எல்லாருக்கும் வணக்கம். நல்லா இருக்கீங்களா? 'ஊரெல்லாம் சுத்தி என் பேரு முத்தி'ன்னு ஊர்வலத்தை
முடிச்சுக்கிட்டு வந்து சேர்ந்துட்டேன்.
சிங்கப்பூர் இணைய நண்பர்களின் மகாநாடு(!) அருமையா நடந்து முடிஞ்சது. பங்கேற்றவுங்க எல்லாம் அதைப்
பத்தி விலாவரியா வரிக்கு வரி எழுதிட்டாங்கதான்! 'சரி'ன்னுட்டு அப்படியே விட்டுற முடியுதா? என்னுடைய
பார்வை( ஏதோ ஒரு குருட்டுப் பார்வை?)யில் அதைப் பத்தி எழுதலேன்னா 'ப்ளாக்' வச்சிக்கிட்டு ஏதாவது
பிரயோஜனம் இருக்கா?
வெள்ளிக்கிழமை ராத்திரி அங்கே போய்ச் சேர்ந்தேன்.எப்பவுமே, தங்கறதுக்கு விருப்பமான இடம் 'லிட்டில் இந்தியா'தான்.
'ஆலயம் தொழுவது சாலவும் நன்று'ன்னு பெரியவுங்க சொன்ன மாதிரி, ஆலயத்துக்குப் பக்கத்துலே இருக்கறதுதான் வசதி!!
பொழுது விடிஞ்சதும், பக்திப் பரவசமா 'ஸ்ரீநிவாசனை' தரிசிக்கப் போனேன். ஏற்கெனவே சுமார் முப்பதுபேர்
கூடியிருக்காங்க! எல்லோருமாச் சேர்ந்து 'சுப்ரபாதம்' சொல்லித் திருப்பள்ளிஎழுச்சி முடிஞ்சது! அருமையான
தரிசனம்!!! ச்சுடச்சுட சக்கரைப் பொங்கல் பிரசாதம்!!! எல்லா சனிக்கிழமைகளும் இப்படித்தானான்னு கேட்டேன்.
இல்லையாம். ஆனா யாராவது 'ஸ்பான்சார்' செஞ்சாமட்டும் இப்படி நடக்குமாம்! நமக்கு நல்ல நாளுன்னு இருந்துச்சு!
ஆனா, இணைய நண்பர்கள் சந்திப்புன்றது எனக்கு மட்டும் 19 ஆம் தேதியே ஆரம்பிச்சாச்சு!( ஆஹா..மத்தவங்களுக்கு
ஒரு நாளு லேட்டு!)
அங்கெ போய்ச் சேர்ந்த மறுநாளே நம்ம 'ஜெயந்தி சங்கர்' வீட்டுலே அருமையான பகல் சாப்பாடு!!!!
ஃப்ரைய்டு ரைஸ், தயிர் வடை, பாயாசம் இப்படி வகைவகையாச் செஞ்சு வச்சுருந்தாங்க!!!நம்மளை நம்புனவங்களைக்
கைவிட முடியுமா? அதனாலே அவுங்க மனம் கோணாம எல்லாத்தையும் ஒரு வெட்டு வெட்டினோம்! அந்த 'னோம்'
யாருன்னா, நானும் என் மகளும்!
உண்ட களைப்புத் தீரணுமேன்னு, சூடா ஒரு 'ச்சாயா'வேற! அதுக்கப்புறமும் இன்னும் களைப்பு மாறலியேன்னு
ஆளுக்கு ஒரு இளநீர்!! ( இப்படித் தின்னாதான் உடம்பு இளைக்குமுன்னு டாக்டர் சொல்லவேணாமோ?)
'வயிற்றுக்கு வேலை கொடுக்காத நேரத்துலே மட்டும் கொஞ்சம் பேச்சு'ன்னு போய்க்கிட்டு இருந்தது! அப்படி இப்படின்னு
பேச்சுத்தடத்துலேயே போனப்பதான் விஷயம் தெரியுது, அவுங்களுக்கும், நமக்கும் ஒரு 'நெருங்கின'தொடர்பு
இருந்துருக்குன்னு!
நாங்க கேரளாவுலே இருந்தோமுன்னு முன்னேயே சொல்லியிருந்தேன்ல, அப்ப, கோபால் வேலை செஞ்ச அதே
ஃபேக்டரியிலே அவுங்க சங்கரும் இருந்திருக்கார்! என்னா, வருசம்தான் வேற! ச்சும்மா ஒரு நாலு வருசத்துக்குப்
பிறகு!( அப்பவே சந்திக்கற வாய்ப்பு கிடைச்சிருந்தா.......)
இப்படி 'சொந்தக்காரங்களா' ஆகிட்டோம்! அவுங்களோட ரெண்டு மகன்களும் அருமையானவுங்க! கொஞ்சநேரம்
கழிச்சு, சங்கர் ஒரு வேலையா வெளியே போறதாச் சொன்னார். சனிக்கிழமை வேலைநாளான்னு கேட்டப்பதான்
விஷயம் வெளியே வருது. அவர் ஒரு முதியோர் இல்லத்துலே தன்னார்வத் தொண்டு செஞ்சுக்கிட்டு வரார்! ஓசைப்
படாம ஒரு உயர்ந்த சேவை!!!!
அப்புறம் 'ஜெயந்தி' எப்படிப்பட்ட எழுத்தாளர்! எவ்வளவு எழுதியிருக்காங்க, எத்தனையெத்தனை பரிசுகள் வாங்கினவுங்க!
ஒரு துளியாவது 'கர்வம்' இருக்கணுமே..ஊஹூம்!! ரொம்ப அடக்கமா இருக்காங்க. நிறைகுடம்! அதான் ஒரு
தளும்பலும் இல்லே! அவுங்களோட பேசிக்கிட்டு இருக்கறதே ஒரு தனி அனுபவம்!!!!
அவுங்க வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு கோயில் இருக்கறதாச் சொல்லி, எங்களைக் கூட்டிக்கிட்டுப்போனாங்க.
என்னோட ஆன்மீகத்தேடலை( அப்படி சொல்லிக்கிறதுதான்) புரிஞ்சுக்கிட்டாங்க போல!
ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில்!!! புதுக்கருக்கு அழியாத வர்ணம்!!!! மண்டபத்துலே, மேலே விதானத்துலே
அழகழகான ஓவியங்கள்!!! எல்லாமே அம்மனுடைய பலதோற்றங்கள்!!!! நம்ம ரம்பா, ஊர்வசி, மேனகா
( சினிமாக்காரங்க இல்லை. எல்லாம் தேவலோக சமாச்சாரம்!!!)இவுங்கெல்லாம் கூட ஒரு அம்மனா வரையப்
பட்டிருந்தாங்க!!!! புள்ளையாரையும், முருகனையும், சிவனையும் தவிர 'எங்கெங்கும் காணினும் சக்தியடா'ன்னு
ஒரே மகளிர் மன்றம்தான்!!!!! இங்கே பூலோகத்துலேதான் 33 சதவீதத்துக்கு போராட்டம்!!!! ஹூம்...
'மன்மதாம்பாள்'ன்னுகூட பார்த்த ஞாபகம்!!!!!!!
ஏறக்குறைய 7 மணிநேரம் அவுங்களோட இருந்திருக்கேன். ரொம்ப சிம்பிள், பழகறதுக்கு எளிமை!! ரொம்பப்
பிடிச்சிருக்கு!!!!!
மறுநாள் மற்ற இணைய நண்பர்களைச் சந்திக்கப்போறோம் என்ற எதிர்பார்ப்போட இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தேன்!!!
(மறு)நாளைக்கு நடந்தது நாளைக்கு.....
Wednesday, March 30, 2005
ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள்......
Posted by துளசி கோபால் at 3/30/2005 06:27:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
துளசியக்கா! ஊருக்கு நல்லபடியா திரும்பி போய் ஃபுல் பார்முக்கு வந்துட்டீங்க போல. வாங்க வாங்க...
எங்க வீட்டு அம்மணி ஊரிலே இருந்திருந்த உங்களை விட்டிருக்க மாட்டேன். பேச்சிலர் வீட்டுக்கு எப்படி கூப்பிடறதுன்னு விட்டுடேன்...
ஃபேரர் பார்க் பெருமாள் கோவிலா? ஆகா சனிக்கிழமை தவறாம தலீவருக்கு சல்யூட் வைக்கிறது. எல்லா சனிக்கிழமையும் புளியோதரை,கேசரி சுண்டல் போடுவாங்க. நிறைய.... சனிகிழமை நைட்டு சாப்பாடே அங்கேதான்னா பார்த்துகோங்களேன்.
வெற்றிகரமாக சுற்றுப்பயணத்தை முடித்து ஊர் திரும்பி இருக்கும் மவொரி துளசியக்காவுக்கு ஒரு ஓ.........................
அன்பு துளசி! சிங்கப்பூரெல்லாம் ஒரு கலக்கு கலக்கிட்டு வந்துட்டீங்களா?!
உங்க ஃபோட்டோல்லாம் பாத்தேன் துளசி நல்லா இருந்தது.
ம்ம்..அடுத்து எப்போ மலேசியா வரப்போறீங்க? தைப்பூசத்தின்போது
வாங்களேன் துளசி?
அன்புடன்
மீனா.
அன்புள்ள விஜய்,கிறிஸ்,முருகன்,மீனா, மூர்த்தி
பின்னூட்டங்களுக்கு நன்றி.
இனி ஒவ்வொரு நாட்டிலும் இணைய நண்பர்களின் சந்திப்பு நடக்கணும். முடிஞ்சா அங்கெல்லாம்கூட கலந்துக்க ஆசைதான்!
என்றும் அன்புடன்,
துளசி.
அன்புள்ள விஜய்,கிறிஸ்,முருகன்,மீனா, மூர்த்தி
பின்னூட்டங்களுக்கு நன்றி.
இனி ஒவ்வொரு நாட்டிலும் இணைய நண்பர்களின் சந்திப்பு நடக்கணும். முடிஞ்சா அங்கெல்லாம்கூட கலந்துக்க ஆசைதான்!
என்றும் அன்புடன்,
துளசி.
9:01 AM
Back to formaaa? vaanga .. vaanga!!
//அங்கெ போய்ச் சேர்ந்த மறுநாளே நம்ம 'ஜெயந்தி சங்கர்' வீட்டுலே அருமையான பகல் சாப்பாடு!!!!
ஃப்ரைய்டு ரைஸ், தயிர் வடை, பாயாசம் இப்படி வகைவகையாச் செஞ்சு வச்சுருந்தாங்க!!!நம்மளை நம்புனவங்களைக்
கைவிட முடியுமா? அதனாலே அவுங்க மனம் கோணாம எல்லாத்தையும் ஒரு வெட்டு வெட்டினோம்!//
அது!!! இந்த விஷயத்துல நானும் உங்களை மாதிரித்தான். என்னை நம்பினா கையை கழூவுறதேயில்லை..ஐ மீன் கைவிடுறதேயில்லை! :-)
அடிச்சி கெளப்புறீங்க! அடிங்க!
விஜய் சொன்னமாதிரி பெருமாளை நம்பினோர் பட்டினியாய் திரும்பமாட்டார்! பாய்ஸ் படத்துல செந்தில் சொல்ற இம்பர்மேஷன் இங்க்கே கரெக்டா ஒர்கவுட் ஆகும்! :-)
எம்.கே.குமார்
Post a Comment