Wednesday, September 30, 2020

எங்கெங்கு காணினும் 'தண்ணீரடா' (ரோட்டோருஆ பயணம் . பகுதி 5 )

இங்கே வானவில்லாண்டையே இருந்தால் எப்படி ? டவுனுக்குள் போய் பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வேற இடங்கள் என்னென்ன  இருக்குன்னு பார்க்கலாமுன்னு  ரெயின்போ ஸ்ப்ரிங்ஸ் விட்டுக் கிளம்பினோம். ஒரு அஞ்சு கிமீதூரத்தில்  இருக்கும்  டவுனுக்குப் பத்து நிமிட்டில் போய்ச் சேர்ந்தோம். 
பயணிகளுக்குத் தேவையான இன்ஃபர்மேஷன் சென்டர் பெரூசா இருக்கு.  



உள்ளே நல்ல கூட்டம். போதாக்குறைக்கு  ஏரியா முழுசுக்கும் ஃப்ரீ வைஃபை !   கேக்கணுமா ? ஆனால் ஏராளமான பணியாளர்கள், உங்களுக்குத் தகவல்களை அள்ளித் தந்துக்கிட்டு இருக்காங்க. இந்த ஊருக்கு மட்டுமில்லாமல் நாடு முழுக்க எங்கெங்கே என்ன இருக்குன்றது ஏராளமான  தகவல்கள் அச்சிட்ட ப்ரோஷர்கள் கொட்டிக்கிடக்கு.   தேடிப்பார்க்கப் பொறுமை இல்லைன்னாலும்  கவலை வேணாம். நமக்குக் கைவசம் இருக்கும் நேரத்துக்கு என்ன பார்க்கலாமுன்னு கேட்டால் போதும்.  இதைப்பார், அதைப்பார்ன்னு ஒரு பத்துப்பதினைஞ்சைத் தேடி எடுத்து நம்ம கையில் கொடுத்துருவார்.  அதுலே நமக்கு வேணுங்கற  இடத்துக்குப் போகலாம். ஒவ்வொன்னிலும் இருக்கும் படங்கள் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகும். நமக்குத்தான் திண்டாட்டம்..... எதைப் பார்க்கன்னு.... 
லஞ்சுக்கு எங்கேன்னால்...   இதே வளாகத்துலே  அடுத்தாப்லெ திங்கறதுக்குன்னு ஒரு தெருவே இருக்கு !  Eat Streat  ...  ஹாஹா..... 





மேற்கூரை போட்டுருக்காங்க.   குளிர்காலத்துலே  அந்தத்  தெருவையே இதமான சூட்டில் வைக்கும் தரை அமைப்பாம். நாம் போனது சம்மர்  முடிஞ்ச ரெண்டாம் நாள் இல்லையோ.....  பளிச்ன்னு சுத்தமா, அலங்காரங்களுடன் ஏகப்பட்ட  ரெஸ்ட்டாரண்டுகள்.  இதுலே இந்திய உணவுக்கடை ரெண்டு.  கொஞ்சம் லைட்டா வேணும் என்பதால்  தாய் பார்த்துட்டு அங்கே போனோம்.  Wild Rice ன்னு பெயர். 


சாப்பாடானதும்,  டிஸ்ஸர்ட்டுக்கு  வேற கடை!  Lady Janes  Icecream parlour!  இங்கே ஐஸ்க்ரீம் சாப்பிடலைன்னா ரோட்டோருஆ வந்ததுக்கு  பொருளே இல்லையாம். சரின்னு அங்கேயும்  போனோம்.  ஆச்சு!
பொதுவா நியூஸிலாந்தில், இயற்கை அழகுதான் கொட்டிக்கிடக்கு. தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பில்லாத வகையில் நாடெங்கும் பல இடங்களில் ஏரிகள்!    சின்னதும் பெருசுமா 3,820   ஏரிகள் இருக்கறதாக் கணக்கு சொல்லுது அரசு. இதுலே  ஆகச் சின்னதுன்னு சொன்னா ரெண்டரை ஏக்கர் பரப்பளவு!  வடக்குத் தீவுக்கு  ஒன்னு, தெற்குத்தீவுக்கு ஒன்னுன்னு  ஒவ்வொரு மாவட்டத்தையே ஒதுக்கி இருக்காங்க. Lake District. 



இந்த ரோட்டோருஆவில் நல்ல பெருசாவே  20 ஏரிகள் இருக்கு!  இப்ப நாம் சாப்பிட தெருவே கூட ஏரியாண்டைதான்.   இவ்ளோ தண்ணீர் இருப்பதால்  நீர்விளையாட்டு அதிகம். ஏரியின் அளவைப் பொருத்து  விளையாட்டுகளும்,  அதற்கேற்ற அமைப்புகளுமா இது ஒரு பெரிய பிஸினஸ் இங்கே!  இளவயதினருக்கும்,  ஆர்வம் உடைய   மற்றவர்களுக்கும் இங்கெல்லாம் போனால் நேரம் போவதே தெரியாது. முதியவர்களுக்கும் சிலபல நீர்விளையாட்டுகள் இருக்குன்னாலும், நான் அதுக்கெல்லாம் லாயக்கே இல்லை என்பதால் ஏரிகளைப்போய் வேடிக்கை பார்ப்பதோடு முடிச்சுக்குவேன்.
டௌன் சென்டரில் இருந்து ஒரு பதினாலரை கிமீ தூரத்தில் இருக்கும்  Lake Okareka போய்ச் சேர்ந்தோம். நாம் உண்மையில் போக வேண்டியது வேற இடம். வழியில் இருக்கேன்னு இங்கே ஒரு ஸ்டாப்.  ஒகரேகா.... ஏதோ தெலுகு பெயர் மாதிரி இருக்குல்லே ?  இது ஒரு மவொரி பெயர்.  இதுக்கு The lake of sweet foodனு பொருள்.  எல்லாம் நல்லதண்ணி ஏரி பாருங்க....     அதனால் இதன் கரையோரப்பகுதிகளில் மவொரிகள் அந்தக் காலத்துலே சக்கரைவள்ளிக் கிழங்கு பயிர் செஞ்சுருக்காங்க.  இந்தச் சக்கரைவள்ளிக்கு லோகல் பெயர் என்ன தெரியுமோ ? கூமரா....  Kumara  !    அட!  என்ன பொருத்தம் பாருங்க !  நம்ம வள்ளியின் கணவன் குமரன் இல்லையோ ! 
டொய்டொய்னு ஒரு வகை மீன்கள்  அந்தக் காலத்துலே இருந்துருக்கு. மவொரிகளின் முக்கிய உணவு.  வெள்ளைக்காரன் வந்தாட்டு, வெவ்வேற வகை மீன்களை இங்கே வளரவிட்டுட்டதால்...   இப்ப ட்ரௌட்  & சால்மன்  மீன்கள்தான் நாடு முழுக்க !

இப்படி ஒரு ஏரி இருக்கறதை 1849 லே  இந்த வழியாப்போன ப்ரிட்டிஷ்காரர்  Sir George Grey  பார்த்துட்டு இதைப்பத்தித் தன் பயணக்குறிப்புலே எழுதி வச்சுருக்கார். அடுத்த ரெண்டாம் வருஷம், இதைப் புத்தகமா அச்சிட்டு, கூடவே  மவொரி மொழியிலும் மொழிபெயர்த்துருக்காங்க !   அவ்ளோதான்.... இதன் புகழ் பரவக்கேக்கணுமா? 

அப்ப இப்படிக் கடல்பயணம், தரைப்பயணம் போனவங்கெல்லாம்  குறிப்புகள் எழுதி வச்சதும், இடங்களை வரைஞ்சு வச்சதும் எவ்ளோ நல்ல விஷயம் இல்லே ?  இந்த வகையில் பார்த்தால்  இப்ப நான் மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதிக்கிட்டு இருக்கேனே...   அதுக்கெல்லாம் இவுங்கதானே முன்னோடிகள் ! இல்லையோ !   ப்ரிட்டிஷ்காரன் இங்கே  வந்து, நாட்டைப்புடிச்சது எல்லாம் பழங்கதை. அது 1840 லே !  
இங்கத்துக்கணக்கில்   இது அதிகமில்லையாம்...   சின்ன ஏரியாம்.  மூணரை சதுர கிலோ மீட்டர் பரப்பு !  ஜஸ்ட் 865 ஏக்கர்தானாம் ! 

அடப்பாவிகளா ?  இதையா சின்னதுன்றீங்க ?  இதுவே சின்னதுன்னா பெருசு எப்படி இருக்கும் ? 


சுத்திவர மலைத்தொடர்களும் காடுகளுமா இருக்கு !   கரைப்பக்கம் அலையில்லாத குளம். அதுலே நீந்தி விளையாடும் வாத்துக்கூட்டம் ! 'இங்கெ என்னடா பண்ணறீங்க?' ன்னு கேட்கும் ஸீகல்ஸ்....


சுட்டி வேலை செய்யுதான்னு தெரியலை.....   புதுசா எல்லாத்தையும் மாத்திவச்சுட்டு....    ப்ச்.... எந்தொரு சல்யம்  :-(  

 இதமான காற்று & சூழ்நிலை.... கிளம்பவே மனசு வரலை..... ஆனால் நாம் பார்க்க வந்தது இந்த இடமில்லையே....   இது இடையில் அகப்பட்ட போனஸ் ஆச்சே !

சரி வாங்க....    நாம் போக நினைச்ச இடத்துக்குப் போகலாம்.....


தொடரும்....  :-)


5 comments:

said...

நல்லா இருக்கு. இது சஹானாவிலே வரலை போலிருக்கே! அங்கே மூன்றே மூன்றோடு முடிச்சுட்டீங்களோ?

said...

ஆஹா... படங்கள் வெகு அழகு.

தகவல்களும் சிறப்பாக இருகின்றன. ஏரி - எம்மாம் பெரிசு!

said...

வாங்க கீதா.

நம்மது எப்பவுமே நீண்ட தொடர் என்பதால் , சஹானாவிடம் எத்தனை பகுதி வேணுமுன்னதுக்கு மூணு இல்லை நாலுன்னாங்க. அவுங்க வாரம் ஒன்னுன்னு போடறதாகவும் சொன்னாங்க. அதுதான் மூணோடு அங்கே முடிச்சேன். புதன் அவுங்க வெளியிடும்வரை காத்திருந்து, அதை வெள்ளியன்று நம்ம தளத்தில் போட்டேன். மூணு முடிஞ்சதும், நம்ம தளத்தில் வழக்கமா வர்றதைப்போல வாரம் மூணு பதிவுகள்.

இதோ இன்றைக்கு பகுதி 6 வெளியிடணும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,


எல்லா ஏரிகளையும் நல்லபடி வச்சுருக்காங்க என்பதே தனிச் சிறப்பு !

தொடர்வருகைக்கு நன்றி !

said...

ஏரியும் மலையும் வா வா! என்கிறது.