நலம் நலம் நலம்.
பண்டிகைக்கு இன்னும் ரெண்டே நாள்தான் இருக்குன்னு ஜனம் அங்கே இங்கேன்னு கடைசி நிமிச ஷாப்பிங் செய்ய அலை மோதிக்கிட்டு இருக்கு. ஊரோடு ஒத்து வாழணும் என்ற கணக்கில் சாயங்காலம் நாமும் போகலாமுன்னு நினைப்பு. இன்னிக்குத்தான் வேலையில் கடைசி நாள். குறைஞ்சபட்சம் இனி 10 நாளைக்கு எல்லா இடங்களிலும் விடுமுறை.
மேஜர் நிலநடுக்கம் வந்தபின் இது முதல் கிறிஸ்மஸ். மக்கள்ஸ் மனசில் 'நிலையாமை' இடம் பிடிச்சதால் இன்றே இங்கே இப்போதேன்னு வாழ்க்கை. நாமும் இந்த 24 வருசங்களில் வழக்கமில்லாத வழக்கமா இந்த வருசம் கொஞ்சம் மின்விளக்கு அலங்காரம்(!!!!) ஜன்னலில் போட்டு வச்சுருக்கோம்.
இன்று மதியம் தலை வலிக்குதுன்னு வழக்கமில்லாத வழக்கமா ஒரு பத்து நிமிசம் படுக்கலாமுன்னு போய்ப் படுத்தேன். கையில் 'ராயர் காப்பி க்ளப்'. ரெண்டு பக்கம் கடந்திருக்கும். கண்ணை லேசா அசத்துது. அப்போ.....தடதடன்னு வீடே ஆட்டம். அப்படி ஒரு குலுக்கல். எழுந்து வெளியே ஓடலாமுன்னா தரையில் நிக்கமுடியலை அப்படியே தள்ளுது. எல்லாம் ஒரு 20 விநாடிகள்தான்.
நின்னவுடன் என்ன செய்யலாம் எதாவது சாமான்கள் விழுந்துச்சான்னு பார்க்க நாலடி எடுத்து அடுத்த ஹாலுக்குள் போகுமுன் இன்னொரு தடதட...... சாமி அறையில் ஷோகேஸ் கதவு ஆடுன வேகத்தில் தானே திறந்து பார்பி டால்( பாவம்ப்பா...புடவை கட்டுன இண்டியன் பார்பி) விழுந்துட்டாள். கூடவே சிலபல யானைகளும் புள்ளையார்களும்.
கோபால் உடனே ஆஃபீஸில் இருந்து ஓடிவந்தார். 'நான் இருக்கேன்'னதும் திரும்ப ஓடிப்போனார். போதும் வேலை பார்த்ததுன்னு எல்லோரும் நினைச்சபடியால், ஒரு மணி நேரத்தில் கிளம்பி வந்துட்டார். அதுக்குள்ளே நண்பர்கள் ஃபோனில் கூப்புட ஆரம்பிச்சு நலம் விசாரிக்க ஆரம்பிச்சுருந்தாங்க. நாங்களும் ரெண்டு பக்கத்து வீடுகளிலும் இருக்கும் அயல்வாசிகள் நலமான்னு எட்டிப்பார்த்துட்டு வந்தோம். எதுத்த வீட்டுக்காரர் ஓடிவந்து நலமான்னு கேட்டுட்டுப் போனார். அப்பப் பார்த்து ஒன்னு வந்துச்சு ரொம்ப ஃபோர்ஸோடு. க்ளிங்ன்னு கண்ணாடி விழுந்த சப்தம். நின்னு பார்க்க நேரமில்லைன்னு நானும் கோபாலும் வெளியே பாய்ஞ்சோம்.
இந்த ரெண்டு மணி நேரத்துக்குள்ளே சின்னச்சின்னதா ஒரு பத்துப்பதினைஞ்சு தடதடப்புகள். கதவு ஜன்னல்கள் எல்லாம் ஆடி ஓய்ஞ்சு நிக்குதுகள். பெருசா ஒரு மூணு!
5.8,
5.3,
6.0
மஹாலக்ஷ்மி கீழே விழுந்துட்டாப்பா:(
டிவியில் நிகழ்ச்சிகள் எல்லாம் நிறுத்திட்டு லைவ் ரிப்போர்ட்டுகள். எல்லா ஷாப்பிங் செண்டர்களையும் மூடியாச்சு. சூப்பர்மார்கெட்டுகள் அடைப்பு. கீழே விழுந்து உடைஞ்ச ஒயின் பாட்டில்கள் க்ளீனிங் அப் இருக்கே!
ஏர்ப்போர்ட் காலி பண்ணீயாச்சு. ஓடிக்கொண்டிருந்த ரயில்களை நிறுத்திவச்சுட்டாங்க.
26,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. மலை முகடுகளில் இருந்து பாறைகள் விழ ஆரம்பிச்சுருக்கு. ஆறு & கடல்பக்கத்து இடங்களில் இந்த லிக்யூஃபேஷன் பொங்கி வழிஞ்சு எல்லா 'அழுக்குகளும்' சேர்ந்து வீடுகளைச் சுற்றிக் குளம் கட்டி நிக்குது.
பதினைஞ்சு நிமிசத்துக்கு ஒரு தடவை டைம்டேபிள் போட்டுக்கிட்டு ஆட்டம் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு. இன்னும் ஒரு நாலைஞ்சு நாட்களுக்கு பெருசு பெருசா வரக்கூடுமாம். பேட்டர்ன் இப்படின்னு நிபுணர்கள் டிவியில் வந்து சொல்லிக்கிட்டு இருக்காங்க.
சிவில் டிஃபென்ஸ் பிரிவு, இழப்புகளையும் சேதாரங்களையும் பார்வையிடப் புறப்பட்டாச்சு. ஏற்கெனவே சேதாரம் ஆகி காலி செய்யப்பட்ட பல கட்டிடங்கள் தானே தன்னை இடிச்சு தரையோடு தரையாகிக் கிடக்காம். வீட்டை விட்டு வெளியில் போகாதே. தேவை இல்லாம செல்ஃபோன் பயன்படுத்தாதே. எதாவது சொல்லணுமுன்னா டெக்ஸ் மெஸேஜ் (SMS) கொடுத்துக்கோன்னு டிவியில் வந்து எங்களை 'மிரட்டி' வச்சுருப்பதால் உங்களுக்கு சேதி எழுதிகிட்டு இருக்கேன். நாட்டு நடப்பு இனி டிவியில் தான். பார்த்து ஆகணும்.
இப்போதைக்கு நம்ம வீட்டில் மின்சாரம் & தண்ணீர் இருக்கு. ஆனால் எப்போ எதுவரைன்னு சொல்ல முடியாது. பொழைச்சுக்கிடந்தா புது வருசத்தில் பார்க்கலாம்.
தனி மடலிலும் சாட் லைனிலும் வந்து விசாரித்த நட்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்று இந்த நிமிசம் நான் இருக்கேன். மகளும் வந்துருக்காள். மூவரும் ஒர் கூரையின் கீழ் இருக்கோம்.
அனைவருக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.
Friday, December 23, 2011
மறுபடியும்............ ஆ......ட்டம்:(
Posted by துளசி கோபால் at 12/23/2011 05:32:00 PM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
79 comments:
முதல் வரியில் மூணு நலம் பார்த்ததும்தான் மனசு நிம்மதியாச்சு! விழாக்காலம்தானே. மூணு பேரும் ஒரு வெளியூர் (வெளிநாடு) ட்ரிப் அடிச்சுடுங்க. ஆடாம இருக்கவும் வழி, அடுத்த தொடருக்கும் ஆச்சு!
நலமென அறிந்து நிம்மதி. கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
விழாக் காலத்தையும்
விடுமுறையையும் கொண்டாட
விடமே
இயற்கை இப்படி
இம்சை செய்யுதே !
பத்திரமா இருங்க..
பத்திரமா இருக்கீங்கங்கறது மகிழ்ச்சி. இன்னும் கவனமா இருந்துக்கோங்க.
//மூணு பேரும் ஒரு வெளியூர் (வெளிநாடு) ட்ரிப் அடிச்சுடுங்க. ஆடாம இருக்கவும் வழி, அடுத்த தொடருக்கும் ஆச்சு!//
நானும் வழிமொழியறேன். இந்தியா.. இந்தியான்னு ஒரு அயல்நாடு இருக்காம். அங்க க்ளைமேட் ரொம்ப நல்லாருக்குன்னும், சுத்திப் பார்க்க நிறைய இடங்கள் இருக்குன்னும் கேள்விப் பட்டேன். டிக்கெட் போட்டுடுங்க.
டிக்கெட் புக் பண்ணியாச்சா இல்லையா?
//இந்தியா.. இந்தியான்னு ஒரு அயல்நாடு இருக்காம். அங்க க்ளைமேட் ரொம்ப நல்லாருக்குன்னும், சுத்திப் பார்க்க நிறைய இடங்கள் இருக்குன்னும் கேள்விப் பட்டேன். டிக்கெட் போட்டுடுங்க.//
நானும் வழிமொழியறேன்.
நல்ல பதிவு ! இனிய புத்தாண்டு,கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
விழாக்கால வாழ்த்துக்கள்..
பத்திரமா இருங்க..:)
நீங்க இருக்கீங்கன்னு மட்டுமா ’நான் இருக்கேன்’னும் காமிச்சிருக்காரே.. இப்படி சொல்லலாமா..:)
யப்பா...!
டீச்சருக்கும் கோபால் சார் மற்றும் அனைவருக்கும் விழாக்கால நல்வாழ்த்துக்கள் ! ;)
விழாக் கால வாழ்த்துக்கள்.
நீங்கள் பத்திரமாய் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
இறைவன் அருளால் ஆட்டம் நின்று இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும்.
இயற்கை எல்லோருக்கும் நல்லது செய்யட்டும்.
வாழ்க வளமுடன்.
பயங்கரமா இருக்கே!!
நீங்கள் நலம் என்று ஆரம்பித்திருந்ததால் சற்று நிம்மதியுடன் படிக்க முடிந்தது.
விழாக்கால நல்வாழ்த்துக்கள்.
come back to our Home Land! :(((( really very much upset to know these! Please for Heaven's sake come back. We are praying for you all.
Take Care!
காலையிலே தொ.கா லே செய்தி பார்த்த உடனே உங்க ஞாபகம் தான் வந்துது.
நலமா இருப்பது குறித்து மகிழ்ச்சி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நல்வாழ்த்துக்கள்.
த.ம. 3
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
Sounds scary.Please take care and follow all the safety precautions.
HAve a nice holiday season and god bless.
Very glad to know teacher! Saw the news just this morning! :(
வாங்க கொத்ஸ்.
ஏர்ப்போர்ட் மூடிட்டாங்க. அப்புறம் எங்கே வெளிநாடு போறதாம்?
வாங்க ராமலக்ஷ்மி.
ஊரே கவனமாத்தான் இருக்குப்பா. நம்மை மீறிய செயல் இது:(
வாங்க ஜயராஜன்.
கோடை விடுமுறைக் காலம். இப்படிப் படுத்துனா சனம் என்ன செய்யும்?
அல்லாட்டம்தான்:(
வாங்க அமைதிச்சாரல்.
இப்பத்தான் 26 மாசம் இந்திய 'விடுமுறை'யை முடிச்சு வந்து அஞ்சே மாசம் ஆகுது.
கோபால் வேற அவுங்க அம்மாவின் இறுதிச்சடங்கு முடிச்சுவந்து 16 நாட்கள்தான் ஆகி இருக்கு:(
இனி ஒருக்கிலா?? தாங்காது கேட்டோ!
வாங்க சிங்.ஜெயகுமார்.
டிக்கெட் புக் பண்ணலை. ஏர் ஏஸியாவிலே கிடைச்சால்தான் அடுத்தபயணம்:-)
வாங்க ஓசூர் ராஜன்.
வருகைக்கு நன்றிகள்.
வாங்க கயலு.
ஆஹா...அப்படி ஒன்னு இருக்கோ மறுபக்கம் பார்த்தால்!!!!!
நினைச்சுக்கூடப்பார்க்கலைப்பா. டாங்கீஸ்.
வாங்க கோபி.
நன்றி. உங்களுக்கும் சொல்லிக்கறென்.
வாங்க கோமதி அரசு.
ஒரே களேபரமா இருக்கு. பொழுது விடிஞ்சால் பண்டிகை. நேத்து இரவு 12 மணிவரை லாஸ்ட் மினிட் ஷாப்பிங் செய்ய கடைகள் திறந்துருக்க வேண்டியது. எல்லாத்தையும் இழுத்து மூட வேண்டியதாப்போச்சு:(
இன்னும் க்ளீன் அப் முடியலை. எப்போ திறந்து மக்கள் வாங்க வேண்டிய பால் ப்ரெட்களையாவது வாங்க முடியுமோ தெரியலை:(
வாங்க ராம்வி.
கம்பனைத் தொடர்ந்து, 'கண்டேன் சீதையை' ஸ்டைலுதான்:-)
நன்றிகள்.
வாங்க கீதா.
'நிலையாமை' உறுதிப்பட்டுருக்கு. இனியாவது 'கீதை'யை புரிஞ்சுக்கணும்.
பிரார்த்தனைகளுக்கு நன்றிப்பா.
கவனமாத்தான் இருக்கோம். ஆட்டம் தொடங்குனதும் வெளியில் ஓடணும். ஆனால் தூங்கும்போது தட்டி எழுப்பி ஹலோ சொல்லுதே!
நேத்து பகல் ஆரம்பிச்சதுலே இருந்து இதுவரை 67 முறை ஆடியாச்சு.
வாங்க விருட்சம்.
விதி முடியும்வரை இருப்போமுன்னுதான்.....
நன்றிகள்.
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
இப்போதைய மந்திரச்சொல்: நிலநடுக்கம்:(
வருகைக்கு நன்றி.
வாங்க வெற்றிமகள்.
நன்றிப்பா. கவனமாத்தான் இருக்கோம்.
வாங்க பொற்கொடி.
கதீட்ரல் இன்னும் கொஞ்சம் சரிஞ்சு விழுந்துருச்சு:(
குறைஞ்சபட்சம் வாரம் ஒரு பதிவு போட முயல்கிறேன். ரெண்டு வாரத்துக்கு ஒன்னும் வரலைன்னா 'இல்லை'ன்னு புரிஞ்சுக்கோங்க எல்லோரும்.
Dear Thulasi,
thank god.
I was litrally shaken out of my body when I saw the news.
You shall be alright. all our prayers are with you.
Peace ful holiday wishes come your way.
நலம் என அறிந்து நிம்மதி....
கவனமாக இருங்கள்......
படித்துக் கொண்டிருக்கும்போதே மனம் திக்கெண்டு ஆகிவிட்டது.
இறைவன் அருளால் நலமாக இருங்கள்.
பெருமாள் எப்போதும் உங்களுடன் இருப்பார்.
நலமாக இருக்கிறீர்கள் என அறிந்து நிம்மதியானோம். கவனமாக இருங்க.
நாங்களும் பிரார்த்தித்து கொள்கிறோம்.
புது வருடத்திலிருந்து நல்லது தான் நடக்கப் போகிறது. வாழ்த்துகள்.
உங்க நல்ல மனசுக்கு ஒண்ணும் ஆகாது. ரொம்ப பிரச்சினன்னா எங்கவீட்டுக்கு வந்துடுங்க.
டீச்சர் அப்படி எல்லாம் சொல்லாதீங்க, நல்லதையே நினைப்போம். கதீட்ரலுக்கு ஏன் இப்படி ஒரு நேரமோ, மனம் ரொம்ப சஞ்சலமா இருக்கு! 2012 கஷ்டப்பட்டு கட்டிய வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதையே தரும்னு நினைப்போம். (இங்க அமெரிக்காவிலே இந்த வின்டர் பெரிசா சமாளிக்கிற அளவு பனி இல்லை, ரொம்ப விநோதமா இருக்கே, என்ன அர்த்தமோன்னு இருக்கு..)
வாழ்த்துக்கள். நலமறிந்ததில் ஒரு இனம் புரியாத நிம்மதியும்.
சிரிக்கலாம்னா சிரிங்க:
LA Story என்று ஒரு படம். ஒரு காட்சியில் Steve Martin சிலருடன் restaurant ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். திடீரென்று நில நடுக்கம். சாதாரணமாக சாப்பிட்டுக்கொண்டே (எல்லாமே ஆடிக் கொண்டிருக்கும்) டேபிளைச் சுற்றி ஒவ்வொருவரும் கணக்கு சொல்வார்கள். நான் 4.6 கொடுப்பேன், நான் 5.3 கொடுப்பேன்.. என்று. நிலநடுக்கத்தினூடே சாப்பிட்டு பில் கொடுத்துவிட்டுப் போவார்கள்.
மக்கள்ஸ் மனசில் 'நிலையாமை' இடம் பிடிச்சதால் இன்றே இங்கே இப்போதேன்னு வாழ்க்கை
விரைவில் இயற்கை சமநிலை
திரும்ப பிரார்த்திக்கிறோம்..
தனி மடலிலும் சாட் லைனிலும் வந்து விசாரித்த நட்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்று இந்த நிமிசம் நான் இருக்கேன். மகளும் வந்துருக்காள். மூவரும் ஒர் கூரையின் கீழ் இருக்கோம்.
சந்தோஷம் பொங்கட்டும் :)
படிக்கும்போதே நடுங்குதே அனுபவித்தவர்களுக்கு எப்படி இருக்கும்? இயற்கையின் சீற்றத்தை யாரால் தடுக்கமுடியும்.
நிலநடுக்கம்னதும் உங்களையும் இன்னொரு நியூசி டீச்சரும் தான் நினைவு வந்தது.நலமாக இருப்பதை கேட்டவுடன் நிம்மதி .take care .
அச்ச்ச்சோ. இதென்ன. துள்சி பத்திரம். சரியாகி சீக்கிரம் வாங்க,
பத்திரம்னு பதிவு போடுங்க.
எல்லோரும் நலமாக இருக்க இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்.
கவலைப்படாதீங்க.. முருகன் இருக்கான். பார்த்துப்பான்..!
take care we pray God for all of you!
//இந்தியா.. இந்தியான்னு ஒரு அயல்நாடு இருக்காம். அங்க க்ளைமேட் ரொம்ப நல்லாருக்குன்னும், சுத்திப் பார்க்க நிறைய இடங்கள் இருக்குன்னும் கேள்விப் பட்டேன். டிக்கெட் போட்டுடுங்க.//
நானும் வழிமொழியறேன். enga veetukku vanga teacher
Take care! Hope things get back to normal soon! Looking forward to hear about your well-being!
[புத்தாண்டு வாழ்த்துக்கள்]
உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
wish you happy new year to you and your family
yesterday i saw tv news about 5.3 hit your city. i get shocked. still why you are there?. for safe pls come to india
வளமும் நலமும் பெற 2012 புத்தாண்டு நல்வாழ்த்துகள்
மலர்ந்திருக்கும் புத்தாண்டு காப்பாற்றட்டும் உயிர்களை.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய ஆண்டாக அமைந்திட வாழ்த்துகள்.
Wish you and Mr. Gopal a happy and healthy 2012.
-kajan
வாங்க வல்லி.
கரிசனத்துக்கு நன்றிப்பா.
இதுவரை தப்பிச்சாச்சு:-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
கூடியவரையில் அதிக கவனமாகத்தான் இருக்கிறோம். இனி ஆண்டவன் விட்ட வழி.
அன்புக்கு நன்றி.
வாங்க மாதேவி.
பதிவு தொடரும்வரை இருப்பதின் அடையாளம் உண்டு:-))))))
நன்றிப்பா.
வாங்க ஞாபகம் வருதே.
பெருமாளுக்கு நம்மைக் காப்பாத்தறதைவிட வேறு என்ன வேலையாம்?
நம் கூடவேதான் இருக்கார்:-)))))
வாங்க கோவை2தில்லி.
பிரார்த்தனைக்கு நன்றிப்பா. கவனமாகவே இருக்கோம்.
புதுவருசம் ஆரம்பிச்சு இந்த நிமிட்வரை வெறும் 93 தான்:-))))))
வாங்க ஷைலூ.
அழைப்புக்கு நன்றிப்பா.
என்னோடு கூடவே நம்மூர் சனம் எல்லாம் வரும். பரவாயில்லையா?
ஒரு 300 தேறும், ஆயிரங்களில்:-))))
பொற்கொடி,
ஊருக்கு ஆவது நமக்கும் ஆகட்டுமேப்பா. நல்லதோ கெட்டதோ வர்றது வழியில் நிக்காதுல்லே!
வாங்க அப்பாதுரை.
சிரிச்சேன். தாடியே சொல்லிட்டுப் போகலையா 'இடுக்கண் வருங்கால் நகுக'ன்னு !!!
வாங்க இராஜராஜேஸ்வரி.
பிரார்த்தனைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
வாங்க ரிஷபன்.
அந்த சந்தோஷம், ஷார்ட் லிவ்டு:-)))))
வாங்க லக்ஷ்மி.
இயற்கைக்கு முன் நாம் ஒரு தூசுன்னு காமிச்சுக்கிட்டே இருக்கு :-))))
வருகைக்கு நன்றி.
வாங்க ஏஞ்சலீன்.
அட! அது யாருங்க இன்னொரு நியூஸி டீச்சர்? இப்படி சஸ்பென்ஸ் வச்சுட்டீங்களே!!!!!!
வாங்க மது.
பத்திரம் பத்திரம் பத்திரம் இப்போதைக்கு இன்று பத்திரம்!
வாங்க கைலாஷி.
பலமுறை கயிலை தரிசனம் செஞ்சவர் பிரார்த்தனைகள் பலிச்சுத்தான் ஆகணும்.
எங்க ஊர்மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
வாங்க உண்மைத்தமிழன்.
வேலேந்தியவன் பார்த்துக்கிட்டேதான் இருக்கான். அதைவிட அவனுக்கு வேற என்ன வேலை?
வாங்க குலோ.
பிரார்த்தனைக்கு நன்றிகள்.
வாங்க பித்தனின் வாக்கு.
அழைப்புக்கு நன்றிப்பா. ஆனால் விருந்தும் மருந்தும் மூணுநாள்தானே? அப்புறம் Bபூவாவுக்கு என்ன செய்வது????
வாங்க yaadayaada
இந்த நிமிட் வரை நலம். காலையில் எட்டரைக்கு 'நான் இன்னும் இங்கேதான் இருக்கேன்'னு வந்து சொல்லிட்டுப் போச்சு. 4.8
அப்பாதுரை, உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
ஏஞ்சலீன்,
உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
வாங்க ஜோதிஜி.
உங்களுக்கும் தேவியருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
மாதேவி,
உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
வாங்க கஜன்,
உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
Post a Comment