ஒரு காலத்துலே பலகாரத்தை வச்சேப் பண்டிகையை நினைவு படுத்திக்கும் பழக்கம் இருந்துச்சு. காலம் கலியா மாறியதால் எப்போதும் எல்லாமும் கிடைக்குது. புதுத் துணிகளைக்கூட இந்த வரிசையில் சேர்த்துக்கலாம். தீவாளி பொங்கலுக்குன்னு புதுசு எடுத்ததெல்லாம் போக..... தள்ளுபடி விலை இருக்கேன்னு வருசம்பூராப் புதுசும் வாங்கிக் கட்டலாச்சே.....
இந்த வருசம் க்ருஷ்ணாஷ்டமியை எப்படியெல்லாம் கொண்டாடலாமுன்னு திட்டம் (மனசுக்குள்ளேதான்) போட்டு வச்சுருந்தேன். நானொன்று நினைக்க 'அவன்' ஒன்று நினைச்சுட்டான். தொண்டை வலி. இருமல். மாலை நடை போகும்போது மருந்து(ம்) வாங்கிக்கலாமுன்னு ................
புதுசா ஒரு கடை திறந்துருக்காங்க. 'தமிழினி'. பேரே நல்லா இருக்கேன்னு நுழைஞ்சேன். இனிப்பகம் & வெதுப்பகம். ஸ்வீட்ஸ் & பேக்கரி ஐட்டங்கள் விக்கறாங்க. ஓனர் யாழ்ப்பாணமாம். இங்கே இது மூணாவது கிளை. யாழ்ப்பாணக் கொழுக்கட்டை இவுங்களோட ஸ்பெஷாலிட்டியாம். புதுக் கடை என்பதால் எல்லாமே புதுசாத்தான் செஞ்சுருப்பாங்க. பழைய ஸ்டாக் இருக்காது என்ற நம்பிக்கை(எனக்கு).
ச்சும்மா........... ஒரு பார்வை. இளநீரில் செய்தது. எப்படி? தண்ணீர் சேர்ப்பதற்குப் பதிலா இளநீரா? அப்ப.....உப்பு வாங்கும் செலவு மிச்சம்!
இளநீர் சேர்த்துச் செஞ்ச ஒரு ஜாங்கிரி, ஒரு மைசூர் பாகு அப்புறம் ஒரு ஷோன்கேக் (எல்லாம் நம்ம சோனா அல்வாதான்) இப்படி இது மூணுலேயும் ஒவ்வொரு துண்டு மட்டும் வாங்கினோம். எல்லாம் க்ருஷ்ணார்ப்பணம். இந்த வருசம் இப்படியா?
பழங்கள், இனிப்புகளோடு குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடியாச்சு. சாத்துக்குடி உரிக்கக் ' குழந்தை'க்குக் கஷ்டம் என்பதால் ஜூஸ் எடுத்துக் கொடுத்தேன். முதல் பாதி விழா முடிஞ்சது. ரெண்டாம் பாதிக்காக...... பதுமனைத் தரிசிச்சுட்டுப் போய்ச் சேர்ந்தது கலைமாமணிகளும், பதுமஸ்ரீயும் இணைஞ்ச ஒரு நிகழ்ச்சிக்கு.
கல்பத்ருமா நடத்துது. சுதா ரகுநாதன் பாட்டு, மன்னார்குடி ஈஸ்வரன் மிருதங்கம், கோபிநாத் வயலின், ராமன் மோர்சிங் & தம்புரா நாராயணன் இப்படி ஒரு ஜமா. (பட்ட விவரங்களுக்கு இந்த அழைப்பிதழைப் பாருங்க)
பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த ஹால். சிவகாமி பெத்தாச்சி ஆடிட்டோரியம். கச்சிதமா இருக்கு. வாசலில் மலர் அலங்கார வரவேற்'பூ'.
சொன்னாச் சொன்ன நேரத்துக்கு 'டான்'ன்னு ஆரம்பிச்சாங்க. கல்பத்ருமா இப்போ சிலவருசங்களா இப்படிக் கலைப்புரவலர்களா ஆகி இருக்காங்களாம். கலை ஆராதகரானத் தன்னுடைய தகப்பனார் பரமேஸ்வரன் ஆரம்பிச்சு வச்சது இதுன்னு இப்போதைய நிர்வாக இயக்குனர் சொன்னார்.
குரு ப்ரம்மா, குருவிஷ்ணுன்னு கடவுள் வாழ்த்து ஆரம்பிச்சு வனஜாக்ஷி முதல் பாட்டு. சப்தஸ்வர ஷோபின்னு, வீணாகான மூர்த்தேன்னு வரிசையாப் பாட்டுகள். நடுவில் நாலு பாட்டுகளுக்கு விஸ்தாரமான ராக ஆலாபனைகள். அருமையா இருந்துச்சுன்னாலும் கூடிப்போச்சோன்னு ஒரு தோணல். பால்வடியும் முகம் ஆரம்பிச்சப்பக் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். ஸ்ரீனிவாச பவசரணம், பாவயாமி கோபாலம், கண்டநாள் முதலாய் இப்படிக் கலந்துகட்டி ஒரு ரவுண்டு.
முதலைவாயில் அகப்பட்ட யானை குரலெடுத்து அழுது கூப்பிட்டபோதும், துகிலுரியும்போது, அனைவரும் கைவிட்ட நிலையில் த்ரௌபதி கதறி அழுதபோதும் பரந்தாமன் எப்படி உதவிக்கு வந்தான்னு அவன் கருணையை நினைச்சுப் புரந்திரதாசர்(?)பாட்டு ஒன்னு 'எமெனெல்லி காணதெந்து ஹேளபேடா' அருமை. முதல் முறையாக் கேட்கிறேன். மித்ரனும் அவனே, சத்ருவும் அவனே...ஆஹா..... எமன் மட்டும் இல்லாம இருந்துருந்தா....... நம்ம கதி? (இதைத்தானே நம்ம கவியரசர்' வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமியில் நமக்கு இடமேது'ன்னு சிம்பிளாச் சொல்லிப்போயிட்டார்! அடடா........ என்னமா எழுதிட்டார். நிம்மதியா எதையாவது பார்த்தோமா ரசிச்சோமான்னு இல்லாமக் கலந்துகட்டி இந்த எண்ணச்சுழல்களில் மனசு சிக்கிக்குதே)
மூணுமணி நேரம். ஏகப்பட்டத் 'தனி'கள். அருமையான இசை. திட்டமிடாமலே இன்றைக்கு என்னமோ கண்ணன் பாட்டுக்களா அமைஞ்சுபோச்சுன்னு சுதா சொன்னாங்க. அனைவருக்கும் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்து(க்)களையும் தெரிவிச்சாங்க. வருசக்கணக்கானப் பயிற்சியில் குரல் கொஞ்சம்கூட இப்படி அப்படிப் போகாம, அலுங்காமக் குலுங்காம..... பெல்ஜியம் நாட்டு ஹைவேயில் பயணிச்சதுபோல அப்படி ஒரு சுகம். 'பாடப்பாட ராகம்'!
நமக்கான ஸ்பெஷலா அவுங்க புடவையில் யானை:-)
'ரஷ்யன் ரிங்ஸ்'ன்னு கோபால் எழுதிக்காமிச்சார்.
"அதெல்லாம் இல்லை. தம்புராவை ட்யூன் செஞ்சப்பவே பார்த்துட்டேன். இது ஸ்பைரல். நல்லவேளை ஞாபகப் படுத்துனீங்க.என்கிட்டே இல்லே...ஒன்னு வாங்கிக்கணும்"
பாவம்...மனிதர். தன்னையே நொந்துக்க வேண்டிய நிலை:-)
என் வாழ்க்கையில் நானும் முதல்முறையா சுதாவின் பாட்டை நேரடியாக் கேட்டதோடு இந்த வருசக் கிருஷ்ணஜெயந்தி விழா நிறைவு ஆச்சு.
பித்தனுக்காக ஒரு படம் போட்டுருக்கேன்!
Friday, September 18, 2009
பண்டிகைக்காகப் பலகாரமா இல்லை பலகாரத்துக்காகப் பண்டிகையா?
Posted by துளசி கோபால் at 9/18/2009 05:46:00 PM
Labels: அனுபவம், கிருஷ்ணாஷ்டமி, சுதா ரகுநாதன்
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
//அப்புறம் ஒரு ஷோன்கேக்///
அதை நான் எடுத்துகிடறேன் :))))
சென்னை ரவுண்ட்கள் கலக்கலா நடக்குது போல இருக்கு.
:)))
நீங்க யானையை பார்த்தை அந்த கடைசி படத்தில் உள்ளவர் பார்த்திட்டார் போல் இருக்கு,ஒரு மாதிரியாக கேமிராவை பார்க்கிறார்.
ஆமாம்.சீடை முருக்கெல்லாம் இல்லையா?
Thanks for sharing, Thanks for photos, sudha ragunathan kacheri
:-) கொஞ்சம் மாதுளை எடுத்துக்கறேனே? என்னது சுதா கச்சேரி இப்போ தான் கேக்கறீங்களா?!! :O அம்மா என்னை வருஷா வருஷம் எல்லா கச்சேரிக்கும் இழுத்துன்டு போவாங்க, நானும் அங்க போய் 10 நிமிஷத்திலே சுகமா தூங்கிடுவேன்.. ஏ.ஸி. ஹால்ல cushion சீட்டுல உக்காந்து தேன் குரல்ல பாட்டு கேட்டா அதான் கதி. Fond memories.. :)))
எனக்கெல்லாம் பலகாரத்துக்காகத்தான் பண்டிகை :)
கலக்குறிங்க டீச்சர் ;)
ஸ்பைரல் ரிங் நல்லா இருக்கு.
மாதுளை இருக்குனு தெரிஞ்சிருந்தா நானும் வந்திருப்பேனே:)
பண்டிக்கைகாக பலகாரமா, இல்லை பாலகாரத்துகாக பண்டிகையா என்ற தலைப்பு அருமை, ஆனா பாருங்க நம்ம இந்தியா வித விதமா தட்ப வெப்ப நிலை கொண்டது,ஒவ்வெறு பண்டிகையும் ஒரு பருவகாலத்தின் தொடக்கம் அல்லது முடிவில் தான் வரும். ஆதாலால் நமது முன்னெர்கள் இந்த பருவகாலங்களை எதிர்கொள்ள நமக்கு பண்டிகையும் அதுல இருந்து நம்ம உணவுமுறை மாற்றங்களையும் போதிக்கறாங்க. இப்ப முதல வர்ர சித்திரைக்கனில வெய்யில் காலம் அதனால கனிவகை, அப்புறம் வர்ர கோகுலாஸ்டமில வெண்ணெய் மற்றும் கடலை மாவில் செய்த பலகாரம் உடல் வலு மற்றும் உடல் முறுக்கை தரும் ஏன்ன அது இளவேனிற்க்காலம், அப்புறம் வர்ர பிள்ளையார் சதுர்த்தி கொளுக்கட்டை நம்மை குளிர்காலத்திற்க்கு இட்டு செல்லும்.
வேனிற்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்கும்முன் விலங்குள் கூட தமது உடம்பில் புரொட்டீன் அளவை அதிகரிக்குமாம் ஏன்ன அது குளிர்காலத்தை சமாளிக்க, இதுதான் நவராத்திரி சுண்டல்.இதுக்கு பின்னால குளிர்காலத்துல உடல் சூட்டை சரிசெய்ய கார்த்திகை பண்டிகை வரும் அதுல பொறி,அப்பம்,எள்ளு போன்றவை உடல் சூட்டையும் நமது ஆரொக்கியத்தையும் பாதுகாக்கும், இதில் இருந்து தெரிவது பண்டியகையும் பலகாரமும் நமது உடல் மன ஆரொக்கியத்துக்கு அவசியம். சுய்யம்,சித்துருண்டை,அவல்,முறுக்கு,தெங்குழல் படத்துக்கு பதிலா தமிழினி பலகாரமா, பரவாயில்லை உடல்னிலை சரியில்லை என்பதால் ஏற்றுக்கொள்கிறம். பதிவு இட்டமைக்கு, நன்றி டீச்சர்.
வாங்க ஆயில்யன்.
ரெண்டு பீஸ் அதுலே இருக்கு. அதையும் நீங்க(ளே) எடுத்துக்கலாம்:-)
வாங்க புதுகைத் தென்றல்.
காற்றுள்ளபோதே.......:-)))))
இந்தப் பழமொழிக்கு இன்னொருப் பொருள் கூட இருக்கோ!!!!
வாங்க குமார்.
சீடை முறுக்கெல்லாம் இல்லாமலென்ன?
வருசம் முழுசும் அதுதான்:-))))
சரவணபவன் உபயம்.
வாங்க ராம்ஜி யாஹூ.
மீண்டும் வருக. ஆதரவுக்கு நன்றி.
வாங்க பொற்கொடி.
வழக்கமான ரெண்டு இல்லை மூணு வாரம் சென்னை விஜயத்தில் கச்சேரிச் சான்ஸ் கிடைப்பது கஷ்டம்.
சிடியிலும், டிவிடியிலும் நிறைய சுதாவின் கச்சேரி கேட்டாச்சு. நேரில் இப்போதான் முதல்முறை.
சென்னையை விட்டுப்போய் 34 வருசம் ஆச்சு எனக்கு.
வாங்க சின்ன அம்மிணி.
என் பொண்ணும் பலகாரத்தை வச்சுப் பண்டிகையைக் கண்டுபிடிச்சுருவாள்.
வாங்க கோபி.
கலக்குனா ஒருநாள் தானாத் தெளியாதான்னுதான்:-)
வாங்க வல்லி.
நீங்க வர்ற அன்னிக்கு மாதுளை நைவேத்தியம்தான், வித் ஒன் கண்டிஷன்.
நீங்களே உரிச்சுக்கணும்:-))))))
வாங்க பித்தன்.
அந்தக் காலக் க்ளைமேட்டுக்கு எல்லாம் பொருந்தி இருக்கும். இப்போ?
சென்னையில் ஒரே காலம்தான். பயங்கரச் சூடு(-:
Post a Comment