"ராத்திரியெல்லாம் தூங்காம இருப்போம்"
"ஓ...ஸ்லீப் ஓவரா? நாங்களும் தூங்கவே மாட்டோம்."
"கண் முழிக்கறதுக்காகவே சினிமாவெல்லாம் போயிருக்கோம்."
"நாங்களும்தான் நாலைஞ்சு டிவிடி வாங்கிவந்து போட்டுப் பாப்போம்."
"சாமிப் படமா இருக்கணுமுன்னு கண்டிஷன் இருக்கு."
"எங்களுக்கு ரொம்ப ஸ்கேரியா இருக்கணும்."
"தூக்கம் வராம இருக்க தாயம், பல்லாங்குழி, பரமபதம் எல்லாம் விளையாடுவோம்."
"நாங்களும்தான் டைஸ் வச்சு மோனோப்லி, ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ் விளையாடுவோம்."
"ஹாஹா... அந்த ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்தான் பரமபதம். அப்பாடி இது ஒன்னாவது, ஒண்ணா இருக்கே!"
"ஆனா ...மறுநாள் வீட்டுக்கு வந்துட்டு நீங்கெல்லாம் நல்லாத் தூங்குவீங்கல்லே...நாங்க அப்படியில்லை. மறுநாளும் பகலில் தூங்கவே கூடாது. நல்ல அருமையான சாப்பாடெல்லாம் செய்வாங்க. ஒரு பிடி பிடிச்சுட்டு அப்படியே கண் இழுத்துக்கிட்டுப் போகும்போது தூங்குனா பலன் இல்லையாம். அதுக்காக பிக்னிக் போறமாதிரி பக்கத்தூர் கோவிலுக்குப் போய் வருவோம். அதுவும் நடந்து போவோம். அப்பெல்லாம் ஆட்டோ, டாக்சி எல்லாம் இல்லை. பஸ் பிடிச்சுப் போகணும். பாட்டி சொல்வாங்க போறப்ப ஜாலியாப் பேசிக்கிட்டே நடந்து போகலாம். திரும்பி வரும்போது பஸ் எடுக்கலாமுன்னு. அன்னிக்கு சாயந்திரம் விளக்கு வச்சபிறகு சாமி கும்பிட்டுட்டு எதையாவது லைட்டாத் தின்னுட்டு வீ ஸ்லீப் லைக் லாக்(g)ஸ்."
வைகுண்ட ஏகாதசியைப் பத்தி ஒரு சமயம் மகளோடு பேசுனதெல்லாம் நினைவுக்கு வந்துச்சு.
இந்த சொர்க்கவாசல் சொர்க்கவாசல்ன்னு சொல்ற சமாச்சாரத்தை இதுவரை வாழ்நாளில் ஒருமுறைகூட வைகுண்ட ஏகாதசிக்குப் பார்த்ததே இல்லை. அதுவே மனசுலே ஒரு குறையா இருந்துச்சு. இந்த முறை இந்தியாவில் அதுவும் சென்னையில் இருக்கோம். நம்ம(??)கோவிலிலேயே பார்த்துடலாமுன்னு பக்காவா ப்ளான் வச்சுருந்தேன். சாமிக்குப் பிடிக்கலை. காய்ச்சல், இருமல்ன்னு வந்து கொஞ்சம் படுத்தல். போயிட்டுப்போகுது. டிவியிலே லைவா காமிப்பாங்களாமே. மூணுமணிக்கு எழுந்து பார்க்கணும்.
மூணடிக்க ரெண்டு நிமிசம் இருக்கும்போது கோபால் வந்து எழுப்புனார். அவருக்கு இருமல் கூடுதல். தூங்கவே இல்லையாம். நான் எழுந்து சாமிரூம் லைட்டைப் போட்டுக் கும்பிட்டுக்கிட்டு, அங்கிருந்து கண்ணை மூடிக்கிட்டே டிவி இருக்கும் ஹாலுக்குப் போனேன்,விஷுக்கணி பார்க்கும் நினைவில். கண்ணைத் திறந்தால்.... சிம்புவும் ஜோதிகாவும் ஆடிக்கிட்டு இருக்காங்க. ஜெயா போடாம எதுக்குக் கண்ட கண்றாவிகளைப் பார்க்க வைக்கிறீங்கன்னு ஒரு பாய்ச்சல். . அது ஜெயாதானாம். இன்னும் நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கலையாம். பாவம் கோபால். த்சு த்சு.
சிம்ரன், பிரசாந்த் , அப்புறம் இன்னொரு ஜோடின்னு ஆடி முடிச்சு ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் திரைக்கு வந்துச்சு. குரல் கொடுக்கறவர்வேற விசித்திரமாப் பேசறார். ஸ்ரீஈஈஈஈஈஈ ரங்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், கோஓஓஓஓஓஓஓவிலில் இருந்தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
நம்மாழ்வார்ன்னு எங்கியோ கேக்குது. கண் அப்படியே இழுத்துக்கிட்டுப்போய் நான்...........சோஃபாவில் உக்காந்து தூங்கியிருக்கேன். கண் விழிச்சால் கழுத்துவலியான வலி. டிவியிலே என்னவோ மசமசன்ன்னு ஓடுது....சாமி போல! இனி தாங்காது....... படுக்கையில் வந்து விழுந்தேன்.
ஒரே தன்னிரக்கமா இருக்கு. அட ராமா! இப்படிக் கிடைச்ச வாய்ப்பையெல்லாம் கோட்டைவிட்டுட்டேனே. இனி எப்ப வைகுண்ட ஏகாதசிக்கு இங்கே வரப்போறோம்? இன்னிக்கு முழுக்கக் கோவிலில் 'அந்த' சொர்க்கவாசல் திறந்துருக்குமாம். கோவிலிலும் நடை அடைப்பு இல்லையாம். மூணுமணிக்கே புறப்பட்டுக் கோவிலுக்குப்போனால்.....(இது பகல் மூணு) அந்தப் பேட்டையே உருமாறிக்கிடக்கு. சவுக்கு மரக் கட்டைகளைவச்சுப் புதுசு புதுசா வரிசையில் வர ஒரு ஏற்பாடு. வாகனப் போக்குவரத்து இல்லை. கூட்டம் நெரியுது. கோவில் வாசல் மட்டும் காலி. கேட்டுக்குள் நுழையப்போகும்போது.....
''அம்பது ரூபாய் டிக்கெட்டு"
குரல்கேட்டுத் திரும்பினால், இன்னிக்குச் சாமி பார்க்க அம்பது ரூபாய் வரிசை இங்கேயாம். 'தினம் பார்க்கும் சாமியை எதுக்கு அம்பது ரூபாய் கொடுத்துப் பார்க்கணும்?' னு கோபாலைப் பார்த்தால் ஆமாம்னு தலையாட்டறார்.(எதுக்கு ஆமாம்?) இலவச சேவைப் பக்கம் போகலாமுன்னா கோவிலைச் சுத்தி மூணு தெருவுக்கு நீளமான வரிசை. "ஏங்க இன்னிக்குக் கட்டாயம் சாமி பார்க்கணுமா? தினம்தினம் நான்போய்ப் பார்க்கிறேனில்லை. இன்னிக்கு வேணுமுன்னா அவனே வந்து பார்க்கட்டும்"
இதுக்கும் ஒரு 'ஆமாம்' தலையாட்டல்! கோவிலையொட்டி இருக்கும் ஹாலில் மார்கழி இசைநிகழ்ச்சி நடக்குது அதைக் கேட்டுட்டுப் போகலாமுன்னு அங்கே நுழைஞ்சால், இன்னிக்கு நாள் முழுக்க பிரஸாதம் விநியோகமாம். பீன்ஸ், கேரட் பதிச்ச சாம்பார்சாதம் தொன்னையில் வச்சுக் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. ஜனங்க வாங்கித் தின்ன கையோடு தொன்னையை அங்கங்கே வீசிப்போட்டுட்டு போக சின்னமலைக் குவியல்கள். எதுலேயும் பட்டுக்காமல் நீந்தி ஹாலுக்குள்ளே போனால் ஒரு குழுவா யூனிஃபார்ம் போட்டமாதிரி ஒரே மாதிரிப் புடவைகளில் திருப்பாவை பாடிக்கிட்டு இருக்காங்க மேடையில். 'புள்ளும் சிலம்பினகாண்'
கிடைச்ச நாற்காலிகளை இழுத்துப்போட்டு உக்கார்ந்தா, கோபால் என் தோளைத்தட்டி அங்கே பாருன்னு ஜாடை காமிக்கிறார். என்ன ஆடுதுன்னு அசட்டையாத் திரும்பினா.............பெரிய கருடன் தோள்மேல் பெருமாள்!!!!(இந்தக் கோவிலில் சின்னதும் பெருசுமா ரெண்டு கருடவாகனம் உண்டு)
ஹாலில் இருந்து கோவிலுக்குப் போகும் வாசலில் வந்து நின்னுக்கிட்டு இருக்கார்.
சொன்னதைக் கேட்டுட்டு அவனே வந்துட்டான்! இன்னிக்குப் பார்த்துக் கேமெரா கொண்டுபோகலை. சொர்க்கத்துக்கு எதுக்குன்னு விட்டுட்டு வந்துருக்கேன்(-: கோபாலின் செல்லில் ரெண்டு படம் எடுத்தாச்சு.(அதை கணினியில் ஏத்தமுடியலைன்றது இன்னொரு சோகம். உங்களுக்குக் கொடுத்துவைக்கலை!)
அகிலாமாமி சில குறிப்பிட்ட மக்களுக்கு ஏதோ சீட்டுக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. அடுத்து அவுங்க திருப்புகழ் குழு பாடப்போகுதாம்., இன்னும் அஞ்சு நிமிசத்தில். எல்லாருக்கும் ஒவ்வொருமணிநேரம் ஸ்லாட். முருகா முருகான்னு ஆரம்பிச்சது பாட்டு. மார்கழியைத் தூக்கி மருமானுக்குக் கொடுத்துட்டான். போகட்டும். கிளம்பி வரும்போது நம்வீட்டு 'முருகபக்தர்' 'அறுபடைவீட்டுக்குப் போகலாம்'ன்னார். வைகுண்டத்துக்கு சிவலோகத்திலே சைடு கேட் இருக்குமுன்னு சரின்னேன். இங்கே அவ்வளவாக் கூட்டமில்லை. (இந்தக் கோவிலைப் பத்தி இன்னொருநாள் விஸ்தரிக்கலாம்)
துவாதசி வந்தாச்சு. அதே கோவில் அதே பெருமாள், அதே போஸில் அதே போல். முந்தியநாளின் அமர்க்களம் ஒன்னும் இல்லாமல் வெறிச்சுன்னு இருக்கு!
"'என்னடா இப்படிப் பண்ணிட்டே நேத்து? பயங்கர டிமாண்டா ஒரு நாளுக்கு?"
" யாருக்குத் தெரியும்? நான் தேமேன்னு கிடக்கேன். ஜனங்க பண்ணும் கூத்து! எனக்கோ எல்லா நாளும் ஒன்னுதான்."
"கடைசியிலே அந்த சொர்க்கவாசலைத் தொறந்துவச்சப்பக் கண்ணுலே காமிக்கலை பாரு?"
" எதுக்கு இப்படி ஆதங்கப்படறே? இது எதுக்கு? கதவுக்கு அந்தாண்டை சின்ன சந்து வழின்னா இருக்கு. உனக்கு உண்மையான சொர்க்கவாசலைன்னா காமிக்கணும். 'அங்கே' வரும்போது கேரண்ட்டி"
வழக்கம்போல் வலம்வந்தால் உற்சவர் சந்நிதிக்கு முன்னால் நேற்றிருந்தவர் அதே கோலத்தில். அடடா..... ஒருவேளை பதிவுலகத்துக்குக் கொடுத்து வச்சுருக்கோ? படம் எடுக்கலாமான்னு கோவில் (சின்ன)பட்டரிடம் 'கேட்டால் தெரியலை. ஆஃபீஸில் கேளுங்கோ.' ஓடிப்போய் கேட்டேன். 'பெருமாள், ஃபோட்டோ, கருடவாகனத்தில்........'
தாராளமா எடுத்துக்குங்கோ!!!!
ஆஹா... பதிவுலகம் 'கொடுத்துத்தான் வச்சுருக்கு!'
மேலே: வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல். திருவீதி உலா. பெரிய கருடர்
கீழே: சின்ன கருடர். கோவிலில் 2009 அக்டோபரில் நடந்த கருடசேவை
பார்க்க ஒன்னுபோலவே இருக்கா? அதான் இல்லை! நல்லப் பாருங்க. ஆறு வித்தியாசம் கண்டுபிடிங்களேன்:-)
Wednesday, December 30, 2009
11க்கும் 12க்கும் இடையில்
Posted by துளசி கோபால் at 12/30/2009 04:05:00 PM
Labels: அனுபவம் சொர்க்கவாசல், சிவலோகம், வைகுண்டம்
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
படங்கள் அருமை. ஆனா கருடன் ஏன் விருமாண்டி மாதிரி மீசை வச்சுருக்கார்?
;))
//'அங்கே' வரும்போது கேரண்ட்டி"//
:)))
கண்ணு முழிச்சு சிம்பு ஜோதிகா படம் பார்த்திருக்கீங்க..... ஸோ கண்டிப்பா இந்த வருசம் அமோகமா இருக்கும் பாருங்க் :)
//வைகுண்டத்துக்கு சிவலோகத்திலே சைடு கேட் இருக்குமுன்னு சரின்னேன். //
எதுக்கும் நோட் பண்ணிக்கறேன் இதை. பிற்காலத்துல தேவைப்படலாம். :)
வாங்க எறும்பு.
சாமியைத் தூக்கக் கூடுதல் பலம் வேணுமில்லே? அதுக்காக:-))))
வாங்க நான் ஆதவன்.
வெறும் ஆட்டம் பார்த்தாலும் இதே பலன் உண்டுதானே?
வாங்க சின்ன அம்மிணி.
போனவருசம் கோவியாரின் வைகுண்ட ஏகாதசிப் பதிவிலேயே இது ப்ரூவ் ஆகிருச்சு:-)))
1.பெரிய கருடர் பெரிசா இருக்கார்,சின்ன கருடர் சிறிசா இருக்கார். :-)
2.பெருமாள் கழுத்து முத்துமாலை.
3.கொண்டையில் மல்லிப்பூ
4.வைர மாங்காமாலை.
5. முத்துக்கிரீடம் வெச்சிருக்கார்.
6. திருமண் வித்தியாசப்பட்டிருக்குது.
7.பெரிய கருடர் கழுத்தில் மாலை போட்டிருக்கார்.
8. வஸ்திரம் கலர் வித்தியாசப்பட்டிருக்குது. சின்னகருடர் கட்டிருக்கிற வஸ்திரம் கலர் நல்லா இருக்கு.
ஆறுக்கு மேலயே சொல்லிட்டேன். வீட்டுப்பாடம் முடிச்சாச்சு. அப்பாடா.:-)
அட ராமா.
என்னங்க அமைதிச்சாரல்.....
முக்கியமான ஒன்னை விட்டுட்டீங்களே!!!!
மீசை மீசை மீசை:-))))
என்னை மாதிரி ஆளுங்களுக்கு தரிசனம் பண்ணி வச்சிருக்கீங்க கண்டிப்பா உங்களுக்கு சொர்க்கம் உண்டு
கோபால் என் தோளைத்தட்டி அங்கே பாருன்னு ஜாடை காமிக்கிறார். என்ன ஆடுதுன்னு அசட்டையாத் திரும்பினா.............பெரிய கருடன் தோள்மேல் பெருமாள்!!!!(இந்தக் கோவிலில் சின்னதும் பெருசுமா ரெண்டு கருடவாகனம் உண்டு)
ஹாலில் இருந்து கோவிலுக்குப் போகும் வாசலில் வந்து நின்னுக்கிட்டு இருக்கார்.//////////////
இதல்லோ சேச்சி.!
கருடன் அழகோ அழ்கு. என்னா கம்பீரம்பா. தேடி வந்து தரிசனம் கொடுத்த பத்மனாபன் வாழ்க பல்லாண்டு.
ஏகாதசிக்கு கண்ணு முழிக்கலியா;)
அச்சச்சோ .... டீச்சரையே இம்போசிஷன் எழுத வெச்சிட்டேனா...
ஹி..ஹி... சும்மனாச்சுக்கும். :-))
ஏகதேசிக்கு எந்த நேரத்தில் இருந்து எந்த நேரம் வரை கண் விழிக்கனும்
என்ன என்ன சாப்பிடலாம் . கொஞ்சம் சொல்ல முடியுமா துளசி அய்யா
--- கருட வாகன காட்சி என்ன கோவில்னு நீங்க சொல்லவில்லையே
நானெல்லாம் உங்களை நம்பி நல்லா தூங்கினேன்.. நம்பிக்கை வீன் போகலே.. நன்றி...
படங்கள் அருமை டீச்சர். நானும் சிங்கப்பூரில் கருட வாகன தரிசனம் செய்தேன். படங்கள் அருமை. நல்ல கட்டுரை. ஏகாதசின்னா அரிசி உப்புமாவும், வெண்பொங்கலும் இருக்கனும்.
நல்ல தரிசனம் செய்தோம். வைகுண்டத்திற்கு ஒரு சின்ன வாசலா, அங்க ஜந்து கதவுகள் இருக்கு சொல்லியிருக்காங்க. நன்றி.
ரீச்சர் !!! சூப்பர் போங்கோ!!!இந்த மீசை பார்த்து தான் பார்த்தாவை பாக்க போவேன்.... அக்காலம் இனி எக்காலமோ :((
என்ன சாமி படமெல்லாம் பாப்பீங்க ஒரு லிஸ்ட் கொடுத்தா டிவிடி போட்டு கொண்டு வரச்சொல்லாம்
//" யாருக்குத் தெரியும்? நான் தேமேன்னு கிடக்கேன். ஜனங்க பண்ணும் கூத்து! எனக்கோ எல்லா நாளும் ஒன்னுதான்."//
:)))
படங்களெல்லாம் சூப்பர்! நன்றி அம்மா.
டீச்சர் நரகத்துல கடுமையான ஹீட்ல வருத்து எடுப்பாங்களாமே டீச்சர்.
இப்போ குளோபல் வாமிங்ல நரகம் இன்னும் சூடா இருக்கும்னு ரொம்ப பயமாருக்கு டீச்சர் எனக்கு.
படங்கள் அலைபேசியேல் எடுத்திருந்தாலும் நன்றாகவே வந்திருக்கு.எங்க ஊரில் (நாகையில்) வைகுண்ட ஏகாதேசி இரவில் நாடகமெல்லாம் போடுவார்கள் காலையில் மடவிளாகத்தை சுற்றி புதுசு புதுசா “கலர்களை” பார்க்கலாம்.
பட வித்தியாசம்: 2ம் படத்தில் கருடன் பைப்பை கையில்பிடித்திருக்கார்,3ம் படத்தில் இல்லை. :-)
படங்கள் அழகாய் உள்ளன. அலங்காரமும். நன்றி.
வாங்க எல் கே.
அங்கேயும் ஒரு பதிவர் சந்திப்பு வச்சுக்கலாமா? :-)
வாங்க வல்லி.
ஏகாதசிக்குக் கண் முழிப்பு உண்டு சாமிக்கு:-)
அவருக்கு தினமும் ஏகாதசிதான். எங்கே தூங்கவிடுறாங்க கோவிலிலே?
பாவம்....
வாங்க கலவை.
முந்தியெல்லாம் எங்கூர்லே உடம்பு சரியில்லைன்னு டாக்டரைப் போய்ப் பார்க்கும்போது அவரிடம் கடைசியா நோயாளி கேக்கும் கேள்வி இதுதான்.
" டயட் என்னன்னு சொல்லுங்க? "
ஏகாதசிக்கு உபவாசம்தான். இதுலே சாப்பாடு லிஸ்ட் உண்டா?
கண்விழிப்பது கூட தூக்கம்வரும்வரைதான்!
இந்தக் கோவில் அடையார் ஸ்ரீ அனந்தபத்மனாப ஸ்வாமி கோவில்.
சென்னை.
எல்லாம் இருக்கட்டும். நீங்கள் முதல்முறையாக இங்கே வந்துருக்கீங்க போல இருக்கே? நலமா?
இப்படிக்கு துளசி அம்மா என்ற துளசி டீச்சர்
வாங்க அண்ணாமலையான்.
அதெப்படி பரஸ்பர நம்பிக்கை வீண் போகும்?
நானும்தான் கடைசியில் தூங்கிட்டேன்.
வாங்க பித்தனின் வாக்கு.
வாசல் ஒன்னு கதவுகள் அஞ்சு!!!
கண்டவர் விண்டதுண்டோ............
வாங்க இலா.
இப்பெல்லாம் சாமிப் படம் ஏது?
'நான் கடவுள்' தான்:-)
போனவாரம் ஒருநாள் தில்லக்கேணி பாசாதியில் பகல்பத்து பார்த்தேன். ஸ்ரீ ராமர் கோலம்.
அருமை.
வாங்க கவிநயா.
வருகைக்கு நன்றி.
வாங்க குடுகுடுப்பை.
இதென்ன அங்கே ரொம்பச் சூடுன்னு 'ஜக்கம்மா' போட்டுக்குடுக்குறாளா?
சரி சரி. நாலு நல்ல பதிவாப் போடுங்கோ. நரக டேஸ்லே டிஸ்கவுண்ட்டு கேக்கலாம்.
வறுபடாம இருக்க வழி தேடுனா ஆச்சு.
வாங்க குமார்.
படங்கள் மறுநாள் கெமெராவில் எடுத்தவை.
கருடன் 'பைப்' பிடிக்கிறாரா? அச்சச்சோ:-)))))))))))
வாங்க ராமலக்ஷ்மி.
இந்தக் கோவிலில் அலங்காரம் அருமையாப் பண்ணறாங்கப்பா.
அதான் அழகா வந்துருக்கு.
இப்படிக்கு துளசி அம்மா என்ற துளசி டீச்சர்
adade neengathaan tulasi teecheraa! krs pandalla oru sila padivila unga pera poduvaaru
முதல்முறையாக இங்கே வந்துருக்கீங்க போல இருக்கே?
aanmeega padivunna adil oru sila samayatil en padivu undu
அதென்னங்க கலவை, ஆன்மீகத்துக்கு மட்டும்? லௌகீகத்துக்கும் வந்து போங்க. அதுவும் வேண்டித்தானே இருக்கு!
Post a Comment