Wednesday, February 10, 2021

பெங்குவின் வேட்டை !!

'பெங்குவின்களை ஊருக்குள்ளே வுட்டுருக்கோம். போய் வேட்டையாடிக்குங்க'ன்னு ஒரு சேதி கிடைச்சது. ஆஹா.....  விடக்கூடாது !
இந்த மாதிரி வேட்டைகள் ஒன்னும் எங்களுக்குப் புதுசில்லை கேட்டோ !   ஏற்கெனவே ஒரு ஆறு வருசத்துக்கு முந்தி ஒட்டைச்சிவிங்கிகளை வேட்டையாடி இருக்கோமே !   இங்கே நம்ம துளசிதளத்தில் பதிவெல்லாம் போட்டுருந்தேனே !








இந்த 2020 வது வருஷம், கோவிட் உலகையே ஆட்டி வைக்குமுன்னு யாருக்குத் தெரியும்?  உலகம் முழுசும் (சீனாவைத்தவிர ) எல்லோரையும் முடக்கிப் போட்டுருச்சே.........

நியூஸியில் ஒரு வழியா இதன் வெறியாட்டத்தை நிறுத்தியாச்சுன்னாலும், மற்ற நாடுகளில்  ஆட்டம் இன்னும் நிறுத்தப்படாததால்.... எங்களுக்கு நாட்டை விட்டு வெளியில் போக அனுமதி இல்லை.  இப்ப இங்கிருக்கும் கோவிட் மக்களும்,  வெளிநாட்டுக்குப் போயிட்டுத் திரும்ப இங்கே வந்தப்ப அந்தச் சனியனைக் கையோடு கூட்டியாந்தவங்கதான்.  பார்டரை மூடிட்டுத் தொலைச்சுக் கட்டிட்டோமுன்னு  மூணு,மூணரை மாசம் நிம்மதியா இருந்தமா.....    நம்மாளுங்க  இங்கே வராமா எங்கே போவாங்கன்னு 'பார்டர் கதவை'த் திறந்தா.... திமுதிமுன்னு உள்ளே வந்துருச்சு....   ப்ச்.

வந்தவங்களை ரெண்டுவாரம் தனியா வச்சு, நம்ம காசுலே  சொகுசு வாழ்க்கை எல்லாம் கொடுத்தது.... தனிக்கதை. ஏற்கெனவே நம்ம தளத்துலே புலம்பி வச்சுருக்கேன்.
இத்தனை ஆர்பாட்டமும் வடக்குத்தீவுலேதான். நாங்க தெற்குத்தீவில் நோயில்லாமல்தான் இருக்கோம்.  ஆனால்....  பங்காளி கஷ்டப்பட்டா  நாம் மகிழ்ச்சியா இருக்கக்கூடாதுன்னு நினைச்ச அரசு எங்களையும் தண்டிச்சு வச்சது. இதுலே எங்கூரு சிட்டிக்கவுன்ஸிலோ இன்னும் பத்துபடி மேலே போய் , மக்கா.... உங்களுக்கு இப்போ துக்கநாள். ஒன்னையும் கொண்டாட விடமாட்டோமுன்னு  கங்கணம் கட்டி ஆடுனா நாங்க எங்கே போக ?

வருஷாவருஷம் நடக்கும் குளிர்கால ஒளிவிளக்கு அலங்காரம்,  கைஃபாக்ஸ் டே வானவேடிக்கை இப்படி சிலதை இல்லைன்னுட்டாங்க. 

  போயிட்டுப்போகுதுன்னு இருந்தால் நாட்டின் மிகப்பெரிய பண்டிகைக்கான  க்றிஸ்மஸ் சாண்ட்டா பரேடு இல்லைன்னு சொன்னதுதான் ரொம்பவே ஏமாத்தமாப் போச்சு.  இத்தனைக்கும்  'அந்த நோய்'  இருக்கும் வடக்குத்தீவில்  இதெல்லாம் நடந்துருக்கு. நோயே இல்லாத எங்க தீவில்  கொண்டாட்டமே கிடையாதுன்னா எப்படி ? 
காரணம் என்னன்னு கேட்டதுக்கு வந்த பதில் காசில்லையாம் !  எப்படி ?  அப்பப்ப வீட்டு வரியை அவுங்க இஷ்டத்துக்கு ஏத்திக்கிட்டு இருந்தாங்கதானே ? அதெல்லாம் எங்கே போச்சாம் ?  நிலநடுக்கத்தில் அழிஞ்சு போனதை மீண்டும் கட்டிக்கிட்டு இருக்கோமுன்னு ஒரு காரணம். போகட்டும். நல்லது.  இன்னொரு காரணம்தான்  எனக்கு எரிச்சல்.  மில்லியன்களில் செலவு செஞ்சு  சைக்கிளுக்கான தனிப்பாதையை ஊர் முழுக்கப் போடறாங்களாம். என்னவோ ஊர் சனம் முழுசும் காரை வித்துட்டு சைக்கிள் வாங்கப்போறாங்க போல.....  இந்த அழகுலே எனக்கு சைக்கிள் வேற ஓட்டத்தெரியாது. பாவம், 'நம்மவர்' எனக்காக சைக்கிள் ரிக்‌ஷாதான்  ஓட்டணும். இல்லேன்னா சைக்கிளுக்கு சைடு ஸீட் வச்சுக்கலாமான்னு தெரியலையே..... தேவுடா....

எங்கேயும் போகமுடியாம வீட்டோடு, ஊரோடு இருக்கும் சமயம், வருஷாந்திர பள்ளிக்கூட  கோடை விடுமுறை வேற வரப்போகுது.  புள்ளகுட்டிகளை எம்மாந்நேரம்தான் வீட்டுலே அடக்கி வைக்க முடியும் சொல்லுங்க ?  எதாவது செய்ய வைக்கலாமுன்னா என்னத்தை செய்யறது ?

அப்பதான் இப்படி பெங்குவின் ஐடியாவைச் சொல்லுச்சு வைல்ட் இன்  ஆர்ட் (Wild in Art ) என்ற நிறுவனம். இவுங்கதான்   அந்த ஒட்டைச்சிவிங்கியை ஊருக்குள்ளே விட்டது. 

இருபத்தியாறாயிரம் பள்ளிக்கூடப்புள்ளைகள், அறுபத்தியஞ்சு பள்ளிக்கூடங்களில் இருக்காங்க. ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஒன்னுன்னு மொத்தம் அறுபத்தியஞ்சு பெங்குவின்களை அந்தந்தப் பள்ளிக்கூடத்துப்புள்ளைகளே அலங்கரிக்கணுமுன்னு முடிவாச்சு. சின்னப்பசங்கன்றதால் பெங்குவினும் சின்ன சைஸுதான் :-)
பெங்குவின் என்றதும் எல்லோருக்கும் சந்தோஷம்தான். அது எங்க தெற்குத்தீவுக்கே சொந்தமான, பரிச்சயம் அதிகம் இருக்கும் சமாச்சாரம்தான்.  நாங்க  தென்துருவத்துக்கு ரொம்பப் பக்கத்துலே இருக்கோம், தெரியுமோ ?
இந்தப் பெங்குவினில் கூட அஞ்சு வகை இருக்கு.  ஆளைவிட உயரமான பெரிய எம்பெரர் பெங்குவின் முதல் சின்னக்கோழி சைஸில் இருப்பவை வரை !
போனவருஷம் (2020 ) ஜூன் மாசக்கடைசியில்  பெங்குவின்கள்  விமானத்தில்  வந்து இறங்குச்சு.  எங்கூர் நேஷனல் டிவியில் சொன்னாங்க. அப்போ இருந்து எதிர்பார்ப்புக் கூடியது உண்மை !

https://www.youtube.com/watch?v=yR47blkxVwo

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/yR47blkxVwo" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
 
மேலே ரெண்டு லிங்க் கொடுத்துருக்கேன். எது வேலை செய்யுதுன்னு பாருங்க ! இப்பெல்லாம்  ரொம்பக் குழப்பமா இருக்கு ப்ளொக்ஸ்பாட்.... ப்ச்
அறுபத்தியஞ்சு சின்ன சைஸ் பெங்குவின்களை   அறுபத்தியஞ்சு சின்னப்பசங்க.... பள்ளிக்கூடங்களுக்கு (ஹைஸ்கூல் தவிர ) அனுப்பியாச்சு. தீம் என்னன்னு சொல்லிட்டாங்க. The penguins highlight themes like climate change, community, Antarctica, creativity, innovation and exploration.  இதுலே எதாவது ஒன்னு அவுங்க தேர்ந்தெடுத்துக்கலாம். பளிங்குபோல் மின்னும் பெங்குவின்களை  ஓவியத்தால் அலங்கரிப்பது அவுங்க பொறுப்பு !
 அம்பது பெருசுகளை, உள்ளூர் ஓவியர்களை வச்சு அலங்கரிக்கச் சொன்னாங்க.  இந்த அம்பதுக்குண்டான அலங்காரச் செலவை  சமாளிக்க ஸ்பான்ஸார்களும் கிடைச்சாங்க.  இனி என்ன  ?   வேலையை (ரகசியமா) ஆரம்பிச்சாச் !

நவம்பர் மாசம் மூணாவது வாரம் எல்லாம் பக்காவா ரெடி ஆகிருச்சு. எங்கெங்கே வைக்கப்போறாங்கன்னும் முடிவு செஞ்சாச்சு. அதுக்கான தயாரிப்பு வேலைகளையும்  செஞ்சுட்டாங்க.
நவம்பர் 29 ஆம் தேதி பார்த்தா....  ஊருக்குள் அங்கங்கே பெங்குவின்கள் !  சின்னதுகள்  மட்டும்  அவ்வஞ்சா.... பதிமூணு இடங்களில் !



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதெல்லாம் போய் பார்த்துப் படம் எடுத்து  அனுப்பணும். ஆமாம்...  எங்கெங்கே இருக்காம் ?  அதுக்கென்ன  பெரிய கவலை ? மாடர்ன் டெக்னாலஜி இப்போ கைவசம் இருக்கா இல்லையா ? இதுக்கான வெப்ஸைட் ஒன்னு தொடங்கியாச்சு !    ஆப்பு மேப்புன் னு  வகைவகையா இருக்கே  :-)அங்கிருந்து ஆப் ஒன்னு டவுன்லோடு பண்ணிக்கலாம்.  அப்ப ஓல்ட் ஸ்கூல் ஆளுங்க?  வரை படம் போட்டு அங்கங்கே வச்சாச் !  ஒன்னு எடுத்தாந்து வச்சுக்கலாம்.   போதாததுக்குப் பொன்னம்மான்னு Official Souvenir Guide ஒன்னு. விலை அஞ்சு டாலர். 

என்னத்துக்குக் காசை வீணாக்கணும் என்ற நினைப்பு வரமுடியாதபடி,  எல்லாப் பெங்குவின் படங்களும்,  அவை இருக்கும் இடங்களின் விவரங்களும் அட்டகாசமாப் போட்டு வச்சுருக்காங்க.  இந்தப் புத்தகத் தயாரிப்பு செலவு கண்டிப்பா அஞ்சுக்கு மேலேதான் இருக்குமுன்னு 'நம்மவர்' கணிப்பு !  
 எல்லாக்காசும் தர்மக் காரியத்துக்குப் போகுதுன்னு சொன்னேனோ ?
உள்ளூரில் இருக்கும் Cholmondeley Children's Centre க்குத்தான்  முக்கால்வாசி காசு போகுது. அப்ப  மீதி காலோ ?  பெங்குவின் இறக்குமதி இருக்கே !     

நவம்பர் 29 முதல் ஜனவரி 31 வரை வேட்டையாடிக்கலாம்.  ஊர்சனம் புள்ளையும் குட்டியுமாக் கிளம்பிப் போறாங்க. வெவ்வேற பேட்டைகளுக்குப்போக இது ஒரு சான்ஸ்!





பள்ளிக்கூட லீவு ஆரம்பிச்சதுலே இருந்து திரும்பப் பள்ளிக்கூடம் திறக்குறவரைக்கும்  பொழுதுபோக்கா இருக்கட்டுமேன்னு மொத்தம் ஒன்பது வாரத்துக்கு நேர்ந்துவிட்டாச்சு.  
வயசு வித்தியாசம் எல்லாம் இல்லை. இது எல்லோருக்குமானது. 
எல்லாத்தையும் பார்த்துட்டோமுன்னு ஒரு கூட்டம் கிளம்புச்சு. மகளின் தோழி குடும்பமும்   இதில் ஒன்னு ! அப்பப்ப ஃபேஸ்புக்கில் படங்களைப் போட்டுக்கிட்டே இருந்தாங்க. 

மகளும் மருமகனும் கடைசிநாள்தான்  வேட்டையைப் பூர்த்தி பண்ணாங்களாம். 

அப்ப நாங்க ?  சுமாரா வேட்டையாடினோம்.  நாங்க பார்த்த பெங்குவின்களை இந்தப் பதிவில் பரவலா அங்கங்கே போட்டு வச்சுருக்கேன் !


வேட்டை முடிஞ்சதும்,  நம்மூர் ஏர்ஃபோர்ஸ் ம்யூஸியத்துக்கு எல்லாப் பெங்குவின்களையும்  கொண்டுபோய் வச்சுருக்காங்க.  இந்த மாசம்  (ஃபிப்ரவரி 13 & 14 ) ரெண்டாவது வீக் எண்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறாங்க.  நமக்கும் எங்கெயும் ஓடாம ஒரே இடத்தில் பார்த்துக்கலாம்.  ஃபேர்வெல்லும் கொடுத்தமாதிரியும் ஆச்சு.

ரெண்டுநாள் கழிச்சு ஃபிப் 16க்கு  பெருசுகளை ஏலம் விடுவாங்க. அநேகமா ஸ்பான்ஸார் செஞ்ச  சில வியாபார நிறுவனங்கள்  சிலதை வாங்கிக்குவாங்க.  ( இப்பவும்  அங்கங்கே சில ஒட்டைசிவிங்கிகளைப் பார்க்கிறோமே ! )

 சின்னதுங்க எல்லாம் அந்தந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போயிரும் :-)



என்ன நடந்தாலும் நிலைகுலையாமல் நிமிர்ந்து நிக்கணும் என்றதைச் சொல்லும் விதமா அந்த ஒட்டைச்சிவிங்கி சமாச்சாரத்துக்கு Stand Tall ன்னு  சொல்லி இருந்தாங்க.  ரொம்பச் சரி. நாங்கதான் நிலநடுக்கம் வந்ததால், பாதி ஊரையே தொலைச்சுட்டு,  மனக்கஷ்டத்தோட இருந்தமே.....    இப்ப என்னன்னா  Flightless bird ன்னு பெங்குவின்களை காட்சிப்படுத்தியது............  கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் .... இதுவும் சரிதானோன்னு இருக்கு. எங்க சிட்டிக்கவுன்ஸில்,  அத்யாவசியத்தேவையைத் தள்ளிவிட்டுட்டுத் தன் இஷ்டப்படி ஆடிக்கிட்டு இருக்கு. நாங்க ஒன்னும் செய்ய முடியாம  கண்ணீர் விட்டுக்கிட்டு வேற போக்கில்லாம 'சிறகு இருந்தும் பயனில்லாமக் கிடக்கணுமு'ன்னு குறிப்பால் உணர்த்தி இருக்காங்க, இல்லே ? 



PINகுறிப்பு : கெட்டமனசுப் பன்னாடைகள் சிலது இங்கேயும் இருக்குதுங்க. நகரமையத்துலே வச்சுருந்த அழகான பெங்குவின் ஒன்னை, பீடத்தில் இருந்து பிடுங்கிக்கிட்டுப்போய்  சிதைச்சு ஒரு பார்க்கிலே போட்டு வச்சுருந்துருக்கு.  தகவல் கிடைச்சுத் திரும்பக் கொண்டுவந்து பழுதுபார்த்து வச்சால், திரும்பத் திருடிக்கிட்டுப்போயிருக்குது சனியன்கள்.  பழுதுபார்க்க முடியாத நிலையில் இப்ப ஆக்கிவச்சுருக்குதுகளாம்.  சே..... என்ன புத்தி பாருங்க....   ப்ச்.....
இவந்தான் அடிவாங்கினவன்.... பாவம்..... ப்ச்....    


11 comments:

said...

பெங்குவின் வேட்டை. ஆஹா. விதம் விதமாக யோசிக்கிறார்கள். உங்களுக்கும் சிறப்பான வேட்டை.

தொடரட்டும் சிறப்பான பதிவுகளும் படங்களும்.

said...

படங்கள்!  எப்போதுமே உங்கள் பதிவின் சிறப்புகள்.

said...

அது என்ன தமிழ் திரைப்படத்தில் வருகிற பாட்டு  சீன் மாதிரி ஒவ்வொரு போட்டோவில் ஒவ்வொரு டிரஸ் போட்டுக்கிட்டு சார் நிக்கிறார்.

 Jayakumar

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

மக்களை மகிழ்ச்சியா வச்சுக்கணும் என்பது அரசின் கடமை இல்லையோ ! ஹிஹி

said...

வாங்க ஸ்ரீராம்,

படங்களின் தரம் நல்லா இருக்கா ? இப்பெல்லாம், கெமெராவை எடுத்துப்போறதே இல்லை.... அதான் செல்ஃபோன் இருக்கேன்ற மெத்தனம்....

said...

வாங்க ஜயகுமார்,

வெவ்வேற நாட்களில் போனவை இல்லையோ !

said...

/Cholmondeley Children's Centre / அங்க நம்ம ஊர் சோழமண்டலத்தின் பெயரை வெச்சு இருக்காங்களா? பேஷ் பேஷ்..

நம்ம பள்ளியூடத்திலே இந்த மாதிரி பென்குயின் பிராஜெக்ட் எல்லாம் கிடையாதா?

said...

அப்பப்பா. புருவங்களை உயர்த்துமளவு அழகாக, விதம் விதமாக.. ரசித்தேன்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஆய்வுப்பணிகள் காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

said...

வாங்க கொத்ஸ்,

சோழர்களின் புகழ் தென் துருவம் வரை பரவி இருந்ததற்கு இதுவே ஒரு சான்று இல்லையோ :-)

நம்ம பள்ளிக்கூடத்துக்கு 'பெண் குவீன்' ப்ராஜெக்ட் எதுக்கு ? ஸ்பான்ஸார் செய்ய மட்டும் ஆட்கள் கிடைச்சாங்கன்னா..... ஊர் உலகம் முழுக்க யானைகளை நடமாடவிட்டு, படம் எடுத்து அனுப்பச் சொல்லலாம்.

அட்டகாசமா இருக்கும்!!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

வலையில் ஒரு வசதியே.... நேரம் கிடைக்கும்போது எட்டிப் பார்க்கலாம் என்பதுதானே!

ஆய்வுப் பணிகளுக்கிடையிலும், வருகை தந்ததற்கு மனம் நிறைந்த நன்றி !

said...

நல்ல முயற்சி. மிகவும் அழகாக இருக்கிறது.