இப்பத்தான் தினமலருலே சி. செய்திகள்( சினிமா செய்திகள்தாங்க! எப்பப் பார்த்தாலும்
சினிமாவைப் பத்திப் பேச்சு, வாக்குவாதம், விமரிசனம் இப்படியே போய்க்கிட்டிருக்கு
பாருங்க நம்ம பத்திரிக்கை உலகமும், ஜனங்களுட மனசும்!) பார்த்தேன்.
'அறிவுமணி, ஜதி' போன்ற படங்களைச் சென்னையில் ரிலீஸ் செய்யறதுக்கு தியேட்டர்
கிடைக்கலையாம்! ஆனா இந்தப் படங்களெல்லாம் போன வாரமே நம்ம வீட்டுலே ரிலீஸ்
ஆயிருச்சு!( திருட்டு விசிடி இல்லைங்க!!!)
அதிலும் பாருங்க இந்த அறிவுமணி ( முரளிதான் வேற யாரு?) இருக்காரே, அநியாயத்துக்கு
நல்லவரா வராரு!
ஜனங்கள் பார்க்க ச்சான்ஸ் இல்லாத படத்தை விமரிசனம் செஞ்சா நல்லா இருக்காதேன்னு
இந்தப் பட விமரிசனங்களையெல்லாம் கொஞ்சநாள் கழிச்சு( அதுவரைக்கும் அந்தக் கதைங்க
ஞாபகம் இருந்தா!) எழுதலாமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.
'உப்பு' பார்த்தேன். நல்ல படம்! நம்ம ரோஜா அருமையா நடிச்சிருக்காங்க! ஆனா ஓடுமான்னு
தெரியலை!
இப்படி உப்புச் சப்பு இல்லாம போட்ட பதிவைப் பார்த்துட்டு, யாரும் ஆட்டோ அனுப்பிடாதீங்க:-)
Monday, March 14, 2005
சி. செய்திகள்!!!
Posted by துளசி கோபால் at 3/14/2005 12:16:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நீங்க சிங்கப்பூர் வாரீங்கன்னு தெரிஞ்ச பிறகுதான் உங்க பிளாக்கைப் பார்த்தேங்க துளசி... ம்ம்ம்...சும்மா சொல்லக்கூடாது, சாதாரண விஷயத்தைக்கூட சுவாரஸ்யமா எழுதிர்ர உங்கள் திறமை வியப்பா இருக்கு... காரணம் - பலரும் சுவாரஸ்யமான விஷயத்தைக்கூட சாதாரணமா உப்பு சப்பில்லாமல் எழுதிராங்க - அதான்...
அன்புள்ள பாலு மணிமாறன்,
ரொம்ப நன்றிங்க உங்க பின்னூட்டத்துக்கு! உங்களையெல்லாம்
நேரில் சந்திக்கத்தான் இந்தமுறை சிங்கை வர்றது!
என்றும் அன்புடன்,
துளசி.
Post a Comment