அனைவருக்கும் வணக்கம்.
வழக்கம்போல் அஞ்சே படிகள். கலிகாலத்துலே கைவிடப்பட்டவைகளைக் கொண்டு படிகள் ஒரு மேடையில்!
பிஹைண்ட் த ஸீன்ஸ்........ இவை.
கட்டியவருக்கு நன்றிகள்.
வீட்டுப்பொண் ரெடியாகிட்டாள். அவளுக்கான நகைநட்டுக்கள்(???) எல்லாம் வாங்கியாந்தேன் இந்த பயணத்தில். புடவைதான் குவாலிட்டி சரி இல்லை. எல்லாத்திலும் போலி வந்தது போல் இதிலும்:(
முதல்படி: தாயார் பெருமாள் (மரப்பாச்சிகள்) கணக்குப்புள்ளையார், ஆனந்தநிலையம், கண்ணப் புள்ளையார்.
இரண்டாம் படி: கண்ணன்ஸ் ஒன்லி:-) வெண்ணைத்தாழிக் கண்ணன், மாடு மேய்க்கும் கண்ணன், உரலில் கட்டுண்ட கண்ணன்.
மூன்றாம் படி: குகனின் படகில் கங்கையைக் கடக்கும் ஸ்ரீ ராமன், சீதை & லக்ஷ்மணன். குகனின் மெய்க்காப்பாளர்கள் , வனத்தில் சில (நியூஸி) பறவையினம்.
நாலாம் படி: ( இந்திர லோக)நாட்டியம். கச்சேரி, மாட்டுவண்டியில் வந்த புதுக் கல்யாண ஜோடி.
அஞ்சாம் படி: யானைப்படை, குதிரைப்படை & பூனைப்படைகள்!
மத்ததெல்லாம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ்:-)))))
கோலம்: கிரி ட்ரேடர்ஸ் புதுவரவு!
பிரசாதம் : இன்னும் வெந்துக்கிட்டு இருக்கு. முடிஞ்சதும் படம் வரும்:-))))
(போட்டாச்சு. போனமுறை சரியாக வேகலைன்னு கீதா சாம்பசிவம் சொன்னதால் இந்தமுறை ரொம்பநேரம் வேகவிட்டுட்டேன்:-)
அனைவருக்கும் நவராத்ரி விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள். கட்டாயம் வந்து ஒரு பாட்டுப் பாடிட்டு, சுண்டல் வாங்கிப்போகணுமுன்னு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.
வழக்கம்போல் அஞ்சே படிகள். கலிகாலத்துலே கைவிடப்பட்டவைகளைக் கொண்டு படிகள் ஒரு மேடையில்!
பிஹைண்ட் த ஸீன்ஸ்........ இவை.
கட்டியவருக்கு நன்றிகள்.
வீட்டுப்பொண் ரெடியாகிட்டாள். அவளுக்கான நகைநட்டுக்கள்(???) எல்லாம் வாங்கியாந்தேன் இந்த பயணத்தில். புடவைதான் குவாலிட்டி சரி இல்லை. எல்லாத்திலும் போலி வந்தது போல் இதிலும்:(
முதல்படி: தாயார் பெருமாள் (மரப்பாச்சிகள்) கணக்குப்புள்ளையார், ஆனந்தநிலையம், கண்ணப் புள்ளையார்.
இரண்டாம் படி: கண்ணன்ஸ் ஒன்லி:-) வெண்ணைத்தாழிக் கண்ணன், மாடு மேய்க்கும் கண்ணன், உரலில் கட்டுண்ட கண்ணன்.
மூன்றாம் படி: குகனின் படகில் கங்கையைக் கடக்கும் ஸ்ரீ ராமன், சீதை & லக்ஷ்மணன். குகனின் மெய்க்காப்பாளர்கள் , வனத்தில் சில (நியூஸி) பறவையினம்.
நாலாம் படி: ( இந்திர லோக)நாட்டியம். கச்சேரி, மாட்டுவண்டியில் வந்த புதுக் கல்யாண ஜோடி.
அஞ்சாம் படி: யானைப்படை, குதிரைப்படை & பூனைப்படைகள்!
மத்ததெல்லாம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ்:-)))))
கோலம்: கிரி ட்ரேடர்ஸ் புதுவரவு!
(போட்டாச்சு. போனமுறை சரியாக வேகலைன்னு கீதா சாம்பசிவம் சொன்னதால் இந்தமுறை ரொம்பநேரம் வேகவிட்டுட்டேன்:-)
அனைவருக்கும் நவராத்ரி விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள். கட்டாயம் வந்து ஒரு பாட்டுப் பாடிட்டு, சுண்டல் வாங்கிப்போகணுமுன்னு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.
49 comments:
அழகிக்கு இன்னும் அழகு சேர்த்தா?கண்ணைக் கொண்டு போறா.எல்லாப்படங்களையும் பெரிசாக்கிப் பார்க்கணும்.
இன்னும் கஸெட்டுகளை விடவில்லை:) எங்க வீட்ல சுண்டல் ஊஊஉறிக்கிட்டு இருக்கு.
யானைகளுக்குத் தான் என் ஃபர்ஸ்ட் மார்க்.
போன வருஷத்துப் பதுவரவு வெண்ணைக்குடம் இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு! அதை இந்த முறை வைக்கலியா?!
வாவ்... அழகா இருக்கா அழகி. அலங்காரம் எல்லாமும் தூள். அப்படியே பிரசாத பார்சல் அனுப்பினா இன்னும் தூள் தான் துளசிம்மா...:)
அழகு அந்த குட்டி வீட்டு பெண்.
அழகு அந்த குட்டி வீட்டு பெண்.
நீங்க கூப்பிட்டதாலே அத்தனை ஃப்ரன்ட்ஸும்
அங்கே
முதல் நாளென்னிக்கே வந்து
பாடறாங்க கொலுவுக்கு இன்னிக்கு என்ன சுண்டல் அப்படின்னு தெரியல்ல
இருந்தாலும் ஒரு பாட்டு பாடிடலாம் அப்படின்னு நாங்க எல்லாரும்
உங்க வீட்டுக்கு வந்து இருக்கோம்
பாட்டும் பாடுகிறோம்
பாருங்க.
ப்ளே பாக் சிங்கர் யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்.
http://youtu.be/k53IF8ZKHTA
http://youtu.be/k53IF8ZKHTA
கேளுங்க இங்கே
சுப்பு ரத்தினம்.
நான் வந்தாச்சு. கொலுவுக்கு கோபால் முன் ப்ரிபரேஷன் அழகுன்னு கொலுவின் கடவுள்கள் அழகோ அழகு.
ஆமா நான் பாடினது கேட்டதா.
நான் வந்தாச்சு. கொலுவுக்கு கோபால் முன் ப்ரிபரேஷன் அழகுன்னு கொலுவின் கடவுள்கள் அழகோ அழகு.
ஆமா நான் பாடினது கேட்டதா.
நவராத்ரி விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
படி , கலிகாலத்துல கைவிடப்பட்டது வச்சு..:)) படி அடுக்கிறதுல இருந்தே காண்பிக்கிரது தான் ஸ்பெஷல்..:)
என்னே அழகு...!
அட்டகாசமான படங்கள்...
மிக்க நன்றி...
கொலு பிரமாதம். நானும் ரோஷ்ணியும் உங்க வீட்டு கொலு வந்து பார்த்து விட்டோம்.அழகி அழகா இருக்கா.....
கோலம் சூப்பர்.
அழகி இன்னும் அழகாயிட்டே போறாள்!
பிரசாதம் வாங்க இன்னுமொரு முறை வரணுமா... நான் இங்கேயே டேரா அடிச்சு வாங்கிட்டு தான் அடுத்த வீட்டுக்குப் போகப் போறேன்! :)
வாங்க வல்லி.
கைவிடப்பட்டவைகளை ஒரேடியாக் கைகழுவ முடியலைப்பா:-))))
யானைப்படையின் ஒரு பகுதிதான் இங்கே. ஒரு அக்ரோணிக்கு வருமா?
வாங்க சரவணன்.
ஙே......
கண்ணுக்குள்ளே இருக்கும் வெண்ணைய்க்குடத்தைக் கவர்ந்த கள்வனை தேடிக்கிட்டு இருக்கேன்.....
வாங்க பழனி.கந்தசாமி ஐயா.
நன்றி.
வாங்க அப்பாவி தங்கமணி.
அழகிக்குப் பூச்சூட விட்டுப்போச்சு:(
கனகாம்பரமுடன் ஜொலிக்கிறாள் இன்று:-)
பிரசாதம் வச்சுட்டேன். அனுப்பிட்டேன் உங்களுக்கு:-)
வாங்க அமுதா.
ரசிப்புக்கு நன்றி.
அழகை, அழகுன்னுதான் சொல்லணும்:-))))
வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
இத்தனை அன்புக்கு நான் என்ன தவம் செஞ்சேன்!!!!!!
ரொம்பப்பிடிச்ச பாட்டு. எம் எஸ் அம்மாவைதான் எப்பவும் கேட்பேன்.
உங்க தயவால் நம்ம சின்னக்குயில் சித்ரா இந்த முறை!!!! அடடா..... என்ன ஒரு அழகான அழுத்தமான உச்சரிப்பு!
மெய் மறந்தேன் என்றால் அது பொய் இல்லை!!!
வாங்க கவிதாயினி.
பாட்டுச் சத்தம் கேட்டதம்மா.... பாட்டுச் சத்தம்......
பட்டுக் குரலில் கேட்டதம்மா..... அழகோ அழகு!!!
வாங்க இராஜராஜேஸ்வரி..
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய நல்வாழ்த்து(க்)கள்.
வாங்க கயலு.
ஃபினிஷ்டு ப்ராஜட்டைவிட பிஹைண்ட் த ஸீன்ஸ்தானே ரொம்ப சுவாரசியம் ?இல்லையோ:-))))
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ரசிப்புக்கு என் நன்றிகள்.
வாங்க ரோஷ்ணியம்மா.
ரோஷ்ணி வருகைக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.
இந்த வருசத்துக்கான புதுவரவாம் இந்தக்கோலங்கள்.
நமக்கு தோணுவதுபோல் மாத்தி மாத்தி வச்சு டிஸைன் செஞ்சுக்கலாம்.
வேற ஒரு காம்பினேஷனில் ஒன்னும் வாங்கிவந்தேன்.
வாங்க வெங்கட் நாகராஜ்.
சொன்ன பேச்சைக் கேக்கறாள் இவள். அதுவே ஒரு அழகா ஆகிப்போச்சு.
இன்னிக்குத்தான் பூச்சூட்டிவிட்டேன்.
பிரசாதம் கூட ரெடிதான்.
எல்லாம் உங்களுக்கே! மைசூர்பா பிடிக்கும்தானே?
ஆஹா.. ரொம்ப அழகு உங்க கொலு.. பிஹைண்ட த சீனும் சூப்பர் போங்க..
நவராத்திரி நல் வாழ்த்துக்கள்.
உங்க வீட்டுப் பொண்ணு வரவர தங்கமாக ஜொலிக்கின்றாள்.
பெண்ணுகேட்டு வரப்போறாங்க :))) பெண்ணைப் பிரிந்திருக்க சம்மதமா?
கவலைப்படாதீர்கள் எங்க ஊரு மாப்பிளையைப் பார்த்திடலாம் மாப்பிளைதான் பெண்ணுவீட்டுக்கு வருவார் அம்மாவும் பெண்ணும் பிரியத்தேவையில்லை அவகூடவே இருக்கலாம்.
நல்ல ஒரு ஜோடியை தேடிப்பிடியுங்கள்.:))
கொழுவும் நல்லா இருக்கு.. வீடும் நல்லா இருக்கு (வெள்ளை வண்ணம் என்பதால் பளிச் னு இருக்கு)
"கட்டாயம் வந்து ஒரு பாட்டுப் பாடிட்டு, சுண்டல் வாங்கிப்போகணுமுன்னு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்."
சுண்டல் வாங்கிட்டு போங்க என்றால் ஓகே.. பாட்டு வேற பாட சொல்றீங்களே!... டேன்ஸ் எல்லாம் ஆட சொல்லுவாங்களோ (மன்னன் கவுண்டர் ஸ்டைல் ல படிக்கவும்)
அழகியின் அலங்காரமும், அழகான கிரிக் கோலமும் அழகு.
அழகனுக்காகக் காத்திருக்கும் அழகி அசத்தறா.
ஆஹா ரொம்ப அழகு கொலு. எனக்கும் யானைகள் தான் ரொம்ப பிடிச்சுருக்கு . அந்த கோலம் டிசைன் எங்க வாங்கினது மா. சூப்பரா இருக்கு
படங்கள், வருணனை ( ஐ மின் நிகழ்வு)மிக மகிழ்வு தந்தது. இறுதிப் படமும்(மாங்காய்க் pattern)- படிகள் அலங்கரித்ததும் பொருட்கள் வைக்கமுதல் (border) மிக மிக அழகு. நன்றி.எங்களுக்குக் காட்டியதற்கு.
நல்வாழ்த்து சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
வாங்க ரமாரவி.
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.
வாங்க மாதேவி.
அடடா..... பொண்ணுக்குக் கல்யாணவயசு வந்ததை நான் கவனிக்கவே இல்லை பாருங்க.
கண்ணில் குழந்தையாவே நின்னுட்டாள். பொண்ணு வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோன்னு சும்மாவா சொல்லிப்போனாங்க பெரியவங்க!!!!
வாங்க கிரி.
நீங்க பாட வேண்டாம். அதுக்கு பதிலா கொலுன்னு சொல்லிப்பாருங்க:-)))))
வீடு உள்ளே வெள்ளை நிறம் இல்லை. ஒருவித இளம் பச்சை!
வாங்க ஸ்ரீராம்.
ரசிப்புக்கு நன்றிகள்.
குட்டி பாப்பா தான் மெயின் அட்ராக்ஷன் போல
சுவீட் & சுண்டல் கண்ணில் காட்டிட்டு விட்டுட்டீங்க.
கோபால் சார் ஓய்வுக்கு பின் சென்னையில் வந்து செட்டில் ஆகுங்க டீச்சர். நாங்கல்லாம் சுண்டல் சாப்பிட வருவோமில்ல?
'பில்ட்- அப்' பிரமாதம் :-)
நல்லா இருக்கு உங்க கொலு.
அசாத்தியப் பொறுமை அவருக்கு.
அநியாயப் பெருமை இவருக்கு :-)
நவராத்திரி முடியுமுன்னே உங்கள் கொலுவைப் பார்த்து விட்டேன்.அழகிய அட்டகாசமான கொலு.
ஆஹா கொலுவுக்கு லேட்டா வந்துட்டேனா? என்ன அழகு என்ன அழகு! அந்த கோல நீலமணி என்னது எங்க வாங்கினீங்க? அசத்தல் எல்லாப்படிகளும் பொம்மைகளும்... வெளிநாட்டு கொலுன்னா ஒரு கூடுதல் கவர்ச்சி இருக்கத்தான் இருக்கு. என்ன பாட்டு உங்க வீட்டு கொலுக்கு தெரியுமா? கேளுங்க..
நவராத்திரி சுபராத்திரி கலைமகளும் மலைமகளும் அலைமகளும் சேர்ந்து நம்மை மகிழ வைக்கும் ராத்திரி....
ம்ம்ம் சுண்டம் கொடுங்க துள்சி மேடம்!!
வாங்க அமைதிச்சாரல்.
அழகிக்கு என்னப்பா.... வீட்டுவேலை ஒன்னும் செய்யாம அழகா ஒரு பக்கம் நிம்மதியா இருக்காள். இதுலே அழகனுக்குக் காத்திருந்து அமைதியைக் கெடுத்துக்கணுமான்னு கேக்கறாளேப்பா!!!!
வாங்க சுபாஷிணி.
கோலம் நம்ம கிரி ட்ரேடர்ஸ் மயிலை. ஒரு பத்து டிஸைன்வரை வச்சுருக்காங்க.
வாங்க வேதா.
அணுஅணுவா ரசிச்சு இருக்கீங்க.
மிகவும் நன்றி.
வாங்க மோகன் குமார்.
பவர் கட்டும், டாஸ்மாக்கும் ஒழிஞ்சால் ஒருவேளை அங்கே வந்து செட்டில் ஆகும் எண்ணம் வரலாம்.
நீங்க இந்தப் பக்கம் வர்றபோது சொல்லுங்க. நவராத்ரியும் சுண்டலும் ஏற்பாடு செஞ்சுடலாம்.
வாங்க நாகு.
வெறும் ஷோ காட்டாம, பட்ட கஷ்டத்தையும் சொல்லணும் பாருங்க அதான்....
வருகைக்கு நன்றி.
வாங்க அப்பாதுரை.
பொறுமை இல்லேன்னா எப்படி? புளியமரத்துப் பேய்க்கு வாழ்க்கைப்பட்டு(ம்) பொறுமை காக்கலேன்னா அவருக்குத்தானே கஷ்டம்? இல்லீங்களா? :-))))
வாங்க ருக்மணி.
பொதுவா நம்ம வீட்டுக் கொலுவுக்கு யானையும் பூனையும்தான் தீம்.
இந்த வருசம்தான் சில சாமி சிலைகள் இடம் புடிச்சுருக்கு.
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.
வாங்க ஷைலூ.
இடும்பி வீட்டுக் கொலுவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. சூப்பர் பாட்டு!!!
அதெல்லாம் நீங்க லேட்டா வரலைப்பா!
தசரான்னு முடிஞ்சுடாது இங்கே. சில சமயம் 2 வாரம் கூட இருக்கும். இந்த வருசமும் விஜயதசமிக்கான பூஜை சனிக்கிழமைதான் வச்சுருக்கு. எல்லாத்துக்கும் ஒரு வீக் எண்ட் தேவையாக்கும் கேட்டோ!
Post a Comment