Thursday, October 09, 2014

ரத்த நிலா

ஆ.........  பாம்பு முழுங்கப் போறதுன்னு சமாச்சாரம் கிடைச்சது.  அதுவும் இந்தவாட்டி, கடிச்சுத்தின்னுமாம்.ரத்தக்கிளறி!  ப்ளட் மூன் அப்டீன்னு எங்க பக்கம் சொல்லிக்கிட்டு இருக்காங்க.

ராத்திரி  9.17க்கு ஆரம்பிக்கும்.  முழுசும் தின்னுமுடிக்கும்போது 11.55. தின்னதை எல்லாம்  வெளியே கக்கி முடிக்கும்போது  நடுராத்திரி  முடிஞ்சு  2.30 மணி ஆகிருமாம்.



நல்லவேளையா இன்னிக்கு  மேகமூட்டம் இல்லை.  ஒன்பதே காலுக்கு  வெளியே எட்டிப் பார்த்தேன்.  எனக்கென்ன மனக்கவலைன்னு ஜாலியா இருந்துச்சு நிலவு.  கொஞ்சநேரம் க்ளிக்கிப் பார்த்துட்டு  (அறுக்கமாட்டாதவளுக்கு  58 அருவாள் நினைவிருக்கோ? மூணு கேமெராவில்  க்ளிக்கோ க்ளிக்குதான்) வீட்டுக்குள்ளே வந்துட்டேன்.  மற்ற வேலைகளில் கவனம் போய்,  அடடான்னு வெளியே பாய்ஞ்ச போது  டின்னர் ஆரம்பமாகி நடந்துக்கிட்டு இருக்கு. மணி 9.50 .

உள்ளே வெளியேன்னு  போக வர க்ளிக் செஞ்சு  11.30க்கு பார்த்தால் ஏறக்குறைய  தின்னு முடிச்சாச்சு. கொஞ்சூண்டு பாக்கி இருக்கு.








முழுசும் ஆனால் இப்படி இருக்கும்.( இதை மட்டும் எங்கூரில் சுட்டேன்)

போகட்டும். இனி மெள்ள மெள்ள  நிழல் நகர்ந்து போகட்டுமேன்னு  உள்ளே வந்துட்டேன்.


நமக்கு இப்ப டேலைட் ஸேவிங்ஸ் ஆரம்பிச்சுருச்சு. அதனால்   நின்னு பார்க்க முடிஞ்சதுன்னு  வச்சுக்கலாம்.


PIN  குறிப்பு:  ஹுஸைனம்மாவின் கேள்விக்கு இப்பதான் பதில் கிடைச்சது.  முந்தி போட்ட ரெட்டை நிலா வந்தது எப்படி?  கேமெராவில் ஃபில்ட்டர் போட்டுருந்ததால்  அப்படி வந்துருக்கு.  இன்றைக்கும் முதலில் ரெட்டைதான். அப்புறம் ஃபில்ட்டரை கழற்றினதும் சிங்கம் சிங்கிளாயிருச்சு:-)



10 comments:

said...

Dear. Thulasi, my laptop is giving probs.so comment in english. So many wonderful shots of the moon.,!thanks for a wonderful. Post ma.here I am yet to see a moon.

said...

வாங்க வல்லி.

வயிற்றில் பால் வார்த்தீங்க!

ஆளில்லாத கடையில் டீ ஆத்திக்கிட்டு இருக்கேன்னு நினைச்சேன்:-)

said...

ஆகா. இங்கல்லாம் தெரியல. ஆனா நேருக்கு நேராப் பாக்கக் கூடாதுன்னு சொல்வாங்களே. எக்ஸ்ரே பிலிம் வழியாப் பாத்தீங்களா?

said...

ஆகா. இங்கல்லாம் தெரியல. ஆனா நேருக்கு நேராப் பாக்கக் கூடாதுன்னு சொல்வாங்களே. எக்ஸ்ரே பிலிம் வழியாப் பாத்தீங்க

said...

வாங்க ஜிரா.

உலகின் சில இடங்களில்தான் தெரியுமுன்னு முன்பே சொன்னாங்க. சென்னையில் கடைசி பத்து நிமிஷம் தெரிஞ்சதாமே!

சூர்யகிரகணம்தான் நேருக்கு நேரா வெறுங்கண்ணால் பார்க்கக்கூடாதுன்னுவாங்க. ரொம்ப பவர்ஃபுல் பாருங்க.

சந்திரனுக்கு வெளிச்சமே சூரியனின் பிரதிபலிப்புதான் என்பதால் பிரச்சனை இல்லைன்னு நினைக்கிறேன்.

வெறுங்கண்ணால்தான் பார்த்து க்ளிக்கினேன்.

said...

ஜூப்பரு

said...

அருமை !!!

said...

வாங்க சாந்தி.

நன்றிப்பா.

said...

வாங்க சசி கலா,

நன்றிப்பா.

said...

அருமை.