Wednesday, January 09, 2019

இந்த எழுத்துக்கே இப்படின்னா.... இன்னும் நல்லா எழுதி இருந்தா...... (பயணத்தொடர், பகுதி 52 )

பயணம் இனிமை. அதிலும் நம்ம அலைவரிசைக்கு ஏற்ற மாதிரி நண்பர்கள் சேர்ந்துட்டால் கேக்கவே வேணாம். இப்படிப் பலபயணங்களில் கூடச் சேர்ந்து போன  மன்னனின் நண்பரையும் இன்று சந்திக்கறோம்.  இவுங்க ரெண்டுபேரும்தான் நியூஸிப்பயணத்தில் நம்ம வீட்டுக்கு வந்துருந்தாங்க!
பதினொருமணி போலக் கிளம்பி திருச்சிக்குப் போறோம்.  இங்கேயும் பயங்கர ட்ராஃபிக் இப்பெல்லாம்.  கூகுளில் வழியைப் பார்த்து, ரமேஷிடம் சொல்லிக்கிட்டே வந்தார் 'நம்மவர்'.
போற வழியில் ஒரு காளி கோவில்!  வண்டியில் இருந்தபடியே ஒரு கும்பிடு மட்டும்தான்....

சம்பத்தும் அவர் மனைவியும் நம்மை எதிர்பார்த்துக் காத்திருந்தாங்க. வீட்டில் சில மராமத்து, கொஞ்சம் மாத்தியமைக்கும் வேலைகளும்,  நடந்துக்கிட்டு இருப்பதால்  களேபரத்தைக் கவனிக்கக்கூடாதுன்னு  மனசாண்டை சொல்லி வச்சேன் :-)
ரொம்ப அழகான குட்டி முற்றம் ஒன்னு இருக்கு!  வேலை முடிஞ்சதும், படம் அனுப்பச் சொல்லிக் கேட்டுக்கிட்டேன். அடுக்களையில் அம்மிக்கல் ! அதுலேதான் 'இன்னமும்' அரைச்சுச் சமையல் செய்யறாங்களாம்!
இங்கே நம்ம வீட்டுக்கு வந்திருந்தப்ப, திருமதி சம்பத், ஒரு தயக்கத்தோடு தான் வந்தாங்களாம். புது ஆட்கள் எப்படி இருப்பாங்களோன்னு!  வந்தபிறகுதான்  என்னோட ஓட்டை வாய் பார்த்துட்டுப் பிடிச்சுப்போயிருக்கும் போல :-) இப்போ நமக்கு இவுங்க குடும்பநண்பர்கள்!

சம்பத் ஒரு  தொழிலதிபர்.  மேலும் தொழில்முறை புகைப்படக்காரர். ( ஆமாம்.... இப்ப ஏது புகை? எல்லாம் டிஜிட்டல் ஆகிப்போச்சே! )இங்கே நமக்குப் பரிசாக  நம்ம படங்கள் போட்டே காலண்டர் எல்லாம்  செஞ்சு கொண்டுவந்துருந்தார். திருமதி சம்பத்தும் சளைக்கலையே....  புதுப்புடவை !

வீட்டைச் சுத்திக் காமிச்சாங்க. 'பெரிய' வீடு!  அளவில்தான்!  வீட்டுக்கேத்தபடி விசாலமான மனசும்!  நேரம் போறது தெரியாம ஒன்னரை மணி நேரம்  பேசிக்கிட்டு இருந்துருக்கோம்!
மைஸூர்பாவும் வடையும்!  ஐயோ....  விருந்துவேற காத்திருக்கே! ஆனாலும் வடையை விடமுடியுதா சொல்லுங்க :-) குடிக்கக் கொடுத்த பானம் அருமை!  வழுக்கையோடு ( ஐ மீன் தேங்காய் வழுக்கை) இளநீரை மிக்ஸியில் அடிச்சுருக்காங்க!   முதல்முறை இப்படி ருசிக்கிறேன்.
இதுக்குள்ளே மகனும் வந்துட்டார்.  படிப்பு முடிஞ்சுருக்கு.  மேலும் படிப்பா இல்லை வேலையா என்ற  யோசனை அவருக்கு! எதுவாக இருந்தாலும்  மனசு விரும்பியபடி நடக்கட்டும்!


சம்பத்தின் கெமெராவில்  படங்கள் ஆச்சு. அதுக்காக நாம் சும்மா விடமுடியுமா? நம்ம கெமெராவை அவர் கையில் கொடுத்தேன் :-)

இதுக்குள்ளே சம்பத்துக்கு  'நாம் வந்துட்டோமா, எப்ப அங்கிருந்து  கிளம்பப்போறீங்க'ன்னு  மன்னனின் விசாரணை!  எல்லோருக்கும் அங்கேதான் பகல் சாப்பாடு என்பதால் ஒரு மணி ஆச்சேன்னு  கிளம்பினோம். சம்பத் ஒரு பத்து நிமிட்டில்  வர்றதாகச் சொன்னதால், திருமதி சம்பத் எங்களோடு வந்தாங்க.  அவுங்க கூட வரலைன்னா, வழி கண்டுபிடிப்பது நமக்குக் கொஞ்சம் சிரமமா இருந்துருக்கும்.

மன்னரின் குடும்பம் நம்மை அன்பாக வரவேற்றார்கள்!  முதலில் கண்ணில் பட்டது.....  இதுதான்! எழுவர்!   சகுனம் ரொம்பச் சரி!  பாஸிட்டிவ் வைப்!
"காலையில் நண்பர் உங்களைக் கூட்டிப்போய் கோவிலைச் சுத்திக் காண்பிச்சாரா? தரிசனம் நல்லாக் கிடைச்சதா?"

"ஹைய்யோ.... இதென்ன கேள்வி? எல்லாம் அற்புதம்! பெரிய பெருமாளை இவ்ளோ நேரம் நின்னு ஸேவிச்சதே இல்லை! உங்க நண்பருக்கும் உங்களுக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை"

 "சாயங்காலம் இன்னொருக்காப் பெரிய பெருமாளை தரிசனம் பண்ணிக்க ஏற்பாடு பண்ணட்டுமா? "

" ஐயோ.... வேணாம். காலை தரிசனமே   மனசு நிறைஞ்சு போயிருக்கு"

வீட்டைப் பிரமாதமாக வச்சுருக்காங்க !  பல பயணங்களின் அடையாளங்கள் அங்கங்கே!

குறிப்பா, சாமி அறை வாசல் முகப்பு, தசாவதாரச் சிற்பங்களோடு அபாரம்!  பெருமாளைச் சேவிச்சுக்கிட்டோம் இங்கேயும்!

நாங்கள் போய்ச் சேர்ந்த கொஞ்ச நேரத்தில் சம்பத் வந்துட்டார். நேரம் ரொம்ப ஆகிப்போச்சுன்னு முதலில்  சாப்பிட உக்கார்ந்தாச்!  சமையலைப்பத்திச் சொல்லவே வேணாம்!  ரசித்து, ருசித்துச் சாப்பிட்டேன்.  வாழைத்தண்டு தயிர் பச்சடி சூப்பர்!

மஹாராணி அவர்களும் (மன்னனின் தாய்) எங்களை உபசரிச்சாங்க. என்ன பாக்கியம் பாருங்க !
மன்னருக்குப் பெயருக்கேத்த குணம்! இல்லை குணத்துக்கு ஏத்த பெயரா?  குணசேகரன் !   அவர் மனைவி மட்டும் லேசுப்பட்டவங்களா? என்ன ஒரு தோழமை!   இத்தனை அன்பான பேச்சுக்கும், நட்புக்கும் நமக்கு இந்த எழுத்தின்மூலம் வழி செஞ்சு கொடுத்துட்டானே... எம்பெருமாள் !

சொல்ல விட்டுப்போச்சே.....   நம்ம குணா , ரோட்டரி க்ளப்பின் தென்மாவட்டங்களின்  ஆளுநர், மனைவியும்  இன்னர்வீல்  க்ளப்பின் முக்கிய புள்ளி என்பதால் சமூக சேவைகள் செய்வதிலும் குறைவொன்றுமில்லை !

நினைவுப்பரிசுகள்  கொடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு.  அவுங்கதான் தர்றாங்க. நாங்க வாங்கிக்கிட்டோம்!  வேணாமுன்னு மறுக்க முடியாத பரிசுகள்!

அப்பதான் சம்பத், பத்து நிமிட் கழிச்சு வர்றேன்னு சொன்னதின் ரகசியம் தெரியவந்தது!    அவர் எடுத்த நம்ம படத்தைப் ப்ரிண்ட் போட்டு ஃப்ரேம் பண்ணிக் கொண்டு வந்துருக்கார்!
ஃபோட்டோ செஷன்ஸ் இல்லாமக் கிளம்பமுடியுமோ? ஆச்சு :-)
பூத்தையல் !  இதே மாதிரி ஒன்னு , நம்ம நெருங்கிய தோழி பத்மா அர்விந்த் (அமெரிக்கா)  வீட்டிலும் பார்த்தது நினைவுக்கு வந்தது! 

கிட்டத்தட்ட மணி நாலு. ஸ்ரீரங்கம் திரும்பறோம்.  அதுக்கு முன்?

 முதல் முறையா இன்னொரு கோவில் !

தொடரும்.......:-)


10 comments:

said...

இங்கே மட்டும் சாப்பிட்டு இருக்கீங்க? எங்களுக்குத் தான் கொடுத்து வைக்கல.

said...

இனிய சந்திப்பு. மகிழ்ச்சி.

சந்திப்புகள் தொடரட்டும்.

said...

இனிமையான சந்திப்பு....

said...

அருமை நன்றி

said...

சந்திப்பும் விருந்தோம்பலும் அளவளாவலும் அருமை. அருமை.

said...

வாங்க ஜோதிஜி.

உங்க வீட்டுக்கு வந்தப்ப, அது சாப்பாட்டு நேரமா இல்லாமல் போச்சே.... இருந்தால் விட்டுருப்போமா?

அடுத்த முறை கட்டாயம் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பூர்வ ஜென்ம பந்தம்தான் !

திருச்சியில் ரெண்டு குடும்பங்கள் நமக்குக் கிடைச்சாச் !

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

உண்மை!
நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜிரா.

ஒரு கோடிக்கும் மறு கோடிக்கும் எப்படித் தொடர்பு பார்த்தீங்களா!!!! இணையம் தந்த கொடை !