Tuesday, October 30, 2012

கல்யாண 'மாலை'


இது யோகாதானே?

ஙே....   ஒரு விநாடிக்கும் குறைவா முழிச்சாலும் சட்ன்னு சுதாரிச்சுக்கிட்டு ஆமாம்  இது ஒரு வகை யோகாதான்.  ரொம்பவும் கவனமா மனசை ஒருமுகப்படுத்திச் செய்யவேண்டிய விஷயம்.

ஏம்மா....ஒரு வெள்ளைக்காரம்மா கேட்டதுக்கு இப்படிச் சொல்லிட்டேனேன்ன  கோபாலைக் கொஞ்சம் பெருமையோடு பார்த்தேன். சும்மாச் சொல்லக்கூடாது!  மனுசர் அடிச்சு விட்டாலும்.....

எப்படிங்க? எப்படி இப்படியெல்லாம்....?

அது தானே வருதும்மா.......  சரியா நாஞ்சொன்னது?

ரொம்பச் சரி. கவனம் பிசகாமல்  ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அது ஒரு வகை தியானம். தியானம்  இஸ் பார்ட் ஆஃப் யோகா. (எனக்கு மட்டும் சமாளிக்கத் தெரியாதா?)

ஆனா சும்மாச் சொல்லக்கூடாது.  வரவர இவர் நல்லாவே தேறிட்டார்!!!!!

நிறையப்பேர்....  கோலத்தைப்பற்றி நாம் எடுத்து வச்சுருக்கும் ப்ரிண்ட் அவுட்லே  இருப்பதைக் கவனமா வாசிக்கிறாங்க.


சாப்பாட்டுக்கடைகளில்  கூட்டம் அம்முதுன்னு ரிப்போர்ட் வருது. நம்ம கோபால்தான் ஊருளவாரம் போய்ப்பார்த்து வந்து சேதி சொல்றார். ரங்கோலித்தோழி புடவை ஷோ, சாப்புடப்போறேன், டீ குடிச்சுட்டு வரேன்னு நாலைஞ்சு முறை இடத்தைவிட்டு  எஸ் ஆகிக்கிட்டு இருக்காங்க.  அந்த சைடு போற பசங்க போற போக்குலே கொஞ்சம்  கலர் அரிசி எடுத்து காலி இடத்தில் நிரப்பிக்கிட்டுப் போறாங்க. நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன ? மேலே விழுந்து எல்லாத்தையும் கொட்டி வச்சு வாறாமல் இருந்தால் போதாதா???

' சாப்புட எதாவது வாங்கியாரட்டுமா ?'ன்னு தனக்குத் தேவையானதையெல்லாம் பட்டியல் போட்டுக்கிட்டே இருக்கார் நம்ம கோபால். டெமோ முடியட்டும். ஸ்டாலில் வேற ஆளில்லை. விட்டுட்டுப்போக முடியாது.  ஒருவழியா அஞ்சேகாலுக்கு ரங்கோலி திரும்பி வந்தாங்க. அட ! அழகா எல்லாம் செஞ்சுருக்காங்களேன்னு பாராட்டு வேற!

காஃபி கிடைக்குதான்னு பார்க்கலாமா?  போய்ப் பார்த்தா  எல்லாம்  உள்ளுரில் இருக்கும் இந்தியச் சாப்பாட்டுக்கடைகளே.  உலகப்பொதுவான இண்டியன் மெனு(??)  பட்டர் சிக்கன் ரோகன் ஜோஷ், நான், நவ்ரத்தன் குர்மா, மட்டர் பனீர் ..... போதுண்டா சாமி:(

உள்ளுர்லே சுமார் 42 இந்திய சாப்பாட்டுக்கடைகள்  இருக்கு,  அஞ்சாறு ரெஸ்ட்டாரண்டும்  மீதி எல்லாம் டேக்கவே கடைகளுமா.  அதுலே பாதி எண்ணிக்கை இங்கே ஸ்டால் போட்டுக்கிட்டு அதே சமாச்சாரங்களை அயராமல் விக்கறாங்க.

வேற எதாவது கிடைக்குமான்னு தேடுனால் கிறைஸ்ட்சர்ச்  கேரளா அசோஸியேஷன் ஸ்டால் கண்ணில் பட்டது.  கிட்டப்போனதும் மேங்கோ லஸ்ஸியை எடுத்துக் கையில் கொடுத்த ஜஸ்டின் ( இப்போதைய ப்ரெசிடெண்ட்) என்ன சாப்புடறீங்கன்னார்.  பெரிய  ஹாட் ப்ளேட் வச்சு தோசையும் ஆப்பமும் பக்கத்துலே பக்கத்துலே போட்டுக்கிட்டு இருக்காங்க. திருப்பிப்போட்டா தோசை. போடலைன்னா ஆப்பம்.ரொம்ப ஈஸி:-))))  ஆனால்  வேற வேற மாவு கேட்டோ!

ரெண்டு பேருக்கும் ஆப்பம் சொன்னதும் காசு வாங்கிக்க மாட்டேன்றார்.  ஏன்? நான் கல் கொடுத்த கருணை மாதா!!  மாவு அரைக்க  வெட் க்ரைண்டர் நாந்தான் நேத்து கடன் கொடுத்துருந்தேன்:-)
 இலவசமா? அதெல்லாம்  தேவை இல்லை. காசு வாங்கிக்கலைன்னா எனக்கு ஆப்பம் வேணாம். வேற எங்கியாவது சாப்புட்டுக்கறேன்னதும்  சரின்னு காசை வாங்கிக்கிட்டார்.  லாபநோக்கு இல்லாம (அவுங்கவுங்க) சமூகத்துக்கு எதாவது  சேவை செய்யும்  சங்கங்கள்  ஃபண்ட் ரெய்ஸிங் & நாமும் இருக்கோமுன்னு சமூகத்துக்கு அறிவிப்பு  செஞ்சுக்க இங்கே ஸ்டால்ஸ் போட்டுருக்காங்க.  பதிவு செஞ்சுக்கிட்ட சங்கங்களுக்கு மட்டும்   குறைந்த தொகைக்கு இடம் கொடுத்துருக்கு.  மற்ற ஸ்டால்களுக்கு  400ன்னு சொன்னாங்க.

தீபாவலி விருந்துன்னு  தனி ஏற்பாடு ஒன்னும் இல்லை. இது பப்ளிக் ஃபங்ஷனா போயிருச்சுல்லே? ஊருக்கே  சோறு போட முடியுமா சிட்டிக் கவுன்ஸில் கொடுக்கும் ஃபண்டிங்லே?  ஃபுட் ஸ்டால்களில்  அவுங்கவுங்க காசு கொடுத்து வாங்கிக்கணும்.

ஒரு செட்லே தடிதடியா ரெண்டு ஆப்பம்.  சைட் டிஷ்ஷா கோபாலுக்குக் குருமா. எனக்கு தேங்காய்ச் சட்டினி.  தின்ன முடியாமத் தூக்கிக் கடாசவேண்டியதாப்போச்சு எனக்கு:( ப்ச்.... வேற கடையில் அட்லீஸ்ட் இன்னொரு கேரளாக் கடை இருக்கே அங்கே என்னன்னு பார்த்திருக்கலாம்.!  அங்கெதான் எலக்ட்ரிக் ஆப்பச் சட்டி இருந்துச்சு!

அஞ்சரைக்கு மெயின் ஸ்டேஜ்லே நிகழ்ச்சிகள்ஆரம்பிக்குது.  வந்தே மாதரம்.......... கூடவே நியூஸி நேஷனல் ஆந்தம் காட் ஆஃப் நேஷன்ஸ் பாட்டும் முழங்குது. எங்களுக்கு மகள் வீட்டில் சின்னதா ஒரு  கடமை இருக்குன்னு  ஸ்டாலை அப்படியே விட்டுட்டு(அதான் அஞ்சுமணியோடு டெமோ முடிஞ்சுருச்சுல்லே)  மகள் வீட்டுக்குப்போனோம்.  அங்கே ஜூபிடருக்கு சாப்பாடு கொடுத்துட்டு மறுபடி விழாவுக்கு  போறோம்.  கார் உள்ளே நுழையும்  வாசலில்  பார்க்கிங் சார்ஜ் வசூல் பண்ணிக்கிட்டு இருக்காங்க.  அஞ்சு டாலராம்!  நாங்க ஸ்டால் ஆளுங்களாச்சே. அதனால் எங்களுக்கு சார்ஜ் இல்லை.

ஆனால்....   எனெக்கென்னமோ இது கொஞ்சம் அநியாயமா இருந்துச்சு.  சிட்டிக் கவுன்ஸில்  நடத்தும் விழாவுக்கு பப்ளிக் காசு கொடுத்து வரணுமா?  டூ பேட்:(  வரவர எங்கூர் கவுன்ஸில் அல்பமாப் போய்க்கிட்டு இருக்கு:(

ஸ்டேஜ் லே ஒருத்தர் தப்லா வாசிச்சுக்கிட்டு இருந்தார்.  அதுக்குப்பிறகு  ஒரு ஜோடி வந்து ரெண்டு ஹிந்திப்பாட்டு பாடிட்டுப்போனாங்க.  இந்த விழாவின் ஹைலைட் ரங்கஷ்ரீ  டான்ஸ் க்ரூப்.  பதினைஞ்சு பேர் கொண்ட ஒரு குழு நியூஸிக்கு வந்துருக்காங்க.  குஜராத் மாநிலத்தில் ஆமடாவாத்(அஹமதாபாத்) நகரில் இருந்து. இந்தியப்பண்பாட்டுக் கலைக்கழகம் ஏற்பாடு செஞ்சுருக்கு.  நியூஸியின் முக்கிய நகரங்களில் நடக்கும் தீவாலிக் கொண்டாட்டத்துலே ஆடி மகிழ்விக்கன்னாலும் நவராத்ரி  கர்பா ஸ்பெஷலிஸ்ட் இவுங்க.  குஜராத் நாட்டுப்புறக் கலைகளை படிப்பிக்கும் Rangashree School of Fine Arts, பள்ளி. 15 வருசம் ஆச்சு இதை ஆரம்பிச்சு.  1987 வது வருசம் குஜராத் பஞ்ச நிவாரண  நிதிக்காக, கலைநிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பிச்சு இன்னிக்கு  நாட்டுப்புறக் கலைகளை பயிற்றுவிக்கும் கல்விக்கூடமா ஆகி இருக்கு!  துபாய், மஸ்கட்ன்னு  வெளியே போய் நிகழ்ச்சிகள் நடத்தி  அதுக்கப்புறம் யூரோப், அமெரிக்கான்னு விஜயம் செஞ்சு இப்போ  நியூஸிக்கு இந்த வருசம் வந்துருக்காங்க.

சும்மாச் சொல்லக்கூடாது .... அட்டகாசமான நடனங்கள்.  அறுவடை முடிஞ்சு தானியம் சுத்தம் செய்ய  வட்டமான முறம் வச்சுக்கிட்டு ஆடுனதும் மண்குடங்களைத் தலையில் சுமந்து கையில் தீபங்களுடன் ஆடுனதும் பெண்கள்  இரண்டு கைகளையும்  மாற்றிக் கோர்த்துப் பிடிச்சுக்கிட்டு (வலது கையால் இடது பக்கம் உள்ளவரையும் இடது கையால் வலது பக்கம் உள்ளவரையும் கைகோர்த்துப்பிடிச்சு கடைசிவரை கைகளை விலக்காமலேயே ஒரு முழு நடனம் ஆடுனது எனக்கு ரொம்பவே பிடிச்சுருந்துச்சு.

மூன்று நடனங்களில் ஆண்கள். ஒன்று ஆண்கள் மட்டும், மற்ற இரண்டிலும்  பெண்களுடன் சேர்ந்து  ஆடுனாங்க. கடைசிப்பாட்டா வந்தேமாதரம் பாடி ஆடுனது நல்லாவே இருந்துச்சு.  இந்தக்குழு மொத்தம் எட்டு வகை நடனங்கள்  ஆடுனாங்க.  இடையிடையே உள்ளூர் கலைஞர்களியும் ஊக்கு விக்கணுமேன்னு  ஏற்பாடு. ஃபிஜி இந்தியர்கள்  குழு, இந்திய இந்தியர்கள் குழு, கேரளா பாய்ஸ்,  இலங்கைத் தமிழர் நடத்தும் பரதநாட்டியப் பள்ளி மாணவிகள், கேரளப்பெண்மணி நடத்தும் பரதநாட்டியப்பள்ளி மாணவிகள் இப்படி ரெண்டு பரத நாட்டிய நிகழ்ச்சிகள், கேரளா அசோஸியேஷன் பெண்களின் திருவாதிரக்களி, பஞ்சாபி மாணவர்களின் பாங்க்ரா நடனம் இப்படி  கலந்துகட்டி ஏராளமான ஐட்டங்கள். எல்லாத்துக்கும் திருஷ்டி பரிகாரமா பாலிவுட் ஒர்க்ஸ்ன்னு  பாலிவுட் பாட்டுக்கு தேகப்பயிற்சி(மாதிரி) ஒன்னு.  நல்லவேளை... எங்க பாட்டி எப்பவோ காலமாயிட்டாங்க.  ஒருவேளை மேலுலகத்தில் இருந்து பார்த்துட்டு 'நிப்பு தொக்கின கோத்திலாக'ன்னு (தெலுங்குப் பழமொழி) சொல்லி இருக்கலாம்.  உண்மைதான் விலுக் விலுக்ன்னு என்னமோ வலிப்பு வந்தது போல....... என்னமோ போங்க:(

பாங்க்ரா டான்ஸ்க்கு மேடை ஏறுனதும் இங்கே யாராவது பஞ்சாபிகள் இருக்கீங்களான்னு  வந்த அறிவிப்புக்கு , சொன்னா நம்ப மாட்டீங்க..... அரங்கத்துலே இருந்தவர்களில்  95 சதமானம்  கைதூக்கிட்டு மேடைக்குக்கீழே போய் ஆட்டத்தில் கலந்துக்கிட்டாங்க!!!! பல்லே பல்லே பல்லே........  போற போக்கைப் பார்த்தா சீனர்களைவிட வேகமா வந்திறங்குறாங்க போல!

சண்டிகர் வாழ்க்கையில் கண்கூடாப் பார்த்தது..... எங்கே பார்த்தாலும்  'இங்கிலாந்து , கனடா, நியூஸிலாந்து, அஸ்ட்ராலியாவுக்கு  போகணுமா?  போகணுமா? போகணுமா?' ன்ற அறிவிப்புகள். படிக்க வர்றோமுன்னு விசா வாங்கிடறாங்க. இங்கே வந்து அதைத்தவிர மற்ற எல்லாமும் நடக்குது:(  பல்கலைக்கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நண்பர் சொன்னது.....  இவுங்க கொண்டுவரும்  கல்வி சம்பந்தமான அத்தாட்சிகள் முக்காலே மூணு வீசம் பொய்!!!!  எல்லாத்துலேயும் போலிகள் உருவாகாதா என்ன? என்னமோ போங்க......

ஒன்பது மணி அளவில் நிகழ்ச்சிகள் முடிஞ்சாலும்   கொண்டாட்ட மூடில் இருந்த சனம்  பாங்க்ராவைத் தொடர்ந்துக்கிட்டே இருந்துச்சு. நாங்க கிளம்பி நம்ம ஸ்டால் எந்த கதியில் இருக்குன்னு போய்ப்பார்த்தால்  எல்லா கலர் அரிசிகளையும் ஒன்னாச்சேர்த்து  ஒரு மாதிரி கருப்பு நிறமாக்கி ஒரு பாத்திரத்துலே போட்டு வச்சுருக்காங்க யாரோ.  அதையும் எடுத்து  சிலர் சொந்த டிஸைனில்  அங்கங்கே ரங்கோலி  போட்டுப்பார்த்துக்கிட்டு இருந்தாங்க.

பேப்பர்களையும் ஃபெல்ட் பென்களையும் வச்சுட்டு வந்துருந்தேன். அதுலே பசங்க கோலம் வரைஞ்சும் படங்கள் வரைஞ்சும் பொழுது போக்கி இருக்கு.  ஒரு பொடியன் தன்னுடைய படத்தை வரைஞ்சு  எனக்கு ப்ரபோஸ் பண்ணி இருக்கான்.  செல் நம்பரெல்லாம்  கொடுத்துருக்கு! அதுலே அவுங்கப்பாவோ அம்மாவோ ஒரு நோட் போட்டு வச்சுருக்காங்க. நிறைய மாடுகள் இருக்குன்னு.


என்ன சொல்றீங்க?  கல்யாணம் பண்ணிக்கவான்னு கோபால்கிட்டே கேட்டதுக்கு,  வேணாம். நிறைய மாடுகள்ன்னா  பண்ணையில் எக்கச்சக்க வேலை இருக்குமேம்மா...... உன்னால செய்ய முடியாது(நான் ஒருத்தன் படறபாடு போதாதா? அவன் பாவம். பொழைச்சுப்போகட்டும் )ன்னார்!!!!!!!!!

நான் கஷ்டப்பட்டால் இவருக்குத் தாங்காது கேட்டோ!!!!

ஹாஹாஹாஹா..

நம்ம ஸ்டால் மட்டும்தான் எல்லோருக்கும் இலவசம். மற்ற சிலர்  காசு வாங்கிக்கிட்டுத்தான்  ஆக்டிவிட்டீஸ் செய்யவிட்டாங்க.

கேரளா அசோஸியேஷன் ஸ்டாலில் செஞ்சு வச்சுருந்த சமோசாக்களையும் வடைகளையும்  யாரும் வாங்கலை. எல்லோரும் தோசையும் ஆப்பமுமா  வெட்டி இருக்காங்க.  மாவெல்லாம் காலி!   பாக்கியைப் பங்கு வச்சதிலே நமக்கு ரெண்டு சமோஸாவும் ரெண்டு வடைகளுமா கொண்டு வந்து கையில் திணிச்சாங்க.  கோலக் கடையைக் கட்டிட்டு,  வடையை ருசிச்சுக்கிட்டே வீடுவந்து சேர்ந்தோம்.

ஆச்சு, இனி நவம்பர் 10  தேதிக்கு ஃபிஜி இந்தியர்களுடனும்  13 தேதிக்கு நம்ம துளசிவிலாஸிலும் தீவாலி கொண்டாடணும். செஞ்சுருவோம்.....

அனைவருக்கும் முன்கூட்டிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.



பின்குறிப்பு:  படங்கள் உபயம் கோபால். புதுக்கெமெரா ஒன்னு  Canon1100D வாங்கி இருக்கு. இவரையும் பிட் வகுப்புலே சேர்த்துவிடணும்:-)








39 comments:

said...

/இலவசமா? அதெல்லாம் தேவை இல்லை. /

வொய் ரீச்சர் வொய்?

said...

ரொம்ப நல்லா இருக்கு. டைட்டிலுக்கும் பதிவு மேட்டருக்கும் உள்ள கனெக்ஷன் இந்த களிமண் மண்டையில ஏறல. அவ்வளவுதான்.

said...

கந்தசாமி சார் சொல்வதை நானும் வழி முழிக்கிறேன்!

said...

படங்கள் அருமை... நன்றி...

said...

படங்கள் எல்லாம் அருமை. சிறப்பான நிகழ்ச்சி.

said...

ஹாஹா பூமியில் இருக்கும் இந்த‌ 27 வருஷத்துலே ஒரு கழிசடை(!) கூட ப்ரபோஸ் பண்ணலையேன்னு நான் ஃபீலிங்குல இருக்கும்போது நீங்க இப்படி வெறுப்பேத்தறது கொஞ்சம் கூட நல்லாயில்லே டீச்சர்.. :)) அவ்வ்வ்வ்.... இந்திய ரெஸ்டாரென்ட் பத்தி எல்லாம் புலம்பி இன்னுமே கடுப்பாவுது!! அதையெல்லாம் கஷ்டப்பட்டு மறக்க பாக்கறேன், யாராவது மட்டர் பனீர் அலூ மட்டர்ன்னு ஆரம்பிச்சீங்க தெரியும் சேதி!

said...

அப்புறம் டீச்சர் அங்க‌ 2 மாசம் தீவ்ளி கொண்டாடுறதுல எனக்கு என்ன பொறாமை.. இங்க என்ன வேற‌யா வாழுது, அதே கதை தானே!!! நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன் குழந்தை எல்லாம் பிறந்த அப்புறம்(?!) வாரநாள் ஆனாலும் அன்னிக்கு ஹான் கொண்டாடணும்னு. பர்த்டே முதற்கொண்டு எல்லாமே வீக் எண்டுக்கு நேர்ந்து விடறது கூட ரொம்ப கடுப்பாயிட்டு இருக்கு.. (நான் வளர்கிறேனே டீச்சர், எத்தனை கடுப்பு பாத்தீங்கல்ல..?)

said...

திருப்பிப்போட்டா தோசை...போடலேன்ன ஆப்பம் - விளக்கம் சூப்பர்!

பாலிவுட் -விலுக் விலுக்குன்னு வலிப்பு வந்தாப்புல....

பல்லே பல்லே போற போக்கைப் பார்த்தா....

என்னமோ போங்க...நீங்களும் எழுதிடீங்க, நாங்களும் படிச்சிட்டோம்...உங்கள் தீவாளி கொண்டாட்டத்தை!

said...

யாருக்குக் கல்யாணம்? எங்க மாலை..
கொத்தனார் தான் வந்தாரே நியூஜெர்சி எப்படி இருக்குனு சொல்லிட்டுப் போகக் கூடாதோ!!!
ஸ்டால் பிரமாதம்.அதில கறுப்பு டிசைனும் பிரமாதம். டண்டணக்குனு பாங்ரா ஓசை காதில விழறம்மாதிரி எழுதி இருக்கீங்க.:0)மூணு எண்ணம் தீவுளியோ. நன்னாயிட்டு மோளே.

said...

இனிய கொண்டாட்டம். படங்கள் அருமை. இனி PiT போட்டிக்கு ந்யூசியிலிருந்து 2 எண்ட்ரி நிச்சயம்னு சொல்லுங்க:)!

said...

கல்யாண 'மாலை'"யுடன்

முன்கூட்டிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.


"

said...

ஒரே கல்லுல ஆப்பமும் தோசையுமா? ஆப்பத்துக்குண்டான சாமுத்ரிகா லட்சணமே இருந்துருக்காதே. கல் கொடுத்த கருணை மாதா அப்டியே அஜந்தா ஆப்பச்சட்டியையும் கொடுத்து அருள் பாலிச்சுருக்கக்கூடாதோ.

said...

So soon u started celebrating Diwali...Nice photos and colourful teacher and Gopal Ji.

said...

கறுப்பு கோலம் கூட நல்லாத்தான் இருக்கு.

திருப்பி போட்டா தோசை....இல்லன்னா ஆப்பமா....நல்ல விளக்கம்.

தீபாவளி வாழ்த்துக்கள் டீச்சர்.

said...

நல்ல தீபாவலிதான் சிரித்து வயிற்று வலிதான் வந்துவிட்டது.

உங்கவீட்டு தீபாவளிக்கு வந்துவிடுகின்றோம் வயிறுமுட்ட விருந்து கிடைக்கும்தானே.

said...

ஆகா.. டீச்சருக்கு புரோபசல் வருது.

கோபால் சார்.. உஷார் :)

டீச்சர், நிப்பு என்றால் என்ன? தொக்கின கோத்தி புரியுது.

said...

பதிவினை ரசித்தேன்.... படங்களையும் தான்!

said...

வாங்க கொத்ஸ் வாங்க.

அதெப்படிங்க....இலவசமுன்னதும் கை நீட்டுவதா?
அவுங்களே நிதி சேகரிப்புக்காக ஆக்குறாங்க. அதுலே போய்........

தமிழக அரசு கொடுத்தா வேணா வாங்கிக்கலாமுன்னு பார்க்கிறேன்!

said...

வாங்க பழனி .கந்தசாமி ஐயா.

க்ளைவின் ப்ரொபோஸலைப் பார்க்கலையா நீங்க:-))))

said...

வாங்க ஸ்ரீராம்.

எதுக்கு முழிக்கணும்? @கல்யாணமாலை நிகழ்ச்சிதான்:-)))) ப்ரொபோஸல்!!!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க ரமா ரவி.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க பொற்கொடி.

இது ரெண்டாவது ப்ரொபோஸல்ன்னு சொல்லிக்க ஆசைதான்:-)))))

முதல்லெ செஞ்ச தவறை மீண்டும் செய்யணுமான்னு ஒரு யோசனைதான்:-))))

இண்டியன் ரெஸ்ட்டாரண்டுகள் வரவர போர் அடிச்சுப்போச்சு. நோ ஆலு மட்டர், நோ மட்டர் பனீர். ஓக்கே!!!!

நாம் மாத்திரம் தன்னந்தனியா கொண்டாடிக்கணுமுன்னா என்னிக்கு வருதோ அன்னிக்கு. ஆனால்.... ஆளு, அம்பெல்லாம் வேண்டி இருக்கேப்பா!!! வைர நெக்லெஸ் போட்டுக்கிட்டு சூப்பர் மார்கெட் போனமாதிரின்னு..... இருக்க முடியுதா?

பி.கு: ஒரு சேதி ஒளிஞ்சுருக்காப்லெ இருக்கே!!!!

said...

வாங்க ரஞ்சனி.

சாஸ்திரப்பூர்வ கொண்டாட்டம் இப்படி கம்யூனிட்டி தீவுளியில் இருக்காதே:(
அதுக்குத்தான் ஒரு பண்டிகையை பலமுறை கொண்டாடறோம்.

கங்கா ஸ்நானம் செஞ்சு புதுசு உடுத்தத்தான் ஒரிஜினல் நாள் இருக்கே நமக்கு:-)))

said...

வாங்க வல்லி.

இந்தக் கல்யாணத்துக்கும் நீங்களே ஈவண்ட் மேனேஜர்ன்னா நான் ரெடி கேட்டோ:-))))

தீவுளி இப்போதைக்கு நாலண்ணம். கோவிலை விட்டுடமுடியுமா? அன்னக்கூட் வேற இருக்கே!!!!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பேசாம கொண்டாட்டம் 1 என்று டைட்டில் வச்சுருக்கலாம், இல்லே:-)))

பிட்டுக்கு மண் சுமக்க இன்னொரு ஆளைச் சேர்த்துவிட்டதுக்கு எனக்கு போனஸ் மார்க் கொடுக்கக்கூடாதா???

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

நம்ம சட்டி கமர்ஸியல் அடுப்புக்குச் சரிவராதேப்பா:(

சாமுத்திரிகா லட்சணம் நாக்குக்குத் தெரியாது:-)))

said...

வாங்க சிந்து.

நலமா? எங்கே ரொம்பநாளா ஆளையே காணோம்?

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

பேசாம கறுப்பரிசியை வாரி வச்சுருக்கலாமுன்னு இப்பத் தோணுது!

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க மாதேவி.

கிளம்பி வாங்க மாதேவி! நீங்க வந்ததும் அது எப்பவா இருந்தாலும் தீவுளி விருந்து ஜமாய்ச்சுடலாம்:-)

said...

வாங்க ஜீரா.

ஆஹா..... நிப்பு? = நெருப்பு.

அதை மிதித்த........... டேஷ் டேஷ்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசிப்புக்கு என் நன்றிகள். மீண்டும் வருக.

said...

"திருப்பிப் போட்டால் தோசை"---ஆஹா அருமையான தத்துவம்!

said...

நண்பரின் வாண்டு "இட்லிக்கும் பொங்கலுக்கும் வித்தியாசம்" என்ன எனக் கேட்க, நான் தெரியாமல் முழிக்க அது சொன்னது,'பொங்கலுக்கு லீவு வரும் இட்லிக்கு வராது!!!

said...

வாங்கி இருக்கு

கடுமையான கண்டனம். பாவம் அவரை விட்டுங்க. ஏற்கனவே அப்பாவியா இருப்பாரு போல.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவை தமிழ்நாட்டை பார்க்கும் போது உள்ள உணர்வை தனியாக எழுதுங்க.

உள்ளே வந்து மறுபடியும் சென்றதும் கிடைத்த உருவான தாக்கங்கள்.

said...

வாங்க பத்மா சூரி.

தேவைதானே கண்டுபிடிப்புகளின் தாய்!!!

அதான் தத்துவம் தானாய் வருது!

வாண்டு சொன்னது அருமை!

(ஆனால் இது ரொம்பவே பழைய ஜோக்)

said...

வாங்க ஜோதிஜி.

புதுகெமெராவுக்கு முன்னே ஒரு முற்றுப்புள்ளி இருப்பதை கவனிக்கலையா? என்னமோ போங்க!!!

வெளியே இருந்து தமிழ்நாட்டைப் பார்ப்பது.. உணர்ச்சிக்குவியல்.

அதையே நேரில் வந்திறங்கிப் பார்த்தால் மனக்கொதிப்பு.

said...

haiyo!
டீச்சர், நீங்க ஒரு கோலாயினி:)
(கவிதாயினி மாதிரி வச்சிக்கோங்க)

அந்த Sprinklers/Color Rice கோலம் சூப்பரு!

//Marry Clive; Hez got many cows//

அந்தக் க்ளைவ்வே கோபால் தான்-ன்னு சொல்லுறேன்!
கோ + பால் = cow + protector

So, Marry Clive (aka) Gopal, No objections:)))