எப்படாப் பொழுது விடியுமுன்னு காத்திருந்து ப்ரம்ம முஹூர்த்தத்தில் எழுந்து ரஜ்ஜுவுக்கு 'ஹேப்பி தீபாவளி' சொல்லிட்டு அதுக்கான சாப்பாட்டைக் கொடுத்தேன். காலையில் கண்ணைத் திறக்கும்போதே 'திங்கத்தா திங்கத்தா' உயிரை எடுத்துருவான். நாம் எழுந்திருக்கும் அடையாளம் இல்லைன்னா, கட்டிலைச் சுற்றிச் சுற்றிவந்து பரபரன்னு ச்த்தம் வர்றமாதிரி கார்பெட்டை நகங்களால் பிச்சு எடுப்பான். அதென்னவோ இப்படிஒரு சுபாவம்.
குளிச்சு முடிச்சு சாமி விளக்கேத்தி எம்பெருமாளுக்கும் தாயாருக்கும், இன்னபிற பரிவாரங்களுக்கும் 'ஹேப்பி தீபாவளி' சொல்லிட்டு காஃபி நைவேத்யம் செஞ்சேன். காலை ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சு ரெடியானபோது மகள் வந்துட்டாள். அவளுக்கும் தீபாவளி வாழ்த்து சொன்னேன். அப்பா உடம்பு சுகமாகி வீட்டுக்கு வந்ததும் ஒரு நாள் தீபாவளி கொண்டாடணும்.
மருத்துவமனை வாசலில் இறக்கிவிட்டுட்டு மகள் போய்விட்டாள். உள்ளே இருக்கும் சாப்பலில் ஒரு நிமிசம் போய் உக்கார்ந்து , 'என்னடா பெருமாளே இப்படி பண்டிகை கொண்டாட விடமாட்டேங்குறயே........ அதுவரை ஆபத்துலே இருந்து காப்பாத்துனதுக்கு முதல்நன்றி சொல்லணும். சொல்லிக்கறேன். ஆனாலும் இன்னும் கொஞ்சம் கருணை காட்டு'ன்னு விண்ணப்பம் போட்டுட்டு, மாடியில் இருக்கும் ஐஸியூவுக்குப் போனேன்.
கதவுக்கு வெளியே இருக்கும் தொலைபேசியை எடுத்தால் உள்ளே இருந்து 'எஸ்' குரல் கேட்கும். நோயாளியின் பெயரைச் சொன்னதும் நோயாளியைக் கவனிக்கும் நர்ஸ் வந்து நம்மை உள்ளே கூட்டிப் போவாங்க. கதவைத் திறந்த நர்ஸம்மா, கோபால் கண்ணைத் திறந்துட்டார். மயக்கம் எல்லாம் போச்சு. டாக்டர்ஸ் பார்த்துக்கிட்டு இருக்காங்க என்றார். ஐஸியூ முழுக்க முழுக்க பெண் நர்ஸ்கள்தான். அதிலும் எல்லோரும் நல்ல ஸ்மார்ட். கவனம் சிதறாமல் கொடுத்த பொறுப்பை சமாளிக்கும் குணம் பெண்களுக்கு இயல்பா இருக்குதானே!
நேற்று இரவு அறுவை சிகிச்சை நடத்திய ஸர்ஜன், நோயாளியின் நிலை எபடி இருக்குன்னு பரிசோதிச்சுட்டு மேற்கொண்டு என்ன செய்யணுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். நான் போனதும் யார் என்ற அறிமுகம் செய்து கை குலுக்கியவர், சரியான நேரத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தீங்க. இன்னும் அரைமணி தாமதாப் போயிருந்தா burst டாகி இருக்கும் . அப்படி ஆயிருந்தால் அது மேஜர் ஜாப். குடலையெல்லாம் வெளியே எடுத்துக் கழுவி அடுக்க வேண்டி இருக்கும். ஜஸ்ட் ஆன் டைம் என்றார். இவர் எப்படி தமிழ் சினிமா பார்த்துருப்பார்? டயலாக் சரியாச் சொல்றாரே:-))))))))))
கல் ரொம்பப் பெருசு தானாம். லேபுக்கு அனுப்பி இருக்குன்னார். (பெரிய கல்லுன்னா பெண்டண்ட் செஞ்சுக்க சரியா இருக்கும்,இல்லே!) ஊஹூம்....ச்சுப்.
எப்ப சரியாவேன்னு கோபால் கேக்க, ஆல்ரெடி சரியாயாச்சு. நீங்க எது வேணுமுன்னாலும் செய்யலாம் என்றார். வேறு வார்டுக்கு மாத்தப்போறேன். இன்னும் கொஞ்ச நேரத்துலே அங்கே போய் ஓய்வெடுங்கன்னார். காலையிலேயே வாயில் இருந்த ட்யூபை அகற்றி இருந்தாங்க. ப்ரேக்ஃபாஸ்டும் கொடுத்தாங்களாம். தயிரும், வாழைப்பழமும்.
டாக்டரின் உத்தரவை 'ஸாரா ' வார்டுக்குச் சொல்லி அங்கே படுக்கையைத் தயார் செய்யச் சொன்னாங்க நர்ஸ். அதுக்குள்ளே ஆர்டர்லி இன்னொரு கட்டிலை உருட்டிக்கொண்டு வந்து நம்ம அறையில் வச்சார். சுவரிலிருந்த கருவிகளில் கொடுத்திருந்த இணைப்புகளையெல்லாம் இந்தக் கட்டில் இருந்த மெஷீனில் இணைச்சு, கோபாலையும் இந்தக் கட்டிலுக்கு மாத்தினாங்க.
எங்களுக்கு இப்பதான் ஒரு வார்த்தை பேசக்கிடைச்சது. 'ஹேப்பி தீபாவளி'ன்னு வாழ்த்தியவுடன், முகத்தில் ஒரு திகைப்பு. போன தீபாவளிக்கு இதே ஐஸியூவில் தவம் கிடந்தோம். அப்போ மகளுக்கு ரொம்பவே உடல்நலமில்லை. உயிர் பிழைப்பது உத்திரவாதமில்லைன்னு சொல்லிட்டாங்க. நாலுநாள் அல்லும்பகலும் ஐஸியூ. அந்த நாலு நாளும் நரகவேதனைதான். ;ஷீ இஸ் இன் குட் ஹேண்ட்ஸ். முதல்தரமான கவனிப்பு' .பயப்படாதேன்னு மருத்துவர் தோழிதான் அப்ப(வும்)சொன்னாங்க.
கோபாலின் அறுபதுக்கு சென்னை போனபோது முகூர்த்தத்துக்கு ஒன்னும் மாலை வரவேற்பு ஒன்னுமா ரெண்டு புடவை வாங்கினோம். வரவேற்புக்கு வாங்குனதை என்னமோ அன்னிக்குக் கட்ட மனம் இல்லைன்னு பழைய புடவை ஒன்னையே கட்டிக்கிட்டேன். இந்தப் புதுப்புடவை அதோட நாளுக்காகக் காத்திருந்தது. போன தீபாவளிக்குக் கட்டிக்கலாமுன்னு நினைச்சேன். தீபாவளியன்னிக்கு மருத்துவமனை வாசமாப் போனதால்.... இந்த வருசம் கட்டிக்கலாமுன்னு நினைச்சேன். ஆனால் இந்த வருசமும் அதே மருத்துவமனை, அதே ஐஸியூ. போதுண்டா சாமி.
நாங்க பேசிக்கிட்டு இருந்த சமயம், இவர் படுத்திருந்த ஐஸியூ படுக்கை அடுத்த நோயாளிக்குத் தயாராகுது. க்ருமி நாசினி போட்டு கட்டில் கால், சக்கரம் உட்பட தேயோதேயுன்னு தேய்ச்சாங்க. படுக்கை விரிப்புகளை மாத்தினபோதுதான் தெரியுது அஞ்சு விரிப்புகள் ஒன்னுமேலே ஒன்னாக! எல்லாத்தையும் எடுத்துட்டு புது செட் இன்னும் அஞ்சு விரிச்சாங்க. தலையணை உறைகளும் டபுள் டபுளா இருக்கு. மாத்து அதையும்! சுவரில் இருக்கும் கருவிகளின் ட்யூப்கள், ஒயர்கள் இப்படி ஒன்னு விடாம கிருமிநாசினி தொட்டு பயாங்கரமா துடைச்சாங்க. இவ்ளோவேலை இந்தப் படுக்கைக்கு இருக்குன்னு நமக்கே அப்போதான் தெரியுது!
சுமார் ஒருமணி நேரமாச்சு. அதுக்குள்ளே தரை சுத்தம்செய்யும் பணியாளர் வந்தாங்க. இந்திய முகம் இருக்கேன்னு விசாரிச்சேன். நேபாளியாம். நேபாளிகளை பார்த்துருக்கீங்களான்னு (அபத்தமா) ஒரு கேள்வி. ஏன்? நிறையமுறை மணிஷா கொய்ராலாவைப் பார்த்திருக்கேன் என்றதும் ஒரே சிரிப்பு. வந்து மூணு வருசமாகுதாம். இங்க எந்த வேலையும் கீழ்த்தரமானதில்லை. சம்பளமும் குறைஞ்சபட்சம் மணிக்கு 16 டாலர் கிடைச்சுரும். சமோவன்களும், ஃபிஜியர்களும் ஃபிஜி இந்தியர்கள் உட்பட க்ளீனிங் வேலையில் ஏராளமானவர்கள் இருக்காங்க. எட்டுமணி நேர வேலை. சீருடை எல்லாம்போட்டுக்கிட்டு பளிச்ன்னு இருக்காங்க.
ஸாராவில் இடம் ரெடின்னு ஆர்டர்லி வந்து படுக்கையைத் தள்ளிக்கிட்டுப் போனார். நோயாளியின் ஃபைல் கூடவே வருது. நர்ஸம்மா கூட்டிப்போய் அந்த வார்டு நார்ஸம்மாவிடம் இவரை ஒப்படைச்சாங்க.
இது Surgical Assessment & Review Area வார்டு. இங்கே ஒரு இருவது நோயாளிகளுக்கு இடம் உண்டு. ஒரு பெரிய அறையில் திரைச்சீலைகளால் சுவர் வச்சுப் பிரிச்சிருக்காங்க. நடுவில் நடைபாதை விட்டு வலமும் இடமும் மும்மூணு படுக்கைகள். கோபாலுக்கு ஜன்னலோரமா இடம்! ஆஹா....வ்யூன்னு எட்டிப்பார்த்தால் இன்னொரு கட்டிடம் மலைபோல் நிக்குது:( இந்த வார்டில் பூக்களுக்கு அனுமதி இல்லை. மேலும் இங்கே ஆண் பெண்களுக்கான தனித்தனி வார்டு ஏற்பாடுகள் கிடையாது. குழந்தைகளுக்கு மட்டுமே தனி வார்டு. மற்றவைகள் எல்லோருக்கும் பொதுவே!
SARA நர்ஸ் வந்து அறிமுகம் செஞ்சுக்கிட்டு பல்ஸ், பிபி, டெம்பரேச்சர்ன்னு பலதையும் செக் செஞ்சாங்க. பகல் ஒருமணி ஆகி இருந்துச்சு. இன்னிக்கு இங்கே சாப்பாடு கொஞ்சம் லேட்டாம். மகளும் வந்துட்டாள். பகல் சாப்பாடும் வந்துச்சு. யுவர் வெஜிடேரியன் மீல். எஞ்சாய்! மேஷ் பொட்டேட்டோ, பாயில்ட் வெஜ்ஜீஸ், பேக்டு பம்ப்க்கின், மஷ்ரூம் ஸூப், கஸ்டர்ட் ஸ்கொயர், பனானா!
இங்கே ஆஸ்பத்திரிகளில் சாப்பாட்டு மெனு நாமே தெரிஞ்செடுக்கலாம். ஒவ்வொருத்தருக்கும் தனியா மூணு கோர்ஸ் உணவு. ஸூப், மெயின்ஸ், டிஸ்ஸர்ட், கூடவே எக்ஸ்ட்ரா ஃப்ரூட் இப்படி மெனு கார்டை நம்மிடம் கொடுக்கும்போது நாமே அதில் செலக்ட் செஞ்சு டிக் செய்யலாம். உணவின் அளவு கூட நாம் சொல்லலாம். ஸ்மால்.மீடியம், லார்ஜ். இதனால் சாப்பாடு வீணாவதைத் தடுக்கலாம்.
ஒருவேளை உணவு கொண்டு வரும்போதே அடுத்த வேளைக்கான மெனு கொடுத்துருவாங்க. இதில்லாம நாலு வேளை காஃபி, டீ, மைலோ இப்படி. இடைப்பட்ட நேரத்தில் கூடுதல் காஃபி டீ வேணுமுன்னா ஒவ்வொரு வார்டுக்கும் நாமே இவைகளைத் தயாரிச்சுக்கும் வசதிகள் உண்டு. ரெண்டு மூணு வகையான பால் சின்ன ஃப்ரிட்ஜில் இருக்கும். ZIP Water heaters கொதிக்கும் வெந்நீரோடு 24 மணி நேரமும் தயார் நிலையில் ஒரு கப்போர்டில் காபித்தூள், டீ பேக்ஸ்,சக்கரை எல்லாம் இருக்கும். தெர்மாக்கோல் டம்ப்ளர்களும் அடுக்கி வச்ச்சுருக்கும். இது போதாதா?யதேஷ்டம்!
பகல் ஒன்னுமுதல்மூணு மணி வரை ரெஸ்ட்டிங் டைம் என்பதால் விளக்குகளையெல்லாம் அணைச்சு செயற்கை இருள் ஏற்படுத்தினாங்க. நாங்களும் கோபால் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கட்டுமுன்னு கிளம்பி வீட்டுக்கு வந்தோம்.
தீபாவளி விருந்து தாய்க்கும் மகளுக்கும். நேத்து செஞ்ச சமையல் அப்படியே இருந்ததை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சுடவச்சுச் சாப்பிட்டோம்.

17 comments:
தீபாவளி அதுவுமா hospital கஷ்டம் தான் ...ஆனா கோபால் நலமாகி ஆபத்தை தாண்டிட்டார்னு டாக்டர்ஸ் சொன்னது தீபாவளி கொண்டாடின சந்தோசம் கொடுத்துருக்கும் அல்லவா. கவலைபடாதீங்க துளசி, அடுத்தவருஷம் தீபாவளி அசத்திடலாம் !!!
இரண்டு தீபாவளிகளும்
ஆஸ்பத்திரி வாசமா..!
அடுத்த தீபாவளி சேர்த்துவைத்து கோலாகலமாக கொண்டாட்டமாக இருக்கட்டும்..!
மூணு "கோர்ஸ்" உணவு நல்லது அம்மா...
கோபால் அவர்கள் விரைவில் குணம் அடை பிராத்தனைகளும் , அடுத்த தீபாவளி உங்களுக்கு தலை தீபாவளி போல மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள் :)
கோபால் அவர்கள் விரைவில் நலம் பெற பிராத்தனைகளும் , அடுத்த தீபாவளி உங்களுக்கு தலை தீபாவளி போல மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள் :)
தீபாவ்ளி சமயம் ஆஸ்பத்திரியிலா?
அதுதான் என் வாழ்த்து மெயிலுக்கு பதில் இல்லையா? கோபால் சார் நலமாகி வருவது அறிந்து மகிழ்ச்சி. பண்டிகைகளை எப்போது வேண்டும் என்றாலும் கொண்டாடிக் கொள்ளலாம்.
நீங்களும் என்னை போல் புடவை ராசி பார்ப்பீர்களா?
கோபால் நலமடைந்தார்னு கேக்க மகிழ்ச்சியா இருக்கு. முருகா... காப்பாத்துப்பா!
இந்த வருடம் எனக்கும் தீபாவளி ஆஸ்பிஸ்திரியில்தான். கார்ன் சூப்தான் தீபாவளி ஸ்வீட். :)
கோபால் ஜி குணம் அடைந்து நல்லபடியாக இருக்கிறார் எனத் தெரிந்து மனதில் நிம்மதி.....
மருத்துவமனை - அங்கேயும் இங்கேயும் பல வித்தியாசங்கள் - இங்கே இருக்கும் அனுபவங்கள் பயங்கரமானவை.......
[[ஐஸியூ முழுக்க முழுக்க பெண் நர்ஸ்கள்தான். அதிலும் எல்லோரும் நல்ல ஸ்மார்ட்.]]
உண்மை தான்!
[[கவனம் சிதறாமல் கொடுத்த பொறுப்பை சமாளிக்கும் குணம் பெண்களுக்கு இயல்பா இருக்குதானே!]]
Good one! Smart comment!
____________________
ஆண்களின் கவனத்தை சிதற விடும் குணமும் பெண்களுக்கு இயல்பா இருக்கு என்றும் சில ஆண்கள் சொல்கிறார்கள்!
[[சரியான நேரத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தீங்க. இன்னும் அரைமணி தாமதாப் போயிருந்தா burst டாகி இருக்கும் . அப்படி ஆயிருந்தால் அது மேஜர் ஜாப். குடலையெல்லாம் வெளியே எடுத்துக் கழுவி அடுக்க வேண்டி இருக்கும். ஜஸ்ட் ஆன் டைம் என்றார். இவர் எப்படி தமிழ் சினிமா பார்த்துருப்பார்? டயலாக் சரியாச் சொல்றாரே:-))))))))))]]
இன்னும் 24 மணி நேரம் கழித்து தான் எதுவும் சொல்லமுடியும் என்று சொல்லாதவரை சந்தோஷப்படுங்கள்.
Wish Gopal a speedy recovery!
துளசிம்மாவின் தீபாவ்ளி இப்படி போச்சா?அதனாலென்ன துளசிம்மா.கோபாலண்ணா பூரணம் குணம் அடைந்ததே தீபாவளி கொண்டாடிய மகிழ்ச்சி தானே?இனி வரும் தீபாவளி எல்லாம் நீங்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவீர்கள்.வாழ்க வளமுடன்.
//ஐஸியூ முழுக்க முழுக்க பெண் நர்ஸ்கள் தான். அதிலும் எல்லோரும் நல்ல ஸ்மார்ட்//
"கோபால"ன் ஆச்சே டீச்சர்:))
//டாக்டரின் உத்தரவை 'ஸாரா ' வார்டுக்குச் சொல்லி அங்கே படுக்கையைத் தயார் செய்யச் சொன்னாங்க நர்ஸ்.
அதுக்குள்ளே ஆர்டர்லி இன்னொரு கட்டிலை உருட்டிக்//
இந்த "ஆர்டர்லி" செய்யும் பணிகள், பலமுறை பாத்திருக்கேன்..
பலமுறை நன்றி சொல்லணும்...
//அப்பா உடம்பு சுகமாகி வீட்டுக்கு வந்ததும் ஒரு நாள் தீபாவளி கொண்டாடணும்//
அப்படியே ஆகட்டும்!
அன்பு உறவு சூழ, இன்புற்று இருக்கும் நன்னாள் = ஆயிரம் தீபாவளியை விட மேலானது அல்லவோ!
"விட்டுப் போன" அந்தப் பட்டுப் புடைவை உடுத்தி, இனிப்பு செஞ்சி...
இன்னொரு பதிவும் படமும் போடுங்க டீச்சர்..
காக்க காக்க கனகவேல் காக்க!
மகிழ்ச்சி பொங்கிட வாழ்த்துகள்.
( எழுத்துப் பிழைகள் உள்ள முந்தைய எனது கருத்துரையை நீக்கி விட்டேன். மன்னிக்கவும் )
உடை விஷயத்தில் ராசி சென்டிமெண்ட் எல்லோருக்கும் வருவதுதான்.
// தீபாவளி விருந்து தாய்க்கும் மகளுக்கும். நேத்து செஞ்ச சமையல் அப்படியே இருந்ததை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சுடவச்சுச் சாப்பிட்டோம். //
ஃப்ரிட்ஜில் இருந்ததை எடுத்து சுடவச்சு சாப்பிடக் கூடாது என்பார்கள். வயிற்றை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
கோபால் சார் முழு நலம் அடைய வேண்டும். அதுவே எனது பிரார்த்தனை. ( கடவுளே கோபால் சாருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் நல்ல ஆரோக்கியத்தைக் கொடு. )
கோபால் ஸாருக்கும், உங்களுக்கும் மனமார்ந்த ஆசிகள்.
அடுத்த வருடம் தீபாவளியை ஜாம் ஜாமென்று கொண்டாட இப்பவே வாழ்த்துக்கள்!
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.
எல்லோருக்கும் ஒருவழின்னா இடும்பிக்கு வேறவழி இல்லையோ?
அப்படித்தான் இடும்பிக்குத் தனி தீபாவளி வந்துருச்சு:-))))
பழிபாவத்தை எதன்மேலாவது போடணுமுன்னு பார்த்தப்ப...பாவம் புடவை மாட்டிக்கிச்சு:-))))
Post a Comment