அகமும் புறமும்.இதுலே எதை அமைப்பது கஷ்டம்? புறத்தை எப்படியாவது மேக்கப் போட்டு சமாளிக்கலாம் என்றாலும் அடிப்படையான அகத்தை அமைப்பதற்கு.... ஐயோ.... எவ்வளவு மெனக்கேடு பாருங்க. விட்டேனா பார்னு சவாலைச் சமாளிச்ச கதை இது:-)
போன முறை இந்தியப்பயணத்தில் பெங்களூரு போக ஒரு சான்ஸ் கிடைச்சது. மைத்துனர் குடும்பத்துடன் கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சபோது, கலசத்துக்கு வைக்கும் முகம் பார்த்ததும், நம்மூட்டுலே ரெண்டு சின்னக்குடங்கள் இருப்பது ஞாபகம்(!) வந்தது. இது மைத்துனர் மனைவியின் பரிசு என்பதால் ரெண்டு முகங்களும் வாங்கியாச். சம்பவம் நடந்தது 2014 அக்டோபர்.
அப்பவே மனசுக்குள்ளே முடிவு செஞ்சாச்சு, வர்ற வருசக் கொலுவுக்கு அம்மன் கலசம் வைச்சுடணுமுன்னு. நியூஸி திரும்பி வந்ததும் முகங்களைக் கொண்டுபோய் நம்மூட்டுப் பெருமாளுக்குக் காமிச்சுட்டு அந்த அறையிலேயே வச்சுட்டேன். முகங்கள் கண்ணில் படும்போதெல்லாம் எப்படி கலசம் வைக்கப்போறோமுன்னு நினைப்பு வந்தாலும்.... இது ஒரு பிரமாதமான்னு இருந்தேன்.
கலிகாலத்துலே 'எல்லாத்துக்கும் வலையில் இருக்கு வழி'ன்னு ஒரு நம்பிக்கை. ஒருநாள் வலையில் தேடிப்பார்த்தப்ப ரொம்பவே சுலபமா அலங்கரிச்சுப் புடவை எல்லாம் கனஜோராய் கட்டி விட்ட வீடியோ கண்ணில் ஆப்ட்டது. ஆஹா... இவ்ளோ ஈஸி பீஸியா என்ன!!! இன்னும் நாள் இருக்கே நவராத்ரிக்கு. ஜமாய்ச்சுடமாட்டோமா என்ன?
மே மாசம் ஒருநாள் நல்ல மூடில் இருந்தப்ப கலசத்தை எடுத்து வச்சு முகத்தைப் பொருத்தி, ஜன்னுவின் புடவையைக் கடன் வாங்கி அலங்கரிச்சுப் பார்த்தால் உயரம் சரிப்படலை. ஒரு ஸ்டூலின் மேல் கலசத்தை வச்சு வேற ஒரு புடவையைக் கட்டிப் பார்த்தால் புடவை இடுப்பில் (?) நிக்காமல் நழுவுது. அப்பவும் எதாவது செய்யலாம் இன்னும் நவராத்ரிக்கு நாள் இருக்கே. இந்தவருசம் (2015) அக்டோபர் 13 தானே நவராத்ரி ஆரம்பம்னு விட்டுப்பிடிச்சேன்.
தூக்கம் வராத இரவுகளில் ஐடியாக்கள் தோணுதான்னு அதைப்பற்றியே யோசிச்சுக்கிட்டு இருப்பேன். மனசுமட்டும் குடைஞ்சுக்கிட்டே இருந்துச்சு. ஸ்டூலுக்கு பதிலா மரக்கட்டைகளால் ஒரு ஸ்டேண்டு அடிச்சுப்பார்த்தால் என்ன? நம்ம கோபாலிடம் சொன்னபோது நான் ஸ்டேண்டு பண்ணித் தர்றேன்னு சொன்னார். ஹார்ட் வேர் கடையில் போய் ஒரு ரெண்டு மீட்டர் சட்டத்தை வாங்கியாந்தோம். நாள் இருக்கேன்னு கிடப்பில் போட்டும் வச்சோம்.
கடைசியில் அக்டோபர் 2 வந்தே வந்துருச்சு. இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கு, நவராத்ரி ஆரம்பம். வீட்டுக்குள் வளையவரும்போது இது சரி வருமா அது சரிவருமான்னு பார்த்தப்ப ஒரு மூணு அடுக்கு ஸ்டேண்ட் வாகாய் இருக்குமுன்னு தோணுச்சு. அதை எடுத்து ஆராய்ஞ்சதில் மூணுமே தனித்தனியாக் கழட்ட வருது. அடிச்சேன் ப்ரைஸ். கழட்டு!
நிக்கமுடியுமுன்னு தெரிஞ்சதும் மடமடன்னு தானாவே ஐடியாக்கள் வர ஆரம்பிச்சது. வாங்கிய மரச்சட்டத்தில் ஒன்னரை மீட்டர் அறுத்துக் கொடுத்தார் நம்மவர், என் ஆணைக்கிணங்க:-) அதை ஸ்டேண்டோடு சேர்த்துக் கட்டி தோள்பட்டைக்காக இன்னொரு ஒன்னரை அடித்துண்டை மேல்பக்கம் ஆறு அங்குலம் விட்டுக் கட்டி விட்டால் சிலுவை போல இருந்துச்சு. போகட்டும் சிலுவை அம்மனா இருந்தால் என்ன குறைஞ்சுடப்போகுது.
உடம்புக்காக கொஞ்சம் பாலி ஃபில்லர்னு செயற்கைப் பஞ்சு எடுத்து உருட்டி உடலும் தலையும் செஞ்சேன். அதை வச்சுக் கட்டுனதும் ஓரளவு உருவம் வந்துச்சு. தலையில் முகம் வச்சுப் பார்த்தால் க்ரீடத்துக்குப் பின்புறம் பஞ்சுத்தலை! எடு. ஒரு கறுப்புத்துணியை. தூக்கு தண்டனைக் கைதிக்கு தலையில் மாஸ்க் போடுவாங்களே அப்படி! எத்தனை சினிமாவில் பார்த்திருக்கோம்:-)
இப்பவும் பின்னால் மொட்டையா இருக்கோ? சவுரி முடிகள் ரெண்டு வீட்டில் இருந்துச்சே.... மகள் சின்னவளா இருந்தப்ப பூ மட்டை தயாரிச்சு நீளஜடை அலங்காரம் செய்ய வாங்குனது ஒன்னு. ஒரு சென்னைப் பயணத்தில் சவுரி முடி ஷாப்பிங் போனப்ப நம்ம பூனா மாமி, 'எங்கிட்டே புதுசா ஒன்னு இருக்குடி. அதையும் எடுத்துண்டுபோ'ன்னு கொடுத்தது ஒன்னு. நம்ம நேரம் பாருங்க.... வேணாதபோது கண்ணில் தட்ட்டுப்பட்டுக்கிட்டே இருந்தது, சமயம் பார்த்துக் காணாமல் போச்சு :-(
அதுக்காக? விடமுடியுமோ? சிங்கை முஸ்தாஃபாவில் ஒரு விக் வாங்கியாந்திருந்தேன். எனக்கு தலைமுடி கொட்டும் வேகத்தைப் பார்த்தால் அதிக நாள் தாங்காது போல். ஒரு முன் எச்சரிக்கைதான். அதைக் கொண்டுவந்து மாட்டினேன். ப்ச்.... சுமாராத்தான் இருக்கு.
ஒரு ப்ளவுஸையும் பாவாடையையும் மாட்டுனதும் பார்த்தால் பழைய ஹிந்திப் படங்களில் நாயகி போட்டுருக்கும் உச்சிக்கொண்டைத் தலை! ஹாஹா....
புடவையைக் கட்டிவிட்டு, கொஞ்சம் நகைநட்டுப் போட்டுவிட்டேன். நாட் பேட். ஆனால் சின்ன முகத்துக்கு ஏணி வச்சாப்ல ரொம்பவே உயரம் :-( இருக்கட்டும். இன்னும் 9 நாட்கள் இருக்கே. பார்க்கலாம்.
அதுக்குள்ளே கலசத்துலேயே சின்ன முகம் வச்சு சட்னு ஒரு அலங்காரம் முடிச்சேன். ஏற்கெனவே நம்மூட்டுலே இருந்த கும்பவாஹினிக்கு உடைகள் மாற்றி, பசங்களுக்கு (ஜன்னு க்ருஷ்) அலங்காரம் உடைகள்னு ஓரளவு சரி செய்ய முடிஞ்சது. நகை நட்டுக்கள் மாத்திரம் போதலை. வஹாங்ஸே யஹாங், யஹாங்ஸே வஹாங்னு இங்கே அங்கேன்னு .......... பார்க்கலாம். அடுத்த பயணத்தில் நகைஸும் நட்டூஸும் கிடைக்குமான்னு....
மறுபடி தேவி. உயரத்தை ஒரு அரை அடி குறைச்சேன். இப்பதான் கட்டை வெட்டத் தெரிஞ்சுபோச்சே:-) அப்படியே தலையின் அளவைக் கொஞ்சம் குறைச்சதும் ஓக்கே ஆச்சு. கழுத்தும் உடலும் சேருமிடம்தான் வெள்ளையாத் தெரியுது. ப்ளவுஸ் கழுத்து பெருசோ? ஜாக்கெட்டை உள்பக்கமாத் தைச்சுச் சின்னது பண்ணி முத்துமணிச்சரத்தை கழுத்தையொட்டி ச்சோக்கராப் போட்டதும் .....ஓக்கே.
ரொம்ப அடக்க ஒடுக்கமாப் புடவை முந்தாணையைக் கொசுவி, வலது தோள்பக்கம் கொண்டுவந்து போட்டுக் கை இல்லாக் குறையை மறைச்சு மாலைகளைப் போட்டதும்..... டடா..... போதும். இனி முடியாது.
ராக்கொடி வேற :-)
நவராத்ரிகள் நம்ம வீட்டுலே 13 ராத்ரிகளா நடந்து முடிஞ்சது. இதுக்கிடையில் நம்ம சாந்தி (அமைதிச்சாரல்) தேவி மஹாத்மியம் எழுதச் சொல்லிக் கேட்டாங்க. கொஞ்சம் பொறுங்க. நவராத்ரி முடிஞ்சதும் எழுதறேன்னு சொல்லி வச்சேன்.
நம்ம கொலு முடிஞ்சு பொம்மைகளை எடுத்து வச்சு ஒரு வாரம் கழிச்சு , வேறெதோ தேடும்போது கண்ணில் ஆப்ட்டது சவுரி முடி வச்சுருந்த பை! அம்மன் என்னவோ இதுவரை ஆடாமல் அசையாமல் இருந்த இடத்துலேயேதான் இருந்தாள். வேகவேகமாப் பின்னி, குஞ்சலம் வச்ச ஜடையில் சின்ன பர்ப்பிள் ரோஜா க்ளிப்ஸ் போட்டு சவுரிகள் இணையும் இடத்தில் பெரிய ஜடைவில்லை வச்சு விட்டேன். பாதம் தொடும் நீளம்.
பர்ப்பிள் ரோஸ் எடுபடலைன்னு தோணுச்சு.
பெருமாள், தாயாரின் மகரகண்டிகைகள் (!!!) இருக்கே. ஏற்கெனவே ஜடை பில்லையா இருந்ததை மகரகண்டிகையா மாத்துனது நாந்தான். இப்போ வேற அவதாரம் எடுக்க வச்சேன். மீண்டும் பில்லைஸ். இதை வச்சு விட்டதும் சூப்பரோ சூப்பர்!
'உன் அம்மன் அப்படியே இருக்கே... எடுத்து வைக்கலையா'ன்னார் நம்மவர். அதெல்லாம் எடுத்து வைக்க வேணாம். பூஜை அறையிலேயே இருக்கட்டுமே. இப்ப என்ன? தோளிலே மட்டும் ஒரு கிளி இருந்தால் ஆண்டாளா மாத்திக்கலாம், இல்லே?
ஹைய்யோ........ நாம் நினைப்பதெல்லாம் சாமிக்கு எப்படித் தெரியும்? ஒட்டுக் கேக்கறாரோ? நம்மூர் வேர்ஹௌஸ் கடையில் நடக்கப்போனால், கிளி உக்கார்ந்துருக்குப்பா. அதுவும் கோபால் கண்ணில்தான் பட்டது. பச்சைக்கிளிதான். ஆனால் நியூஸிக்கிளி. விலையைக் காணோம். மூணுக்குக் கிடைச்சால் வாங்கலாம். இதைப்போலவே இன்னும் சில மற்ற பறவை பொம்மைகள் இருவது போட்டுருக்கான். கஸ்ட்டமர் சர்வீஸில் கொண்டு போய்க் கொடுத்து விலை என்னன்னு கேட்டேன். கணினியில் தேடித்தேடி அலுத்துப்போன அம்மணி, 'ரெண்டரைன்னு போடறேன். ஓக்கேவா'ன்னாங்க.
ஆமாம்.... ஆண்டாளுக்கு வலது தோளில்தானே கிளி உக்காரணும் ? உக்கார்த்தி வச்சாச். என்னமோ இவளுக்குன்னே செஞ்சமாதிரி!
தூமணி மாடம் பாடி ஆரத்தி எடுத்தேன்:-)
இப்ப மார்கழியில் ஆண்டாளாக நான் இருக்கேன்னு வாக்குக் கொடுத்தவள்!
இப்படி இருக்க, தீபாவளி முடிஞ்சு கார்த்திகை தீபம் வர மூணு நாள் இருக்கும்போது அகஸ்மாத்தா ஞாயிறு மார்கெட் போனால் அங்கே ஒரு இடத்தில் நாலைஞ்சு Mannequin Torsos. ரொம்பப் பழசு. மேலே பெயிண்ட் எல்லாம் அடிச்சு கோரம். விலை 60. இருக்கட்டும்னு கடந்து போனேன். ஆறாவது வரிசையில் போய் காய்கறி வாங்கிட்டுக் கார் பார்க் திரும்பும்போது கோபால் கை நீட்டிக் காமிச்ச ஸ்டாலில் ஒரு புத்தம்புது Mannequin Torso. இது ஒரு ஸ்டேண்டோடு நிக்குது. விலை 20 தான்.
கோபால் தூக்கிப்போய் காரின் பின்ஸீட்டில் படுக்க வச்சார்:-)
திருக்கார்த்திகை ஸ்பெஷல் இந்த அம்மணிதான்:-) நல்ல சின்ன உடம்பு. சிம்பிளா ஒரு புடவை கட்டி விட்டேன். 42 வருசத்துக்கு முன்னால் என்னைப் பார்த்தாப்லெ! நோ தலை. அதுக்காக அஞ்ச முடியுமா? அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிட்டொம்ல.
வாழ்க்கை பாருங்க.... எப்படிப் போகுது? முகமிருந்தா முண்டம் இல்லை. முண்டமிருந்தால் முகம் மட்டுமா... தலையே இல்லை:-)
எதாவது செய்யணும் இனிமேல்.
ஆமாம்.... நம்ம சிங்காரச் சென்னையில் கைகள், தலைகள் எல்லாம் கிடைக்குமிடம் யாருக்காவது தெரிஞ்சால் சொல்லுங்கப்பா ப்ளீஸ்.
இதுக்கிடையில் ரெண்டு வாரத்துக்கு முன்னே எனக்கொரு மனம் கொள்ளா மகிழ்ச்சி! நம்ம ECO கடையில் ஏழெட்டு Mannequin Torsos. எந்த துணிக்கடை போண்டியாச்சோ? கிட்டப்போய்ப் பார்த்தால் ஒவ்வொன்னும் 100 டாலர். அய்ய.... பழசு. பார்க்க அம்சமாவும் இல்லை. ... சீச்சீ.... யாருக்கு வேணும்?

18 comments:
அருமை அம்மா
சூப்பர் :)
கோபால் சார் இவ்ளோ உதவி பண்றாரு. ஆனா "அறுத்துக் கொடுத்தான்" 'ன்' விகுதி போட்டுட்டீங்களே டீச்சர்;
வாங்க விஸ்வநாத்.
அடடா.... உண்மையா இது தட்டச்சுப்பிழைதான். பதறிப்போயிட்டேன். உடனே போய் திருத்தியாச்சு. நாளைக்குப் போது விடிஞ்சதும் அவரிடம் சொல்லி மன்னிப்பு கேட்டுக்கணும்.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
மாணவர்கள் வகுப்பில் கவனமா இருப்பது பிடிச்சுருக்கு! இனிய பாராட்டுகள்!
வாங்க ராமலக்ஷ்மி.
நன்றிகள் பல.
வாங்க சிவா.
ரசித்தமைக்கு நன்றீஸ்.
வி.வி.சி
வாங்க கீதா.
வி.வி.சி? ஙே.................
விழுந்து விழுந்து சிரிச்சுஃபையிங்கா!!!!
பத்து வருஷமா இந்த விவிசி, அவசி எல்லாம் நம்ம வலைப்பக்கத்திலே ஓடி இணையம் முழுக்கப் பரவி இருக்கையில் இப்படிக் கேட்டுட்டீங்களே, கேட்டுட்டீங்களே, கேட்டுட்டீங்களே! :))))
ஆமாம், விவிசினா விழுந்து விழுந்து சிரித்த, அ.வ.சி.னா அசடு வழியச் சிரித்தல்! :) இன்னும் சிலதெல்லாம் இருக்கு. அவ்வப்போது வரும்.
ஊகிச்சுத்தான் உடனெ பதில் போட்டேனே:-) இன்னும் கொஞ்சம் விவிசிக்கு ஒன்னு சொல்றேன்.
புதுசா வாங்கின மெனிக்வின்னுக்கு தலை இல்லையேன்னு சின்ன எவர்சில்வர் அடுக்கைக் கழுத்துலே கவுத்து படம் ஒட்டி இருக்கேன் :-) தலை கிடைக்கும்வரை இது டெம்ப்ரரித் தலை.
மறந்துபோய் அந்த அடுக்கை ஒருநாள் தேடுனது தனிக்கதை:-)
பார்த்தேன் அந்த அடுக்கை! குக்கரில் வைக்கும் பாத்திரம் போல ஃப்ளாட் அகல பாட்டம்! ஆனால் அதோடயே வந்திருக்குனு நினைச்சுட்டேன்! விவிவிவிவிசி.
கீதா,
அது கழுத்துக்கு மூடி. அதோடவே வந்தது. நான் சொல்வது சின்ன உசரமான அடுக்கு. அதை அந்த மூடிமேல் கவிழ்த்து வச்சுப் படம் ஒட்டி இருக்கேன் பாருங்க! படம் நிக்க வேணாமா?
கடந்த செப்டம்பர் மாதம் நண்பர் ஒருவர் வீட்டில் வரமஹாலக்ஷ்மி பூஜைக்குச் சென்றிருந்தோம் அவர்கள் வீட்டில் ஒரு முகத்தை வைத்து அலங்காரம் செய்து தேவியாக்கினார்கள் அது பற்றிய படத்துடன் நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன் http://gmbat1649.blogspot.in/2015/09/blog-post_9.htmlஎங்கள் வீட்டிலும் சிறிய முகத்தை விளக்கில் வைத்து என் மனைவி வழிபடுகிறாள்உங்கள் முனைப்பும் ரசனையும்பாராட்டுக்குரியது
மாணவர் விருப்பத்திற்கு மதிப்புக்கொடுத்து மஹாத்மியம் உபன்யாசம் செய்தமைக்கு நன்றிகள் துள்சிக்கா. அட்டகாசமா இருக்கு.
இதே பச்சை+ஆரஞ்ச் பார்டர் புடவை என்னிடமும் இருக்கு. ஒரு காலத்தில் சினேஹா புடவைன்னு பேரு வாங்கினது இல்லையா :-))
செம கல்க்கல்.....
இங்கே நண்பர் வீட்டில் இப்படி அலங்காரம் செய்யும் போது நடந்த அலப்பறைகள் நினைவுக்கு வந்தது!
துளசி விவாகத்திற்காக இப்படி அலங்காரம் செய்து கடைசியில் புகைப்படமும் எடுத்தேன். :)
தனித்த முகம். நினைத்துப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. தலைப்பைப் பார்த்ததும் நான் களப்பணியில் பார்த்த சில புத்தர் சிலைகள் நினைவிற்கு வந்தன. பல சிலைகளில் தலை இல்லை. சில சிலைகளில் தலை மட்டுமே இருந்தன.
ஆண்டாள் அலங்காரம் பளிச்.
Post a Comment