சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பிச்சு 75 வருடங்கள் ஆச்சு !
காலை ஏழுமணிக்குக் கிளம்பிப்போறோம், இந்திய சுதந்திரதினக் கொடியேற்றும் வைபவத்திற்கு ! நடுக்கும் குளிர்... மைனஸ் ஒன்னு. நண்பர் ஹிடேஷ் ஷர்மா, அவருடைய நிறுவனத்தில் கடந்த எட்டு வருஷங்களா நடத்திக்கிட்டு வர்றார். அதுக்கு முன்.... வெவ்வேறு நபர்களால், வெவ்வேறு இடத்தில்... எது எப்படியோ.... சுதந்திர தின விழாவிற்கான முதல் கொடியேற்றம் இங்கே நம்ம ஊரில்தான் ! டேட் லைனில் இருக்கோமே !
கொடியேற்றி வைத்தவர் இந்திய ராணுவத்தின் அதிகாரி Lt. Col. Sadat Naseem அவர்கள். போன வருஷமும் இவரே கொடியேற்றினார். பணி ஓய்வுக்குப்பின் இங்கே நியூஸியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் இங்கே நம்ம ஊரில் வசிப்பதுகூட எங்களுக்குப் பெருமை தரும் விஷயமே!
வேலைநாளாக இருந்ததால், வழக்கத்தைவிடக் கூட்டம் குறைவுதான். அதனால் என்ன ? எல்லோர் மனதிலும் போகமுடியலையே என்ற நினைப்பு இருக்கத்தானே செய்யும், இல்லையோ ?
https://www.facebook.com/1309695969/videos/1107297323476819/
கொடியேற்றி வணக்கம் சொல்லி முடிச்சதும் சிலபல க்ளிக்ஸ் ஆச்சு! சிற்றுண்டி வகையில் பஜ்ஜியாவும் நல்லதொரு மசாலாச் சாயாவும்.... குளிருக்கு நல்ல இதம் !
நம்ம வீட்டிலும் ஜன்னுவும் க்ருஷ்ணாவும் விழாக்கால அலங்காரத்துடன் ஜொலிக்கிறார்கள். பாரதமாதாவும் கையில் கொடியேந்தி, மூவர்ணச் சாட்டையுடன் நிற்கிறார், தேசத்ரோகிகளை விளாசித்தள்ள !
வாங்க நாமெல்லோரும் சேர்ந்து பாடுவோம்..... மஹாகவி நம் பாரதியின் தாயின் மணிக்கொடி பாரீர்... அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்.....
https://youtu.be/ggD6oliUF-Q
மேற்படிப் பாடலை நினைவுகூர வைத்த இனிய தோழி பத்மா அர்விந்த் அவர்களுக்கு என் நன்றியும் அன்பும்!
நண்பர்கள் அனைவருக்கும் இந்திய சுதந்திரநாளுக்கான இனிய வாழ்த்துகளோடு எங்கள் அன்பும் ஆசிகளும்!
1 comments:
சுதந்திர தின விழா சிறப்பான படங்கள்.
சுதந்திர தின வாழ்த்துகள்.
Post a Comment