வீடுகளில் பண்டிகை அலங்காரத்துக்காக க்றிஸ்மஸ் மரம் வைக்கிறது உங்களுக்கெல்லாம் தெரியும்தானே ? ஊசி இலைக்காடுகள்னு நாம் சின்னப்புள்ளைங்களா இருந்த சமயம் பள்ளிக்கூடத்தில் படிச்சுருக்கோம் இல்லை ! அந்த Pine மரம், இல்லைன்னா அதே இனம் சார்ந்த Fir மரத்தின் கிளைகளை ஊருலகமெங்கும் பயன்படுத்தினா... எங்க நியூசிக்கு மட்டும் விசேஷ க்றிஸ்மஸ் மரம் இருக்கு!
Pohutukawa என்ற பெயருள்ள மரம். இது டிசம்பர் மாசம்தான் ரத்தச் சிகப்புப் பூக்களுடன் இருக்கும். எங்க ஊரின் கடற்கரை பக்கம் இருக்கும் பேட்டையில் இந்த மரங்களைத்தான் எல்லா இடங்களிலும் நட்டுவச்சுருக்காங்க. பார்க்கவே அழகுன்னு ஒருநாள் பார்க்கப் போனோம். இந்த மரத்தில் மஞ்சள் நிறப்பூக்களும் வரும் என்பதை அப்பதான் முதல்முறையாப் பார்த்தேன். இந்த மரம் இங்கத்து மவொரி மக்களுக்கு முக்கியமான ஒரு மரமும் கூட !
பண்டிகைக்கு முதல்நாள் ராத்ரி, எங்க பக்கத்துப்பேட்டையில் ஒரு தெருவில் விளக்கு அலங்காரம் பார்க்கப்போனோம். நாலைஞ்சு வீடுகள் சேர்ந்து அலங்கரிச்சுட்டாங்க. க்றிஸ்மஸ் லைட் ஷோ !
கீழே படம்: நம்மூட்டு அலங்காரம் :-)
இப்படி அப்படின்னு க்றிஸ்மஸ் தினம் வந்தே வந்துருச்சு. முந்தி மாதிரி முதல்நாள் நடுராத்ரிக்குச் சர்ச்சுக்குப்போகும் பழக்கம் எல்லாம் காணாமப்போயிருச்சு. அதான் நிலநடுக்கம் வந்ததும், எங்கூர் கதீட்ரல் இடிஞ்சு விழுந்துருச்சே.... வீட்டாண்டை இருக்கும் சர்ச்சுகளுக்கு ஒரு விஸிட். பண்டிகைநாளும் அதுவுமா.... கோவிலில் யாருமே இல்லை. ஏகாந்த தரிசனம்தான் !
இங்கெல்லாம் கோவிலில் அலங்காரம் டிசம்பர் முதல் வாரமே செஞ்சுருவாங்க. ஆனால் மாட்டுக்கொட்டாயில் புள்ளை மட்டும் இருக்காது. க்றிஸ்மஸ் ஈவ் நடுராத்ரி 12 ஆனதும்தான் புள்ளை பெறக்குறதா ஐதீகம். அப்பதான் கொழந்தையைக் கொண்டுவந்து கிடத்துவாங்க.
இன்னொரு சர்ச்சுக்குள்ளே போய் பார்க்கவே இல்லை. நம்ம பேட்டைதான். நிலநடுக்கத்தில் இடிஞ்சு விழுந்து பத்துவருஷமாத் திருப்பிக்கட்டக் காசில்லாமல் தவிச்சோம். இத்தனைக்கும் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ரொம்பவே பழைய சர்ச். ஏழுவருஷம் திட்டம்போட்டு, 1858 ல் கட்டி இருக்காங்க.
1800 களில் மரணமடந்தவர்களின் கல்லறை இதைச் சுத்தி இருக்கு. அவ்ளோ பழசு ! எங்கூர் சிட்டிக்கவுன்ஸில் தண்டச்செலவு பண்ண எப்பவும் ரெடியா இருக்குமே தவிர, இதைப்போன்ற ஹிஸ்ட்டாரிக்கல் சமாச்சாரத்துக்கு ஒரு பைஸா கொடுக்காது.
ஒருவழியாப் பணம் சேர்த்து பழுதுபார்த்து, 28, February, 2021 திறப்புவிழா வச்சாங்க. தினம் என்ன வேலை நடக்குதுன்னு வெளியே போறப்பவும் வர்றப்பவும் பார்த்துக்கிட்டே இருந்தோம். சர்ச்சோடு சேர்த்து ஒரு காஃபி ஷாப் வேறவச்சுருக்காங்க. சர்ச்சுக்கு வர்ற சனம் காஃபி வாங்கிக்குடிச்சு, சர்ச்சுக்கான வருமானத்தைப் பெருக்குமாம்! மறுநாள் திறப்பு விழாவுக்குப் போக முடிவும் பண்ணிட்டோம். அன்னைக்கு ராத்ரி அரசாங்கத்தின் லாக்டௌன் அறிவிப்பு. விழா கேன்ஸலாகிருச்சு. அப்புறம் சில மாசங்களுக்குப்பின் லாக்டௌன் போயிருச்சுன்னாலும்.... நமக்கு அங்கே உள்ளே போக வாய்ப்பே கிடைக்கலை. இத்தனைக்கும் அதுக்கு எதிர்வாடையில் இருக்கும் காய்கறிக்கடைக்கு வாரம் ரெண்டுமுறையாவது போய்வர்றோம்தான். ப்ச்....
அதேமி பழமொழி? விடியாமூஞ்சி வேலைக்குப்போனாலும்...... அதேதான் க்றிஸ்மஸ் தினமாவது போய் வந்துறலாமுன்னு போனால்.... மூடி வச்சுருக்காங்க. போயிட்டுப்போகுது போ....
இடிஞ்சு போன கதீட்ரலை மீண்டும் கட்டி எழுப்பும்வரை தாற்காலிக சர்ச்சுன்னு அட்டைக்கோவில் ஒன்னு கார்ட்போர்டுலே கட்டி இருந்தாங்க. அங்கேயும் போய் வரலாமுன்னு போனால்..... அதே பழமொழி !!!!
கண்ணாடிவழியாப் புள்ளையை எட்டிப்பார்த்துட்டு வந்தோம்.அட்டைக்கோவில் விவரம் வேணுமுன்னால் இந்தச் சுட்டிகளில் பாருங்க.
http://thulasidhalam.blogspot.com/2012/05/blog-post_17.html
http://thulasidhalam.blogspot.com/2015/
அன்னைக்கு சனிக்கிழமை வேற . வழக்கமாப்போகும் ஹரே க்ருஷ்ணா கோவிலுக்கு மாலை ஆரத்திக்குப்போய் வந்தோம்.
இப்படியாக நம்ம வீட்டு அலங்காரத்தோடு பண்டிகை அமர்க்களமா நடந்தது :-)
8 comments:
சிறப்பான கொண்டாட்டம். புதிதாக கட்டப்பட்ட தேவாலயத்திற்கு இதுவரை செல்ல முடியாதது வேதனை.
பண்டிகை அலங்காரங்கள் சிறப்பாக இருக்கிறது. உங்கள் வீட்டு அலங்காரங்களும் நன்றாக உள்ளன.
கொண்டாட்ட அலங்காரங்கள் சிறப்பு. அடர்ந்து குவிந்துள்ள அந்த மரம் வெகு அழகு. கவர்கிறது. இந்தப் பதிவில் ரஜ்ஜுவைக் காணாதது வருத்தமாக இருக்கிறது!
மரங்களும், படங்களும் அழகாக இருக்கின்றன. கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் செம.
என்ன ரஜ்ஜுவை காணுமே
கீதா
வாங்க வெங்கட் நாகராஜ்,
இன்னும் வேளை வரலை பாருங்களேன்!!!! நம்ம பேட்டை என்பதால் ஒரு அலட்சியம் வந்துருக்குமோ !
வாங்க மாதேவி,
ரசிப்புக்கு நன்றிப்பா !
வாங்க ஸ்ரீராம்,
ரஜ்ஜுவின் ஃபேன் க்ளப்புக்கு நீங்கதான் தலைவர் ! உங்கள் வருத்தம் தீர்க்க, இதோ அடுத்த பதிவில் ரெண்டு படங்கள் போட்டாச் !
வாங்க கீதா !
அட... ஆமாம். ரஜ்ஜுவைக் காணோம்!!!! இனி எப்போதும் இருப்பான் :-)
Post a Comment