Wednesday, August 23, 2017

புள்ளையார்

பயணம் அமைந்துள்ளது.  அதனால் இன்றைக்கே புள்ளையாரைக் கும்பிட்டு அனுமதி வாங்கியாச்சு.
'டேட் லைனில் உக்கார்ந்துக்கிட்டு, ஊர் உலகத்துக்கு முன்னாலேயே எல்லாத்தையும் முடிச்சுடுவே.....  இப்பக் கேக்கணுமா?  ரெண்டுநாளைக்கு முன்னாலேதானே   கொஞ்சம் அவசரமாப் பொறந்துட்டேன்னு  வச்சுக்கறேன்.  நல்லபடியா போயிட்டு வா' ன்னுட்டார்!

இனிப்பு, காரம்,காய்கறின்னு  மூணு வகை !   எல்லாமே  மோதகம் டிஸைந்தான்.   (  அதான்  அச்சு இருக்கே !)  மெதுவடை,  அசோகா,  பால் கொழுக்கட்டைன்னு அவரையே அசத்திப்புட்டேன் :-)


போகுமிடத்தில் கிடைக்கும் இணையத் தொடர்பைப்  பொறுத்து  வாரம் ஒரு பதிவு  வரலாம்.   வாராமலும் இருக்க வாய்ப்பு உண்டு!  ஒரு மாசத்துக்கு  அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமா?   :-)

அனைவருக்கும்  விழாக் காலத்துக்கான இனிய வாழ்த்துகளுடன், எங்கள் அன்பும் ஆசிகளும்!

25 comments:

Gunasekar Kolandasamy said...

Madam namma ooruka?

மாதேவி said...

இனிய விழா கால வாழ்த்துகள். அடுத்த பயணத்துக்கு நாங்கள் தயார் :)

ராஜி said...

விநாயகர் சதுர்த்தி படங்கள் அருமை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

"பயணம் அமைந்துள்ளது" என்று பதிவு தொடங்குகிறது. ஏதேனும் சொல் விடுபாடா? பிள்ளைரைக்கண்டோம். நன்றி.

நெல்லைத் தமிழன் said...

வாழ்த்துக்கள். பயணம் நல்லபடியாக அமையட்டும்.

உங்களுக்கு ஓகே... பிள்ளையாருக்கு தேங்காய் சட்னி இல்லாம எப்படி வடையை கண்டருளரீங்க? மோதக டிசைன் எங்க கிடைக்கிறது? (இருந்தாலும் கைல பண்ணறதைப் பார்க்கும்போது அது ஒரு சந்தோஷத்தைத்தான் தருது)

Anuprem said...

அட...பிள்ளையாருக்கு பிறந்த நாள் கொண்டாடியாச்சா...

கொடுத்து வைத்தவர்...health conscious சா vegetable கொழுக்கட்டை எல்லாம்..

சூப்பர்


பயணம் மகிழ்வோடு ..பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள்...அம்மா

இமா க்றிஸ் said...

பிள்ளையார் அழகா இருக்கார். என்னத்துல‌ புடிச்சீங்க‌? ஜோவி!!
ரஜ்ஜு அவர் வாகனத்தை முழுங்கிட்டாங்களோ!! ;‍)

அலங்காரம் எல்லாம் கலக்கலா இருக்கு. 'கொறு' டைலா கர்ட்டனா?

துளசி கோபால் said...

வாங்க குணசேகர்.

நம்ம பக்கம் இனி அடுத்த வருசம்தான்.

துளசி கோபால் said...

வாங்க மாதேவி.

ஆஹா..... மூட்டை கட்டியாச்சா!!! :-)

துளசி கோபால் said...

வாங்க ராஜி.

விநாயகர் ப்ரதமை :-)

நன்றீஸ்ப்பா !

துளசி கோபால் said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ஆமாங்க.... 'ஒரு' என்னும் சொல் விடுபட்டுப்போச்சு :-)

ஒரு பயணம் அமைந்துள்ளது !

துளசி கோபால் said...

வாங்க நெல்லைத் தமிழன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

நான் எப்படியோ அப்படியேதான் என் புள்ளையாரும். எனக்கு எது வேண்டாமோ அது அவருக்கும் வேண்டாம். என் ஜிக்ரி தோஸ்த் ஆச்சே !!!

மோதக டிஸைன் ஒன்னு பூனாவில் வாங்குனது. மூணு பாகமாகப் பிரியும். இன்னொன்னு நம்ம சிங்காரச்சென்னை. இது ப்ளாஸ்டிக் மோல்ட். ரெண்டாகத் திறக்கும்.

துளசி கோபால் said...

வாங்க அனுராதா ப்ரேம்.

இவர் பேலியோப் புள்ளையார். தொப்பையைக் காணோம் பார்த்தீங்களா? :-)


வாழ்த்துகளுக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க இமா.

இங்கத்து பாட்டரி க்ளாஸில் அரை Bag பாட்டரி க்ளே ( 10 கிலோ) வாங்கியாந்தேன் 2015 இல். அதுலே இருந்து கொஞ்சம் எடுத்துப் புள்ளையார் செய்தல் என்ற கணக்கில் இது மூணாவது முறை. களி மண் காலி. புள்ளையாருக்கே பத்தலை. இதுலே நான் ரஜ்ஜுவுக்குன்னு கொஞ்சம் கிள்ளி வச்சுக்கிட்டேன்:-) அடுத்த வருசம் இன்னொருக்கா அங்கே போய் களிமண் வாங்கி வரணும். நெல்சன் மண்ணு !

கொரு..... ப்ளேஸ் மேட் :-)

G.M Balasubramaniam said...

விழாக்காலம் அல்லது பண்டிகை என்றால் எழுத சிரமமில்லை ஏதோ எழுதிவிடலாம்தானே

Ananthu said...

teacher,
are you coming to india. Then please call me and i will come & meet you
If during navarathri, you are @ chennai please visit our home

yours

ananthu

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... அடுத்த பயணமா? வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

பயணம் இனிதாக வாழ்த்துக்கள்.
பிள்ளையரை வணங்கி ஆசீர்வாதம் வாங்கியாச்சு ! அப்புறம் என்ன!
பிள்ளையாரும், பிரசாதங்களும் சூப்பர்!

துளசி கோபால் said...

வாங்க ஜிஎம்பி ஐயா.


//ஏதோ எழுதிவிடலாம்தானே//

ஓ.... அப்படியும் வச்சுக்கலாம் :-)

துளசி கோபால் said...

வாங்க அனந்து,

இந்தியாவுக்கு அடுத்த வருசம்தான், அநேகமா ஜூன் ஜூலை....

நவராத்திரி அழைப்புக்கு நன்றி.

இங்கே போன வருஷம் நம்ம வீட்டுலே கொலு வைக்கலை. முக்திநாத் பயணம் போகவேண்டி இருந்தது. இந்த வருஷம் கொலு வைக்கத்தான் வேணும். அதுக்கு முன்னால் வீடு திரும்பிடுவோம்!

துளசி கோபால் said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரொம்பநாளா ஆசைப்பட்ட இடம். அதான் அங்கே குளிர்காலம் தொடங்குமுன் போயிட்டு வரணுமுன்னு..... கிளம்பறோம்.

துளசி கோபால் said...

வாங்க கோமதி அரசு.

வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி !

Nanjil Kannan said...

all the best .. Ashoka recipe on Saturday ? if not please add it to the list ;)

G.Ragavan said...

பிள்ளையாருக்கு பொறந்த நாள் வாழ்த்துகள்.

உங்களுக்கு இனிய பயண வாழ்த்துகள்.

நெல்லைத் தமிழன் said...

பிள்ளையாரையும், சொந்த அப்பா கட்சியிலிருந்து, மாமன் கட்சிக்கு மாற்றிவிட்டீர்களே (நெற்றியைப் பார்த்துத்தான் சொல்கிறேன்)