Wednesday, March 16, 2005

முகங்கள்!!!!! அறிமுகங்கள்!!!

முகம் தெரியாத நண்பர்களின் முகங்களைப் பார்க்கப் போற வாய்ப்பு இப்படித் திடீர்ன்னு
கிடைக்குமுன்னு எதிர்பார்க்கவேயில்லை!

எங்க வீட்டுலே 'இவர்'தான் எப்பவும் வேலைவிஷயமா'ஊர் ஊராவும், நாடுநாடா'வும் சுத்தறது!
நானு? எங்கதையைச் சொல்லணுமுன்னா, 'நாய்க்கு வேலை இல்லே, ஆனா நிக்க நேரமில்லே'!என்ன, எதுக்குன்னு தெரியாமலேயே ஒரே சமயத்துலே பல விஷயத்துலே 'மூக்கை' நீட்டிக்கிட்டு
ஓடுறதே என் 'தொழிலாப்'போச்சு!

இந்தியாவுக்குப் போகணுமுன்னு 'கொஞ்ச நாளா' நினைச்சுக்கிட்டே இருந்தேன். 'டக்'க்குன்னு
போகமுடியாம ஏகப்பட்ட 'கமிட்மெண்ட்.' இதுக்கு இடையிலே ஒரு வாரம் எனக்குத்தோதா அமைஞ்சுடுச்சு!

ஒரேவாரம் சென்னைக்குப் போய்த்திரும்பறது ஒரு கொடுமைங்கறதாலே இப்ப வேணாமுன்னு இருந்தாலும்,
கிடைக்கப்போற ஒரு வாரத்தை விட்டுறக்கூடாதேன்னு வேற இருக்கு.

ம்ம்ம்ம்ம்ம்ம்... எங்கே போலாம்? அக்கம்பக்கத்து இடமாவும் இருக்கணும், அதே சமயம் என்னுடைய
ஆன்மீகத்தேடல்,( என்னாமாதிரி வார்த்தை வந்து விழுதுன்னு பார்த்தீங்களா? அடாடாடா) வயித்துப்பாடுன்னு
மனசுக்கு நிறைவா இருக்கற இடமாவும் இருக்கணுமுன்னு தேடுனதுலே, வாய்ப்பா இருந்த இடம் சிங்கப்பூர்!

சரின்னு முடிவு செஞ்சு, நம்ம ஜெயந்தி சங்கருக்குத் தகவல் தெரிவிச்சேன். அப்படியே நம்ம இணைய நண்பர்களைச்
சந்திக்கமுடிஞ்சா மகிழ்ச்சியாவும் மன நிறைவாயும் இருக்குமுன்னு நினைச்சதுக்கும் அவுங்களே ஒரு வாய்ப்பையும்
உண்டாக்கிக் கொடுத்திருக்காங்க!( நம்ம விஜய், மூர்த்தி, ரம்யா இன்னும் மத்த நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து
ஒரு கலகலப்பான ஒன்றுகூடும் தருணத்தை அட்டகாசமா ஏற்படுத்தறாங்கன்னு ஒரு பட்சி இப்பத்தான் சொல்லிட்டுப்போகுது!)


'மரத்தடி'யிலே போய்ச் சேர்ந்தும் இந்த மாசம் 26ஆம் தேதியோட ஒரு வருசம் ஆகப்போகுது. ஆண்டுவிழாக்
கொண்டாட்டம்தான்!!!

நண்பர் 'காசியின் தமிழ்மணம்' வாசனையைப் புடிச்சுக்கிட்டே அப்படியே போய் அதே வேகத்துலே ஒரு பதிவையும்
ஆரம்பிச்சு 6 மாசம் ஆகப்போகுது. இப்ப இந்த அரைவருசக் கொண்டாட்டமும் சேர்ந்துக்கிச்சு!

ஏராளமான நண்பர்களும்,இந்த நட்புவட்டமும் தந்த மகிழ்ச்சியைக் கொண்டாடிட்டுத்தான் மறுவேலை!

அக்கா, அக்கான்னு அன்பா இருக்கற தம்பிங்களையும், தங்கச்சிங்களையும் பார்த்துட்டு ஓடி வந்துருவேன்.
அதுவரைக்கும் விட்டாச்சு லீவு!!!!

எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க. உங்க ஊர்ங்களுக்கும் இப்படி ஒரு ச்சான்ஸ் வந்துரப்போகுது!

சிங்கையிலே இருக்கற இணைய நண்பர்களும், வேற ஏதாவது காரணத்தாலே இந்த சமயம், அங்கே வந்து இருக்கக்
கூடிய மற்ற இடங்களைச் சேர்ந்த இணையநண்பர்களும் (நேரம் அனுமதிச்சால்) இதையே அழைப்பிதழாக நினைச்சுக்கிட்டு
முடியுமானால் அவசியம் இந்த( கீழே விவரம் இருக்கு!) இடத்துக்குச் சிரமம் பாராம வரணுமுன்னு அன்போட கேட்டுக்கறேன்.

Date : 20 th March 2005

Venue : Function Hall of Lucky Tower

Time : 3:30PM

Address
-------------
Lucky Tower Function room(second level)
57, Grange Road,
Singapore 249569.

How to reach
--------------------
Buses that come to Lucky Tower are 75 (to Grange Road) and 65, 54, 14,
16 (stops at Irwell bank road/Paterson Road - about 3 minutes walk).
Nearest MRT Orchard (about 7 mins walk).

12 comments:

said...

வாங்க வாங்க!

said...

//'நாய்க்கு வேலை இல்லே, ஆனா நிக்க நேரமில்லே'//

மீட்டிங் வந்தும் ஓடிக்கிட்டு தான் இருப்பீங்களா?
:-)

வாங்கக்கா! வத்தலகுண்டு நினைவுகளை கூட்டாக சேர்ந்து கிளறலாம்.

said...

அருள் சொன்ன மாதிரி " வாங்க, வாங்க " ... விஜய் வேற என்னவோ வத்தலக்குண்டு நினைவுகள் அது இதுன்னு குண்டு போடுறார்.. அப்படி இப்படின்னு கடைசியில நம்ம ஊர் காரவகளா ஆகீவிட்டீ£ங்களோன்னு இந்த கம்பத்துக்காரனுக்குத் தோணுது...எனிவே, ஊராங்க முக்கியம் - வருகைதான் முக்கியம்.

உங்கள் வரவேற்பு சம்பந்தமா நானும் ஏதாவது பங்களிப்பு செய்யலாம்னு பார்த்தேனுங்க.. விஜய், மூர்த்தி, ஜெ, ரம்யா போன்றவங்க " கம்முனு கெட" என்று சொல்லுவதுபோல் சகல காரியங்களையும் சத்தமில்லாமல் செய்து விட்டாங்க...

இருந்தாலும் இந்த முறையும் ஜெயந்தி சங்கர் குலோப்ஜாமூன் போன்ற ஏதாவது சுவையான சமாச்சாரங்களைக் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை நிறையவே இருப்பதால், அவற்றை ஒன்றுக்கு ரெண்டாக சாப்பிட்டு என்னாலான பங்களிப்பை கட்டாயம் செய்வேனென்று இந்த பின்னூட்டத்தின் வழி 100+1 பர்சண்ட் உறுதியளிக்கிறேன் !!!!!!!!!!

said...

தமிழ்மணத்துக்கு வந்து அதுக்குள்ளே 6 மாதம் ஓடிருச்சா.. நீங்க கலக்கலா எழுதிட்டிருக்கீங்க... தொடருங்க..

அப்புறம், சிங்கப்பூர் பயணம் மிகவும் இனியதாக அமைய எங்களின் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்!

அன்புடன்,
கிறிஸ்

said...

சொந்தமில்லாமல் இருந்த எனக்கு இணையம் வழி நிறைய அன்பு அக்காக்கள், அண்ணன்கள், தம்பிகள், தங்கைகள் எனும்போது உள்ளம் உவகை கொள்கிறது.

தங்களின் வருகையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

வாருங்கள்.. நமது நினைவுகளை அசைபோடுவோம்.

என்றும் அன்புடன்,
மூர்த்தி.

said...

Balu,
kavalai vENdAm.
nIngka thaan aduththa meeting eeRpaattaaLar,. sariyaa, ? : ) maRakkaathIngka,..
1-2 maasam idaiveLivittu initiate paNNungka, aarampingka, uthavik karam nIttaRom,.co operate paNRom,.. asaththiduvOm. innum 1-2 maasaththula yaarum singapore variingkaLaa,.. : )

said...

துளசியக்கா!

வருக! தங்கள் வரவு நல்வரவாகுக! உங்களையும் மற்ற சிங்கை இணைய நண்பர்களையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். ஆனால் அதே தேதியில் வேறொரு இடத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலுமா என்று தெரியவில்லை. இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன்.

- சலாஹுத்தீன்

said...

சலாஹூதின் முயற்சி செய்யுங்களேன். எதிர்பார்க்கிறோம் உங்களை.

said...

அன்புள்ள அருள், விஜய், பாலு மணிமாறன், கிறிஸ்டோஃபர், மூர்த்தி, ஜெயந்தி
மற்றும் சலாஹுத்தீன்,

பின்னூட்டத்துக்கும் அன்பான வரவேற்புக்கும் ரொம்ப நன்றி!

இதோ வந்துட்டேன்!!!!!

என்றும் அன்புடன்,
துளசி.

said...

வருக வருக

said...

என்னங்க,

திஸ் டே ஃபைவ் இயர்ஸ் பேக்னா மாதிரி ஆர்க்கைவ்ஸ்லருந்து போடறீங்க?

நல்ல ஐடியாதான்..

said...

டிபிஆர்ஜோ,

நம்ம அன்னியலோகம் வெங்கடரமணிதான் இதெல்லாம் நம்ம தளத்துலே போட்டுருக்கார். புதுசுபுதுசா
அவர் மென்பொருள் எழுதிக்கிட்டே இருக்கார் பாருங்க. எல்லாம் அன்னியன் உபயம்தான். இதைப்பத்தி
ஒரு பதிவுகூடப் போட்டுருக்கார் பாருங்க. மறுவாழ்வுதான்:-)))))