Monday, September 28, 2009

பதிவர் வீட்டுக் கொலுவைப் பாரு.....

நகர்வலத்தில் கொலு வாரம் விஸிட் 2,3,4,5,6,7............

ஒருவாரத்துலே கிடைச்சதையெல்லாம் விடாம நம்ம பதிவர்கள் சிலர் வீடுகளுக்குப் போய்வந்தோம்.
சுப்புரத்தினம் ஐயா வீட்டுக் கொலு
*****************************************************************************

மேலே உள்ள இரண்டு படங்களும் சுப்பு ரத்தினம் & மீனாட்சி அக்கா வீட்டு வளாகத்தில் வச்சுருக்கும் 'காமன்' (ஆங்கிலம்) கொலு!
********************************************************************************

'அலைகள் 'அருணா வீட்டுக் கொலு.
**************************************************************************


மேலே இரண்டு படங்களும் நம்ம நாச்சியார் வல்லி சிம்ஹன் வீடு

******************************************************************************
தியாகையருக்குக் காட்சி கொடுத்த ராமர் கூட்டம்!!

இந்த இரண்டு படங்களும் கீதா சாம்பசிவம் வீட்டுக் கொலுவில்
****************************************************************************

சங்குபிள்ளையார்!!
வீணை நம்ம நானானியின் குழந்தை!! இன்னும் அழகான 'காய்க்கொலு' படங்கள் இருக்கு. அவுங்க போடுவாங்கன்றதால் நான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்.

அனைவருக்கும் நவராத்ரி & தசரா வாழ்த்து(க்)கள்.

பொழுது விடிஞ்சால் நம்மூட்டுலே விஜயதசமிக்கான பூசை இருக்கு. முடிஞ்சால் ஒரு நடை வந்துட்டுப் போங்க.


பதிவர் நானானி இப்போத்தான் தொலை பேசுனாங்க. அவுங்க வீட்டு அற்புதங்களைப் போடச் சொல்லிட்டாங்க!!!! நான் கண்ட இன்பம் வகையில் இதோ.....


கேரட்டும் முள்ளங்கியும் பூத்துருக்கு.தர்ப்பூசனித் தாமரை

வீணை மீட்டும் சரஸ்வதி மஞ்சள் பூசணியில்.


புத்தக அடுக்கில் புடவை கட்டுன சரஸ்வதி.

புதுமையோ புதுமைதான் போங்க!!!!!


காய்கறிகளுக்கெல்லாம் அப்பப்பப் 'புஸ்க் புஸ்க்'ன்னு தண்ணீர் தெளிச்சுக்கிட்டே இருக்காங்க. வெளியே அடிச்சு ஆடும் மழைக்கு மேட்சா இங்கே ஒரே 'ஷவர் பாத்' தான்:-))))


45 comments:

said...

வீடு வீடா போய் சுண்டல் சாப்பிடுறீங்களே..?

நிசமா நீங்க ஒருத்தர்தான் பண்டிகை கொண்டாடுறீங்க டீச்சர்..

said...

அதென்ன சங்கு பிள்ளையார்.. குட்டியா அழகா இருக்கே..?

பார்சல் பண்ண முடியுமா?

said...

கீதாம்மா.. வல்லியம்மாகிட்ட சொல்லி சுண்டலையும், பொரி கடலையையும் கொஞ்சம் பார்சல்ல அனுப்பச் சொல்லுங்க..!

said...

படங்கள் அனைத்தும் அருமை.

குதூகலமான கொலு கொண்டாட்டம். ம்ம்ம்.சான்ஸ் எதுவும் மிஸ் பண்ணாம நல்லா அடிச்சு ஆடுறிங்க டீச்சர்... :))

said...

பதிவர் புத்தகங்கள் மாதிரி பதிவர் கொலுக்கள்! :)
சூப்பரோ சூப்பர் டீச்சர்!

//புத்தக அடுக்கில் புடவை கட்டுன சரஸ்வதி//

சான்சே இல்லை! செம க்ரியேட்டிவ்!
புத்தகத்தை மெய்யாலுமே கலைமகளாய் மாற்றிய நானானி அம்மா, வாழி வாழி!

said...

@வல்லியம்மா
அது என்ன தியாகராஜர் படத்துல, ஒரு அம்மா சமையக் கட்டுக்குள்ள இருந்தே எட்டிக் பாக்குறாக? :)
வந்திருப்பது என் இனிய ராகவன் & கோ தானே? கூச்சப்படாம கிட்டக்க வந்து பேசுங்கம்மா! :))

ஆஞ்சநேயர் கொள்ளை அழகு! தியாகராஜர் வீட்டுலயே செட்டில் ஆயிட நினைச்சிட்டாரு போல! அவரு மட்டும் உட்கார்ந்துட்டாரு! :)

said...

எல்லா கொலுவும் அமர்க்களமா இருக்கு. நானானி அம்மாவோடி க்ரியேட்டிவ் கைகளுக்கு ஓஓஒ.....

said...

எல்லோரது வீட்டுக்கும் எங்களை அழைத்துச் சென்ற்மைக்கு மிக்க நன்றி!
தர்பூசணித் தாமரையும், மஞ்சள் பூசணி சரஸ்வதியும் //புதுமையோ புதுமைதான்// மட்டுமல்ல அழகோ அழகும்:)!!

said...

@உ.த. அது என்ன வல்லி கிட்டே நான் போய்ச் சொல்லணுமாக்கும்??? ரொம்ப லேட் சுண்டலுக்கு! வெள்ளிக்கிழமை சுண்டல் போணியே ஆகலை எங்க வீட்டிலே, பொட்டலம் போட்டு அனுப்பி இருக்கலாம் போல! நாங்க பக்கத்திலே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்ப்பொட்டலம் போட்டு வித்துடலாமோனு நினைச்சோம்! :))))))))

said...

நல்ல பதிவு, கொலுக்கள் அருமையாக இருந்தது. காய்களில் சித்திரங்கள் மிகவும் அருமை,அதுக்கு தேவை பொறுமை. அங்க கொடுத்த சுண்டலைப் பத்தி சொல்லாமல் விட்டுவிட்டீர்கள் டீச்சர்.

said...

//@வல்லியம்மா
அது என்ன தியாகராஜர் படத்துல, ஒரு அம்மா சமையக் கட்டுக்குள்ள இருந்தே எட்டிக் பாக்குறாக? :)
வந்திருப்பது என் இனிய ராகவன் & கோ தானே? கூச்சப்படாம கிட்டக்க வந்து பேசுங்கம்மா! :))//

KRS என்ன ஒரு அருமையான நினைவாற்றல்?? :P:P:P:P:P:P:P நல்லாப் பாருங்க, அது எங்க வீட்டிலே இருக்கும் படம்! வல்லி வீட்டுது இல்லை. உள்ளே இருந்து எட்டிப் பார்க்கிறவங்க திருமதி தியாகராஜ ஸ்வாமிகள். :P:P:P:P:P

said...

இந்த உ.த. என்ன எல்லாத்தையும் பார்சல் பண்ணச் சொல்லிட்டு இருக்கார்??? நானானி, உங்க வீட்டுக் கொலுவை அப்படியே உ.த. வுக்கு பார்சல் பண்ணிடுங்க! ஒரு கொலு பார்சேஏஏஏல்

said...

துளசி கொலு அழகே அழகு. அதுவும் எல்லோருக்கும் சம்தளம் அமைச்சுக் கொடுத்து அன்பா விவரணம் கொடுத்திருக்கிருக்கீங்க!!!
நன்றிங்கோவ்:)
நானானி வீட்டு க் கொலு கலை அழகு சொல்லி முடியாது. கீதாவீட்டுக் கொலு ஆன்மீகமாகவே இருந்தது. இந்த நவராத்திரி நல்ல ஆனந்தநவராத்திரியா நடந்து இருக்கு

said...

கொலு ரவுண்ட் பதிவும் படங்களும் அருமை.

எல்லோருக்கும் இனிய தசரா நல் வாழ்த்துக்கள்

said...

வாவ்!!!!

said...

நானானி அம்மா வீட்ல தர்பூசணி தாமரை அட்டகாசம்:))


வல்லியம்மா எங்களுக்கு கொடுக்க சொல்லி கொடுத்த சுண்டல் எங்கே டீச்சர்....??

:))))))))

said...

துள்சி!
செம சூடாக கொலு பதிவு இட்டு எங்கள் கொலுவை உலகறிய வைத்து விட்டீர்கள். அதுக்கு டாங்ஸ் சொல்லோணுமா...? வேணாம்தானே!!

பதிவர்கள் எல்லோரும் எங்க வீட்டு கொலுவை ரசித்தமைக்கு என் அன்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சேரீ....பின்னோட்டமிட்ட பதிவர்கள் அனைவருக்கும் கொடுக்கச் சொல்லி சுண்டல், சர்க்கரைப் பொங்கல் பார்சல் துள்சியிடம் கொடுத்துவிட்டேன்னே? தரலையா..?

said...

இவ்வளவு பதிவர்கள் வீட்ல சுண்டல் தரலையா டீச்சர்? அதோட படம் இல்லையே :)

said...

Very nice photos.

said...

@கீதாம்மா
//KRS என்ன ஒரு அருமையான நினைவாற்றல்?? :P:P:P:P:P:P:P நல்லாப் பாருங்க, அது எங்க வீட்டிலே இருக்கும் படம்! வல்லி வீட்டுது இல்லை.//

அடடா!
இந்தப் படத்தை நான் நேரா வீட்டுக்கு வந்த போது வல்லீம்மா வீட்டில் பார்த்தேனா? இல்லை கீதாம்மா வீட்டில் பார்த்தேனா?

ஒரு வேளை கீதாம்மா, வல்லீம்மா வீட்டில் இருந்து படத்தைத் தள்ளிக்கிட்டு வந்துட்டாங்களோ? :))

//உள்ளே இருந்து எட்டிப் பார்க்கிறவங்க திருமதி தியாகராஜ ஸ்வாமிகள். :P:P:P:P:P//

ஓ, அவிங்க பேரு என்ன கீதாம்மா? பாவம், சாமியே வீட்டுக்கு வரும் போது கூட, அடுக்களைக்குள் நின்னு எட்டியபடியே பாக்குறாங்க! :(

ஓவியரோட கற்பனை-ன்னு நினைக்கிறேன்! ஆனால் தியாகராஜர் மனைவி, அவருக்குப் பூசையில் எல்லா உதவிகளையும் செய்வதாகத் தான் வரும்!

said...

super ..:)

said...

அடடா
நான் உள்ளே வரும் பொழுது விடை பெற்றுச் சென்றது நீங்கள்தானா.
[வீடு முழுக்க துளசி மணம் பரவியிருந்ததன் காரணம் பிறகுதான் புரிந்தது.]

said...

வாங்க உண்மைத் தமிழன்.

துணி தைக்கணுமுன்னா நேரடியாச் சொல்லக்கூடாதா?

ஊசியும் நூலும் கேக்கலாமா?

வீடுவீடா சுண்டல்?

நோ வே......
கீதாம்மா வீட்டுலே மசால்வடை:-)

said...

வாங்க துபாய் ராஜா.

அடுத்தவருசம் கொலு நமக்கு எந்த ஊரில் இருக்கோ?

காற்றுள்ளபோதே......

விடலாமா?

said...

வாங்க கே ஆர் எஸ்.

நானானி வீட்டுக் கொலு ரொம்பப் புதுமை. ரசிச்சேன்.

கீதா வந்து உங்களுக்கு 'விளக்கம்' கொடுத்தாச்சு:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

ரெண்டு வீணைகள் வேற வச்சுருந்தாங்கப்பா. ஒருநாள் அவுங்களை 'வாசி'க்கச் சொல்லிக் கேக்கணும்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நீங்க சொன்னது அத்தனையும் உண்மை!

said...

வாங்க கீதா.

வெள்ளிக்கிழமை நம்ம சுப்புக்குட்டிக்கூட வரலையா?

அடராமா....

said...

வாங்க பித்தன்.

வெள்ளைக் கொத்துக்கடலை சுண்டல்தான் அதிகமாவும்.

நானானி வீட்டில் காராமணி.

நம்ம வீட்டில் விருந்தினர் வந்த அன்று (மட்டும்)நிலக்கடலை சுண்டல்.

தினம்தினம் சுண்டல் என்ன வேண்டிக்கிடக்கு? செஞ்சால் தின்ன ஆள் வேண்டாமா?

said...

கீதா,

பார்ஸலை நியூஸிக்கு அனுப்பப்போறாங்களாம்:-)

said...

வாங்க வல்லி.

அடுத்தவருசம் எங்கேயோ? க்யா மாலும்!

அதான் இந்தவருசத்தை முழுசுமா ரசிச்சுக் கொண்டாடினேன்.

உங்களுக்கெல்லாம்தான் நன்றி சொல்லணும். அழைச்சு நல்லா உபசரிச்சதை மறக்கவே முடியாதுப்பா.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ரவுண்ட்ஸ் நல்லாவே போச்சுப்பா:-)

உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க தூயா.

சமையல்கட்டைவிட்டு வெளியே வர டைம் கிடைச்சதா? :-))))))

said...

வாங்க ஆயில்யன்.
அவுங்க, உங்களுக்கெல்லாம் கொடுக்கச் சொல்லிச் சுண்டல் கொடுத்த பையில் ஒரு 'ஓட்டை' இருந்துச்சு. நான் கவனிக்கலை:-)))))

ச்சும்மா................

said...

வாங்க நானானி.

அனுமதிச்சதுக்கு நன்றி.

நீங்கள் பதிவர்களுக்குக் கொடுத்த சக்கரைப்பொங்கல் சுண்டல் இன்னும் வைர மோதிரங்கள், செயின், காசுமாலை எல்லாம் இருந்த பைகளைப் பேச்சு சுவாரசியத்தில் மறந்துபோய் உங்க வீட்டுலே விட்டுட்டு வந்துட்டேன்.

தின்னும் சாமான்கள் இதுக்குள்ளே 'ஊசி'இருக்கும்(-: போகட்டும்....மற்றவைகளை எடுத்து வையுங்க. இதோ வந்துக்கிட்டு இருக்கேன்\.

said...

வாங்க நான் ஆதவன்.

சுண்டல் தட்டைக் கையில் வச்சுக்கிட்டுக் கெமெராவை ஆப்பரேட் செய்ய முடியலை:-)

said...

வாங்க நன்மனம்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க கயலு.

இன்னுமா கிராமம் முடியலை????

said...

வாங்க கோமா.

மிஸ் பண்ணிட்டோமேப்பா.

சந்திக்கணும். நவராத்திரி முடிஞ்சால் என்ன? பவுர்ணமிக்குச் சந்திச்சால் ஆச்சு.

said...

எல்லோருடைய வீட்டுக்கும் போன உணர்வைக் கொடுத்துவிட்டது பதிவு....
சூப்பர். நன்றி ரீச்சர்.

said...

//ஒருநாள் அவுங்களை 'வாசி'க்கச் சொல்லிக் கேக்கணும்.//

'வீ..ணை' வாசிச்சிட்டேன். இதுதான் இப்பொதைய நிலமை.

said...

//வைர மோதிரங்கள், செயின், காசுமாலை //

அப்படீன்னா என்னா?

said...

வருகைக்கு நன்றி மதுரையம்பதி.

said...

நானானி,

//வைர மோதிரங்கள், செயின், காசுமாலை.....

அப்படீன்னா என்னா?//

எனக்கும் தெரியலைப்பா. எல்லாம் கேள்விப்பட்டதுதான். நேத்து இதைப் பத்தி விசாரிச்சுறலாமுன்னு ஜி ஆர் டி போனேன்.

நம்ம அதிர்ஷ்டம் பாருங்களேன்.....

'செவ்வாய் விடுமுறை'யாம்(-:

said...

ம்ம்ம்ம் இந்த கொலுவிலேயே பாதி பொம்மையைக் குறைச்சிருக்கேன் போல! :))) இப்போ இதிலே பாதி கூட இல்லை. :))

இன்னிக்குக் கடைத்தெருவுக்குப் போனப்போ பொம்மைகளைப் பார்த்ததும் வாங்கலாமானு ஒரு யோசனை! அப்புறமா யார் பெயருக்கு உயிலை எழுதறதுங்கற குழப்பத்திலே வாங்காம வந்துட்டேன்.