Wednesday, July 02, 2014

நக அலங்காரம் கண்டேன்!

நகங்களில் கறுப்புச்சாயம் அடிச்சுக்கிட்டவங்க மேல்குடி மக்கள். அப்ப கீழ் குடி மக்களுக்கு  என்ன நிறம்?  இருக்கவே இருக்கு பச்சை.  இது ஆண்களுக்கான  ஸ்டைலுதான் அந்தக்காலத்துலே!  போன யுகக்கணக்கில்  இது  பாபிலோனியா  தேசம்.




ஏசு நாதரின் பிறப்புக்கு அஞ்சாயிரம் வருசம் இருக்கச்சொல்ல, பண்டைய கால எகிப்து நாட்டுப் பெண்கள்  தங்கள் மேல்குடி அடையாளமா  கைவிரல்களில்  மூலிகைச்சாறு பயன்படுத்தி  அழகா வச்சுக்குவாங்களாம்.  நல்லா செக்கச்செவேலுன்னு  ஒரு நிறம். எல்லாம்  உங்களுக்கு(ம்) தெரிஞ்ச மூலிகைதான். மருதானி இலை!  கைக்கும் காலுக்குமா இதை வச்சு அலங்கரிச்சுக்கிட்டது  ராணி வம்சம் மட்டுமே!  சாதாரணக் குடிமக்கள்  மறந்தும்கூட இதே நிறத்தைப் பயன்படுத்தக் கூடாது, ஆமாம்.



என்னுடைய  தோழி ஒருமுறை  நம்ம 'கோலம் கடையில்' அரைச்ச மஞ்சள் நிறத்தில் இருந்த பட்டுப் பொடவையை  ரொம்பவே ஆசையா வாங்கிக்கிட்டாங்க. கடைக்கு இதை நான் வாங்கும்போதே...  யார் இதை வாங்கப்போறாங்கன்னு நினைச்சாலும்  கலர்ஸ் வகைகளில்  ஒன்னா இருக்கட்டுமேன்னு தான்   எடுத்தேன்.  என்ன மஞ்சள் மீது இத்தனை ஆசைன்னதுக்கு, எங்க நாட்டில் இது ராயல் ஃபேமிலிக்கு மட்டுமே உண்டான நிறம். அங்கே பொதுமக்கள் இந்த நிறம் கட்ட  அனுமதி இல்லை.  அதான் நியூஸியிலே கட்டிக்கலாமுன்னு  ஆசை என்றார்கள். 




சீனதேசத்திலும்  Zhou Dynasty  காலங்களில்  தங்க நிறமும், வெள்ளி நிறமும் அரசகுடும்பத்துக்கு மட்டுமேயான நிறங்கள். எல்லா அலங்காரமும் இதை வச்சுத்தான்!  பலவருசங்கள் கழிச்சு நிறத்தை மாத்திக்கிட்டாங்க,  கருப்பும் சிகப்புமா!



அப்புறம்  Ming Dynasty  ஆண்ட காலக்கட்டங்களில் (  600 B C)  தேன்மெழுகு, முட்டையின் வெள்ளைக்கரு,  மாட்டுக்குளம்பைக் காய்ச்சி எடுத்த  பசை (ஜெலட்டின்)  மரப்பிசின்,  காய்கறிகளில் இருந்து எடுத்த  இயற்கை நிறங்கள் இப்படி எல்லாத்தையும் கலந்து நகப்பாலிஷ் தயாரிச்சாங்களாம்.  அங்கேயும் விரல்நகத்துலே நிறங்கள், மேட்டுக்குடியினருக்கான அடையாளம்தான். சாதாரண மக்கள்ஸ், கையிலே அழகு பண்ணிக்கிட்டு உக்கார்ந்தா , வயித்துக்கு பூவ்வா எப்படி கிடைக்கும்?  ஏழைகளுக்குக் கடினமான    உடல் உழைப்புதான் பிரதானம்  அப்பவும்:(




உலகம் பூராவும் பேஷனைப் பத்திய விழிப்புணர்வு (??!!)  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே ஆரம்பிச்சதுன்னும்,   மக்கள்ஸ் ஆர்வமா   அலங்காரங்களில் நவநாகரிங்களைப் புகுத்திக்க  ஆரம்பிச்சாங்க.  அலங்காரச் சாமான்கள் தயாரிக்கும் நிறுவனங்கள்  வேகத்தோடு செயல்பட ஆரம்பிச்சு   கொழிச்சுக்கிட்டு இருக்குதுகள்.   எடுத்துக்காட்டா   நெயில் பாலிஷ் மட்டும்  ரெண்டு டாலர் முதல் 100 டாலர் வரை பல ரேஞ்சுகளில் இருக்கு.    பெரிய பெரிய மால்களில் அலங்காரச் சாமான்கள் விற்கும் கடைகளிலோ இல்லை  ஏர்ப்போர்ட் ட்யூட்டி ஃப்ரீ கடைகளிலோ  லேசா ஒரு நோட்டம் விட்டுப் பாருங்க. திகைப்பூண்டை மிதிச்சாப்ல தான்!!!!  ஆரம்ப விலையே அம்பதுன்னு  இருக்கும்:(



இன்றைய  சமுதாயத்தில்  நவநாகரிக யுவதிகள்  மேக்கப் சாமான்களுக்குச் செலவளிக்க அஞ்சுவதே இல்லை!  எல்லா  நகரங்களிலும் தலை அலங்காரத்துக்கு முடிவெட்டிக்கும் வகையில் உள்ள ஸலூன்களுக்கு நிகரா   கை கால் நகங்களை ஒழுங்குபடுத்தி, சீரா வெட்டி  நகப்பூச்சு போட்டு  பாலிஷ் செய்யும்  கடைகளும் வந்தாச்சு. இது மட்டுமில்லாம  இந்த வேலைக்கான சாமக்ரியைகள்  விற்பனையும்  சேர்த்தால்  எல்லாம் மில்லியன் டாலர் பிஸினெஸ் வகைகளே!



எங்க பக்கங்களில் சீனப்பெண்கள் இந்த வகை வியாபாரங்களை நடத்தி ஜமாய்ச்சுக்கிட்டு இருக்காங்க.  கைகளுக்கு  மட்டும் அலங்காரமுன்னா 45 டாலராம்!  காலும் கையுமுன்னா  75. நல்ல சின்ன  ஸ்பா  வச்சு இளஞ்சூட்டில்  நகங்களை ஊறவச்சு,மென்மையாக்கி சுத்தம் செய்து  அழகா வெட்டிவிட்டு,  துடைச்சு,  க்ரீம்களைப் பயன்படுத்திக் கைகளுக்கு மஸாஜ் செஞ்சு  நமக்கு விருப்பமான டிஸைன்களிலும் நிறங்களிலும் பாலிஷ் போட்டுன்னு சேவை நீண்டுக்கிட்டே போகுது.  அந்நேரம் நாமும்  ராயல்தான் கேட்டோ:-)




என்னதான்   ரொம்ப ரிலாக்ஸா  அலங்காரம் செஞ்சுக்கிட்டா நல்லாதான் இருக்குன்னாலும்  என்னைப் போன்றவர்களுக்கு  'ஐயோ காசை தண்டம் செய்யறாங்களேன்னு அப்பப்பத் தோணத்தான் செய்யுது.   இதை  சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம்  மகளிடம்  சொல்லிப் புலம்புவேன். இதுக்கெல்லாம் காசை அனாவசியமாச்  செலவு செய்யாதேன்னு  மறைமுகமா சொல்றேன்னு எனக்கு ஒரு நம்பிக்கை.   நல்லாவே ஒர்க்கவுட்  ஆகி இருக்கு.

  DIY (Do It yourself ) முறையில்   இப்பெல்லாம்  அருமையாக  நக அலங்காரம் செஞ்சுக்கறாள். ஒவ்வொரு வாரமும் வெவ்வேற டிஸைனாம். இதுலே சீஸன் (எல்லாம் ஸ்போர்ட்ஸ் சீஸன்தான்)  அனுசரிச்சு அதுக்குத் தகுந்தாப்லெ!
அதான் தனி ஆல்பம்போடவேண்டியதாப் போச்சு. நான் பெற்ற இன்பம் வகையில் சிலபல வகைகளை பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.



நல்லா(தான்)  இருக்கு,இல்லே !!!

அம்மாவுக்கு(ம்) ஒரு நாள்  போட்டுவிடேன்னு மகளிடம்  சொன்னார் கோபால்.
"அப்ப சமையல்,  மற்ற வேலைகள் எல்லாமே  இனி  நீங்களா?  "

கப்சுப்:-))))))))))))))




27 comments:

said...

இங்கும் நிறைய பேர் செய்றாங்க ..ஒரு பெண்மணி நகம் டிசைன் போடற கடை ஆரம்பிச்சு ரெண்டு வருஷத்தில் புது வீட்டையே வாங்கிட்டார் :)
இங்கே சீசனுக்கு ஏற்றமாதிரி போடுவாங்க ..ஈஸ்டருக்கு முயல் ,கிறிஸ்மசுக்கு சாண்டா .spring வண்ண மலர்கள் ,.
எனக்கு ஆசைதான் ஆனா அந்த நெயில் பாலிஷ் பாட்டிலை திறந்ததும் நான் மயங்கி விழுந்துடுவேன் :) அந்த ஸ்மெல் எனக்கு ஆகாது ..

btw ..நகத்தில் மெட்டல் செயின் போட்ட டிசைன் கொஞ்சம் பகீர்னு இருக்கு !!!

said...

நெயில் அலங்காரம்னு சொன்னதும் நினைவில் வந்தது உங்க மகள் தான். எத்தனை சீரா வச்சுக்கு வாங்க இல்லை துளசி. இவ்வளவ்யு புராணம் இந்த நகங்களுக்கு மட்டுமா. இன்னும் தலையைப் பார்க்கப் போனால் என்ன வருமோ. நல்ல ஆராய்ச்சி செய்திருக்கீங்க. நகங்களின் மாடல்களும் அழகுதான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இங்க 30 டாலர்ஸ் மேனிக்யூர் அண்ட் பெடிக்யூர்.

said...

நெயில் அலங்காரம்னு சொன்னதும் நினைவில் வந்தது உங்க மகள் தான். எத்தனை சீரா வச்சுக்கு வாங்க இல்லை துளசி. இவ்வளவ்யு புராணம் இந்த நகங்களுக்கு மட்டுமா. இன்னும் தலையைப் பார்க்கப் போனால் என்ன வருமோ. நல்ல ஆராய்ச்சி செய்திருக்கீங்க. நகங்களின் மாடல்களும் அழகுதான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இங்க 30 டாலர்ஸ் மேனிக்யூர் அண்ட் பெடிக்யூர்.

said...

நெயில் அலங்காரம்னு சொன்னதும் நினைவில் வந்தது உங்க மகள் தான். எத்தனை சீரா வச்சுக்கு வாங்க இல்லை துளசி. இவ்வளவ்யு புராணம் இந்த நகங்களுக்கு மட்டுமா. இன்னும் தலையைப் பார்க்கப் போனால் என்ன வருமோ. நல்ல ஆராய்ச்சி செய்திருக்கீங்க. நகங்களின் மாடல்களும் அழகுதான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இங்க 30 டாலர்ஸ் மேனிக்யூர் அண்ட் பெடிக்யூர்.

said...

//நல்லா(தான்) இருக்கு,இல்லே !!!//
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு .பொறுமையா போட்ட மகளுக்கு பாராட்டுக்கள் .!!!

said...

சென்ற வாரம் நண்பர் ஒருவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் பெண்ணும், வேறொரு நண்பரின் இரு பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு கை நகங்களுக்கு அலங்காரம் செய்து கொண்டார்கள்......

போறாத குறைக்கு என்னிடமும் ”அங்கிள், கை காமிங்க நெயில் பாலிஷ் போட்டு விடறேன்!” என்று சொல்ல அங்கிருந்து சிரித்தபடி நகர்ந்தேன்!

said...


சிறந்த பகிர்வு

said...

Nails azhaga iruku.she is a pro.aduthu oru tutorial video podunga eppadi panrathunu ;-)

said...

ஒரு விளையாட்டு வீராங்கனைக்குள் இப்படியொரு கலையுணர்வா? பொறுமையும் கற்பனையும் இருந்தால்தான் இதெல்லாம் சாத்தியம். மகளுக்கு இனிய பாராட்டுகள்.

அதென்ன, பிங்க்கி மட்டும் லோலாக்கு போட்டு பிரமாதமா இருக்கு?

எனக்கும் ஏஞ்சலின் மாதிரிதான் நெயில்பாலிஷ் பாட்டிலைத் திறந்தாலே மூச்சுமுட்டும். எனக்கும் என் மகளுக்கும் போராட்டம் நடக்கும் நேரம் அதுதான். :)

said...

நெயில் பாலிஷ் மோகத்தில் அனைவரும் மூழ்கினாலும் இதில் உள்ள ஆபத்துக்களைக் குறித்து எத்தனை பேர் அறிந்திருக்கின்றனர் என்பது தெரியவில்லை. :( உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் இந்த நெயில் பாலிஷ் எல்லாம். ஏஞ்சலின் சொல்வது போல் அந்த வாசனையே எனக்கும் ஆகாது. :( ஆனால் உபயோகிக்காததுக்கு அது மட்டும் காரணம் அல்ல. இதில் உள்ள ரசாயனப் பொருட்களும் ஒரு காரணம். இதைக் குறித்த விரிவான கட்டுரை ஒன்று பல மாதங்கள் முன்னர் படித்தேன். எதிலேனு நினைவில் இல்லை.

said...

என் பேத்தியும் நிறைய வாங்கி போய் இருக்கிறாள். (கயல்மகள்)

சாரின் அண்ணன் பேத்தியும் வித விதமாய் போட்டு விடுவாள் (குட்டிப்பெண்)

எல்லா பாட்டிக்களுக்கும் போட்டே ஆவேன் என்று பிடிவாதம் பிடித்ததில் நான் மட்டும் என் விரல்களை நீட்டினேன் பேத்தியின் மகிழ்ச்சிக்காக.

said...

அழகு.
எனதுமகளும் தானே போட்டுக் கொள்கிறாள். :)

said...

நெயில் பாலீஷின் வரலாறு சூப்பரா இருக்கு. அதை விட நெயில் அலங்காரங்கள் அருமையா இருந்தது.

எனக்கு இந்த நெயில் பாலீஷ், போட்டுக்கற பழக்கமேயில்லை. ரோஷ்ணி இப்போ தான் ஆரம்பித்திருக்கிறாள்....:)) சில சமயம் போட்டு விடுகிறேன் என்று அடம்பிடிப்பாள்....:))

said...

நகத்துல வைக்கிற கலர்னா மருதாணிதான் மொதல்ல தோணுது. சின்னவயசுல நகைக்கடைல சுத்திக் குடுக்குற ரோஸ்தாளுக்கு அலையோ அலைனு அலைவோம். கெடச்சா அத நக அளவுக்குக் கிழிச்சு தண்ணி தொட்டு நகத்துல ஒட்டிக்குவோம். நகம் ரோஸ் கலர்ல மாறும். என்ன.. அன்னைக்கே ரெண்டு வாட்டி கை கழுவுனதும் அழிஞ்சிரும். பசங்களுக்கு அவ்வளவுதான் நெயில்பாலிஷ்.

இப்ப டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவுடு சோ மச் போல :)

said...

வாங்க ஏஞ்சலீன்.

நல்ல காசுதான்ப்பா.

நெய்ல் ஜுவல்லரின்னு வகைவகையாக் கிடைக்குது.

நல்லவேளை ஒன்னேஒன்னு போட்டுருக்காள் என்று சந்தோஷப்பட்டுக்கறேன்:-)

said...

வாங்க வல்லி.

ஒரு கேபின்பேக் அளவு நகப்பூச்சு வகைகள். சராசரி அஞ்சு டாலர்னு கணக்குப்போட்டால்......... மயக்கம்தான் வருது.

ஆனால்.... மூச் விட முடியுமா? தனிநபர் சுதந்திரம்:-)

said...

வாங்க சசி கலா.

பொறுமைன்னால்........... உண்மைக்குமே என்னைவிடப் பொறுமை கூடுதல்தான் மகளுக்கு!

said...

வாங்க சசி கலா.

பொறுமைன்னால்........... உண்மைக்குமே என்னைவிடப் பொறுமை கூடுதல்தான் மகளுக்கு!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இளம் பெண்கள் உலகில் இதுக்குன்னு ஒரு புகழ் இருக்கே!

ஆனால் தன்நலமா இல்லாம, உங்களுக்கும் போட்டுவிடறேன்னதைப் பாராட்டத்தான் வேணும்!

said...

வானக ஜீவலிங்கம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க ரம்யா.

பேசாம ஒரு நெய்ல் பார்லர் வச்சுக்கொடுத்துடப் போறேன். வேலை என்று ஆனால்.... சுவாரசியம் போயிருமோ என்னவோ:-)

said...

வாங்க கீத மஞ்சரி.

விளையாட்டு மட்டுமா...... மகள் ஒரு பாட்டுக்காரியும் கூட. வொர்ல்ட் விமன்ஸ் கொயரில் பாடுகிறாள்.

நல்ல பிஸி லைஃப். ஆனாலும் இதுக்குன்னு நேரம் செலவளிக்க முடியுதான்னா... சிரிக்கிறாள்:-)

அதான் வேணுமெங்கில் பலா, வேரிலேயும் காய்க்கும் !!!!

சிலருக்கு அந்த மணம் மூச்சு முட்டும்தான். எனக்கு டீஸல் மணம், வயித்தைப்பிரட்டும்:(

said...

வாங்க கீதா.

உண்மைதான். அதுக்குத்தான் அப்பப்ப நகம் சுவாசிக்க, சிலநாள் இடைவெளி கொடுன்னு தலையா அடிச்சுக்குவேன்.

என் பிடுங்கல் தாளாமல், ஒரு சிலமணி நேரம் அலங்காரப்பூச்சு இல்லாமல் இருக்கும்.

said...

வாங்க கோமதி அரசு.

அவுங்க மகிழ்ச்சியில் நம்மையும் கலந்துக்கச் சொல்லிக் கேட்பது கூட நமக்கு இன்னும் கூடுதல் மகிழ்ச்சிதான்!

என்ன நிறம் போட்டு விட்டாங்க?

said...

வாங்க மாதேவி.

வீட்டுக்கு வீடு வாசப்படி:-)

நான் சின்னவளா இருக்கும்போது , சித்தப்பா வீட்டுக்குப்போனால் கட்டாயம் விரல்களுக்குப் பாலீஷ் கிடைக்கும். சித்தி மகளுக்கு அவுங்க வீட்டில் வாங்கித் தருவாங்க. எங்க வீட்டில்...... மூச்:(

ஆனால் அப்போ வெறும் சிகப்பு நிறம் மட்டும்தான்:(

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

ஆஹா..... ஆஹா....

எப்பவாவது விரலை நீட்டுங்க, ரோஷ்ணியிடம்:-)

இதுவும் ஒரு மகிழ்ச்சிதான்ப்பா.

said...

வாங்க ஜிரா.

மருதாணி காலம் போயே போச். இப்பெல்லாம் கல்யாணச்சடங்கில் ஒன்றாகத்தான் ஆகிக்கிடக்கு.

வட இந்திய ஊர்களில் மெஹெந்தி போட்டுவிடுதல் கலாச்சாரம் சார்ந்தது. நல்லவேளை மதங்கள் இதுலே இடைபடலை:-)