ஒரு ரெண்டுமூணு வருஷத்து நண்பர் (ஃபேஸ் புக்கிலும் கூட) ஒருநாள் நம்ம வீட்டுக்கு வரணுமுன்னு சொல்லிக்கிட்டே இருந்தவர், நேற்று செல்லில் கூப்பிட்டு, 'திங்களன்று வரவா'ன்னு கேட்டார். சரி, வாங்கன்னு வர்ற நேரத்தைக் கேட்டுக்கிட்டேன்.
ஆமா... இன்றைக்குத்தானே திங்கள்?
நம்மவருக்கு உடல்நிலை எப்படி இருக்குமோன்னும் ஒரு கவலை. நேத்து வந்த காய்ச்சல் நேத்தோடு போச்சு என்றாலும் கவனமா இருக்க வேணும்தானே ?
சொன்னதுபோல் பகல் மூணு மணிக்கு வந்தாங்க. அந்ந்த்தா மனவாளே!
நம்ம வீட்டில் கொலு விஸிட்டுக்கு மட்டும் ஒரு செட் ப்ரோக்ராம் இருக்கு. வந்தவங்களை வரவேற்று, சாமி அறைக்குக் கூட்டிப்போய், அவர்களையே ஆரத்தி எடுக்கச் சொல்லி, கொலுவைச் 'சுத்திப்பார்த்ததும்' (உண்மையில் அறை முழுவதும் சுத்திவர கடவுளர்களும், கொஞ்சம் மற்ற பொம்மைகளும்தான்) அன்றையப் ப்ரசாதமும், மற்ற சில தின்பண்டங்களுமா சாப்பிடக் கொடுத்து, கொஞ்ச நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருப்போம். இதுக்கிடையில் ஃபொட்டோ செஷன் வேற ! நம்ம வீட்டு ஊஞ்சல்தான் ஃபொட்டோ பாய்ன்ட் என்பதால் அதுலே உக்காரச் சொல்லி சில க்ளிக்ஸ்.
அப்புறம் மஞ்சள் குங்குமம், தாம்பூலம் (வெற்றிலை =ஆப்பிள், பாக்கு = ஆரஞ்சு), சின்னப்பிள்ளைகள் கூட வந்திருந்தால் அவர்களுக்கு ஒரு சின்னப் பரிசு என்று முடியும்.
காலை பதினொன்னுக்கு வரேன்னு சொன்ன இன்னொரு தோழி, ஏதோ சில காரணங்களால் மாலை வர்றதாத் தகவல் அனுப்பினாங்க. இவுங்க நம்ம அன்பு விநாயகர் கோவில் நிறுவனர். நம்மூர் சிட்டிக்கவு'ன்ஸில் தேர்தலில் கம்யூனிட்டி போர்டு பிரிவுக்கு சுயேச்சை வேட்பாளராப் போட்டியில் கலந்துக்கறாங்க. அடுத்த வாரம் தேர்தல் நாள். ( இந்த தேர்தலில் இவுங்க வெற்றியடையலை. அடுத்த முறை வெற்றிபெற வாழ்த்துக்கின்றேன் )
இங்கெ சிட்டிக்கவுன்ஸில்தான் நம்மூர் ஸ்டேட் கவர்மென்டு போல செயல்படுது. மாநில முதல் அமைச்சர் என்றெல்லாம் ஒன்னும் கிடையாது. மேயர் மட்டும்தான். அவரையும் மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கிறோம். மூணு வருஷத்துக்கு ஒரு முறை தேர்தல் .
ஒரு ரெண்டு மாசங்களுக்கு முன்பே தபாலில் ஓட்டுச்சீட்டையும், எந்தெந்த பேட்டையில் யார்யார் போட்டியிடறாங்க, அவர்களைப் பற்றிய சுய விவரங்கள், அவர்கள் கொள்கைகள், அவர்கள் சார்ந்த கட்சி இப்படி எல்லா விவரங்களையும், மேயர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் சுயவிவரங்களும் கூடவே ஒரு இலவசத் தபால் உறையுமாக நம்ம வீட்டுத் தபால்பெட்டிக்கு வந்துரும்.
இதை அனுப்பறதுக்கு ஒரு நாலு வாரம் இருக்கும்போதே வோட்டர் லிஸ்டில் நம்ம பெயர், விலாசம் எல்லாம் சரியாஇருக்கான்னு கேட்டு அச்சிட்ட விவரங்களோடு ஒரு தபால் வரும். சரியா இருந்தால் நாம் ஒன்னும் செய்ய வேணாம். விலாசம் மாறியிருந்தால் புது விலாசம் இதுன்னு தெரிவிக்கணும். இதுக்கு அச்சிட்ட ஒரு படிவமும், அதை அனுப்பி வைக்க இலவசத் தபால் கவரும் கூடவே இருக்கும். வோட்டும் தபால் மூலம்தான். முழு விவரம் கிடைச்சதும், கடைசி நாள் என்று குறிப்பிடும் தேதிக்குள் நம்ம வோட்டை , யார் யாருக்கு , எந்தப்பகுதியில் வோட்டுப்போட நினைக்கிறோமோ அந்தப்பெயர்களில் ஒரு டிக் போட்டுட்டு, அந்த இலவசத் தபால் உறையில் வச்சு எதாவது போஸ்ட் ஆஃபீஸிலோ, சாலைகளில் இருக்கும் NZ POST தபால் பெட்டியிலோ, சிட்டிக்கவுன்ஸில் நூலகங்களில் இருக்கும் இதற்கான பெட்டிகளிலோ போட்டுடலாம்.
வேட்பாளர்களும் நம்ம வீடுகளுக்கு வந்து, தங்கள் கொள்கைகளை விவரிச்சுச் சொல்லி ஆதரவு வேண்டுவார்கள். நாம் வீட்டில் இல்லைன்னா, சுயவிவரங்கள் அடங்கிய அச்சிட்டத்தாள்களை நம்ம வீட்டுத் தபால் பெட்டியில் வச்சுட்டுப்போவாங்க. மேலும் இப்பெல்லாம்தான் சோஸியல் மீடியா ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கே, facebook, அது இதுன்னு அதையும் விட்டுவைக்கறதில்லை.
சமீபகாலமா அங்கங்கே போஸ்டர் ஒட்ட ஆரம்பிச்சு இருக்காங்க. வீட்டு காம்பவுண்டு சுவரில், வீட்டுப் ஃபென்ஸில் பிடிப்பிக்கணுமுன்னா, அந்தந்த வீட்டு உரிமையாளர்களின் அனுமதி வாங்கிக்கணும். கண்டகண்ட இடங்களில் ஒட்டிட்டுப்போனால் அவ்ளோதான். தனக்குத்தானே ஆப்பு ! தேர்தல் முடிஞ்சதும், உடனே மறுநாள் வந்து ச் செய்வார். அந்தப் போஸ்டர்களை எடுத்துட்டு, நமக்கு நன்றி சொல்லிட்டுப் போவாங்க. இதுக்கெல்லாம் தனியா ஆளெல்லாம் கிடையாது. வேட்பாளரே நேரடியாகச் செய்வார்.
நல்ல வோட்டே போட ஆளில்லாததால்..... கள்ள வோட்டு என்ற சமாச்சாரமெல்லாம் இல்லையாக்கும், கேட்டோ !!!
இது என்னடா.... பயணத்தொடர்னு சொல்லிட்டு, இதெல்லாம்கூட எழுதறாளேன்னால்..... எதைப்பற்றியாவது சொல்லிக்கிட்டு இருக்கும்போது.... சம்பந்தப்பட்ட நாட்டு நிகழ்ச்சிகளையும் சொல்லிருவேன். தனியாக இதுக்குன்னு நேரம் ஒதுக்கி வைக்கிறதெல்லாம் நடக்கற காரியமே இல்லை..... பொறுத்தருள்க.
சாயங்காலம் ஒரு ஆறுமணிபோல தோழியும், மகளுமாக வந்தாங்க. குழந்தை, நம்ம பேரனைவிட ஆறுமாசம் சின்னவள். அவனோட விளையாட்டுச் சாமான்கள் ஏராளமா நம்ம கூடத்தின் ஒரு பகுதியிலேயே இருப்பதால்.... இப்பெல்லாம் சின்னக்குழந்தைகள் நம்ம வீட்டுவந்தால், நம்மைச் சட்டையே பண்ணறதில்லை. ஒரே விளையாட்டுதான் ! குழந்தைகள் வந்தால் நம்மவர்தான் பேபி ஸிட்டர்.
https://www.facebook.com/share/v/1BmphP8SdK/
https://www.facebook.com/share/v/1FwpZfSqPJ/
https://www.facebook.com/share/v/17ssuit7i4/
தோழி இங்கே ஒரு பரதநாட்டியப் பள்ளி நடத்தறாங்க. பாட்டு வகுப்புகளும் கூட ! சின்னக்குழந்தைகள், சிறுமிகள் மட்டுமில்லை. முக்கியமா பெரியவர்களுக்கு ! நடனம் ஆடத் தெரிஞ்சு, கல்யாணம் குடும்பப்பொறுப்புன்னு ஆனதும் நடனமாடுவதை நிறுத்திய இளம்தாய்மார்களுக்கு இது ஒரு வரம்! தாயும் மகளுமாகப் பல ஜோடிகள்! பார்த்து ரசிப்பதே என் வேலை!
கொஞ்சநேரத்தில் நம்ம செந்திலும், மனைவியுடன் வந்தார். எல்லோருமாச் சேர்ந்து அன்றைய தினம் இனிமையாகத்தான் போனது.
மறுநாள் கோவில் வேலைகள் முடிஞ்சதும் கொலுவிஸிட் வருவதாக நம்ம புள்ளையார் கோவில் பண்டிட் சேதி அனுப்பினார்.
இன்னொரு தோழியும் வர்றதா சேதி அனுப்பினாங்க. அவுங்க வீட்டுக் கொலு விஸிட்டர்கள் போனதும்தான் வரமுடியும் என்பதால்... ஏழரை மணின்னு முடிவு.
பிரஸாதமாகக் கேஸரியும் வெண்பொங்கலும். விஸிட்டர்ஸ் வந்து போகும்போதே இன்றைக்கு மணி பத்து ! பத்தா என்ற நம்மவரிடம், டே லைட் ஸேவிங்க்ஸ் ஆரம்பிச்சுட்டதால்.... உண்மை நேரம் இப்ப ஒன்பது மணிதான்னு தீர்ப்பு சொன்னேன். நியூஸியில் எனக்குப்பிடிக்காத ஒன்னு எதுன்னா.... இந்த டே லைட் ஸேவிங்க்ஸ் கொடுமைதான்.

நாளைக்கு சரஸ்வதி பூஜை. நவராத்ரியின் கடைசி நாள் இல்லையோ ? ப்ரஸாதத்துக்கு மெனக்கெட வேணாம். இன்னொரு தோழி வர்றேன்னு சொல்லியிருந்தாங்க. இவுங்க மகள், ரொம்ப அருமையாப் பாடுவாள். அப்படியே மனப்பாடமா எந்த மொழிப் பாட்டுன்னாலும், எவ்ளோ நீளப்பாட்டுன்னாலும் பிரச்சனையே இல்லை. இத்தனைக்கும் வயசு இன்னும் ஏழு கூட நிறையலை. வீட்டுக்கு அண்ணன் குடும்பம் வந்துருக்காங்களாம். அவர்கள் மகளைக் கூட்டிவரலாமான்னு கேட்டாங்க. என்ன கேள்வி ? அண்ணன் குடும்பத்தையும் கூட்டிட்டு வாங்கன்னேன். ஆனால் வந்தது அண்ணன் மகள் மட்டுமே.
குழந்தை வழக்கம்போல் அருமையாகப் பாடினாள் !!!
https://www.facebook.com/share/v/1Cm9bZe8qr/
https://www.facebook.com/share/v/1EjbKcj5KR/
https://www.facebook.com/share/v/1DLgxNMAxq/
மேலே இருக்கும் சுட்டிகளில் அரோஹா பாடிய பாடல்களின் காணொளி. ஃபேஸ்புக்கில் வலையேத்தறதுதான் இப்பெல்லாம் எனக்கு வசதியாக இருக்கு.
சொல்ல விட்டுப்போச்சே...... தோழி வீணை வாசிப்பாங்க. எனக்கு ரொம்பவே பிடிச்ச வாத்தியம் !
நவராத்ரி முடிஞ்சது. நாளை விஜயதசமிக்கு என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் இருந்தேன்.
தொடரும்........... :-)










1 comments:
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, தேர்தல் திருவிழா அமர்க்களம், செயற்கரிய சாதனை என்றெல்லாம் சொல்றோம்... ஆனால் நியூசிலாந்தில் நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறைகள் உண்மையிலேயே பாராட்டப்பபடவேண்டியவைகளாய் இருக்கின்றன. இந்தியாவிலும் அப்படி வராதா என்கிற ஆசை வருகிறது.
Post a Comment