Monday, October 15, 2012

லட்டு திங்க ஆசையா கண்ணா?


நேரவித்தியாசத்தில் தூக்கம் கலைஞ்சு போனதும் ரெண்டு பேருக்கும் ஒரே ஐடியா! பேசாம எழுந்து குளிச்சுட்டுக் கோவிலுக்குப்போய் வரலாமா? இங்கேயே காலை ப்ரேக்ஃபாஸ்ட் இருக்கு. ஏழரை தொடங்கி பத்தரை வரையாம். போயிட்டு வந்து சாப்பிட்டால் ஆச்சு.

வாசலில் ஆட்டோ. அறுவது கேட்டு அறுவதுக்கு பேரம் படிஞ்சது. பெட்ரோல்விலை எல்லாம் ஏறிப்போச்சு சார்..........  ம்ம்ம்  ஒன்னும் சொல்றதுக்கில்லை. அதுவும்  முதல்நாளே வாக்குவாதம் வேணாம்

(இல்லேன்னா மட்டும் நாம் ஜெயிச்சுருவோமாக்கும்?)


ரெண்டே கி,மீட்டர் தூரத்தில் இருக்கும் கோவில் வாசலில் போய் இறங்கியாச்சு. வெங்கடேசன். ஆஃப் வெங்கடநாராயணா ரோடு, தி.நகர்.  காலை ஏழுமணிகூட ஆகலை. கோவில் சந்நிதி மூடி இருக்கு! ஏழரைக்குத்தான் திறப்பாங்களாம். இதென்ன புதுப்பழக்கம்?
பிரபந்தம் படிக்கறதுக்காக.....  அட ராமா?  அதை மக்கள்ஸ் நாலு பேர், காதாரக் கேட்டா.... தமிழ் வளராதோ? நாலாயிரம் எல்லாம் தமிழில்தானே?

வாசல் கேட்டையொட்டி பூவிற்கும் கூட்டத்தை சற்றே ஒதுங்கி இருக்கச்சொல்லி இருக்கு நிர்வாகம். ஆரவாரம் அவ்வளவா இல்லை.

வாசலில் தேவுடு காக்கணுமா/ பேசாம பக்கத்துலே இருக்கும் சரவணபவனுக்குள் நுழைஞ்சு ஒரு காஃபியாவது குடிச்சுட்டு வரலாமேன்னு போனோம்.

வடை ஒன்னு இருபத்தியஞ்சு ரூபாய்ன்னதும் ஆடிப்போயிட்டேன்.  அப்ப....ஆட்டோவுக்கு அறுவது நியாயமோ!!!!!

கையோடு காலைஉணவை முடிச்சுக்கலாமா?. (வடை ஆசை யாரை விட்டது?) எனக்கொரு மினி டிஃபன், நுரை ததும்பும் காஃபி ருசி நல்லாவே இருக்கு.

கோயிலுக்கு மீண்டு வந்தால் பெரிய வரிசை. ஆனால் நகருது. நாமும் வரிசையில் நின்னு உள்ளே போறோம்.   "யம்மா நல்லா இருக்கீங்களா? துளசி கொண்டாந்து தரட்டா?"  துளசிக்கே துளசியான்னு திரும்பிப் பார்த்தால் நமக்குப் பரிச்சயப்பட்ட பூக்காரம்மா சாமுண்டீஸ்வரி!   வேணாம். நான் திரும்பி வரும்போது வாங்கிக்கறேன்.   'அந்தாண்டை கடை போட்டுருக்குமா' ன்னு சொல்லிப்போனதும் உள்ளே போய் நம்ம கன்ஸர்ன் தாயாரையும் சிரிக்கும் பெரும் ஆளையும் வணங்கினோம். சாமிக் காசை ஆசாமி கையில் கொடுக்காதேன்னு அறிவிப்புகள் அங்கங்கே இருந்தாலும் சனம் தனி கவனிப்புக்காக நோட்டை நீட்டுவதும் கவனிப்பு(ம்) கிடைப்பதுமாத்தான் இருக்கு.

முந்தியெல்லாம்  தரிசனம் முடிஞ்சு வலப்பக்கம் திரும்பி சந்நிதித் தடுப்புக்குப்பின்னால் போய் சாமிக்கு நேரா ஹாலில் உக்கார்ந்துக்க முடியும். கொஞ்சநேரம் தியானம்கூட செஞ்சுக்க வழி இருந்துச்சு. இப்ப?  நேரா பின்வாசலுக்கு விரட்டப்படுகிறோம். புன்சிரிப்போட பார்த்துண்டே இருக்கன்:( ஹூம்... நல்லா இரும்! அநியாயம் பார்க்க பார்க்க, பொம்பளை மனசு பொங்கும். தாயாரின் முகமே சாட்சி.

பின்கதவு வழியா வெளியே வந்து கம்பிக்குப்பின் துயில் கொள்ளும் ரங்கனை சேவிச்சப்ப புதுசா ரெண்டு ஆண்டாள்கள். பஞ்சலோகமா இருக்கணும். மின்னறாள்!

இடப்பக்கம் மூலையில் மூடி இருக்கும் கவுண்டர்.  அதன் முன்னே வரிசையில் காத்து  'இருக்கும்'  சனங்கள். அந்தப் பக்கத்துச் சுவரில் அழகான ஓவியங்கள்.  எல்லாம் இவனைப்பற்றித்தான். போனமுறை பார்த்த நினைவு இல்லை. அழகாத்தான் வரைஞ்சுருக்கார் ஆர்ட்டிஸ்ட். அலுவல அறைக்குள் எட்டிப்பார்த்து, படம் எடுக்க அனுமதி கேட்டப்ப, சந்நிதியை விட்டுட்டு எடுத்துக்குங்கன்னார் ட்யூட்டியில் இருந்தவர்.

திருமலைதிருப்பதி தேவஸ்தான ஆஃபீஸா தொடங்குன இடம். சாமியோட  அலுவலகமுன்னு பக்கத்துலே சாமி சிலை ஒன்னு வைக்கப்போக இப்ப இதே ஒரு பெரிய கோவிலா ஆகி இருக்கு! இன்னும் ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வரலையே தவிர மற்ற எல்லாமும் வந்தாச்சு, தாயார் உள்பட.  மலையில் தனியா நின்னவர் இங்கே துணைக்கு வீட்டம்மாவை பக்கத்துலே உக்கார்த்திவச்சுருக்கார். சனிக்கிழமைகளிலும், புதுவருசதினத்திலும் பண்டிகை நாட்களிலும் கூட்டம் அம்முது!

படங்களை எடுத்துக்கிட்டே வாசல்வரை போயிருக்கேன்.  கேட்டில் இருந்த நாட்டாமை லபோதிபோன்னு கூவிக்கிட்டே ஓடிவந்து படம் எடுக்கக்கூடாதுன்னார்.  அனுமதி வாங்கி இருக்குன்னதும்  'ஸார்...படம் எடுக்கறாங்க ஸார்' ன்னு கூவுனார். அலுவலக வாசலில் நின்னுக்கிட்டு இருந்தவர்,  .எடுத்துக்கட்டும், நான்தான் சொன்னேன்னதும் கப்சுப். கொடுத்த வேலையைச் சரியாச் செய்யறார்தானே?

நடந்தது நடப்பது எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்ன கோபாலின் கையில் லட்டு! அட! கொடுத்துட்டானா......
அங்கேன்னு கண் போன திசையில் பார்த்தால் பக்தர் ஒருவர் ஏதோ வேண்டுகோளுக்காக பெட்டிநிறைய லட்டோடு நமக்காக காத்திருக்கார்.

கோவிலில் இருந்து அறைக்கு வர அதே ரெண்டு கிலோமீட்டருக்கு  நாற்பது கேட்டார் ஆடோக்காரர். கெஸ்ட் ஹவுஸ் வாசலில் ஆட்டோ பிடிக்கக்கூடாது (பாடம் 1)

என்கூட ஒரு பத்து நாளாவது இருக்கணுமுன்னு ரெண்டு வாரத்துக்கு சென்னைக்கு வந்துட்டாங்க நெருங்கிய தோழி, கவிதாயினி. ட்ராவல்ஸில் சொல்லி வச்சுருந்த வண்டி வந்ததும் ரெண்டு மணிக்குக் கிளம்பிப்போய்  தோழி மதுமிதாவின் வீட்டுக்குப்போய்  அவர் குடும்பத்தோடு  கொஞ்ச நேரம் பேசிட்டு நாங்க மூணுபேருமா வல்லியம்மா வீட்டுக்குப் போனோம்.,

அங்கே இன்னொரு கலைஞருடன் சந்திப்பு.  ஆர்ட்டிஸ்ட்! ஸ்கல்ப்சர், ட்ராயிங்.....மட்டுமா? பிலீவ் மீ.........  ரிப்ளீஸ் பிலிவ் இட் ஆர் நாட் போல(வே) அந்தரத்துலே இருக்கும்  குழாயில் இருந்து தண்ணீர் கொட்டுது. ஆஹா.... வீட்டம்மாவின் கொலுவுக்கு வருசாவருசம் புதுப்பொம்மை ரெடி!

ட்ராயிங் நோட்புக் என் கைக்கு வந்துச்சு. அடடடா.......  நம்ம  யானை!
படங்களையெல்லாம் க்ளிக்கிட்டு, சக கலைஞரை பாராட்டிட்டு, கேசரியும் மசால் வடையுமா ஒரு வெட்டு வெட்டிட்டு வந்தோம். இதுக்கிடையில் விழாவுக்கான ஏற்பாடுகள் சிலவும்.


சென்னையில் சில கோவில்களில்....... நம்முடைய இப்போதைய அனுபவம் கொஞ்சம் (?) பார்த்துட்டு நகரைவிட்டுக் கிளம்பி  ஒரு சுற்றுலா போய் வரலாம்.  அஞ்சாறுநாட்கள் பயணம்தான். ரெடியா?



46 comments:

said...

நன்றி நன்றி நன்றி துளசிமா. சிங்கத்தோட பொறுமைதான் கலை ஆர்வத்துக்குக் காரணம். முன் போல பிஸிகல் வேலை நிறைய செய்ய முடிய வில்லை. ஆர்டிஸ்ட் ஆகிவிட்டார்:)
உங்கள் பதிவைக் காட்டினேன் .மனம் கொள்ளாத சந்தோஷம்.
வடை கல்வடையாக இருந்ததே அதை எழுதக் காணோம்????????

said...

கடைசி ஃபோட்டோ அருமையோ அருமை. (போஸ்ட் எப்படியா, ப‌டிச்சிட்டு வர்றேன்..)

said...

ஓ நான் நினைச்சேன் போன ட்ரிப்போட இனிமே நீங்க அடையார் அநந்துவை தான் பார்ப்பீங்கன்னு.. [அப்படி புலம்பி இருந்ததா ஒரு நினைவு.. :))] சூப்பர் கோயில் ஓவியங்கள்.

வல்லிம்மா அவரின் சிங்கம் பகுதி கொஞ்சம் சரியா புரியலை.. மிஸ்டர் வல்லிம்மா ஆர்டிஸ்டா? என்ன கொலுவுக்கு புது விஷயம் என்ன தண்ணீர் குழாய்?! கோனார் நோட்ஸ் காவாலி.

said...

மிஸ்டர் வல்லிம்மாவின் கைவண்ணங்கள் சிலதை வல்லிம்மாவின் பதிவுலயும் பார்த்திருக்கேன். ரொம்ப அழகாருக்கும்.. வாழ்த்துகள்.

ஈவண்ட் ஆர்கனைசருக்கு பொன்னாடை போர்த்தும் விழாவும் அருமை :-)

said...

ஐயா , கோபாலு அய்யா !!
அம்புட்டு நேரமா பாத்துகினே கீறேன்.
ஆத்திகினே கீறீங்க..

அந்த காபியை எனக்கு எடுத்து கொடுங்களேன்.

ஆஹா.. ஆத்தும்போதே என்ன சுவை !! என்ன மணம் !!
அருமை 1!
அந்த அரங்க நாதனின் பெருமையும்
அரங்கன் அருகில் அமர்ந்த தாயாரின் பெருமையும்

அடடா !! அடடா !! ஆனந்தம் ஆனந்தம் !!

பள்ளிகொண்ட வாசா !! பரந்தாமா !!
பாற்கடல் நிவாசா !! நல்ல‌
பாலில் ஃபர்ஸ்ட் டிகாஷன் போட்டு
பருகிட எனக்கு அருள் என்றும் தா !!

கோவிந்தா !! கோவிந்தா !!

துளசி மேடம் !
நேற்று முன் தினம் இந்த கோவிலுக்குச் சென்றபொழுது
துளசியும் தீர்த்தமும் வாங்கின்ட போது
உங்கள் நினைவு தான் எனக்கு வந்தது.

சுப்பு ரத்தினம்.

said...

சிங்கம ஸார் வரைஞ்ச ஆர்ட்டெல்லாம் எனக்கும் காட்டினப்ப பிரமிச்சுப் போயிட்டேன். கோடுகளால வித்தை காட்டி அசத்தியிருக்கார் மனுஷர். இந்த திருப்பதி தேவஸ்தான கோயிலோட தற்போதைய நிலை நீங்கள் சொல்லியிருக்கற படிதான். அவசர அவசரமான தரிசனங்கறது திருப்பதி பெரும் ஆள் விஷத்துல தொடர்கதைதான் எங்கயும். உஙககூட சுற்றுலா வர நான் ரெடியாயிட்டேன்.

said...

super photo charming ladies.... Singam Gambeeram......

said...

//வல்லிம்மா அவரின் சிங்கம் பகுதி கொஞ்சம் சரியா புரியலை//

எனக்கும் வல்லிமாவின் பின்னூட்டம் பார்த்தபிறகுதான் தெளிந்தது.

//கொலுவுக்கு புது விஷயம் என்ன தண்ணீர் குழாய்?!//
இது இன்னும் பிடிபடலை. எப்படி ஃபோட்டோ எடுக்காம விட்டீங்க?

ஆமா, வல்லிமாவுக்கு எதுக்குப் பொன்னாடை, ஷீல்ட்? எதுவும் போட்டியில் பரிசா?

கோபால் சாரை, கையில் லட்டுடன் படம் எடுக்கவும் மறந்துட்டீங்க போல!! :-))))

said...

வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்து எழுதுறீங்க. படங்களை வரைபவர்களை பார்த்து பலமுறை ஆச்சரியப்பட்டு போயிருக்கேன். நமக்கு சுட்டுப்போட்டாலும் நஹி

said...

அழகாத்தான் வரைஞ்சுருக்கார் ஆர்ட்டிஸ்ட்.

அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

said...

2000மாவது ஆண்டுன்னு நெனைக்கிறேன். இதே வெங்கட்நாராயணா ரோட்டு திருப்பதி கோயிலுக்குப் போனா.. அமைதியா ஆளே இல்லாம இருந்தது. நிம்மதியா கும்பிட்டு வர முடிஞ்சது. இப்பல்லாம் சனிக்கெழமையானா வெங்கட்நாராயணா ரோட்டுப் பக்கமே போக முடியல.

படங்கள் மிக அழகு. வரஞ்சதா? போட்டோ பிரிண்டிங் போட்டு ஒட்டுனதா?

சரவணபவன்ல வெல அப்படிதான் டீச்சர். சில சின்னக் கடைகளில் இவ்வளவு வெலை இல்ல. ஆனா நல்ல கடையாப் பாக்கனும். கோட்டூர்ல கிருஷ்ணா கபேன்னு இருக்கு. விலை டீசண்ட். சுவை டீசண்ட். கடை டீசண்ட்.

வல்லியம்மா சிங்கம் படம் பாத்ததும் அவரை முந்தி வல்லியம்மாவோடு நாகேஸ்வரராவ் பார்க்கில் வல்லியம்மாவோடு சந்தித்தது நினைவு வந்தது. எத்தன வருசம் ஆச்சு :)

அவர் வரைந்த படங்களும் அழகுதான். அந்த யானை படத்த நீங்க எடுத்துட்டுப் போயிட்டீங்கதானே? ;)

said...

வாவ் டீச்சர் !

வழமையா தனியா வந்து பாடம் நடத்துவீங்க.. இன்னிக்கு இன்னும் 2 பதிவர்களோட சேர்ந்து வந்திருக்கீங்க..
முப்பெரும்தேவிகள் போட்டோ அழகா இருக்கு..
வல்லியம்மாவுக்கு வாழ்த்துக்கள் !

said...

Nalla arumaiyana dharisanam on Monday morning. Hope this week will be wonderful!

said...

நானும் சிம்ஹன் சார் வரைந்த ஓவியங்களைப் பார்க்கக் கொடுத்து வைத்தவன் ஆனேன்!

அப்பா என்ன அருமையா வரைஞ்சு இருக்கார்....

ஆஹா தமிழக வருகை - சுற்றுலா பதிவுகள் ஆரம்பிச்சாச்சு! - காத்திருக்கிறேன் - எல்லா [!] எபிசோடுகளுக்கும்... :)

said...

இப்ப எந்த ஆட்டோவிலே பெட்ரோல் போராங்க; கிருஸ்னாயில் தான்

said...

ஐய்யா முன்னால் இருக்கும் காபி நரசுஸ்
தானே!

said...

நரசிம்மன் சார் வரைந்த ஓவியங்கள் அற்புதம். கைகளில் கடவுள்!
அந்த அந்தரத்து அற்புதம் குழாயையும் படம் பிடித்துக் காட்டியிருக்கலாம். என்ன அது?
அண்ணாச்சி கடையில் எல்லாமே காஸ்ட்லி தான்!! சனி ஞாயிறுகளில் மக்கள் தூக்கு வாளியும் கையுமாக ரசம் சாம்பார் என்று கிலோ கணக்கில் வாங்கிப் போக வரிசையில் நிற்பதைப் பார்த்திருக்கிறேன்.

said...

அழகான அருமையான படங்கள்...

நன்றிங்க...

said...

பூங்கொத்து துளசிம்மா!!

said...

மிஸ்டர் வல்லிம்மாவின் ஓவியங்கள் அற்புதம்....கண்ணைக் கவருகின்றன.

அந்தரத்தில் தண்ணீர் குழாய், நானும் சில இடங்களில் பார்த்திருக்கிறேன். நீங்க சொல்வது அது தான் என்று நினைக்கிறேன்.

சுற்றுலா போவதற்கு நாங்களும் தயார்....

said...

தாமதமான பதிலுக்கு எல்லோரும் மன்னிக்கணும் ப்ளீஸ்......

said...

வாங்க வல்லி.

கலைஞரை சக கலைஞர் பாராட்டலைன்னா எப்படிப்பா?

மை ம கா ரா நினைவு இருக்கா?

நானும் ஆர்ட்டிஸ்ட்தான்............

கேஸரி சாஃப்டா இருந்துச்சேப்பா:-))))

said...

என்னப்பா பொற்கொடி...பாடத்துலே இத்தனை சந்தேகம்?????

அடுத்த இந்தியா ட்ரிப்புலே வல்லிம்மா வீட்டுக்கு நேரில் ஒரு நடை போய் பார்த்துருங்க. எஜுகேஷனல் டூர்!!!!

மனசுலே அநந்துவை வச்சுக்கிட்டு சீனுவைப் பார்க்கப்போனேன் என்பதே உண்மை. கிட்ட இருக்கானே.....

said...

வாங்க அமைதிச்சாரல்.

பார்க்கக் கோட்டை விட்டமேன்னு ஒரு ரிபீட்தான் பொன்னாடை வைபவம்:-))))

மிஸ்டர் வல்லிம்மா.... கண் பார்த்தா கை செய்யும் என்ற பழமொழிக்கேற்றவர்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

என்ன பாக்கியம் செஞ்சுருக்கேன்.... எம்பெருமாளின் முன் என் நினைப்பு வர!!!!!

எல்லா பெருமாள் கோவில்களிலும் துளசி உண்டு:-))))

said...

திரு. சிம்ஹன் அவர்களுடைய ஓவியங்கள் அருமை. ஒரு காட்சியே நடத்தலாம். பாராட்டுகள்.

மலர்ந்திருக்கும் சிரிப்புபூக்களின் மகிழ்ச்சியில் நாமும் மகிழ்கின்றோம்.

said...

வாங்க பால கணேஷ்.

நவராத்ரி நடுவிலே இருக்குன்றதால் பயணம் ஒரு ரெண்டொருநாள் தாமதமாகும்போல இருக்கு.

அதுக்காக பேக் பண்ண பையை... அன்பேக் பண்ணிடாதீங்க:-)

said...

வாங்க சுபாஷினி.

சிங்கம் என்றாலே கம்பீரம்தானேப்பா? ராஜா இல்லையோ!!!!

said...

வாங்க ஹுஸைனம்மா.

இப்படிக் கேள்விக்கணைகளா தொடுத்துட்டீங்களே!!!!!

வல்லிம்மாவின் கொலுப்பதிவுலே விளக்கம் இருக்கு!

ஃபோட்டோ எடுத்தேன்தான்.... சரியா வரலை. சோகத்துலே லட்டை (படம் போட)கோட்டை விட்டுட்டேன். ஆனால் லட்டு சரியா வந்துருந்தது. அழகா பாலிதீன் உறைக்குள் தனித்தனி லட்டு உள்ள பொதி.

ஆகஸ்டு மாசம் வலைப்பதிவர் மாநாடு நடந்துச்சுப்பாருங்க. அப்ப சீனியர்ஸ்க்குப் பொன்னாடை, ஷீல்ட்ன்னு மரியாதை செஞ்சுருந்தாங்க. அதை நேரில் பார்க்கலையேன்னு ஒருவாட்டி ரிப்பீட்டினோம்:-)))

said...

வாங்க ஜோதிஜி.

காரணம் ரொம்ப சிம்பிள். இந்த ஜென்மத்தை அனுபவிக்கலைன்னா இதுக்காக இன்னொரு ஜென்மம் எடுக்கணுமே என்பதால்..... :-))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ஆமாங்க. உண்மைதான். இன்னும் நிறையப் படங்கள் இருக்கு அங்கே!!!!

said...

வாங்க ஜீரா.

வரைஞ்சதுன்னுதான் நினைக்கிறேன். ஒட்டுனதுன்னா... சுருக்கம் ஒன்னும் காணோமே!

சில இடங்களில் சிமெண்ட் பெயர்ந்து சுவர் தெரிஞ்சது.

மக்கள் தொகை பெருக்கத்தால்....கூட்டம் கூடக்கூட கோவில்களில் அமைதி இருக்க இனி சான்ஸே இல்லை:(

விலைவாசி ஏத்தம் சென்னைக்கு மட்டுமுன்னு நினைக்கிறேன். மற்ற ஊர்கள் கொஞ்சம் பரவாயில்லை!

said...

நம்மூர்லே யானையைக் கொண்டு வரமுடியாதுன்னு அங்கேயே விட்டு வச்சேன் ஜீரா:-)

said...

வாங்க ரிஷான்.

அன்று கலைஞர்களை கௌரவிக்கும் நாள்!!! அதான்....:-)))

said...

வாங்க தெய்வா.

இந்த வாரம் அமர்க்களம்தான். எங்கே திரும்பினாலும் தெய்வீக மணம்! நவராத்ரி நடக்குதே!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அதிகநாட்கள் காத்திருப்பு இருக்காதுன்னு ஒரு நினைப்பு.

(நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குதோ:-))))) )

said...

வாங்க பத்மா சூரி.

என்னங்க.... வெறும் க்ரிஸ்னாயிலா? அச்சச்சோ.....

said...

பத்மா, அது என்ன காஃபின்னு தெரியலையே.... ஒருவேளை ப்ரூவா இருக்கலாம். அதுலேதானே ரெண்டாவது மூணாவதுக்கும் வித்தியாசம் தெரியலைன்னு சொன்றாங்க....

said...

வாங்க ஸ்ரீராம்.

விலை அதிகமுன்னாலும்.... ருசி எல்லா கிளைகளும் ஒன்னுபோல இருக்கு பாருங்க. செண்ட்ரல் கிச்சன் சப்ளை!!!

குழாய் படம் வல்லிம்மாவின் இன்றையப்பதிவில் இருக்கு!!!!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கு நன்றிகள்.

said...

வாங்க அருணா.
அன்புடன் கொடுத்த பூங்கொத்து கிடைச்சது. நன்றிகள்.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

தினம் தாயார் திருவீதி உலா பார்க்கறீங்க! கொடுத்து வச்ச புண்ணியவதி.

நவராத்ரி முடிஞ்சதும் கிளம்பிடலாமா? .

said...

ஊர் திரும்பிட்டீங்களா?
படங்கள் பிரமாதம். லபோதிபோனா அடிச்சுக்கிட்டார்? அது ஒரு வார்த்தையா இரண்டு வார்த்தையானு ரொம்ப நாளா எனக்கு சந்தேகம்.

said...

துளசிக்கே துளசியா.. அட அட அட!

லட்டைப் பத்தி எதும் காணோமே?

said...

வல்லிசிம்ஹன் கைல என்னது?

said...

வாங்க அப்பாதுரை.

ரெட்டைக்கிளவி மாதிரி இந்த லபோதிபோ கிளவியும் கிளவனுமா ஒரு ஜோடி!

ஊர்திரும்பி 25 நாளாச்சு.

லட்டுப் படம் போட்டே ஆகணுமுன்னா போட்டுடலாம்:-)))0

வல்லி சிம்ஹன் கையிலே நினைவுப்பரிசு. வலைப்பதிவர் மாநாட்டில் கொடுத்து கவுரவிச்சாங்க.