Friday, July 11, 2014

பசுமை வீடும் வெள்ளைப் பிசாசும்!

ஒரு அஞ்சாறு வருசமாத் தொணப்பி எடுத்து  ஒரு பசுமையான பச்சை  வீடு வாங்கினேன்.   இது இல்லேன்னா இனி  (எனக்கு ) வாழ்க்கையே இல்லைன்னு கொஞ்சூண்டு (!) பயமுறுத்தலும்  இருந்துச்சுதான்:-)

ட்ரேட் மீ   (Trade me )என்ற  நியூஸி தளத்தில் போய்த் தேடிப் பார்த்ததில், உள்ளூர் கார்டன்  சென்ட்டர்களில் போட்டுருக்கும் விலையில் பாதிதான் இருந்துச்சு. (சின்னதா  பழைய சாமான்களை விற்க, வாங்கன்னு ஆரம்பிச்ச இந்த ட்ரேட் மீ இப்ப  அசுர வளர்ச்சியடைஞ்சு,   புதுசா எது வாங்கணுமுன்னாலும்  அங்கெ ஒரு எட்டுப்போய் ஒரு  பார்வை பார்த்துக்கிடலாமென்ற அளவுக்குப் போயிருக்கு!  குடி இருக்க வீடு வேணுமுன்னாலும், இல்லெ வீடே  வாங்கிக்கலாமுன்னாலும் ட்ரேட் மீ  பக்கம் ஒரு பார்வை பார்த்துக்கிடறது நல்லது:-)






நாடு முழுசுக்கும்  அங்கே வியாபாரம்  என்பதால் உள்ளூர் விற்பனை இருக்கான்னு  தேடுனதில், நம்மூரில்  ஒரு இடத்தில் விற்பனை செய்யறாங்கன்னு  பார்த்து வச்சு அங்கே ஒரு ஃபோன் போட்டோம்.  நமக்கு  சனி ஞாயிறுதான்  எங்கேயும் போகமுடியும் என்பதால்  வீக் எண்ட் கடை இருக்கான்னு கேட்டு வச்சுக்கிட்டால் நல்லது.  அதுமட்டுமில்லாம இந்த இடம் வேற நம்மூட்டில் இருந்து ஒரு 40 கிமீ தூரத்தில் இருக்கு.

நாம்   இந்த சனி வரலாமான்னா,  அடுத்த சனி வாங்க. இந்த சனி ஒரு கல்யாணத்துக்குப் போறோமுன்னாங்க.  எங்க பக்கங்களில் வருசத்துக்கு  26 வார இறுதிகள்தான் கல்யாணங்களுக்கு.  வசந்த காலம், கோடை காலம்  முடிஞ்சா  கல்யாண சீஸன் ஓவர்.  ஆனால்  இப்ப  மாறிவரும் உலகச்சூழல்  எல்லாத்தையும் மாத்திருதோ என்னமோ?  இவுங்க போற கல்யாணம்  ஏப்ரலா இருக்கே!  போகட்டும். மணமக்கள் யாரா இருந்தாலும் நல்லா இருக்கட்டும்!








சொன்னாப்டி மறுவாரம் போனோம்.  கண்ட்ரி சைடு. வீடுகள் எல்லாம்  தோட்டம் துறவுன்னு பெரிய பெரிய  செக்‌ஷனில் இருக்கும் ஃபார்ம் ஹௌஸ்கள்.   இதுக்குள்ளேயே பெரிய வேர்ஹௌஸ் ஷெட்  போட்டு அங்கே  சாம்பிளுக்கு ஒரு சின்ன பசுமை வீடு  செட்டப். இன்னும்  விவசாயம், தோட்டம் சம்பந்தமான   ஏகப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு இருக்கு.   ஒவ்வொன்னுக்கும் ஒரு சாம்பிள்  டிஸ்ப்ளே.   தயாரிப்பாளர்களிடமிருந்து  நேரடியா பொருட்கள் வாங்கறாங்க.   மக்கள் போய் பார்த்து, தங்களுக்கு வேணுமுன்னு நினைச்சால்  ஆர்டர்  செஞ்சுட்டு  வந்துடலாம்.  ஸ்டாக் இருந்தால் அப்பவே கிடைச்சுரும்.  இல்லேன்னா ஒரு வாரத்தில்  நமக்கு அனுப்பி வச்சுடறாங்க.

டிஸ்ப்ளேயில் இருக்கும் வீடு ரொம்பச் சின்னது.  நானும் கோபாலும் நிக்கலாம். செடிகளுக்கு இடம்?  கிடைக்கும் வீடுகளில்  பெருசா இருக்கும் ஒன்னுக்கு அடி போட்டேன்.   ப்ளான் ஒர்க்கவுட் ஆச்சு, ஒரு சைஸ் சின்னதா !  எப்பவும்  கொஞ்சம் அதிகமாக் கேட்டாதான்,  கொஞ்சம் குறைச்சுக்கிட்டு சாங்ஷன் பண்ணுவாங்க இல்லையா?  இருவது  பவுன்  ஒட்டியாணம், கேட்டால் பதினைச்சு பவுனில் கிடைக்கலாம்:-)


நமக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்கு போல. நம்ம 'வீடு' ஸ்டாக்கில்  இருக்கு.  விற்பனையாளர் ஜோனதானிடம், (இவர் முதலாளியின் மகன்) கொஞ்சூண்டு பேரம் பேசி,  ஃப்ரீ டெலிவரி கிடைச்சது.  இல்லேன்னா நாம் ட்ரெய்லர் வாடகைக்கு எடுத்து  நாப்பது, நாப்பது எம்பது கிமீ   ஓட்டிப்போய்  சாமான்களை ஏத்தி இறக்கி படாத பாடு பட்டுருப்போம். இதுலே நான் வேற பத்திரம் பார்த்து ஓட்டுங்கன்னு  எச்சரிக்கை மணி அடிச்சுக்கிட்டே இவர் பிபியை எகிற வச்சுருப்பேன். வேணுமா இதெல்லாம்?

புழக்கடையில்  எந்த இடத்தில்  வீடு இருந்தா நல்லதுன்னு  பேசி(?) முடிவு செஞ்சோம்.  அடுக்களை ஜன்னலில்  பார்த்தால்  கண்ணுக்குத் தெரியணும் என்பது ஒரே கண்டிஷன்:-)தாமரைக்குளத்தை ஒட்டி மேற்கு பார்த்த வாசலோடு இருக்கட்டும்.  8.2  x 14.1  அடி அளவு.   6 mm Twin-wall UV protected  polycarbonate sheets  and Powder Coated Galvanized steel base with aluminium frame.  Double sliding door and two adjustable windows.

திங்கக்கிழமை சரக்கு  அனுப்பிட்டேன், வருதுன்னு  ஜோனதான்  ஃபோன் செஞ்சார்.  வீட்டுக்கு வந்து  இறக்கி கராஜ்லே வச்சுட்டுப் போயிட்டார்  டெலிவரி கம்பெனி ஆள். அப்புறம் பார்க்கிறேன். பாக்ஸ் நம்பர் 2ன்னு போட்டுருக்கு. அப்ப நம்பர் 1?  ஜோனதானைக் கூப்பிட்டுக் கேட்டால்   வந்தது சின்ன ட்ரக். நீளம் போதாது. அதான் சின்ன  பொட்டியை மட்டும் அனுப்பினேன். நாளைக்கு  பெரிய பொட்டி  வந்துருமுன்னு சொல்றார்.  விளங்கிரும், இப்படி யாவாரம் பண்ணினால்!   ரெண்டு பொட்டிகளையும் பெரிய ட்ரக்கில் வச்சு அனுப்பினா ஒரே  செலவா இருக்குமுல்லே?  இளவயசு ஆட்களுக்கு  சிக்கனம் புரிபடலை பாருங்களேன்:(  

( பெரிய பூனைக்கு பெரிய வாசல். சின்னப் பூனைக்கு சின்ன வாசல்)


 மறுநாள் பெரிய வண்டியில் வந்தது பொட்டி.  ஓட்டிக்கிட்டு வந்த பெரியவர்,  தனியா தூக்க முடியாது. யாராவது வீட்டுலே உதவிக்கு இருக்காங்களான்னார்.  நம்ம ரஜ்ஜூ இதுக்கெல்லாம் உதவ மாட்டானே!  அப்புறம் ஒரு  உதவி ஆள் கேட்டு ஃபோன் செஞ்சுட்டு, சும்மா காத்திருக்கும் நேரம், எதிர்வீட்டு ஆப்பிள்களைப் பறிச்சுத் தின்னுக்கிட்டு இருந்தார் 'பெரியவர்'!  இன்னொரு டெலிவரி வேன் வந்து நின்னுச்சு. அந்த  வண்டியை ஓட்டிக்கிட்டு வந்தவர்  உதவி செஞ்சார். இங்கெல்லாம்  நிறைய வேலைகள் ஒரு மனுசருக்குண்டானதே.  பெரிய கண்டெய்னர்களைக்கூட ஒரே நபர் வந்து  அதுக்குண்டான  சங்கிலிகளை மாட்டி,  மெஷீன் மூலம் அலேக்காத் தூக்கி  எடுத்து வண்டியில் வச்சுட்டுக்கொண்டுபோயிடறார்.

இப்பப்  பொட்டிகளைப்பிரிச்சு  வீடாக்கணுமே! நம்மால் முடியும் என்றால்  DIY நாமே  வேலையை  செஞ்சுக்கலாம். ஆனால்  செஞ்சு கொடுக்கவும் ஆள் இருக்கு.  ஜோனதனே ஒரு நம்பர் கொடுத்து 'எப்போ, என்னிக்குன்னு பேசிக்குங்க'ன்னார்.  அதுக்கு  இன்ன தொகை  செய்கூலின்னும் சொன்னார்.  நாங்களும் க்றிஸ் என்பவருக்கு  ஃபோன் செஞ்சு விவரம் சொன்னோம்.


நம்மூரில் இப்போ, நிலநடுக்கத்தில் அழிஞ்சு போன நகரை மீண்டும் திருப்பிக் கட்டிக்கிட்டு இருக்கோம்.  அந்த வேலையில் இருப்பவர்கள்,  வார இறுதிகளில் பார்ட் டைம் வேலையா  வேற சிலதையும் செஞ்சுக்கறாங்க.  திரும்பி அவுங்க நாட்டுக்குப் போகுமுன் கொஞ்சம் கூடுதலா சம்பாரிச்சுக்கிட்டுப் போனால் வேணாங்குதா?  அப்படி ஒரு நபர்தான் இந்த க்றிஸ். சனிக்கிழமை மட்டும்  பார்ட் டைம் வேலை செய்வாராம். ஞாயிறு, கம்ப்ளீட் ரெஸ்ட்!

அவரும் இன்னொரு நபருமா ( இவர் பெயரும் க்றிஸ் !)  ரெண்டு பேர்   சனிக்கிழமை காலை ஒன்பதுக்கு  வந்தாங்க. நானும் கேமெரா பேட்டரியை ரீசார்ஜ்  செஞ்சு ரெடியா இருந்தேன்:-)




ரெண்டு கிறிஸ்களும் பரபரன்னு  பொட்டிகளைத் தூக்கிக்கிட்டு புழக்கடைக்குப்போய்ச் சேர்ந்தாங்க. வேலை ஆரம்பிச்சது.  நம்ம ரஜ்ஜுவும் இன்ஸ்பெக்ஷனுக்கு வந்துட்டான்.  ஃப்ரேம்களை அடுக்கி,  அவைகளின்  கால்கள்  தரையில் அமருமிடத்தில்  குழிகள் வெட்டி  முளைகள் அடிச்சு வேலை நடக்குது.  நம்ம  பசுமை வீட்டில் நேரடியா மண்ணில் செடிகளை நட்டு  வளர்க்கப்போவதில்லை  என்பதால்  மொத்த ஃப்ரேமுக்கும்  காங்க்ரீட்  தேவை இல்லை என்று  சொல்லி,   வெட்டிய குழிகளுக்குள் மட்டும்  காங்க்ரீட் ஊத்தினால் போதும் என்றனர்.  ஃபாஸ்ட் செட் காங்க்ரீட்  நாலு சாக்கு  வாங்கிவந்தார் கோபால். ஒவ்வொன்னும் 20 கிலோ.

 வெளியே ஃப்ரேம்களை இணைச்சு  பாலிகார்பனேட்  தகடுகளைப் போட்டதுக்கே  பகல் 12 ஆச்சு.  லஞ்சுக்குச் சாப்பிடப் போகவேணாமான்னா, இல்லையாம்.  கையோடு ப்ளாஸ்கில் கொண்டு வந்துருந்ததைக் குடிச்சுட்டு  வேலையைத் தொடர்ந்து செஞ்சுக்கிட்டே இருந்தாங்க.  அடுத்த வேலைகள் ரொம்பவே நச்சுப்பிடிச்சது. கிட்டத்தட்ட   ஆயிரம்  நட்டுகளும் போல்ட்டுகளுமா .... மாலை நாலரைக்கு   எல்லா வேலைகளும் முடிஞ்சுருச்சு.  மொத்தம் ஏழரை மணி நேரம் ஆகி இருக்கு.

ஜோனதன் சொன்ன கூலியைக் கொடுத்தோம்.  வாங்கிக்கிட்ட க்றிஸ், எண்ணிப் பார்த்துட்டு  நாப்பது டாலர்களைத் திருப்பிக்கொடுத்தார். அன்றைக்கு ஜோனதானிடம் பேசும்போது தப்பா கணக்கு போட்டுட்டாராம்!

இனி காங்க்ரீட் ஊத்த வேண்டியது எங்க வேலை.  ஏழரை மணி நேரம்  ஓசைப்படாமல் வேலை நடந்துருக்கு. இப்ப  ஒரு ஆறு குழிக்குள் காங்க்ரீட் போட , கலவர பூமியா மாத்தி  இருந்தோம்:-) புது வீட்டு வெளிப்பக்கமெல்லாம்  சிமெண்ட் தூள் ,  பறந்து பகுடர்  பூசிக்கிச்சு.  எங்கே இறுகிடப்போகுதோன்னு   துணிகள் வச்சு துடைச்சு எடுப்பதுக்குள்ளே  இன்னொரு  குருக்ஷேத்ரம்!






 மறுநாள்   வீட்டுக்குள்ளே செய்யவேண்டியவைகள்  நிறைய.  முதலில் புல்தரை  வளர்ச்சியை நிறுத்த Weed mat போட்டோம். விரிப்பு அசையாமல் இருக்க, இதுக்குன்னே கிடைக்கும் ரப்பர் ஆணிகளை  ஓடிப்போய்  வாங்கியாந்தோம். அப்புறம்  அரை மீட்டருக்கு அரைமீட்டர் காங்க்ரீட் ஸ்லாபுகளை  நடைபாதைக்காக அடுக்குனோம்.  அடியில் மணல் போட்டு அடுக்கலைன்னா  இவை நகர்ந்துரும் என்பதால்  ஓடிப்போய் ரெண்டு மூட்டை மணல் வாங்கியானது.




நம்ம கன்ஸர்வேட்டரிச் செடிகளை ஒவ்வொன்னா  புது வீட்டுக்கு இடம் மாத்தினோம். வாழை, கருவேப்பிலை, கொய்யா, செம்பருத்தி, காஃபி,  வெற்றிலை,  பனை வகை,  போகெய்ன்வில்லா , இன்னும் சிலபல பூச்செடிகள் இப்படி எல்லோரையும்  'ப'வடிவில்  வச்சோம்.  இப்ப ஒருத்தர்  முகம் பார்த்து ஒருத்தர் பேச முடியும், அவர்கள் மொழியில்!

காக்டெஸ் கன்ஸர்வேட்டரியில் இருக்கும் கள்ளி வகைகளையும்  புது இடத்துக்கு மாற்றிவைக்கணும்.  ஒரு ஹார்ட்வேர் கடையில் இருந்து  கால்வனைஸ்டு ஸ்டீல்  ஷெல்ஃப் வகைகள் ரெண்டு வாங்கி, மறுநாள் கோபால் அவைகளை  பொருத்திக் கொடுத்தார்.  இங்கே வாங்கும் பல சாமான்களுக்கு  அஸெம்ப்ளி ரிக்கொயர்டுதான். ஆனால்.... சீனர்களைச் சும்மாச் சொல்லக்கூடாது...... அவைகளுக்கான  இணைக்கும் முறைகள் எல்லாமே பக்காவா அச்சுப்போட்டுக் கொடுத்துருக்கும்  ப்ரோஷர்கள்  அருமைதான்!  ஏ பி சி டின்னு  எல்லாம் படம்போட்டு பாகங்களைக் குறிச்சு இருக்கும்.  இதிது ஏ, இதிது பி ன்னு  தனியா எடுத்து வச்சு  கோபால் சொல்லச் சொல்ல எடுத்து நீட்டவேண்டியது என் வேலை. இப்ப ரொம்ப நல்லாவே தேறிட்டேன், இந்த 27 வருசங்களில்:-)


உழைக்கும் கரங்களுக்கு  அப்பப்ப ஜூஸ், காஃபின்னு  கொடுப்பேன்.  ப்ளீஸ் நோட் ,ஐ ஆம் நாட் அ  ஸ்டோன்ஹார்ட்டட் பெர்ஸன்! 

மொத்த செடிகளையும் இடம் மாற்றி திறப்பு விழாவுக்காக , அலங்காரமா  கிறிஸ்மஸ்  விழாவுக்கான  குண்டுபல்புகளைக் கொண்டு  தொங்க விட்டதும்... டடா.....!!!


ஜோனதான், க்ரீன் ஹௌஸ் வாங்கப்போனபோது,  'படம் எடுத்து அனுப்புங்க. எப்படி இருக்குன்னு  தெரிஞ்சுக்குவேன்'னார். நம்ம விஷயம் அவருக்குத் தெரியாது, பாருங்க:-))))


படங்கள் சில அனுப்பினேன்.  அதைப்பார்த்துட்டு, 'எங்க விளம்பரங்களில் பயன்படுத்திக்க அனுமதி தாங்க 'என்றார்.   நோ ஒர்ரீஸ்! (நம் புகழ் திக்கெட்டும்தான் பரவட்டுமே!)

இலை உதிர் காலம் முடிஞ்சு குளிர் காலம் வந்தது. நமக்கென்ன மனக்கவலைன்னு இருந்தேன். இருந்தேனா.....    இந்த வருச  விண்ட்டர் ஆரம்பத்தில் கொடுங்குளிர் போல.  வாழை,  நீர்கோர்த்துப்போய்  இலைகள் எல்லாம்   சோர்வில் விழுந்து கிடக்கு.  இலைகளைத் தரிச்சு விட்டு,  வீட்டுக்குள் இருக்கும்  அதன் தாய் கன்ஸர்வேட்டரிக்குள் கொண்டு வந்து வச்சுட்டோம்.  மற்ற செடிகளை, ஃப்ராஸ்ட் க்ளாத் என்னும்  குறிப்பிட்ட வகை துணியால் போர்த்தி விட்டுருக்கோம்.




க்ரீன் ஹௌஸில் ஒயிட்  கோஸ்ட் களா  செடிகள் நிக்குது இப்போ!





21 comments:

said...

ரொம்ப ஈசியா இருக்கும் போலயே... எவ்வளவு ஆச்சு?

said...

விரைவில் வெள்ளைப் பிசாசுகள் பச்சைத் தேவதைகளாக மாறட்டும்!

said...

சிறந்த பதிவு
பாராட்டுகள்

said...

அ(ஆ..!)ட்டகாசம் போங்க... இதை விட என்ன சொல்வது அம்மா...!

said...

looks wonderful teacher!

said...

அட்டகாசம். அட்டகாசம். இதை விட என்ன சொல்றதுன்னு தெரியல.

எனக்கும் இதுமாதிரியெல்லாம் செய்ய ஆசை. குறைந்த பட்சம் மொட்டைமாடியிலாவது தோட்டம் போட வேண்டுமென்று ஆசை. பார்ப்போம். முருகன் விட்ட வழி.

said...

சூப்பர். அவங்க ஏழு மணி நேர வேலையில் சிரிச்சுக்கிட்டு தம்ப்ஸ் அப். கோபாலுக்கு ஏன் வேலை மீதிவச்சாங்க. ஃப்ளாஸ்க்ல இருந்து என்னதான் எடுத்துச் சாப்பிட்டாங்களோ. இவ்வளவு வேலை வாங்கி இரூக்கு. ஆனா எங்களுக்கு சுகிர்தமா பதிவு கிடைத்திருக்கு.விண்டருக்குப் போர்வை நல்லதுதான். அம்சமா ரஜ்ஜு போஸ் கொடுத்திருப்பது இன்னும் அழகு. செடிகள் பிழைத்து நல்லா இருக்கணும் துளசி.

said...

super !! super !!!! great !!அற்புதம் துளசி !!!

said...

// இருவது பவுன் ஒட்டியாணம், கேட்டால் பதினைச்சு பவுனில் கிடைக்கலாம்:-) //

ஹிஹி நம்ப சாரு (Mr.கோபால்) ஒங்க ப்ளாக்க படிக்க மாட்டாரோ ?

said...

இன்னும் சிலபல பூச்செடிகள் இப்படி எல்லோரையும் 'ப'வடிவில் வச்சோம். இப்ப ஒருத்தர் முகம் பார்த்து ஒருத்தர் பேச முடியும், அவர்கள் மொழியில்!//

ஆஹா! அருமை.
எவ்வளவு வேலை!செடிகள் பிழைத்துக் கொண்டால் பட்டதுன்பங்கள் தெரியாது மகிழ்ச்சி , மகிழ்ச்சி மட்டுமே.

ரஜ்ஜுவீடு முடிந்தவுடன், செடிகள் வைத்தவுடன் அது கொடுக்கும் போஸ் அருமை.
பசுமைகுடில் வாழ்க! வளர்க!

said...

வாங்க ஸ்கூல் பையன்.

வேலை தெரிஞ்சவுங்க செஞ்சால் ரொம்பவே ஈஸிதான்!

எவ்ளோ ஆச்சுன்னால்.... உங்க காசுலெயா இல்லை எங்க காசுலேயா?

இப்ப டாலருக்கு அம்பதுக்கு மேலே போயிருக்கு! சரியாச் சொன்னால் 52.48 !

said...

வாங்க தருமி.

ஆசிகளுக்கு நன்றி!

ததாஸ்து! ஆமென்!

said...

வாங்க ஜீவலிங்கம்.

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அதானே!!!!!


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க பொற்கொடி.

நலமா?

ரொம்ப நாளா ஆளைக் காணோமே!!!

said...

வாங்க ஜிரா.

எல்லாத்துக்கும் காலம் கனியணுமே! விரைவில் நடக்க ( ஐ மீன்.. ஆசை நிறைவேற) வாழ்த்துகின்றேன்!

said...

கொடுத்து வைத்த செடிகள். வீடு,போர்வை, கவனிக்க நீங்கள்,
ரொம்பவே மனதுக்கு பிடித்த பதிவு.
அருமை. அன்புடன்

said...

தங்களது தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகமாகி உள்ளது.//http://blogintamil.blogspot.in/2014/07/around-the-world.html// நன்றி

said...

அங்கு பனிப்பொழிவு இருக்காதா? அருமையாக இருக்கு அதுவும் மட்டக்கோல் வைத்து வேலை பார்க்கும் போதே வேலை சரியாக வரும் என்று தோன்றிவிட்டது.ஒரு படத்தில் கோபால் அசந்து உட்கார்ந்துவிட்டார்!

said...

ஆகா! பச்சைகுடில் வாழ்க! வளர்க!

said...

ஆஹா! பசுமைக்குடில் ரொம்ப அழகா இருக்கு. வெள்ளைப் பிசாசுகள் போல தான் தெரியுது.

செடிகள் எல்லாம் பிழைத்து துளிர்விடட்டும்.