ஒருநாள் 'இன்றைக்குள்' போய்விட்டு வந்துடலாமேன்னு....
ஆடிப்பூரத்துக்கு நம்ம ஆண்டாளுக்கு அலங்காரம் பண்ண வேணாமோ ? ஒரு அஞ்சு மாசத்துக்கு முன்னே கொஞ்சம் (!) நகைநட்டுக்கள் அவளுக்குக் கிடைச்சது. உள்ளூர்த் தோழியிடமிருந்து வாங்கினேன். வருஷப்பிறப்புக்கு அதிலிருந்து ஒரு நெக்லெஸைப் போட்டு விட்டாச். ஆனாலும் ஒரு ஹாரம் காத்திருக்கேன்னு எனக்கு.... சிகப்புக்கல் பதக்கமும் பச்சைக் கல் மாலையுமா......
அலமாரியில் தேடினப்ப சிகப்பு வண்ணப்புடவை (!) ஆப்ட்டது. பச்சை ப்ளவுஸ் வேணுமே..... அவளுடைய உடைப்பெட்டியைக் குடாய்ஞ்சால் ..... ஊஹூம்..... என்ன அநியாயம்...
வச்சுக்கொடுத்த ப்ளவுஸ் பிட்ஸ்களில் தேடினேன். ஆ..... கிடைச்சுடுத்து ! தைச்சுட்டேன். வைர பார்டர் :-)
நேத்து ராத்ரி, அலங்கரிக்க நேரம் கிடைச்சது. அவளைக் கூப்பிட்டு சோஃபாவில் ஏறி நிற்கச் சொன்னேன். ஏறி நின்னது இருவர் !
புடவை அகலம் அதிகம், ஜரிகையும் முழநீளம் அவள் கையளவில்! ரெண்டாக மடிக்க வேண்டியதாப் போச்சு. மடிஸாரும் கட்டிவிட்டாச். முந்தானையில் கூடுதல் சரிகை வேலைப்பாடு. அதனால் தளர்வாக மடிக்க முடியலை. கொஞ்சம் மொறைச்சுண்டு நிக்கறதோ ? ( ஐ மீன் ஜரிகை)
கொஞ்சநேரம் எல்லாத்தையும் கவனிச்சவன்,' நீ அலங்காரம் பண்ணிண்டால் நேக்கு என்ன?' என்ற பாவத்தில் ஓரமாப் படுத்துக் குறட்டைவிட்டு ஒரு தூக்கம். ஆரம்பத்தில் நாலு க்ளிக்ஸ்.
நாங்க லேடீஸ் மட்டுமே தொடர்ந்து அலங்காரங்களைச் செய்து முடிச்சோம். அவளும் நல்லாவே ஒத்துழைச்சாள். தெரியாமப் பின் குத்தினாலும் அழுகை இல்லை. சாந்த ஜீவி !
எல்லாம் ஆச்சு.... கிளியைக் காணோம் ! போனவருஷத்துக்கிளி எங்கே பறந்து போச்சோ! காமணிக்கூறு தேடலில் கிடைச்சது.
என்ன ஒன்னு.... நடுவில் படங்கள் எடுக்க முடியலை. ஓர்மை வந்தப்ப.... மொபைல்ஃபோனில் சார்ஜ் இல்லை. பவர் பேங்க் எடுத்துவந்து கொஞ்சம் க்ளிக்ஸ்.
மறுநாள் மூலவர் ஆண்டாளை, உற்சவராகத் 'துளசிமாடத்தின் ' முன் வச்சு பூஜை ஆச்சு. இடும்பி வீட்டு 'நெய்'வேத்யம்..... கேரட் ஹல்வா :-)
அனைவருக்கும் திரு ஆடிப்பூரம் வாழ்த்துகள்! கூடவே நம்ம ஜன்னாண்டாளின் தாயின், அன்பும் ஆசிகளும்!
நல்லா இருங்க !
4 comments:
படங்கள் அழகு.
திருவாடிப்பூர வாழ்த்துகள். செகத்துதித்தவளின் ஆசி நம் எல்லோருக்கும் கிட்டுவதாகுக
அலங்காரம் ஜோர். ஆனால் முடியை கொஞ்சம் ஒதுக்கி பின்னலிட முடியாதோ...
வாங்க நெல்லைத்தமிழன்,
எல்லாம் அவன் & அவள் அருள் !
வாங்க ஸ்ரீராம்,
சுருட்டை முடி. அதுவும் Bobbed. ஒன்னும் செய்ய முடியாது !
Post a Comment