Monday, October 10, 2011

அண்ணனைச்சுற்றி வந்தால் அத்தனையும் கிடைக்கும்.. ( சிங்கை சந்திப்புகள் 2011 பகுதி 8 )

உண்மைதான். சைனா டவுனில் கடந்துபோன வருசப்பிறப்பு அலங்கார விளக்குகளை அப்படியே விட்டு வச்சுருக்காங்க. புத்தர் பல் இருக்கும் கோவில் ஒன்னு அழகாப்பெருசா கம்பீரமா நிக்குது. ஆனால் கதவுகளை சாத்தி இருக்காங்க. வெளியே இருக்கும் சிலைகளை ரசிச்சுக்கிட்டே நடந்து போனால் அடுத்த மெயின் ரோடு வந்துருச்சு.. ஆஹா..... நம்ம கோவில் தப்பிச்சுருச்சு. விடறதில்லைன்னு அதே பாதையில் திரும்பறோம். கோவில் அடையாளமே இல்லை. அஞ்சு நிமிசமுன்னு அந்தப்பெண்மணி கை காமிச்ச திசையில்தானே வந்தோம்....... யாரையாவது கேக்கலாமுன்னா.... யாரை? எட்டுமணிதான் ஆகி இருக்கு. அதுக்குள்ளே சாலையில் நடமாட்டமே காணோம்:(
நமக்காக புள்ளையார் ஒருத்தரை அனுப்பிச்சார். சரேலென குறுக்கே கடந்த உருவத்தைப் பார்த்து .இங்கே புள்ளையார் கோவில் எங்கேங்க?'ன்னு கோபால் 'தமிழில்' கேட்க. இடதுபக்கம் பிரியும் சின்ன சாலையில் கை காமிச்சுட்டு அவர் போயே போயிட்டார். 'என்ன.... தமிழில் கேட்டீங்க? அவர் தமிழ்க்காரருன்னு எப்படித் தெரியும்?' 'ஆளைப் பார்த்ததும் தெரிஞ்சது'. ஆஹா....

அவர் கைகாட்டிய திசையில் நடந்து போனா....வெளியே நீளமான வெராண்டாக்களுடன் சில ஹொட்டேல்கள். அதுலே ஒன்னு 1929 ஹொட்டேல். கோவிலா ஒன்னும் கண்ணுலே படலையே.... இன்னும் கொஞ்சம் போய்ப் பார்க்கலாமான்னு பேசிக்கிட்டே அதைக்கடந்து நடந்தால் திடுக்குன்னு கோவில் வந்துருச்சு. கட்டிடங்களோடு கட்டிடமா கூட்டத்தில் கலந்து நிக்குது. பெரிய கேட் இருக்கேன்னு உள்ளெ போனால் வாங்க வாங்க சாப்பிடன்னு கூப்புடறாங்க. சாப்பாட்டு ஹாலில் நல்ல கூட்டம். அட ராமா...... இன்னும் சாமியையே பார்க்கலை. அதுக்குள்ளே சோறா? சந்நிதி எங்கே இருக்குன்னு கண்ணை ஓட்டுனா..... திரை போட்டு ஸ்வாமி அலங்காரம் நடக்குது. அங்கேயும் கொஞ்சம் சின்னதா மனித முடிச்சுகள்.

சரி. சாப்பிட்டு முடிச்சறலாமுன்னு போனோம். வெஜிடபுள் நூடுல்ஸ், தயிர் சாதம். வடை, சாம்பார் லட்டு. யதேஷ்டம். சுவையும் நல்லா இருந்துச்சு.
சாப்பிட வாங்க வாங்க இவர் லயன் சித்தி விநாயகர். இந்த லயன் சிங்கமான்னால்.... இல்லை. இதுக்கு வேற ஸ்பெல்லிங் போட்டுருக்கு. Layan . இதுக்கு என்ன பொருளுன்னு தேடுனா.... இது அரபிச் சொல்லாம். soft, gentle ன்னு விவரம் கிடைச்சது. இது இந்த லயனுக்குப் பொருந்துமான்னு தெரியலை. இன்னும் கொஞ்சம் கிளறினதில்.......

சிதம்பரத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் என்ற சைவர் இந்திய தேசியப் படையில் (INA) சேர்ந்து இங்கே ராணுவ வீரரா வந்துருக்கார். வரும்போது கையோடு தினமும் பூஜிக்கன்னு ஒரு புள்ளையார் சிலையைக் கொண்டுவந்துருந்தார். இவர் இங்கே வந்தபிறகு இவருடைய ஆன்மீக ஈடுபாடைப் பார்த்த சிலரால் பொன்னம்பல ஸ்வாமிகள் என்று அழைக்கப்பட அதுவே நிரந்தரமா ஆயிருச்சு. சின்னதா ஒரு தகரக்கொட்டாய் கட்டி அதுலே புள்ளையாரையும் வச்சு அது புள்ளையார் கோவிலா ஆகிப்போச்சு. முதல் உலகப்போர் முடிஞ்ச சமயம் அது. மக்கள் கோவிலைப் பார்த்ததும் வழக்கமா கோரிக்கைகள் வச்சு வேண்டிக்குவாங்க பாருங்க. அதே போல் பலருக்குக் கோரிக்கைகள் நிறைவேறுனதும் புகழ் பெற ஆரம்பிச்சார் இந்தப் புள்ளையார். ( நம்ம வீட்டு சாமிக்குக்கூட ஒரு தோழி ஏதோ கோரிக்கை வச்சு அது நிறைவேறுச்சுன்னு புதுத்துணிகள் கொண்டுவந்து சார்த்தினாங்க ஒரு சமயம். நம்புனவங்களை விடமாட்டானா இருக்கும்)

இந்தக் கோவில் அப்போ பொது மருத்துமனையின் புது சவக்கிடங்குக்குப் பக்கம் இருந்துருக்கு. ராணுவத்தினருக்கான ஆர்மி குவார்ட்டர்ஸில் இருந்து கோவிலுக்குப்போக ஒரு ஷார்ட்கட் பாதைகூட வந்துருச்சு. ராணுவ குடியிருப்புகள் வரிசையில் இருக்குமுல்லே . அந்த சிப்பாய் லயனைக் கடந்து போகணும் என்பதால் லயன் புள்ளையார்ன்னு குறிப்பிடப்பட்டு, அதுவே இப்ப நிலைச்சிருச்சு .

கோரிக்கைகளை நிறைவேற்றும் புள்ளையார் என்பது உறுதிப்பட்டுப் போயிருந்ததால்..... பொதுமருத்துவ மனையில் வேலை செய்யறவங்க, பக்கத்துலே அவுட்ரம்( Outram) ஏரியாவில் இருந்த ஜெயிலில் வேலை செய்யும் ஊழியர்கள், ஆஸ்பத்திரிக்கு வர்ற பொதுமக்கள் இப்படி பக்தர்கள் கூட்டம் தினம் கோவிலுக்கு வர ஆரம்பிச்சாங்க. பொன்னம்பல ஸ்வாமிகள் ஒரு நாகரையும் ஸ்தாபிச்சு தினசரி பூசைகள் நடத்திக்கிட்டு இருந்தார்.

இவர் சர்வீஸ் முடிஞ்சு திரும்பிப் போனப்ப சாமியைக் கூடக்கொண்டு போகாமல் கோவிலை இங்கே இருந்த நகரத்தார் வசம் கொடுக்க நினைச்சார். .அவுங்களும் இதை எடுத்துக்கறதா வேணாமான்னு கொஞ்சம் யோசிச்சு இருக்காங்க. எதுக்கும் அறநிலையத்துறையினரைக் கேட்டு அவுங்க வசம் கொடுங்கன்னு சொல்லி இருக்காங்க. ஸ்வாமிகள் அங்கே போய்க் கேட்டா.... அவுங்களும் ஆர்வம் காட்டாமல் தயங்கி இருக்காங்க. மறுபடியும் நகரத்தார்களிடம் நீங்களே எடுத்து நடத்திக்குங்கன்னு இவர் விண்ணப்பம் செஞ்சிருக்கார். சாமியை வேணாமுன்னு ஸ்வாமிகள் கிட்டே பளிச்சுன்னு சொல்ல முடியாமல் சரின்னு சம்மதம் சொல்லிட்டாங்க நகரத்தார். அப்போ ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் நல்லா நடந்துக்கிட்டு இருக்கு. கூடவே இந்தக் கோவிலையும் பார்த்துக்கலாமுன்னு முடிவு செஞ்சாங்க. அப்படியே ஆச்சு.

ஆனால்..... கொஞ்ச காலத்தில் (1920) மருத்துவமனையை விரிவுபடுத்திக் கட்டும்போது கோவில் இருக்கும் இடம் (சவக்கிடங்கு பக்கம்) தேவையா இருக்குன்னு அரசு தீர்மானிச்சு அந்த இடத்துக்குப் பதிலா காசு தர்றோம். நீங்க வேற இடத்துக்குக் கோவிலை மாத்திருங்கன்னு கேட்டாங்க. சட்டம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா? புது இடம் தேடிப்பார்த்தப்பக் கிடைச்சதுதான் ( junction of Keong Saik Road and Kreta Ayer Road.)இப்போ கோவில் இருக்கும் நிலம். அரசு கொடுத்த நிதியுடன் இன்னும் நிறைய பணம்போட்டு கோவிலைக் கட்ட ஆரம்பிச்சாங்க. இது கட்டி முடிஞ்சதும் சாமியை புது இடத்தில் குடி ஏத்தும் திட்டம். பார்த்தால் அங்கே பழைய தகரக்கொட்டாயில் சாமி சிலை கொஞ்சம் பழுதடையும் நிலையில் இருந்துருக்கு. அடடா..... இப்படி ஆகிப்போச்சேன்னு ,இந்தியாவில் இருந்து கணபதியின் கருங்கல் சிலை ஒன்னு ஏற்பாடு செஞ்சு அதைக் கொண்டுவந்துட்டாங்க.

பொதுவா சிதிலம் ஆன மூலவர் சிலைகளைக் கடலில் ஜலசமாதி செய்யும் வழக்கம் இருக்கு. (ஃபிஜியில் கூட பழைய மூலவரைக் கடலில்தான் இறக்கினாங்க) நகரத்தார்களில் சிலர் துக்கு சம்மதிக்கலை. வச்சுக்கும்பிடறோமுன்னு பொன்னம்பல ஸ்வாமிகளுக்கு வாக்குக் கொடுத்துட்டு இப்போ அந்தச் சிலையை கடலில் போட்டா கொடுத்த வாக்கை மீறுனதா ஆகிருமேன்னு தயங்கினாங்க.

கோவில் விஷயத்துலே மனமொத்த கருத்து வேணும். எதுக்கும் வம்பு வேணாமுன்னு தீர்மானம் செஞ்ச மற்ற அங்கத்தினர்கள் புதுப்பிள்ளையாரை பிரதிஷ்ட்டை செஞ்சுட்டு அதே கருவறையில் மூலவர்க்கு முன்னே பழையவரையும் ஸ்தாபிக்கலாமுன்னு அதுக்கான ஏற்பாட்டைச் செஞ்சுட்டாங்க. 1925 இல் புதுக்கோவிலின் மஹாகும்பாபிஷேகம் ஆச்சு. இப்போ கருவறையில் ரெண்டுபேருமே இருக்காங்க. ஆகமவிதிப்படி பூஜைகள் செய்ய ஊரில் இருந்தே ( வெளிநாட்டுலே நம்மாட்கள் ஊர்ன்னு சொன்னால் அது தமிழ்நாடு. ஃபிஜியில் கூட நம்மை ஊர்க்காரங்கன்னுதான் சொல்வாங்க)

நாகராஜாவும் இங்கே குடியேறினார். கூடவே வேல் வடிவில் முருகன். ராமநாமம்ன்னு ஒரு சந்நிதி. வெள்ளியில் ஒரு ரதம் செஞ்சு ரத ஊர்வலம் தைப்பூசத்துக்கு முதல் நாள் தண்டபாணி கோவிலில் இருந்து புறப்பட்டு மார்கெட் தெருவழியா வந்து லயன் பிள்ளையார் கோவிலில் நிறைவடையும் வழக்கமும் வந்துச்சு.
ரதம்

ஸ்ரீதண்டபாணி கோவிலில் அறங்காவலரா இருந்த பிச்சையப்ப செட்டியாருடைய கிடங்கு இருந்த இடமும் ( மார்கெட் சாலை) அரசின் வசம் போனதால் அவர் பூஜிச்சுக்கிட்டு இருந்த பிள்ளையார் சிலையையும் கோவிலுக்கே கொடுத்துட்டார். இப்ப மூணு சிலைகள் கருவறையில்.
அன்றும்
இன்றும்

சாப்பாடானதும் நோட்டீஸ் போர்டைப் பார்வையிட்டேன். பழைய கோவில் படங்கள், சமீபத்திய கும்பாபிஷேகங்களின் படங்கள் எல்லாம் போட்டு வச்சுருந்தாங்க. அதையே 'சுட்டு'க்கிட்டேன். குழந்தைகளும் பொங்கல் வாழ்த்து, விநாயகர் துதி, அவர் பெருமைன்னு எழுதிப்போட்டுருந்தாங்க.
2007 வது ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் கூட்டம். மூணு நிலைக்கோபுரம் இப்போ அஞ்சு நிலையில் அருமையா அமைஞ்சு போயிருக்கு. மூணரை மில்லியன் டாலர் செலவில் எல்லாம் அமர்க்களம்தான் போங்க!
சுற்றிவர வாகாய்ப் பிரகாரம் அமைஞ்சுருக்கு. 108 முறை சுற்றினால் கைமேல் பலனாம். சொன்னதைக் கேட்டுக்கிட்டேன்.

உற்சவர் பிரமாண்டமான மூஷிக வாகனத்தில் அட்டகாசமான அலங்காரத்துடன் எழுந்தருளி இருந்தார். சட்னு பார்த்தப்ப இந்தக் கோவில் பெஸண்ட் நகரில் (பஸ் ஸ்டாண்டு அருகில்) இருக்கும் சித்தி விநாயகர் கோவில் அமைப்பு போலவே இருக்கு. அங்கே ஹால் கருவறைக்குப் பின்புறம். இங்கே கருவறைக்கு வலப்பக்கம். அது ஒன்னுதான் வித்தியாசம்.
திரை விலகியதும் கஜமுகன்களைக் கண்குளிரக் கண்டோம். க்ளோஸ்ட் சர்க்யூட் டிவியில் வேற காட்சி தர்றார். என்ன விசேஷமுன்னு கேட்டால் 'சதுர்த்தியாம்'! எல்லா மாசமும் வரும் சதுர்த்தியிலும் இப்படிக் கொண்டாட்டம். ஆவணிச் சதுர்த்தியில் பிரமாண்டமான விழா. அது விநாயகச் சதுர்த்தியாச்சே! அவுட்ரம் ரயில் நிலையம் அங்கிருந்து அஞ்சு நிமிச நடையில் இருக்கு. வயிறும் கண்ணும், மனசும் நிறைஞ்சு வழிய ரயிலேறி ஃபேரர் பார்க் நிலையத்தில் இறங்கி அறைக்கு வந்து சேர்ந்தோம். இன்னிக்குப் பூரா ஏகப்பட்ட சந்திப்புகள் இல்லே????
தொடரும்.................:-)

18 comments:

said...

அடடா, அங்ஙனகுல்லையே தான் சுத்திட்டு திரிஞ்சோம் , இப்படி ஒரு கோயில் இருக்குன்னு தெரியாம போச்சே.
நல்லா ஹோம் வொர்க் பண்ணி எழுதறீங்க, நன்றி!

said...

வயிறும் கண்ணும், மனசும் நிறைஞ்சு வழிய/

நிறைவான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

said...

சித்தி விநாயகரைச் சுற்றி வந்தோம். 108 முறை அல்ல :)) மனதார ஒருதடவை சுற்றினால் போதும்தானே.

said...

பிள்ளையாரைச் சரி செய்ய முடியலையாம்மா?
எப்பாடியோ இத்தனை அம்ர்க்களமா செலவு செய்து மஹாகனம் பொருந்திய கணேசனுக்குக் கோவில் எழுப்பிட்டாங்க.

படங்கள் அத்தனையும் கச்சிதமா அமைஞ்சுருக்கு.

said...

ஆஹா ஒரே சன்னிதியில் மூன்று விநாயகர்....

said...

முருகன், மாரியம்மனின் தரிசனம் முடிஞ்சதும் இப்போ பிள்ளையார் தரிசனமும் அருமையா ஆச்சு.

சாப்பாடும் பிரமாதம்.

கோயில்களில் தான் எவ்வளவு சுத்தம்...

said...

இன்றைய வலைச்சரத்தில் ”இது எங்க ஏரியா, உள்ள வாங்க!”

உங்கள் வலைப்பக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தபோது வந்து பாருங்கள்.

நட்புடன்

ஆதி வெங்கட்.

said...

அங்க போனப்ப கோவிலுக்கு போக முடியாத குறை இந்த பதிவு மூலமா சரியா போச்சு... சூப்பர்

said...

░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░▓░░░░░░░░░░░░
▓▓▓▓▓░░░░░▓▓░░░▓░░░░▓▓░░░▓░░░░▓░░░░░▓░░░▓▓▓▓▓░░░░▓░░░▓▓░░░░▓░
▓░░▓░░░░░▓░░▓░░░▓░░▓░░▓░░░▓░░░▓░░░░░▓░░░▓░░▓░░░░░▓░░▓░░▓░░░▓░
▓░░▓▓▓░░▓░▓░░▓░░▓░▓░▓░░▓░░▓░░░▓░░░░░▓░░▓▓▓▓▓▓▓▓░░▓░▓░▓░░▓░░▓░
▓░░▓░░▓░▓░▓░░▓░░▓░▓░▓░░▓░░▓░░░▓░░░░░▓░▓░░░░▓░░░▓░▓░▓░▓░░▓░░▓░
▓░░▓░░▓░░▓░░░░▓▓░░░▓░░░░▓▓░░░░▓▓▓▓▓▓▓░░▓▓▓▓░░░░▓░▓░░▓░░▓▓▓▓▓░
░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓▓░░▓░░░░░░░░░▓░
░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░▓░
░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░▓▓░░░░▓░▓▓▓▓▓░░▓░░░▓▓░░░░▓▓▓▓▓░░░
░▓░░▓░░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░░░▓░░▓░░░░
▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓▓▓▓▓▓▓▓░░
▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓░░░░▓░░▓░
░▓░░▓▓▓▓▓░▓░░▓░░░▓▓▓▓▓▓▓░░▓▓▓▓░░▓░░
░░░░░░░░░░░░░░░░▓░░░▓░░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓░░░░░░░░░░░░

said...

வாங்க இளையதாசன்.

சரித்திர வகுப்புலே ஆன்மீகச் சுற்றுலான்னா ஆராய்ச்சி செய்யாம எழுத முடியுமா? :-)

said...

வாங்க இராஜாராஜேஸ்வரி.

பாராட்டுகளுக்கு நன்றிப்பா. பெருமையும் புகழும் எல்லாம் புள்ளையாருக்கே!

said...

வாங்க மாதேவி.

உண்மையான அன்புடன் கை கூப்பினாலே போதுமாம்! புள்ளையார் சொல்லிட்டார்!!!!

said...

வாங்க வல்லி.

சரி செய்யமுடியல்லைன்னு தூக்கிப்போடாம இருந்தாங்களே அதைச் சொல்லுங்க!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஒரே வீட்டில் இரு பதிவர்கள் இல்லையா? அதுவும் நட்சத்திரமாவும் ஆசிரியராகவும். அதைப்போலத்தான் :-))))

said...

வாங்க கோவை2தில்லி.

சுத்தமே கடவுள். அதுதான் அங்கே செல்வமும் கொழிக்குது!

said...

வாங்க அப்பாவி தங்கமணி.

குறை தீர்த்த கோவில்:-)

said...

வாங்க விக்கியுலகம்.

நன்றி.

said...

வாங்க பத்மாசூரி.

என்ன அமர்க்களப்படுத்திட்டீங்க!!!!!