Wednesday, December 21, 2011

கத்திக்குத் தப்ப வழி உண்டா?

மாருக்குப் பக்கத்தில் என்னமோ சின்னக் கட்டி போல இருக்கே..... அப்புறம் பார்த்துக்கலாமுன்னு கொஞ்சம் அசட்டையா(??) இருந்தது இப்போ தப்பாப் போயிருச்சு போல :(

மகளிடம் லேசுபாசாய்ச் சொன்னதும் லோக சங்கதிகளில் தெளிவா இருக்கும் மகளுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி. என்னம்மா இவ்ளோ நாளா ஏன் ஒன்னும் சொல்லலைன்னு லேசாய் கடிஞ்சுக்கிட்டு மருத்துவரைப் பார்க்க..... எதுக்கும் ஒரு விசேஷ மருத்துவரைப்போய்ப் பாருங்கன்னு அவர் சொல்லி இருப்பார்.

அங்கே ஒரு மருத்துவப் பரிசோதனையும் நடந்தது. சேதிக்காகக் காத்திருந்த மகளுக்கு இன்னொரு அதிர்ச்சி. எல்லாம் நண்டுவளை சமாச்சாரம்தான். சட்டுப்புட்டுன்னு எடுத்து எறியலாமுன்னா..... அறுவை சிகிச்சை தாங்கும் உடம்பா? ரேடியேஷன், கீமோதெரப்பி இதையெல்லாம் வலி பொறுத்து சமாளிக்கத் தெம்பு இருக்குமான்னு ஒரு பயம்.

முந்தி ஒரு காலத்துலே 'சார் தந்தி'ன்ற குரலைக் கேட்டதும் உடம்பெல்லாம் பதைபதைச்சு கண்ணுலே கரகரன்னு கண்ணீர் வழிய அழ ஆரம்பிச்சுருவாங்க பாருங்க அதே எஃபெக்ட்டுதான் இந்த 'ஆப்பரேஷன்' என்ற சொல்லுக்கும். பெருசோ சிறுசோன்றது பிரச்சனை இல்லை. 'சொல்' காதில் விழுந்ததும் மனசு அப்படியே நொறுங்கிப்போகுது:(
நெருங்கிய தோழி ஒருவரின் தாய். வயசு வேற 74. ஆபரேஷன் மற்றும் ரேடியேஷன், கீமோதொரபிக்கு அவர் உடல்நிலைமை தாங்காது என்று பயப்படுகிறார். சென்னையில் ஆயுர்வேதம் மற்றும் சித்தா மருத்துவத்தில் இந்நோய்க்கு மருத்துவம் இருக்கிறதா? இன்றைய நிலையில் அவர் வலியில்லாமல் தன் கடைசி காலத்தை கழிக்க வேண்டும் என்பது நம் விருப்பம். தோழிதான் என்ன செய்யறதுன்னு தெரியாமக் கிடந்து திண்டாடறார்.

அறுவை சிகிச்சை ஒன்றுதான் இப்போதைக்கு என்று இருந்தால் சர்ஜரி முடிந்தவுடன் ஆஃப்டர் கேர் நல்ல முறையில் இருக்கும் மருத்துவமனைகளையும் சொல்லுங்க. புற்று போல (அடடா.... இங்கேயும் புத்து புத்துன்னே வருது பாருங்க) சென்னை முழுக்க முளைச்சுருக்கும் பல 'மருத்துவ மனைகளில்' அறுவைக்குப்பின் இருக்கும் சிகிச்சையைப் பற்றிய ஒரு அறிவு இல்லாமலே போயிருக்கு என்பது, மூணு வாரத்துக்கு முன்னால் கிடைச்ச கசப்பு மருந்து.

மாற்று மருந்து தேடுதல் தொடர்ந்துக்கிட்டே இருக்கு. நம்ம பதிவுலக நண்பர்களுக்கு எதாவது கூடுதல் விவரங்களும் சிகிச்சை முறைகளும் தெரிஞ்சுருந்தால் தயக்கம் இல்லாம இங்கே சொல்லுங்க ப்ளீஸ்.

காத்திருக்கோம் உங்கள் பதில்களுக்காக.

38 comments:

said...

:(

said...

உடனே கவனிச்சருக்கணும் என்பது சரிதான். ஆனால் இன்றைய மருத்துவத்தின் வளர்ச்சிக்கு ஆபரேஷனுக்கு பயப்படவே வேண்டாம். நீங்கள் கேட்ட விஷயம் எனக்குத் தெரியவில்லை. நண்பர்களிடம் இப்போதே விசாரித்துப் பார்க்கிறேங்க.

said...

வாங்க கோவியாரே.

எனக்கும் ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு:(

said...

வாங்க கணேஷ்.

இங்கே நியூஸியில் சிகிச்சையும் அதுக்குப் பிறகுள்ள கவனிப்பும் அபாரம்.
அப்பழுக்கு சொல்லமுடியாது.

அதுவுமில்லாமல் 50 வயது ஆன பெண்கள் அனைவருக்கும் ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை மார்பக ஸ்க்ரீனிங் முற்றிலும் இலவசம். நம்ம மருத்துவரிடமிருந்தே லிஸ்ட் போயிரும். எல்லாம் வருமுன் காத்தலுக்கே!


தயவு செஞ்சு விசாரிச்சுச் சொல்லுங்க.

said...

அறுவை சிகிச்சையோட மட்டும் இந்த வைத்தியம் நிக்காதுங்க. கீமோ, ரேடியேஷன், மருந்துகள் எல்லாம் தொடரும். மிகுந்த கஷ்டமான சமாசாரங்கள்தான். அத்தோடு வயசும் கூட ஆகிட்டுது.செலவும் கூட ஆகும்.

வேறு மார்க்கமில்லை. வைத்தியம் செய்துதான் ஆகவேண்டும். கீதைத் தத்துவத்தை பனதில் கொள்ளவும். கடமையைச் செய், பலனை என்னிடம் விட்டு விடு.

சித்தா, ஆயுர்வேதம் எல்லாம் எவ்வளவு பலன் கொடுக்கும் என்று தெரியவில்லை.

நான் என் தங்கைக்கு வைத்தியம் பார்த்திருக்கிறேன். என்ன, ஆபரேஷன் தேவையிருக்கவில்லை. மற்றபடி டென்ஷன்தான்.

said...

வாங்க டாக்டர் ஐயா.

வைத்தியம் செஞ்சுக்கத்தான் வேணும். வாழும்வரை நோயோடும் போராட வேண்டிவந்துருச்சேன்னு ஒரு மன உளைச்சல்.
தொடரும் வலிகளை நினைச்சுத்தான் தோழிக்கு மனக்கலக்கம். அவுங்களை நினைச்சு இப்போ எனக்கு மனப்பாரம்:(

என்ன கீதை படிச்சும் அஞ்ஞானம் விடுவதா இல்லையே:(

said...

ஆப்பரேஷனுக்கு அப்புறமான கவனிப்பு ரொம்ப குறைவு. விவரங்கள் சேகரிக்கப் பார்க்கறேன்.

said...

http://www.pinkribbon.org/

இதில் பாருங்க சில விவரம் கிடைக்கலாம். இது பிங்க்ரிப்பனின் இந்திய தளம்

said...

இந்த வயதுக்கு மேல் ஆபரேஷன் வேண்டாம் என முடிவெடுத்தார்கள் இதேபோன்றதொரு சூழலில் என் தோழி குடும்பத்தில் அவரது மாமனாருக்கு பிரச்சனை வந்த போது. பக்கவிளைவுகள் சிரமமே. விசாரித்துச் சொல்லுகிறேன்.

said...

http://www.ubf.org.in/about.html

said...

:(

ஆபரேஷன் செய்த பின்னால் கவனிப்பு சரியாக இல்லை என்பது வருத்தமான உண்மை..

நானும் இங்கே விசாரிக்கிறேன்....

said...

74 வயசிலுமா?? மூட்டு வலி, பிபி, சுகர், இருதயம் இப்படித்தான் அந்த வயசுல பிரச்னைகள் இருக்கும். இதையெல்லாம் தாண்டி இத்தனை வயசை ஆரோக்யமா கடந்தபின்னும், இப்படி ஒரு கண்டமா??

சின்ன வயசுக்காரங்களையும் விடறதில்லை. பழுத்த இலைகளையும் விடறதில்லை. அப்படியென்ன பசியோ இந்தப் புத்துக்கு??!! ரொம்பவே கலங்க வைக்குது உலக நிகழ்வுகள்.

கிடைக்கும் தகவல்களை பகிர்ந்துக்கோங்க. மற்றவர்களுக்கும் உதவலாம். இறைவன் காக்க.

said...

துளசி மேடம் இங்கே சென்னை அப்போலோ வில் இதற்கு நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
எங்கள் சொந்தங்களில் இருவர் இதே விஷயத்திற்காக அங்கே சிகிச்சை பெற்று இருக்கிறார்கள், அவர்களிடம் முடிந்தால் மருத்துவர் விவரங்களை வாங்கி தருகிறேன்.

said...

புற்றிலிருந்து (வேறு இடம்) மீண்ட ஒரு நண்பர் கொடுத்த தகவல்: http://www.vshospitals.com/enquiry.html#contact

நல்லவிதமாக அபிப்ராயம் சொன்னார். அவர்களையும் விசாரித்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

said...

//சின்ன வயசுக்காரங்களையும் விடறதில்லை. பழுத்த இலைகளையும் விடறதில்லை. அப்படியென்ன பசியோ இந்தப் புத்துக்கு??!! ரொம்பவே கலங்க வைக்குது உலக நிகழ்வுகள்.//

ஹீஸைனம்மா சொன்ன மாதிரி என் அக்காவை 25 வயதில் கொண்டு போனது எங்களை விட்டு இந்தப் புத்து. கலங்கி தான் போனோம். யாருக்கும் இந்த நிலமை வரக்கூடாது என்று கடவுளிடம் பிராத்தனை செய்தோம்.

விசாரித்து சொல்கிறேன் துளசி.

said...

’என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்” என்று டாக்டர் c.k.மாணிக்கவாசகம் அவர்கள் எழுதிய புத்தகத்தில் புற்று நோயளிகள் கடைப்பிடிக்க வேண்டிய கால, உணவு அட்டவணை கொடுத்து இருக்கிறார்.
அதை கொஞ்சம் பயன் படுத்திப் பார்க்க சொல்லுங்கள். பின் மனதில் தனுக்கு புற்று நோய் கிருமிகள் குறைவதாய் தினம் கற்பனை செய்ய சொல்லுங்கள். பின் இறைவன் விட்ட வழி.

காலை 6 மணி: ஒரு டம்ளர் பழச்சாறு(சாத்துக்குடி, கறுப்பு திராட்சை)
8 மணி: வேப்பிலை, வில்வம், அரு, அத்தி, கீழா நெல்லி ஆகியவை கலந்து தயாரித்த மூலிகை கலவைப் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு இஅம்ளர் த்ண்ணீரில் கலந்து சாப்பிடவும்.

மதியம் 12 மணி: பழ உணவு மட்டும்.

3 மணி : காரட், தேங்காய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட ஜீஸ். சர்க்கரை சேர்க்காமல்.

மாலை 5மணி : துளசி ஜீஸ் ஒரு டம்ளர்.
(ஒரு கைபிடி துள்சி இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்டது.)

இரவு 7மணி: பழ உணவு மட்டும்.

8மணி: மூலிகை கலவை பொடி கலந்த தண்ணீர்.

குறிப்பு:

1. புற்று நொயால் பாதிக்கப்பட்டவர்கள் பழௌணவு என்று குறிப்பிட்டுள்ள நேரங்களில் முதல் மாதம் முமுவதும் சாறு வடுவத்திலேயே உட்கொள்ள வேண்டும்.

2. துளசி ஜீஸ் என்று குறிப்பிட்டுள்ள நேரத்தில் கொத்துமல்லி, புதினா ஆகியவற்றலான ஜீஸ் வகைகளையும் மாற்றி அருந்தி வரலாம். புற்று நோயாளிகள் அனைவரும், அந்நோயின் காரணத்தையும் எளிய வகையில் அந்நோயினை எவ்வறு அவரவர்களே போக்கிக் கொள்ள முடியும் என்பதனையும் தெளிவாக அறிய வேண்டியது அவசியமாகும்.

நாம் தினமும் உண்ணும் உஅணவிலிருந்து வெளிப்படும் கழிவுகளை இரத்திலிருந்து அவ்வப்போது வெளியேற்ற வேண்டியது சிறுநீரக்ங்களின் வேலையாகும். ஆனால், சிறிநீரகத்தால் வெளியேற்றும் அளவு ஒரு குறிப்பிட்ட அள்வே இருக்கும்.

நாம் உண்ணும் உணவினால் ஏற்படும் கழிவுகள் சிறுநீரகத்தின் வெளியேற்றும் அளவைவிட அதிகமாக உற்பத்தியாகுமானால், சிறுநீரகத்தால் வெளியேறாமல் இஅரத்திலேயே தங்கி இருக்க வேண்டி வரும்.
தொடரும்.

said...

பாவம்.ஏன் தான் கடவுள் சோதிக்கிறாரோ....:(((

வயது வேற ஆகிடுச்சே....
ஆபரேஷனை தவிர்ப்பது தான் நல்லது என்று நினைக்கிறேன்.

said...

இவ்வாறு தினம் தினம் ஒரு குறிப்பிட்ட அளவு இரத்தில் சேர்ந்து கொண்டு வருமானால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இரத்தத்தில் சேர்ந்து வைத்துக் கொள்ள முடியாது. உடல் அதை வெளியேற்ற முயற்சி செய்யும்.

சிறுநீரகம் ஒரு குறிப்பிட்ட அள்வே வெளியேற்றும் சக்தியைப் பெற்றிருப்பதால், உடலின் எந்த பாகத்திலுள்ள தசை சுவர் வலுவிழந்து உள்ள்தோ(வெளிப்புற தசையாக இருந்தாலும் சரி, உட்புற தசையாக இருந்தாலும் சரி) அந்த இடத்தில் கட்டியாக உற்பத்தி செய்து அதன் மூலம் கெட்ட நீரை (க்ழிவுகளை) ஒன்று திரட்டி உப்பச் செய்யும்.

கட்டி உப்புவதால் தசையின் மீட்சித் த்ன்மை அதிகரிப்பதால் கட்டியின் மேற்புற த்சைச் சுவர் மிகவும் மெல்லியதாகி, கட்டி உஅடையும் நிலை உண்டாகும். அதன் மூலமாக கழிவுகள் வெளியேறும்.

நாம் தினம் உண்ணும் உஅணவினை கழிவுகள் கிறைந்த இயற்கை உணவாகவும், அளவில் கிறைத்தும் உண்டு வருவதால் ஏற்கனவே இரத்த்தில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள கழிவுகளானது தினம் தினம் வெளியேறி புற்று நோயின் அளவு படிபடியாக குறைந்து விடும்.

ஆகவே நோயற்றவர்களும் தாம் உண்ணும் உணவினை இயற்கை உணவாகவும், அளவினை குறைத்தும், வாரத்தில் ஒரு நாள் உண்ணா நோன்பும் இருந்து வந்தால் புற்று நோய் ஏற்படாமல் தங்களை ஒவ்வொருவரும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இப்படி கூகிறார் டாகடர்.

முடிந்த வரை அறுவை சிகிட்சை இல்லாமல் வேண்டும் என்றால் இது தான் வழி.

மனதை தையிரியமாக
வைத்து கொள்ள வேண்டும்.

திராட்சை, ஆரஞ்சு ஜீஸை சொட்டு சொட்டாய் குடித்தால் அது இரத்த்தில் சேர்ந்து உடலில் உள்ள கட்டிகளை கரைக்கும் என்று வேறு புத்தகத்தில் படித்து இருக்கிறேன்.

உங்கள் தோழி நோயிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!

எனக்கு தெரிந்த விஷயத்தை சொல்லி விட்டேன் துளசி.

said...

’ஞானோதய சித்தஞானி’
தெய்விக மூலிகை வைத்தியர்

டாகடர் c.k. மாணிக்கவாசகம்

முகவரி இல்லை .

நர்ம்தா வெளியீடு அங்கு கேட்டால் தெரியும். அல்லது வலை தளத்தில் தேடிப் பார்த்தால் தெரியும்.

said...

அறுவை சிகிச்சைதான் மேடம் நல்லது.நாட்டு வைத்திய முறைகளில் இதற்கு குணம் இருப்பதாக தெரியவில்லை. தங்கள் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.

said...

வாங்க புதுகைத்தென்றல்.

வருகைக்கும் தகவல் சுட்டிக்கும் நன்றிகள்.

இந்த 'ஆஃப்டர் கேர்
நினைச்சால்தான் பகீர்ன்னு இருக்கு:(

said...

:( yarukanal enna? manasukku varuthama than irukku. kavanama parthuka sollungka. Praying God for speedy recovery.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நல்ல முடிவுதான். ஆனால் எத்தைத்தின்னால் பித்தம் தெளியும் என்றல்லவா இருக்கு நிலமை:(

அறுவை சிகிச்சை செய்ஞ்சுக்கிட்டால் மீதி காலம் வாழும்வரை வலி இருக்காது என்றதால்தானே சம்மதம் சொல்ல வேண்டியதா இருக்கு!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தகவல் கிடைச்சால் கட்டாயம் சொல்லுங்க.

முன்கூட்டிய நன்றி.

said...

வாங்க ஹுஸைனம்மா.

வயசு வித்தியாசம் எல்லாம் 'இதுக்கு' இல்லையாக்கும். யாரைவேணுமுன்னாலும் எங்கே வேணுமுன்னாலும் எப்போ வேணுமுன்னாலும் புடிச்சுக்கும்:(

மகளின் தோழிக்கும் இப்படியாச்சு. 'மெமரிலேன்' என்று ஒரு பதிவு போட்ட ஞாபகம்.

சுட்டிக்கு ரொம்ப நன்றி. ஒரு சிலருக்காவது பயன் கிடைச்சால்கூட நல்லதுதானே?

said...

வாங்க கோமதி அரசு.

நன்றி சொல்ல முடியாமல் மனசு நிறைஞ்சு கிடக்கு.

எல்லாத் தகவல்களுக்கும் நன்றிகள். தோழியும் இந்தப் பதிவை ஃபாலோ பண்ணிக்கிட்டே இருப்பதால் உடனுக்குடன் தெரிஞ்சுக்குவாங்க.

said...

வாங்க அருண் நிஷோர்.

உதவ முன்வந்ததுக்கு மனமார்ந்த நன்றிகள்.

அப்பல்லோவில் நம்ம பதிவுலகத்தோழி ஒருத்தரும் மருத்துவராக இருக்கார். அவருக்கும் தனி மடல் அனுப்பறேன்.

அறுவை, அதிலும் அப்பல்லோதான்னு முடிவாச்சுன்னால் அவுங்க முடிஞ்ச உதவிகளைச் செய்வாங்க.

said...

வாங்க ராம்வி.

நலக்குறைவு தோழியின் தாயாருக்கு.

வயதும் அதிகமா இருப்பதால்தான் அறுவைக்கு சம்மதிக்கக் கொஞ்சம் கஷ்டமா இருக்கு:(

said...

வாங்க கீதா.

அவுங்க மனசுக்கு ஆறுதல் தர கொஞ்சம் ஆன்மீக சமாச்சாரங்களைக் காதில் போட்டுக்கச் சொல்லி இன்னொரு தோழி ஆலோசனை சொல்லி இருக்காங்க. தோழியின் அம்மாவும் ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர்தான்.

ஆனாலும்....நோய், வலின்னு வந்துட்டால் மனசு கொஞ்சம் கலங்கித்தான் போகுது:(

நன்றி கீதா.

said...

வாங்க கோவை2தில்லி.

என்ன செய்யலாம் ஏது செய்யலாம் என்று தோழி தவிக்கிறதைப் பார்த்தால் மனசுக்குக் கஷ்டமா இருக்குப்பா:(

said...

கொஞ்சம் தைரியம்.. கொஞ்சம் நம்பிக்கை ... கொஞ்சம் பணம்... கொஞ்சம் மனுசளோட சப்போர்ட்...
இது போதும் புத்தை உடைக்க.. எனக்கு தெரிஞ்சு இதுக்கு கத்திதான் கரக்ட்ன்னு தோன்றது... வேலூர் சி.எம்.சி.-யிலே நல்ல பண்றா.. இன்னும் லேட் பண்ணமே வைத்தியம் ஆரம்பியுங்க..

said...

என் உறவுக்காரப் பெண் ஒருத்தி சமீபத்தில் அப்போலோவில் அறுவை சிகிச்சை பின் கீமோ,ரேடியேஷன் எல்லாம் செய்து இப்போது சுகமாக இருக்கிறார்.ஆனல் அவர் வயதில் இளையவர்.வயதானவர் என்றால் அதிகத் துன்பம்தான்.ஆனால் அறுவை தவிர்க்க இயலாதது என்றே நினைக்கிறேன்.

said...

alternative medicines எடுத்தா, வாழும் வரை வலியின்றி கட்டுக்குள் வைக்கற சான்ஸ் இருக்கான்னு பார்க்க சொல்லுங்க.

ஹோமியோபதி, ஆயுர்வேதா :(

said...

காலம்தாழ்த்தாது அறுவை சிகிச்சை மேற்கொள்வதுதான் சிறந்தது.

said...

வலி குறைய pranic healing/Reiki முயற்சி செய்யலாம். சென்னையில் கூட இதற்கு centres இருக்கு. remote ல் கூட செய்வாங்க.

வாழ்க வளமுடன் யோகா ஸ்டைலில் சவாசனா மாதிரி படுத்துக் கொண்டு உடலின் வலி உள்ள பாகங்களில் மனதை நிலைபடுத்தி அங்கே உள்ள செல்கள் அனைத்தும் புத்துணர்வோடு இருப்பதாக மனதில் திரும்பத் திரும்ப சொல்லும் போது வலி குறையும் . இது சொந்த அனுபவம் . யாராவது கூட அமர்ந்து அவர்களை இதற்குப் பழக்கப்படுத்தலாம் . அல்லது யோகா மாஸ்டரை வீட்டுக்கு வரவழைத்து பயிற்சி கொடுக்கலாம்.

said...

Thulasi madam,
Got this message in mail. Thought this Docyor's treatment might help your friends mom.

------------------------------

Living Legend

Dear recipients - A strange medical practioner in Narasipur, a village, 50 kms away from Shimoga,

(Karnataka) gives medicinal barks etc from plants and trees


Narayana Murthy, no, we are not talking about our well known IT czar from Benagluru, but this less known person from the same state, Karnataka, India, excels in helping thousands of patients ailing from different disease, from kidney stones to heart diseases to different kinds of cancers.
Popularly known as Vaidya Narayana Murthy, around 60 years of age, is from a small village called Narasipura which is around 50 km from Shimoga, Karnataka, India. He is also known asbattru in the area.
Murthy, basically a brahmin farmer, carries the age-old tradition of Ayruvedic treatment with the help of some NGOs. Every Sundays and Thursdays people from various parts of Southern India start to queue up in front of his house early in the morning. With the help from his family and aides, Murthy serves his patients. On these days, he treats around 600 to 700 patients troubled by different diseases.
Vaidya Murthy listens intently for a minute or two before disposing medicines for 15 to 30 days depending on the ailment for free of cost. The source of his medicines is primarily from different kinds of plants and herbs which he personally collects from forest during particulars days of the week (woody stems, roots, and barks). The patient needs to take these medicines with specific dietary instructions. Sometimes Murthy asks for certain lab reports if the patient is carrying. Narayana Murthy is the last ray of hope for many terminally ill patients suffering from cancer, heart diseases, and respiratory problems. It is not mandatory for the patient to come to collect the medicine. Relatives or friends can also collect the medicine fortnightly or monthly with lab reports or signs of symptoms of the illness.
Murthys expertise in treating cancer, kidney stones, and heart block has left everyone astonished. With just a days worth of prescription gives unbelievable results for heart blocks and kidney stones.
His treatment for certain kinds of cancer has yielded excellent results. These patients need to take 6-8 months of treatment, but certainly has been very effective.
There are as many as 15 NGOs working with Murthy in this noble cause. Now, it has been more than 25 years Murthy started serving the people. He has never expected anything in return, and he has never sought any attention or publicity.
In the age of globalization and the allopathic mode of treatment for every disease, some taking up the task of helping thousands of people without any expectation is highly commendable. For diseases like cancer and coronary artery disease, the comman man cannot afford to have a good treatment due to lack of healthcare insurance availability.
You can reach Shimoga from Bangalore via bus or train, around 280 km. From Shimoga, you can reach Narasipura by public or private transport.
No prior appointment or any sort of contact required to see Murthy. Service is provided on first-come-first-serve basis starting early morning 7 every Sundays and Thursdays.
You can talk to Narayana Murthy by phone, but Sundays and Thursdays he will be busy with his work. Phone Number: (+91) 08183 258033.

said...

வாங்க உமா.

விவரமான பின்னூட்டத்துக்கு விசேஷ நன்றி.

அதை அப்படியே சம்பந்தப்பட்ட தோழிக்கு அனுப்பியிருக்கேன்.

said...

சம்பந்தப்பட்ட தோழி மடலில் அனுப்பிய பின்னூட்டம் இது.

"அன்புள்ளம் கொண்ட நட்புகளுக்கும், துளசி மேடம் அவர்களுக்கும் மிக்க நன்றி.
சென்னை மைலாப்பூர் கச்சேரி ரோட்டில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத டிஸ்பென்சரியை
தொடர்ப்பு கொள்ளுமாறு உறவினர் ஒருவர் கூறினார்.
அங்குள்ள மருத்துவர், இது ஆரம்ப ஸ்டேஜ் தான். மருந்தால் குணப்படுத்திவிடலாம் என்று நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறார். என் தாயாரும் மிக நம்பிக்கையுடன் அவர் சொன்ன
வழி முறைகளை பின்பற்றுவதால், ஒரு வாரத்திலேயே அவர் முகத்தில் நல்ல தெளிவு
வந்துள்ளது.
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்"