Wednesday, December 27, 2023

ரெட்டைப் பொறந்தநாளைக் கொண்டாடியாச்

 உங்க துளசிதளத்தின் & தளத்தின் புரவலர் நம்ம கோபாலின்  பிறந்ததினத்தைக் கொண்டாட இந்திய அரசே விழாவொன்னு ஏற்பாடு செஞ்சதுன்னு சொன்னால் நம்புவீங்களா ? 

என்ன..... இல்லையா ? 

படங்காமிச்சால் நம்புவீங்கதானே ? இதோ.............. !
துளசிதளத்துக்கு 19 வயசு முடிஞ்சு 20 ஆரம்பிச்சாச்சு !  புரவலர் ரொம்பவே மூத்தவர். மறந்துறாம இருக்கணும் என்றுதான் இவருக்கும் தளத்துக்கும் முடிச்சுப்போட்டு வச்சேன் :-)

பொறந்தநாள்  ஞாயிற்றுக்கிழமையா அமைஞ்சதுலே சிலபல கூடுதல்பலன்கள் கிடைச்சது!

தோழியின் குழந்தையைத் தொட்டிலில் போட்டுப் பெயர்வைக்கும் விழா காலையில் முதல் நிகழ்ச்சி. நம்ம வீட்டில் சாமி கும்பிட்டு முடிச்சு,  நண்பர் குழந்தைக்குத் தொட்டிலிடும் வைபவத்திற்குப் போனோம்.  நம்ம அன்பு விநாயகர் கோவில் இவுங்க வளாகத்துலேதான் இப்போதைக்கு !  ரெண்டு ஆண்குழந்தைகளுக்குப்பின் இவள் பெண். குழந்தையின் அம்மம்மா இந்தியாவில் இருந்து மகளுக்கு  உதவி செய்ய  வந்துருக்காங்க. 
குழந்தைக்கு அழகான தமிழ்ப்பெயர்  தேர்வு செஞ்சுருந்தாங்க .  நயம் புன்னகை !  எப்பவும் புன்னகையோடு இருக்கட்டும் என்று வாழ்த்தினோம் ! 
இன்னும் இரண்டு நண்பர்கள் குடும்பமும் அழைப்பின் பெயரில் வந்துருந்தாங்க .ஏற்கெனவே நமக்குப் பரிச்சயம் உள்ளவர்கள்தான் என்பதால்   பேச்சும் சிரிப்புமாக விழா நடந்துச்சு !



அங்கிருந்து கிளம்பி நேராப் போனது  நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலுக்குத்தான். இப்பெல்லாம்  காலை நாலரை முதல் பகல் ஒரு மணிவரைக் கோவிலைத் திறந்து வைக்கறாங்க. நமக்கு நல்ல வசதியாகப் போச்சு.  நாம்தான் விழாக்களையெல்லாம் வீக் எண்டுக்கு நேர்ந்துவிடும் மக்களாச்சே ! அதுவும் விழாக்களுக்கான நேரம் சனிக்கிழமை  மாலையில்தான். 

நமக்கு  மாலை நேரங்களில் வேறு விழாக்களுக்குப் போக வேண்டி இருந்தால், சனிக்கிழமை கோவில் தரிசனத்தைப் பகல் ஒரு மணிக்குள் வந்து முடிச்சுக்கலாம்.

இன்று மாலை Meet & Greet  என்ற நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி நம்ம இந்தியன் ஹைக்கமிஷணரின் (Ms. Neeta Bhushan ji )  அழைப்பு !  யாரைச் சந்திக்கப்போறோமாம் ?  

Dr. Rajkumar Ranjan Singh, Hon'ble Minister of State, Ministry of External affairs, Government of India. 

சாயங்காலம் அஞ்சரைக்கு நிகழ்ச்சி. சந்திப்பு மட்டுமில்லாமல்  உள்ளூர் கலைஞர்கள் மூலம் சிலபல கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செஞ்சுருந்தாங்க.

தலைநகரில் (வெலிங்டன்) இருந்துவரும் விமானம் தாமதமாக வந்திறங்கியதால்  நிகழ்ச்சியும் தாமதம் ஆச்சு. ஆனால் ஒத்திகை பார்ப்பதுபோல்  சில நடனங்களை  ஆடினதில்  பொழுது நல்லாவே போச்சு. கூடியிருந்த மக்களும் நமக்குத் தெரிந்தவர்கள்தான் இல்லையோ !








மேலே படம்: இந்திய ராணுவ அதிகாரி & மனைவியுடன் .பணி ஓய்வு பெற்று, இப்போது நம்ம ஊரில் குடும்பத்துடன் வசிக்கிறார். எங்க ஊர் விஐபி !

அமைச்சர் வந்ததும் விளக்கேற்றி வச்சுக் கூட்டத்தை ஆரம்பிச்சு வச்சார். அரசியல்வியாதிகளின் பேச்சைப்போல் இல்லாமல்  ஏதோ நம் குடும்பத்துப் பெரியவர்களுடன் நடந்த சந்திப்பாகத்தான் எனக்குத் தோணுச்சு. 

 அறிமுகங்கள் எல்லாம் ஆச்சு.  நம்ம ஹைகமிஷணரும் ரொம்பவே அன்பானவர்களாத்தான் இருக்காங்க. நடன நிகழ்ச்சிகளா முதலில் பரதநாட்டியம், அடுத்து வெவ்வேறு மாநிலமக்கள் (மேற்கு வங்காளம், குஜராத்,  பஞ்சாப் ) வழங்கிய  நடனங்கள்ன்னு இந்திய விழாவாக இருந்தது உண்மை. எல்லோரும் நம்மவருக்குப் பொறந்தநாள் வாழ்த்துகளையும் சொன்னாங்க. 

படங்கள் எல்லாம் க்ளிக்கி முடிஞ்சதும்  முக்கிய விருந்தினர்கள் கிளம்பிட்டாங்க.  அமைச்சர் இன்று காலையில்தான் இந்தியாவிலிருந்து  வெலிங்டனுக்கு வந்தார். ஜெட்லேக் இல்லாமல் இருக்குமா ?

அமைச்சர் வாழ்கன்னு சொல்லி, ஏற்பாடு செஞ்சுருந்த  சிற்றுண்டிகளை ஒரு கை பார்த்துட்டு வீட்டு வந்தோம்.  பர்த்டே பார்ட்டி ஆச்சு ! 
நாளைக்கும் இதே நேரம் இங்கே வரணும். ஹிந்து ஸ்வயம் ஸேவக் நம்மூர் கிளை,  மூணுநாட்களுக்கு முந்தியே தகவல் அனுப்பி இருந்தாங்க.

 "மதன்மோஹன் வைத்யா ஜி, நம்மூருக்கு வருகை தருகிறார்.  அவர் நம்மையெல்லாம் சந்திக்க ஏற்பாடு செஞ்சுருக்கோம்"

சந்திப்புக்கு வர்றோமுன்னு பதில் சொல்லியிருந்தோம்.
மறுநாள் நம்ம நண்பரிடமிருந்து ஒரு செய்தி. நண்பர் இங்கே HSS இன் நம்மூர்க்கிளையில் முக்கிய பொறுப்பில் இருக்கார்.  'விருந்தினரை நம்ம வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வரவா'ன்னு  கேட்டதும் சரின்னுட்டோம். பகல் சாப்பாட்டுக்கு வர்றீங்களான்னதுக்கு, இல்லை. ஒரு நாலு மணிக்கு வர்றோமுன்னு சொல்லிட்டார்.  ஹாலில் சந்திப்பு ஆறு மணிக்கு என்பதால்  நம்ம வீட்டுக்கு வந்து, இங்கிருந்து போக சரியாக இருக்குமாம்.

வைத்யா ஜி  வீட்டுக்குள் வந்ததும், நம்ம ஊஞ்சலைப் பார்த்து ரொம்ப மகிழ்ச்சி அடைஞ்சார். நேராப்போய் அதுலே உக்கார்ந்தார். எனக்கும் மனசுக்குத் திருப்தியா இருந்தது. நம்ம வீடு நியூஸியில் இருக்கும் இந்தியவீடு ! உள் அலங்காரம் எல்லாம்  இந்திய ஸ்டைலில்தான். 

பூஜை அறைக்குப்போய்  ஸ்வாமி நமஸ்காரம் செஞ்சுட்டு, ரொம்ப நல்லா இருப்பதாகப் பாராட்டினார்.  நாம் எங்கே வாழ்ந்தாலும்  நம்  ஹிந்து பாரம்பரியத்தை விடக்கூடாது.  மனதில் பக்தியோடு இருப்பது நல்லதுன்னு எங்களுக்கு ஆசி வழங்கினார்.  ஊரிலிருந்து உறவினர் வந்ததுபோல் உணர்ந்தேன். 

இவரோடு  HSS உள்ளூர்க்கிளை &  'தலைமையகம் ஆக்லாந்து'  தலைவர்களும் வந்துருந்தாங்க.  அவர்களையும் பூஜையறைக்குள் கூப்பிட்டுக் காண்பிச்சார்.  நம்ம உள்ளூர் கிளைத் தலைவருக்கு  ஒரே வியப்பு !  இவ்வளவு நல்லா வச்சுருக்கீங்களே ! இதுவே கோவில் மாதிரி இருக்கேன்னார்.  

காஃபியா டீயான்னு கேட்டதும்,  சௌத் இண்டியன்ஸ்,  காஃபிதானே ரொம்ப நல்லாத் தயாரிப்பீங்க.  காஃபியே இருக்கட்டுமுன்னார்.  அடடா..... டிக்காஷன் இறங்க ரொம்ப நேரம் ஆகுமே.....  நெஸ்காஃபி போடவா?  இல்லை சௌத் இண்டியா   மூணாறு கண்ணன் தேவன் டீயான்னு கேட்டுட்டு மில்க் குக்கரில் டீ போட்டேன்.  டீ ரெடியானதும் விஸில் அடிச்சது :-)

ஒரு மணிநேரம் போனதே தெரியலை. 

இவர் 2018 இல் ஒரு கருத்தரங்குக்காக நம்மூருக்கு வந்துருக்கார். அந்த விவரங்கள் இதோ இந்தச் சுட்டியில் !   

சுட்டி வேலைசெய்யலைன்னா கீழே இருக்கு லிங்கு.

 https://thulasidhalam.blogspot.com/2018/11/blog-post.html


அப்புறம் எல்லோருமாக் கிளம்பி  ஹாலுக்குப் போனோம்.  இது நம்ம சிட்டிக் கவுன்ஸில் லைப்ரரியைச் சேர்ந்த ஹால்.  ரொம்ப நல்லாக் கட்டி இருக்காங்க.  எங்கூர் 2011 வருஷ  நிலநடுக்கத்துக்கு அப்புறம் கட்டுனது.  நிலநடுக்கம் வந்தாலும்  இடிஞ்சுபோகாத வகையில்  பாதுகாப்பான  கட்டடம்.  பொதுமக்களுக்கு வாடகைக்குக் கிடைக்கும்.  மகளின் கல்யாண ரிஸப்ஷன்கூட இங்கேதான் நடந்தது. 






இன்று  வேலைநாளாக இருந்ததால் சுமாரான கூட்டம். எல்லோருடனும் அறிமுகம் ஆச்சு. போனமுறை வந்திருந்தபோது பார்த்த சில முகங்கள் நினைவுக்கு வந்ததாகச் சொல்லி   நாம் வாழும் சமூகத்திற்கு நாம் செய்யவேண்டிய சேவைகள் பற்றியெல்லாம் சிறிதளவு விவரித்தார். ராத்ரி டின்னருக்கும் ஏற்பாடு  செய்ததால்  அங்கேயே சாப்பாடும் ஆச்சு.

ரெண்டுநாளாத் தொடர்ந்து, பொறந்தநாளைக் கொண்டாடுன திருப்திதான் எங்களுக்கு !

8 comments:

said...

சூப்பர் அப்டேட். சிற்றுண்டிகள் படத்தையும் விடவில்லையே.

வீட்டுக்கு வந்த விருந்தினரைப் பார்த்ததும், அந்த வீட்டைக் கட்டிய அனுபவத்தை ரொம்ப வருடங்களுக்கு முன்னால் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. சைனாக்காரரை வைத்து கிச்சனை ஒழுங்குபடுத்தியதும், ஆப்பிள் மரங்களை வெட்டியதும்.

said...

அருமை. வாழ்த்துகள்.

said...

நிக்ழ்வுகள் எல்லாமே சூப்பர். துளசிக்கா

இடைல நீங்க எழுதலையா சிலது நான் வாசிக்காம விட்டுப் போயிருக்கு போல கவனிக்கலை நான்.

விருந்தினர் வருகை, கோபால் அண்ணாவின் பிறந்த நாள் எல்லாம் நல்லபடியாக கிராண்டாக முடிந்தது மகிழ்ச்சி!

கீதா

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

ஆமாம்..... 18 வருஷங்களாச்சு ! இப்பவும் தப்பிச்சு நிக்கும் க்ரீன் ஆப்பிள் ஒன்னுதான் நல்லாக் காய்ச்சுருக்கு இந்த வருஷம்.

said...

வாங்க ஸ்ரீராம்,

வருகைக்கு நன்றி !

said...

வாங்க கீதா,

அதான் அந்த 108 நாட்கள். ஒன்னும் எழுதமுடியாமல் முடங்கிக்கிடந்தேன் ! மீண்டு வந்து இது ரெண்டாவது இடுகைதான்!

இன்னும் கொஞ்ச நேரத்தில் மூன்றாவதை வெளியிடணும்.

said...

திரு. கோபால் அவர்களின் பிறந்த நாள் துளசி தள பிறந்தநாள் இரண்டும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது மகிழ்ச்சி.

இருவருக்கும் வாழ்த்துகள் .வாழ்க நலமுடன்.

said...

வாங்க மாதேவி,

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா !