலு நாள் தங்கனும். அப்படித்தான் இந்த எடத்துக்கெல்லாம் போகனும்.

கர்நாடகாவுல வெண்பொங்கல் தண்ணியா ஓடும். வெண்பொங்கலா தண்ணிப்பொங்கலான்னு கேக்கத் தோணும். நம்மூர் மாதிரி வெண்பொங்கல் கொடுத்தா அவங்களுக்கு பிடிக்காது. அவங்க குடுக்குறது நமக்குப் பிடிக்காது. பேசாம டம்ளர்ல ஊத்திக் குடுத்தா நாலு மடக்குல குடிச்சுட்டுப் போயிறலாம்.

பத்திரகாளி படம் அருமை.

மாட்டோட கழுத்தைக் காலோட சேத்துக் கட்டுறது கொடுமைதான். நம்மூர்ல முந்தியெல்லாம் இப்படி கட்டமாட்டாங்க. பாவம்.

said...

மாட்டை இப்படியா கட்டிவைப்பாங்க... கொடுமைக்காரங்க...

said...

வாங்க கவிஞரே!


வாழ்த்துகளுக்கு நன்றி!

மீண்டும் வருக!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

தினப்படி வேலைகளை எங்கே போனாலும் செய்யணும்தானே? :-) :-)

said...

வாங்க மாதேவி!

ரசித்தமைக்கு நன்றீஸ் !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அதே சாப்பாடுதான். ஆனால் கெஸ்டுகளோடு உக்கார அனுமதி இல்லை. இந்தியாவில் இன்னும் க்ளாஸ் பார்க்கறாங்கதானே?

வீடுகளிலும் பணியாளர்களை வீட்டாட்களோடு உக்காரவச்சுச் சாப்பாடு தருவதில்லைதானே?

ஃபிஜியில் இருந்த காலத்தில், காலையில் ஹௌஸ்கேர்ள் வந்தவுடன், சோஃபாவில் உக்கார்ந்துக்கிட்டு, 'பஹனி ஏக் ச்சாய் பனாவ்' ன்னு சொல்லும்போது முதல்நாள் எனக்கேற்பட்ட அதிர்ச்சியைப் பார்த்துருக்கணுமே!! அப்புறம் பழகிப்போச்சு :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

எனக்கு இப்பத்தான் தோணுது.... ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சதே.... போயிருக்கலாமோன்னு.....

said...

வாங்க ஜிரா.

பேசாம ஒரு பதிவர் மாநாட்டை அங்கே நடத்தலாம்!

ஓடும் பொங்கல்தான் :-)

மாடுகள் பாவம். க்ருஷ்ணன் மாடு மேய்ச்ச காலத்தில் இப்படியெல்லாமா செஞ்சுருப்பான்? மனுசர்களுக்கு வரவர சோம்பல் அதிகம். நோகாம இருக்க ஆசைப்படறாங்க. இன்னொரு உயிருக்கு அது எவ்ளோ வேதனைன்னு நினைச்சுக்கூடப் பார்க்கறதில்லை..... ப்ச்...

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

மனிதனைவிடக் கொடிய மிருகம் உலகில் இல்லை......