Monday, August 14, 2017

க்ரிஷாஸ் பர்த்டே!

நம்ம க்ரிஷ் பிறந்தது ஆவணி மாச அஷ்டமிதானே? அதென்னவோ இந்த வருசம் ஒரே குழறுபடியா ஆடியிலே பொறந்துடறான்னு.....
போனவாரம் நம்மூர் கல்ச்சுரல் க்ளப்பிலே  கிரிஷ்ணாஷ்டமி கொண்டா ட்டம் வச்சுருந்தாங்க.   உறியடி கூட இருந்தது :-)  வெண்ணெய்ப் பானையைச் சும்மா விடலாமோ?
 எங்களுக்கு  மூணு  க்ரிஷ்ணர்ஸ் :-)
எங்க பேட்டை பார்லிமென்ட் அங்கம் தான் விசேஷ விருந்தினர்.

குழந்தையைத் தொட்டிலில் விட்டு வச்சுருந்து  ரெண்டு ஆட்டு ஆட்டிவிட்டுக் கும்பிடணும்.  அங்கத்துக்கு  என்னன்னு புரியாம....  நூலைப்பிடிச்சு வேகமா ஆட்டுனதும் பதறிப்போன நான்... அதுக்குள்ளே புள்ளை இருக்குன்னதும், இப்ப பதற்றம் அந்தப் பக்கம் போயிருச்சு :-) மெள்ள இப்படி ஆட்டணுமுன்னு  அவுங்களுக்கு டெமோ கொடுத்தேன். அப்படியே காப்பி அடிச்சாங்க அவுங்களும்!
பொறந்தநாள் கேக் வெட்டி, முதல் துண்டை, கிரிஷ்ணனே அங்கத்துக்கு ஊட்டிவிட்டான். 'இதைவிட வேற பெரும் பேறு இல்லை' ன்னு  சொன்னதும் அங்கத்துக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி!  உண்மையா உண்மையான்னு கேட்டாங்க. பின்னே? துள்ஸி பொய் சொல்லி இருக்கேனோ?

அப்பதான் சொன்னேன்.....  'உண்மையில் இவன் பொறந்த நாள் இன்றைக்கு இல்லை. வர்ற பதினாலாம் தேதிதான்.  அந்தக் கணக்குலே இப்போ தொட்டிலில் இருக்கும் புள்ளை ப்ரிமெச்சூர்ட் பர்த். அதான் கவனமா மெள்ள ஆட்டணுமுன்னு சொன்னது'  அக்ரீடுன்னாங்க. :-)


முந்தாநாள் இன்னொரு இண்டியன் க்ளப் மிட் வின்ட்டர் விழாவுக்கும் இவுங்கதான் விசேஷ விருந்தினர்.  பேட்டை அங்கத்தை விடமுடியாதுல்லே? எம் பி இல்லையோ!

மிட்வின்ட்டர்னு சொன்னாலும்,  க்ளப் ஆரம்பிச்சு 20 வருசம் ஆன விழான்னும் வச்சுக்கலாம். 1997 இல் சுதந்திர தினப் பொன்விழாதான், க்ளப்  ஆரம்பிச்சதும் நடந்த முதல்விழா!
இந்த இடத்துலே முக்கியமான தகவல் ஒன்னைச் சொல்லித்தான் ஆகணும்.  இந்த இண்டியன் சோஸியல் அண்ட் கல்ச்சுரல் க்ளப்பைத் தோற்றுவித்தவர் நம்மவர்!  நாம் ஆரம்பிச்சு வச்ச ஒன்னு நல்லா வளர்ந்துருக்குன்றதில் நமக்கு ரொம்பவே மகிழ்ச்சிதான்!
அப்ப மேடையில் பேசுனப்ப, இருவது வருசம் தாக்குப்பிடிச்சு நின்னதைப் பாராட்டி,  அடுத்து வரப்போகும் கொண்டாட்டமா சுதந்திர தின விழாவுக்கும், க்ரிஷாஸ் பர்த்டேவுக்கும் வாழ்த்து சொன்னாங்க.  க்ரிஷாவை மறக்காம  இங்கே கோர்த்துவிட்டதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி! (ஆமாம்....அரசியல் வியாதிகளுக்குப் பேசச் சொல்லித் தரணுமா என்ன? )
இந்தப் பிறந்தநாள் குழப்பத்துலே  ஒரு  கூட்டம் இன்றைக்கு இந்தியாவில் விழா நடத்தறாங்க. தினக்காலண்டரில் போட்டுருக்கு.
எங்கூர்  ஹரேக்ரிஷ்ணா கோவிலில் நாளைக்குத்தான் ஸ்ரீ ஜென்மாஷ்டமி விழா.
இங்கே நம்மூர் ஃபிஜி இண்டியன் குழுவிலும்  வழக்கம்போல் ஒன்பது நாள் கொண்டாட்டம்.   ஆகஸ்ட் எட்டாம் தேதி ஆரம்பிச்சு நடக்குது. நாளைக்குத்தான்  அங்கேயும் புள்ளெ பொறக்குது.

உள்ளூர் ஸ்ரீ ஸ்வாமி நாராயண் கோவிலில்  வர்ற 20 ஆம் தேதி விழா.  வீக்கெண்டுக்கு நேர்ந்து விடும் பழக்கம் காரணம்.

இதெல்லாம் போதாதுன்னு ஆவணி அஷ்டமிதான்  நமக்குக் கொண்டாட்டமுன்னு  சேதி வந்துருச்சு.  அந்தக் கணக்கின்படி  செப் 13க்கு விழா.

இந்த வருசம் நைவேத்யம் கூட ரொம்பவே 'கூல்' ! எப்பப் பார்த்தாலும் ஆப்பிளும் ஆரஞ்சும், கிவி ஃப்ரூட்டும் என்ன வேண்டி இருக்கு? க்க்க்கும்..........
முக்கனிகள். கண்ணனுக்குப் பிடிச்சதும் கிடைச்சது.  நாவல், சப்போட்டா, பலா !   குழந்தைக்கே படைச்சாச்சு !   ஆடிப்போயிட்டான் :-)

எனக்கு இன்னுமொரு சின்ன சந்தேகம். மாடு மேய்க்கப்போன இடத்துலே இந்த மரம்தான் இருந்துருக்கு. அதனால் இதைத்தான்  பறிச்சுத் தின்னுருப்பாங்க. எதோ ஆப்பிள் , பேரிக்காய்  இன்ன பிற எல்லாம் இருந்தாப்லெயும்,  அதையெல்லாம் விட்டுட்டு  நாவலைப் பறிச்சுத் தின்ன மாதிரியும் சொல்லி வச்சுட்டாங்க பார்த்தீங்களா? 

நம்ம வீட்டுக் கண்ணனுக்கு  இன்றைக்கு  அலங்காரமும் நைவேத்யமும்  ஆச்சு. ஜிலுஜிலு பஞ்ச கச்சம் :-)
எங்க மாட்சிமை பொருந்திய மஹாராணியின் பொறந்தநாளைக்கூட நாங்க ஜூன் முதல் வாரமும், எங்களைத் தொடர்ந்து மறு வாரம்  ஆஸியிலும் கொண்டாடுவோம். அவுங்க உண்மையில் பொறந்தது ஏப்ரல் மாசம்தான்.........

எந்த விழாவா இருந்தாலும்  ஒரு முறை கொண்டாடிட்டு விட்டுரும்  வகையில் நான் இல்லை என்பதால் இன்றைக்கே....  சின்னதா, கொஞ்சமா ஆரம்பிச்சு விட்டுருக்கேன்.

இடும்பிக்கு வேற வழி, இல்லையோ?  :-)

ஹேப்பி பர்த்டே க்ரிஷா !!!!   வீ லவ் யூ :-)12 comments:

said...

இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்ம்மா. படங்கள் அருமை

said...

இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள். அடுத்த அடுத்த தலைமுறையின்போது இதெல்லாம் போயிடாதோ? முதல் படம், அந்தக் குழந்தை கிருஷ்ணர் வேஷத்தில் அழகாக இருக்கு (காலில் ஷூவுடன்).

said...

இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.
படங்களும் செய்திகளும் மிக அருமை.

said...

ஹேப்பி பேர்த்டே கிருஷ்ணா!!!

said...

கிருஷ்ண ஜயந்தி அவரவர் விருப்பப்படி கொண்டாடலாம் கிருஷ்ணர் பிறந்தகதையையும் சௌகரியம் போல் மாற்றலாம் யாருக்குத் தெரியும் சரியாக.

said...

வாங்க ராஜி.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிப்பா!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

அடுத்த தலைமுறை நம்ம வீட்டில் கட்டாயம் போயிரும்! ஆனால்.... நம்ம சங்கங்களில் தொடரும். கலை கலாச்சாரத்தை விடக்கூடாதுன்றதுக்காக ஆரம்பிச்சவைகள் இல்லையோ இந்த கல்ச்சுரல் க்ரூப், கல்ச்சுரல் க்ளப் எல்லாம்!

நியூஸிக் குளிருக்குக் கிருஷ்ணர் ஜாக்கெட், ஷூஸ் எல்லாம் போட்டே ஆகணும் :-)

said...

வாங்க கோமதி அரசு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல!

said...

வாங்க ஜிரா!

தேங்க் யூ !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கும் விழா! அவரவர் மனம் போல கொண்டாடறோம்! அது போதும்!

said...

வாங்க அனுராதா ப்ரேம்..

மன்னிக்கணும். தவறுதலா உங்க பின்னூட்டம் டிலீட் ஆகிருச்சு.

இப்ப காப்பி & பேஸ்ட் செஞ்சேன்.

//அழகான கொண்டாட்டங்கள்.... //

நன்றிப்பா!

said...

அழகிய படங்கள்.. கொண்டாட்டங்கள் தொடரட்டும்....