Thursday, September 24, 2020

பதினாறு முடிஞ்சு இன்றைக்குப் பதினேழு தொடங்கி இருக்கு!

பொறந்தநாட்கள் கொண்டாட்டம் !

எண்ணிரெண்டு பதினாறு வயது முடிஞ்சு இன்று முதல் பதினேழு ஆரம்பம், நம்ம துளசிதளத்துக்கு !

நம்ம கோபால் பொறந்தநாளும் இன்றைக்குத்தான்.  ரெண்டு நாட்களையும்  சேர்த்தே ஒரு முடிச்சுப் போட்டு வச்சுருக்கேன்.... மறந்துடாமல் இருக்கத்தான் :-)
மத்தபடி இன்றைக்கு வேற விசேஷம் ஒன்னுமில்லை......
இந்த  வருஷம் கொரோனாத் திருவிழா நடந்துக்கிட்டே இருப்பதால்  மனசில் ஒரு கலக்கம். அதனால் எழுத்தில்  கொஞ்சம் சுணக்கம்......  118 பதிவுகள்தான்  எழுத முடிஞ்சது...   இனி  இதுக்குத் தடுப்பூசி கண்டு பிடிக்கும் வரை வெளிநாட்டுப் பயணம்  அறவே இல்லை என்று ஆகிக்கிடக்கு......  

சரி.... பெருமாள் விட்ட வழின்னு  இருக்கேன். அதுக்காக  விசேஷத்தைக் கொண்டாடாம இருக்க முடியுதா?

ஸ்வாமிப் பிரஸாதமாக  கால் கப்  ரவையில் ஒரு கேஸரி செஞ்சாச்.  
நேற்றைக்கு வாங்கிவந்த  பூச்செடிகளை, நம் வீட்டுத் தொட்டிகளில் நட்டு வைச்சோம்.
பகல் சாப்பாடு , இங்கிருக்கும் பிக்கானீர்வாலா  ரெஸ்ட்டாரண்டில். முழுக்க முழுக்க சைவ சாப்பாடு இங்கே  கிடைக்குது!

நம்மவருக்கு, ஒரு தாலி.  எனக்கொரு ச்சோளே பட்டூரா.  இனிப்புக்கு  ஒரு ரஸ்மலாய்.

சாயங்காலம்  நம்ம ஹரே க்ருஷ்ணா கோவில் ! தரிசனம் ஆச்சு !



எல்லாம் போதும்  என்ற மனம் வந்துருக்கு! 
வழக்கம் போல உங்க அன்பும் ஆதரவும் என்றும் இருக்கும் என்ற  அதீத நம்பிக்கையில் வாசக நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும் ! 


நல்ல நாளும் அதுவுமா நம்ம சிங்கைச்சீனுவின் தரிசனம்!   ஸ்பெஷல் தரிசனமுன்னு  சொல்லிக்கலாம். அனுப்பித்தந்த  நம்ம கோவியாருக்கு Kannan Govindaraju மனம் நிறைந்த நன்றி !


என்றும் அன்புடன்,
துளசி 


19 comments:

Nalini Gopal said...

Two Birthdays ! Two Celebrations!! Wishing him a Happy and Healthy Life ! Many more years for the blog writing too...

Nalini Gopal said...

Two Birthdays ! Two Celebrations!! Wishing him a Happy and Healthy Life ! Many more years for the blog writing too...

Jayakumar Chandrasekaran said...

உங்கள் இரண்டு பேரையும்  படம் எடுத்தது  யாரு?
செலஃபீயாக தோன்றவில்லை.

விஸ்வநாத் said...

அருமை நன்றி
ரஸ்மலாய் - வாவ்

Unknown said...

Happy sixTEEN! so back to teen age......, keep writing!!
Rajan

நெல்லைத்தமிழன் said...

கோபால் சாருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள். உங்கள் மகளோடு அன்று கொண்டாட்டம் இருந்திருக்கும் என நினைத்தேன்.

பிகானீர்வாலா... எனக்கு மிகவும் பிடித்த கடை. தில்லி மற்றும் துபாயில் சாப்பிட்டிருக்கிறேன்.

என் கண்ணுக்கு மட்டும்தான் கேசரில வெள்ளைச் சீனி உபயோகிக்கலை என்று தோணுதா?

துளசி கோபால் said...

வாங்க நளினி !

அன்புக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி !

துளசி கோபால் said...

வாங்க ஜயகுமார்,

செல்ஃபீதான். செல்ஃபீ ஸ்டிக் வித் ரிமோட் கன்ட்ரோல் இருக்கு :-)

துளசி கோபால் said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி. கிளம்பி வரும்போது பிகானிர்வாலா ரெஸ்ட்டாரண்ட் பணியாளர் மினி ரஸ்மலாய் ஆறு இருக்கும் பார்ஸலைக் கொண்டு வந்து கொடுத்தார். அவுங்க பாஸ் கொடுக்கச் சொன்னாராம். ஆஃபீஸுக்குள்ளே இருந்து CCTV யில் கவனிச்சுருப்பார்போல !

நம்ம நண்பர்கள் இருவர் இந்த ஃப்ரான்சைஸ் வாங்கி நடத்தறாங்க. இன்றைக்கு வீட்டுலே டிஸ்ஸர்ட் இதுதான் !

துளசி கோபால் said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நேற்று வேலைநாள் என்பதால் சாயங்காலம் மகள் வந்துட்டுப்போனாள். அப்பாவுக்கு Wireless இயர்ஃபோன் கிஃப்ட்!

நம்ம வீட்டில் பல வருஷங்களாகவே ஒயிட் ஷுகரை விட்டாச்சு. Raw Sugar தான். சில சமயம் பனை, தென்னை வெல்லம்.

வாழ்த்துகளுக்கு நன்றி !

துளசி கோபால் said...

வாங்க ராஜன் .

டீன் டீன் டன் :-)

கிரி said...

வாழ்த்துகள் மேடம் :-) . தொடர்ச்சியாக எழுதி வருவது மகிழ்ச்சி.

சாருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் :-) .

r.ragupathy said...

தங்கள் வலைத்தளம் மேலும் சிறப்பு பெற வாழ்த்துகள்! கோபால் ஐயா அவர்களுக்கு பிறந்த நாள் பரிசு 🎁 😀

வெங்கட் நாகராஜ் said...

தளத்திற்கும், தலைவருக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்....

மாதேவி said...

திரு.கோபால் அவர்களுக்கு வாழ்த்துகள்.

இரட்டிப்பு பிறந்தநாள் கொண்டாடிய உங்களுக்கும் வாழ்த்துகள் .

துளசிதளம் மென்மேலும் சிறப்பு பெறட்டும்.

துளசி கோபால் said...

வாங்க கிரி,

வாழ்த்துகளுக்கு நன்றி ! எப்படி இருக்கீங்க ? ரொம்ப நாள் கழிச்சு உங்களை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி !

முந்தியெல்லாம் சிங்கைன்னதும் வலைஞர்கள் ஒன்று கூடல் எவ்ளோ இணக்கமா இருந்தது..... காலம் போற போக்கில் இனி.... ஹூம்.....

துளசி கோபால் said...

வாங்க ரகுபதி ஐயா,

உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றி !

துளசி கோபால் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,


உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றி !

துளசி கோபால் said...

வாங்க மாதேவி,

ரெட்டிப்புன்னாவே மகிழ்ச்சி டபுள் ஆகிப்போச்சே !

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா !