Thursday, November 14, 2013

நாச்சியாரின் இழப்பு.

பதிவுலக நட்புகளுக்கு,

நம்முடைய 'பதிவர்   நாச்சியார்' வல்லி சிம்ஹனின் அருமைக்கணவர் திரு நரசிம்ஹன் நேற்றிரவு  இறைவனடி சேர்ந்தார்.

என்ன செய்வது என்ற மனக்கலக்கத்துடன் இருக்கும் வல்லிக்கு(ரேவதிக்கு) பதிவுலகின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.

ப்ச்...............  என்னப்பா இப்படி ஆகிப்போச்சு:((((




37 comments:

பால கணேஷ் said...

Gem of a Man Singam Sir...! A great loss to us also teacher!

தி.தமிழ் இளங்கோ said...

// என்ன செய்வது என்ற மனக்கலக்கத்துடன் இருக்கும் வல்லிக்கு(ரேவதிக்கு) பதிவுலகின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.//

எதிர்பாராத சோகம். உங்கள் பதிவின் வழியே, நானும் சகோதரி நாச்சியார்' வல்லி சிம்ஹனுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

எனது ஆழ்ந்த இரங்கல்களும்.....

இது ஒரு பெரிய இழப்பு வல்லிம்மாவுக்கும் நமக்கும்.....

எல்லாம் வல்லவன் வல்லிம்மாவுக்கு மனோ பலத்தினையும் தைரியத்தினையும் தரட்டும்.....

சாந்தி மாரியப்பன் said...

அடடா!!.. பேரதிர்ச்சியா இருக்கு. என்ன ஆச்சு?. சுற்றம் உற்றத்துக்கெல்லாம் ஏதாவது உடம்புக்குன்னா வல்லிம்மா பதிவுல தகவல் இருக்கும். இது எதிர்பாராத ஒண்ணு. இந்த இழப்பைத் தாங்கிக்கும் மனவலிமையை அவர் வணங்கும் கண்ணந்தான் கொடுக்கணும்.

வல்லிம்மா பதிவுகளில் இருக்கும் அவர் கைவேலைகளுக்கு நான் ரசிகை.

sury siva said...

just now, I talked to her brother's wife.
And conveyed my condolences.

Verily a great soul.

May his soul rest in peace.

subbu rathinam.

வவ்வால் said...

ஆழ்ந்த இரங்கல்கள்!

Yaathoramani.blogspot.com said...

மனம் மிகவும் துயரப்பட்டது
அவருடைய ஆன்மா சாந்தியடையவும்
அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும்
ஈடு செய்ய முடியாத இழப்பை
தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை
இறைவன் அளிக்கவும் வேண்டிக் கொள்வோமாக

ராமலக்ஷ்மி said...

அதிர்ச்சியும் வருத்தமும்:(! ஆழ்ந்த இரங்கல்கள். சிங்கம் சாரின் ஆத்ம சாந்திக்கும், வல்லிம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கிடைக்கவும் பிரார்த்தனைகள்.

சகாதேவன் said...

heartfelt condolences

எம்.ரிஷான் ஷெரீப் said...

அதிர்ச்சியாகவும், கவலையாகவும் இருக்கிறது டீச்சர்.

எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை வல்லிம்மாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இறைவன் தரட்டும் !

ராஜி said...

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வல்லியம்மா...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முருகா!
சிம்மன் அவர்களின் இன்னுயிர், பெருமாளின் திருவடி "நிழலில்" இளைப்பாற வேண்டுகிறேன்!

ஈசன் எந்தை இணையடி நீழலே!

திருக்குறுங்குடி
வல்லி-சிம்மன்:

வல்லியம்மாவிடம் அவர் அன்பு என்றும் நிலைத்திருக்கும்!!!
--------

படிக்கேழ் இல்லாப் பெருமாளைப்
பழனக் குருகூர்ச் சடகோபன்

முடிப்பான் சொன்ன ஆயிரத்துள்
திருவேங்கடத்துக்கு இவை பத்தும்

பிடித்தார் பிடித்தார் வாழ்ந்திருந்து
பெரிய வானுள் நிலாவுவரே!

வடுவூர் குமார் said...

அட பாவமே! ஆழ்ந்த வருத்தங்கள்.

ஹுஸைனம்மா said...

ரொம்பவே அதிர்ச்சியான செய்தி. என்ன சொல்லன்னே தெரியலை. வல்லிமாவின் பதிவுகளில் அவரின் கம்பீரமான புகைப்படங்களும், கைவேலைப்பாடுகளும் மறக்கமுடியாதவை. சிங்கம், சிங்கம் என்று அழகாகக் குறிப்பிடுவார்களே... இறைவன் அவருக்கு ஆறுதலையும், தைரியத்தையும் தரவேண்டும்.

Jayashree said...

My heartfelt condolences to Mrs Simhan and Family

Angel said...

மிகவும் அதிர்ச்சியாக இருக்கு ...
வல்லிம்மா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எல்லா ஆறுதலையும் இந்த கடினமான நேரத்தில் துக்கத்தை தாங்கும் சக்தியையும் தர இறைவனை வேண்டுவோம் .
எனது ஆழ்ந்த இரங்கல்கள் .

Angelin

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்!

Kanchana Radhakrishnan & TVR.

மாதேவி said...

செய்தியைக் கண்டதும் மிகவும் அதிர்ந்துதான்போனேன். ஆழ்ந்த மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

துயரத்திலிருந்து வல்லிசிம்ஹன் அவர்கள் மீண்டுவர இறைவனை வேண்டுகின்றேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா அமைதியுறட்டும். வல்லி சிம்ஹன் அம்மா, அவர் குடும்பத்தினர் மன ஆறுதல் பெறப் பிராத்திக்கிறேன்.

தருமி said...

என் மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

காலம் மட்டுமே தரக்கூடிய ஆறுதல் பெறட்டும்.

Unknown said...

May his soul Rest in Peace.
The Almighty give valliamma strength to bear the loss .

Unknown said...

மிகுந்த வருத்தமாயிருக்கு. வல்லியம்மாவுக்கு கடவுள் மனவலுவைத் தரட்டும்.

வருண் said...

Sorry to know, teacher! :( My heartfelt condolences to her and their children!

பாரதி மணி said...

ஆண்டவனுக்கு கருணையேயில்லை!

ரேவதிம்மாவுக்கும், குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். காலம் தான் காயத்தை ஆற்றவேண்டும்.

Agila said...

ஆழ்ந்த இரங்கல்கள்..:(((

naanani said...

துயர சேதி கேட்டவுடன் நானும் சங்கரும் உடனே சென்று வல்லிமாவுக்கு எங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து வந்தோம்.வல்லிக்கு இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை தருமாறு அவர் வணங்கும் பெருமாளை வேண்டுகிறோம்.

அப்பாதுரை said...

ரொம்ப வருத்தமா இருக்கு.

Menaga Sathia said...

ரொம்ப வருத்தமா இருக்கு,ஆழ்ந்த இரங்கல்கள்...

ஸாதிகா said...

மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.இறைவன் வல்லிம்மாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலையும் பொறுமையையும் தைரியத்தையும் கொடுப்பானாக!

இலவசக்கொத்தனார் said...

இப்போதான் இந்தப் பதிவைப் பார்க்கறேன். ரொம்பவே வருத்தமா இருக்கு, வல்லி அம்மாவுக்கு என் ஆறுதல்கள்.

butterfly Surya said...

My heartfelt condolences. :(

butterfly Surya said...

My heartfelt condolences. :(

துளசி கோபால் said...

மனவருத்தத்தில் ப்ங்கு கொண்டு ஆறுதலான சொற்களை அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் நம்ம வல்லியம்மாவின் சார்பில் என் நன்றிகள்.

மனசு இன்னும் ஆறலை.

மனோதிடத்தை வல்லியம்மாவுக்கு வழங்கும்படி நம்பெருமாளை வேண்டுகின்றேன்.

G.Ragavan said...

அதிர்ச்சியான செய்தி. உடல்நலமின்மையால் சற்று வலைப்பூ பக்கம் வரமுடியவில்லை. வந்து பார்த்தால் இப்படியொரு செய்தி.

வல்லியம்மாவுக்கு இறைவன் மனோதிடத்தைக் கொடுக்கட்டும்.

S.Muruganandam said...

நரசிம்மத்தின் தாளடியில் சிம்மம் சேவை செய்யட்டும்.

கண்ணன் கழலிணை காக்கட்டும் வல்லியம்மா.

கோமதி அரசு said...

ஊரிலிருந்து வந்தவுடன் கயல் சொன்னாள் மிகவும் வருத்தம் அடைந்தேன். அக்காவிடம் பேசினேன்.
இறைவன் அவர்களுக்கு மன ஆறுதலையும், மனதையரியத்தையும் தருவார்.