எத்தனை முறை சென்னைக்கு வந்துருக்கேன்......போகணுமுன்னு தோணலையே..... எல்லாத்துக்கும் ஒரு நேரமுன்னு இருக்குல்லே?
அண்ணா நூற்றாண்டு விழாவைச் சாக்குவச்சாவது போய்வரணும். எப்படியும் இந்த மாசம்பூராவும்தானே விழா? அறிவிப்பு ஒன்னு பார்த்த நினைவு.
பாசாதியைக் கண்டுக்கப்போய்வரணும். அப்படியே அண்ணாவையும். மெரினாவை வேற 'அழகு படுத்தி' இருப்பதா ஒரு சேதி ஒன்னு தினசரியில் இருந்துச்சே....
உழைப்பாளர் சிலைக்குப் பின்புறம் இருக்கும் கார்ப்பார்க்கில் இறக்கிவிடப்பட்டோம். எங்கும் 'ஜே ஜே'ன்னு கூட்டம். தமிழ்நாடு முடிதிருத்துவோர் மாநாடுன்னு பேனர் கட்டுன வண்டிகள் ஏராளம்.
ராய்சவுத்தரி செதுக்கிய சிற்பம். விலா எலும்புகள் வரிவரியாத் தெரிய உழைக்கும் மக்கள். கூடவே நின்னு நாமும் அந்தக் கல்லை நெம்பித் தள்ளலாமான்னு தோணும் வகை. பீச் ரோடில் பயங்கரமாப் போக்குவரத்து. எதிரில் கம்பீரமா நிக்கும் முகலாயர் கட்டிடக் கலையைச் சொல்லும் கோபுரம். சேப்பாக் பில்டிங்ஸ். சென்னைப் பல்கலைக்கழகம்.
முதல் சமாதியில் பயங்கரக் கூட்டம். எம்ஜிஆர், 70 வயசு வரை இருந்துருக்கார். இடதுபக்கம் அவர் வாழ்க்கை வரலாறு.சுருக்கமாச் செதுக்கிவச்ச பளிங்கு. (கடைசி வரியில் அண்ணாவின் இதயக்கனின்னு இருந்துச்சு. எவ்வளோ பொருத்தம் பாருங்க.....அண்ணாவும் இவரும் ஒன்னாவே இருக்காங்க இல்லே!)
நல்ல விஸ்தாரமான இடம்தான். சலவைக்கல் இழைச்ச அழகிய மண்டபங்கள், நடைபாதைகள், நடுவில் புல்வெளின்னு இருக்கு.
முன்பக்கம் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகே இருந்து படம் எடுத்துக்கொள்ளும் ரசிகர்கள், அவர் வாழ்ந்தக் காலக்கட்டத்தில் இருந்த மக்களின் அடுத்த தலைமுறைகள், அவர்களின் பிஞ்சுகள்னு அவருக்கான ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம்கூடக் குறையலை. அதான் தினமும் எதாவது ஒரு தொலைக்காட்சியில் ஒரு எம்ஜிஆர் படமாவது வந்துக்கிட்டுத்தானே இருக்கு. இப்பவும் ஊர்ப்பக்கங்களில் பழைய எம்ஜிஆர் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்காமே. உண்மையான 'வசூல்மன்னன்'!
பாதி மலர்ந்தத் தாமரை மொட்டு வடிவத்தில் சமாதியைச் சுற்றி அமைப்பு. தூங்கா விளக்கு. கறுப்புச் சலவைக்கல்லால் இருக்கும் சமாதியில் தலையைச் சாய்ச்சுக் காதை வச்சுக் கேட்கும் சனம்.( இதுக்கெல்லாம் ஒரு ஆள் ஆரம்பிச்சாப் போதும். வாரசனம் முழுக்க என்னமோ இருக்குன்னு செஞ்சு பார்க்குறாங்க! ) என்ன கேக்குதுன்னு கேட்டேன். கடிகார சத்தம் 'டிக் டிக்'ன்னு கேக்குதாம். ஐயோ...இதயத் துடிப்பா? இல்லையாம்...... அவருடையக் கைக்கடிகாரத்தோடு புதைச்சுருக்காங்களாம். ஆட்டோமேடிக் கடிகாரமாம். அதன் இயக்கம் மட்டும் நிக்கவேயில்லை(யாம்) அட! ஆச்சே...22 வருசம். இன்னுமா?
( இந்த வினாடிதான் கட்டுரைக்கானத் தலைப்பைச் சொன்னார் கோபால்:-)நன்றி)
நேத்துதான் ஈத் பண்டிகை நாள். விழா முடிஞ்ச கையோடு புத்தாடைகள் பளபளன்னு ஜொலிக்க இசுலாமிய சகோதர சகோதரிகள் குடும்பத்தோடு உல்லாசமாச் சுத்திப் பார்க்க வந்துக்கிட்டே இருந்தாங்க. ஒரு மாசம் நோம்பு இருந்த சோர்வுகூட முகத்தில் தெரியலை. அங்கேயே இடதுபக்கம் ஒரு அருங்காட்சியகம் இருக்கு. சிலவருசங்களுக்கு முன்னால் திநகரில் இருக்கும் நினைவில்லத்துக்குப் போனதால் இங்கே நுழையாம, வந்த வேலையைப் பார்க்கலாமுன்னு அடுத்த சமாதிக்கு விரைந்தோம். ரெண்டுக்கும் நடுவில் ஒரு காவல் நிலையம் இருக்கு. ப்ளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு தகவல் பலகை ஒன்னு இருக்கு. ஆனால் ரொம்பப் பொடி எழுத்துகள். நம்ம மக்கள்ஸ் நின்னு படிப்பாங்களான்றது சந்தேகம்தான்(-:
அதுகிடக்குக் கழுதைன்னு கடந்துபோறது......... சகஜம்.....
நுழைவாசலில் கம்பரும், இளங்கோவடிகளும் ஆளுக்கொரு பக்கமாச் சிலையா நிக்கிறாங்க. உலகத் தமிழ் மாநாட்டின் நினைவுச் சின்னங்கள்.
எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது என்று பொறிக்கப்பட்ட மேடை. உள்ளே நுழைஞ்சு வரும்போது அண்ணாவின் மார்பளவு சிலை, வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம், அருங்காட்சியகம், அலங்கார மண்டபம், அணையாவிளக்கு, எவர் 'ஆட்சி'யில் நிறுவப்பட்டது என்பதெல்லாம் அங்கே போலத்தான் இங்கும். (நான் பேசாம முதலில் இங்கே வந்துட்டு அங்கே போயிருக்கணுமோ?)
அண்ணா 60 வயதுவரை இருந்துருக்கார். இவர் இறந்தே நாற்பது வருசங்கள் ஓடிப்போச்சு.ரெண்டு மரணத்துக்கும் இடைப்பட்ட பதினெட்டு வருசங்களில் தமிழ்நாட்டின் நிலை, வளர்ச்சி எல்லாம் எப்படி இருந்துச்சுன்னு கொஞ்சம் ஆராய்ஞ்சு பார்க்கணும்.
இங்கே அவ்வளவாக் கூட்டம் இல்லை. சமாதிக்குப் பின்புறம் கடல்மண்ணுக்கு இடைப்பட்ட இடத்தில் இருக்கும் புல்வெளிக்கு இன்னும் கொஞ்சம் பராமரிப்புத் தேவைப்படுது. அடிக்கும் வெய்யில் கொஞ்சமா என்ன?
அங்கிருந்து நீண்டுகிடக்கும் கடற்கரை மணல் வெளியைப் பார்த்தப்ப..... 'இவ்வளவு நல்ல ப்ரைம் லொகேஷன் இப்படிச் சமாதிகளுக்குன்னு ஆகிருச்சே'ன்னேன். 'அதனால் என்ன? குறைஞ்சபட்சம் இது இருக்கறதால் இந்தப் பகுதியாவதுக் கொஞ்சம் சுத்தமா இருக்கே. அதை யோசி'ன்னார் கோபால். அட.... ஆமாம்ல்லெ.
நம்ம மக்கள்தான் சுற்றுப்புறத்தைச் சுத்தமா வச்சுக்கறது நம்ம கட்டாயக் கடமைன்னு நினைக்காம.....இயல்பாவே சுத்தமா வச்சுக்கும் நிலைக்கு உயரணும். காவல்நிலையத்தின் முன் பக்கச்சுவர்கள்கூட கழிப்பிடங்களா மாறிக்கிட்டு வருது. இத்தனைக்கும் இது பரபரப்பான பீச் ரோடு (அப்படி என்னாங்கடா...அடக்கவே முடியாம?)
ஆனால் ஒன்னு..... இதுவரை நாங்கள் டெல்லியிலும் மற்ற நாடுகளிலும் பார்த்த தலைவர்கள் சமாதிகள், போர் நினைவிடங்களை ஒப்பிட்டால் தரத்தில் எள்ளளவும் குறைவில்லாமல் அழகா அம்சமாத்தான் இங்கேயும் அமைச்சுருக்காங்க.
இன்னும் காந்தி, காமராசர், பக்தவத்சலம், மூப்பனார்ன்னு நினைவிடங்கள் பாக்கி இருக்கு. அதையும் ஒரு ரவுண்டு போய்ப் பார்க்கத்தான் வேணும். போனாச் சொல்றேன்.சரியா?
Friday, September 25, 2009
காது கொடுத்துக் கேட்டேன்.....குவாகுவா சத்தம்????!!!
Posted by துளசி கோபால் at 9/25/2009 09:01:00 PM
Labels: அண்ணா நூற்றாண்டு, அனுபவம், எம் ஜி ஆர். சமாதி
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
ஹி, தலைப்புக்கான விஷயம் இதில எங்கே எங்கேன்னு தேடிட்டே வந்தேன்:)!
//போனாச் சொல்றேன்.சரியா?//
போய் வந்து சொல்லுங்க, கண்டிப்பா!
என்னது டிக் டிக் சவுண்டு கேட்குதா? 15 வருடங்களுக்கு முன்பு நான் போன போது ஒன்றும் கேட்கவில்லையே!!
:-)
நம்ம ஊருக்கு போகும் போது சைடுல ஒரு பார்வை அம்புட்டு தான்.
டிக் டிக் எல்லாம் கேட்குதா!!?? இந்த கதை எப்போ ஆரம்பிச்சாங்க? ;))
பதிவை மெதுவாப் படிச்சுக்கறேன், முதல்லே வாழ்த்துகளைப் பிடிங்க! :))))))))))))))))))))))))
வரவங்க வருவாங்க வராதவங்க வரமாட்டாங்க:)
இன்னிக்கு ரெஸ்ட் டேன்னு நான் நினைச்சேன். இன்னிக்கும் மழைல அங்க போனீங்களா:)
டிக் டிக் சத்டம் கேக்கறதா.!!!!
அதிசயமால்ல இருக்கு. போய்ப் பார்க்கணும். நாங்க எங்க பீச்சைத் தாண்டி ஒரு அடி எடுத்துவச்சதில்லை. காம்ராஜரோட எங்க நடை முடிஞ்சுடும். வெளியூர்க்காரங்க சொன்னாதான் நாங்க போய்ப் பார்ப்போம்:))))))
குவாகுவா சத்தம் பாட்டு சினிமாவில்
பாடினார், அவர் சமாதியில் டிக் டிக்
கேட்குதா?
தலைப்பு பார்த்துவிட்டு யாருக்கோ குழந்தை பிறந்து வாழ்த்து பதிவோன்னு நினைச்சேன். படங்கள் அருமை டீச்சர்!!
இந்த பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
உலகப் புகழ் பெற்ற முக்கியமான இடம் மிஸ்ஸிங்.
ஆமா சென்னை வலைப் பதிவர்கள் கூடும் (டி குடிக்க ) இடம் மிஸ்ஸிங்,
காந்தி சிலை பின்புறம்.
இன்னும் சில நாட்களில் பேருந்து, அஞ்சல் கோடில் இந்த காந்தி சிலை பெயரே மாற போகிறது, சென்னை பதிவர் சந்திப்பு இடம் என்று.
Thanks for nice post , pictures.
Kayyile vennaiayai vachu naam neykku alaivadhu pola, touring dubai singapore america.
Attendance :-)
அம்மா நலமாய் இருக்கிறீர்களா?
வெகு நாள் கழித்து இங்கு வந்தேன்.
புகைப்படங்கள், நேர்த்தியாய் இருக்கின்றன.
எழுதும் விதமும் எழுத்தும் மிக அருமை.
கடிகாரத்தின் 'டிக் டிக்' சத்தம் கேக்கலையா டீச்சர்.....
தலைப்பை பார்த்தவுடனேயே பதறிப் போயி ஓடியாந்தேன் டீச்சர்.
இப்படி ஏமாத்திப்புட்டீங்களே..!
நம்ம மெரீனா பீச்சை நமக்கே கிளாஸ் எடுக்குறீங்க..!
காந்தி மண்டபம் பக்கம் போனீங்கன்னா மதியம் 2 மணிக்குப் போங்க.. அப்பத்தான் நிறைய ஸ்கூப் நியூஸ் கிடைக்கும்..!
சென்னையிலேயே இருந்தாலும் இங்கெல்லாம் போய் வருட கணக்காகி விட்டது டீச்சர்
சென்னைக்கு அடிக்கடி போனாலும் நாங்க எல்லாம் இந்த ஏரியா போய் பல வருசம் ஆகிடுச்சு, எம்.ஜி.யார் சமாதி கட்டுன புதுசுல போனது. அண்ணா சமாதி உள்ள போகனும் ஆசைகூட வரவில்லை. நல்ல பதிவு. ஆமா மிளகாய் பஜ்ஜியும், பானி பூரி, பட்டாணி சுண்டல் சாப்பிடுல்லையா?
வாங்க ராமலக்ஷ்மி.
சொல்லாம இருப்பேன்னு நீங்க நினைக்கமாட்டீங்கதானே?
ரகசியம் காக்க முடியலைப்பா:-))))
வாங்க குமார்.
சத்தம் கித்தம் ஒன்னும் கேக்குமுன்னு தோணலை.
நம்ம மக்கள்..... வாலறுந்த நரிகள்:-)
வாங்க ஐந்திணை.
முதல் வரவோ?
நன்றி.
வாங்க கோபி.
பீச் ரோடில் போகும்போது வண்டியில் இருந்தே, எப்போதும் ஒரு பார்வை.
இந்தமுறைதான்.....
அருகில்போய்ப் பார்த்தது மகிழ்ச்சியாத்தான் இருந்துச்சு.
வாங்க கீதா.
பிடிச்சுவச்சுக்கிட்டேன் உங்க வாழ்த்து(க்)களை:-)
வாங்க வல்லி.
அவுங்களுக்குன்னு ஒரு சிலை வச்சுக்கிட்டோம் இல்லை. அங்கே மட்டும்தான் போவோம்:-)
நாங்க ஷ்மிட் மெமோரியல். தூரத்துலே இருந்தே பார்த்துக்கிடுவோம். பக்கத்துலே அண்ட முடியாது....யக்(-:
வாங்க கோமதி அரசு.
ஆமாம். அது அவர் சினிமாவில் பாடின(?) பாட்டுத்தான்.
கோபால் ஒரு எம்ஜிஆர் ரசிகர். அதான் மறக்காம அந்தப் பாட்டை எடுத்துவிட்டார்:-))))
குவாகுவான்னு சத்தம் கேட்டது உண்மை, அது நம்ம பின்னால் வந்தவர்களின் கைக்குழந்தை அழுத சப்தம்!
வாங்க அபி அப்பா.
யாருக்கோ குழந்தைகள் பிறந்துக்கிட்டுத்தான் இருக்கு எப்பவுமே.
இல்லாமலா கிட்டத்தட்ட 1.2 பில்லியன் ஆகி இருக்கும்?
வாங்க ராம்ஜி யாஹூ.
இன்னும் ஒருமுறைகூட அந்த உலகப்புகழ் இடத்தில் பதிவர்களைச் சந்திக்கலை(-:
நேற்று அடாத மழையிலும் விடாமல் சிலைவரை போய்வந்தேன். ஆனாலும் யாரையும் பார்க்க முடியலை.
கேபிளார் மூலம் தெரிஞ்சது, எல்லாரும் மரத்தடியில் இருந்தாங்களாம்.
வாங்க நன்மனம்.
பதிஞ்சுட்டேன்:-)
வாங்க அந்தோனி முத்து.
எப்படி இருக்கீங்க?
உங்களை ஒரு நாள் வந்து சந்திக்கணுமுன்னு நினைச்சுருக்கேன். வருமுன் தகவல் தெரிவிக்கிறேன்.
வாங்க துபாய்ராஜா.
நீங்க புதுசா ஒன்னு துபாய்லே இருந்து வாங்கிவந்து சமாதியில் மாட்டுங்க. சத்தம் கேக்காமப்போகாது:-))))
வாங்க உண்மைத் தமிழன்.
எதுக்கு இப்படிப் பதற்றம்? பாருங்க ஆஸ்பத்திரி வரை உங்களைக் கொண்டுபோயிருக்கு இது(-:
ரெண்டுமணியை 'நோட்' பண்ணிக்கிட்டேன்!
வாங்க நான் ஆதவன்.
உள்ளூர் விஷயத்தை எப்பவுமே அப்புறம் பார்த்துக்கலாமுன்னு தள்ளிப்போட நமக்குத் தெரியாதா என்ன?
இனிமேல் முன்னுரிமை உள்ளூருக்கு மட்டுமே:-)
வாங்க பித்தன்.
அதான் நாம் இப்படியெல்லாம் இருக்காம நம்மைச்சுத்தி இருப்பதைக் கண்டுக்கிடணும்.
வீட்டை விட்டு வெளியே போனால் பேசறதுக்கு மட்டுமே வாயைத் திறப்பேன்:-)
அதிலும் இந்தமாதிரிப் பொது இடங்களில் மூச்.....
(இங்கே மூச்சுவிடவும் சிரமம். ஆஸ்த்மாக்காரிக்கு அபாயம் அதிகம்)
Post a Comment