Wednesday, December 19, 2018

கிரிவலத்தில் மீதி வலம் !!!! (பயணத்தொடர், பகுதி 44 )

சும்மாச் சொல்லக்கூடாது..... சாமியார் வேஷத்தில்  நகைநட்டெல்லாம் போட்டதும், அழகாத்தெரிவது இவர் மட்டும்தான்னு 'எனக்கு'த் தோணுது! நம்ம சிவாஜி மாதிரி (பழைய படங்களில்) எல்லா வேஷத்துக்கும் பொருத்தமான களையான முகம், இல்லே?
அப்பப்பச் செய்திகளில் பார்த்தவரின் 'அவதார' ஸ்தலம் இதுதானாமே!  கோட்டை மதில் போல  உயரமான சுவருடன் நித்யானந்த பீடம் & குருகுலம்!

கொஞ்ச தூரத்தில் சாமி சிலைகள் விற்பனைக்கூடம். சிவகுருநாதன் சிற்பக்கலைக்கூடம்னு பெயர்!
திரு நேர் அண்ணாமலையார் கோவில் ஒன்னு ரொம்பவே அழகா இருந்துச்சு.   மலை உருவில் இருக்கும் ஈசனை முதல்முதலில் சுற்றிவந்து வணங்கிய பார்வதி தேவிக்கு, சிவபெருமான் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்த இடமாம்!  ஆஹா....  கிரிவலத்தைத் தொடங்கி வச்சது இப்படித்தானா!!! இந்தக்கோவில், மெயின் கோவிலுக்கு நேரெதிரா இந்தாண்டை இருப்பதால் திரு  நேர் அண்ணாமலையார் கோவில்னு பெயர்!

தொட்டடுத்து  தாயார்  உண்ணாமுலை  அம்மனுக்கும் ஒரு தனிக்கோவில் இருக்குது.

குப்பன் விஜியா சிற்பக் கலைக்கூடத்தில் நம்ம புள்ளையார் வித விதமா போஸ் கொடுத்துக்கிட்டு  இருக்கார் :-)
வீடு போல இருக்கும் ஒரு இடத்தில்  வாசப்பக்கம் பெருமாள் நிக்கறார், இங்கே!  அட!  எப்படி? காலடியில் ரெண்டு பசுக்கள் வேற !  பக்கத்துலே ரெண்டுதலையும் ஓர் உடலுமா இன்னொரு சிலை.  ஜயவிஜயர்களா இருக்குமோ?  'பாத ஸேவை' செஞ்சுக்கலாம், இங்கே!



அகஸ்தியர் கோவிலையடுத்து இன்னும் ஒரு பெருமாள்  இருக்கார். விஷ்ணு துர்கையும் கூட !


வழியெங்கும் காவி உடையில் சந்நியாசிகள் நடமாட்டம்  ! இந்தப் பாதையில் அங்கங்கே நல்ல அகலமான  ப்ளாட்ஃபார்ம் போட்டு வச்சுருப்பதால், அதையே ஓய்வெடுக்கவும், தூங்கவும் பயன்படுத்திக்கறாங்க.  சாமியார்களா ஆகினால் நிம்மதிதான்! இல்லே... நிம்மதியை வேண்டி  சாமியார்களாகணுமோ?


அஞ்சாவது வருணலிங்கம், ஆறாவது வாயு லிங்கம், ஏழாவது குபேர லிங்கம், எட்டாவது ஈசான லிங்கம்னு அஷ்ட லிங்கங்கள்  மலையைச் சுத்திவரும் பாதையில் இருக்கு.  இவைகளைத் தவிர சூரிய லிங்கம், சந்திரலிங்கம், குழந்தையைக் காக்கும் குழமணிப் பிள்ளையார்,  அகஸ்திய முனிவர் & லோபமுத்ரா தேவி,   பழனி ஆண்டவர் , மகாசக்தி மாரியம்மன் , வீர ஆஞ்ச நேயர், ராஜராஜேஸ்வரி, இடுக்குப்பிள்ளையார், காளிங்கநர்த்தன கிருஷ்ணர்.............   ஹப்பா....  சொல்லி மாளலை.












இந்த இடுக்குப்பிள்ளையார் பத்தின விவரம் தெரியாம ஒரு கும்பிடு போட்டுட்டுப் போயிருந்தோம்.    இப்போ சில நாட்களுக்கு முன்னால் நம்ம வித்யா சுப்ரமணியம் அவர்களின் பதிவு பார்த்த பிறகுதான் 'இடுக்கு' வழியா நுழைஞ்சு வரலாமுன்னு தெரிஞ்சது.  மறுபிறவி  நோ சொல்லும் இடுக்காமே!   ஏற்கெனவே காஞ்சி கைலாஸநாதர் கோவிலில்  இப்படி ஒரு குட்டி இடுக்கில் நுழைஞ்சு வெளியே வந்ததால்....  மறுபிறவி இல்லைன்னு கைவசம் ஒரு கேரண்டீ  இருப்பதால் போகட்டுமுன்னு நினைச்சேன்:-) த்வார்காத் தீவு  த்வாரகீஷ் கோவிலிலும் ஒரு தூண் சுவர் ஓரமாக இருக்கு. அங்கேயும்  தூணுக்கும் சுவருக்கும் இருக்கும் இடைவெளியில் நுழைஞ்சு வந்தால் மறுபிறவி கிடையாதாம்!  நான் ரிஸ்க் எடுக்கலைப்பா.............

அஷ்டதிக்பாலர்கள் ஆளுக்கொன்னா மலையைச் சுத்தி எட்டு திசைகளிலும் நின்னு பரமனை வழிபட்டுக்கிட்டே இருக்காங்க.  இந்த அஷ்ட லிங்கங்களிலும், சில நல்ல அலங்காரங்களுடனும், சில ரொம்பவே சாதாரணமாவும்தான் இருக்கு!  கொடுக்கும் பலன்களுக்குத் தக்கபடிதான் சாமிக்கும் மவுசு போல.

கிரிவலப்பாதையில் இருந்து வெளியேறி இன்றைக்கு நாம் தங்கும் ஹொட்டேல் அர்ப்பணாவுக்குப் போறோம்.  அண்ணா (! ) ஆர்ச்சுக்குப் பக்கத்தில் இருக்காம்!  வலையில் பார்த்து புக் பண்ணார் 'நம்மவர்'.
அவுங்க வெப்சைட்டில்  போட்டுருக்கும் அளவுக்கு அவ்ளோ பிரமாதமா இல்லைதான். ஒரு  நைட்  மட்டும் தங்கல் என்பதால் போகட்டும்.....
மலை வ்யூ அறை கொடுத்தாங்க.  அறையும் சுமார்தான். ஜஸ்ட் பேஸிக்.  பால்கனியில் நின்னால் மலை!
வாங்க,  ஃப்ரெஷப் பண்ணி, ஒரு காஃபியும் குடிச்சுட்டுக்  கொஞ்ச நேரத்தில் கோவிலுக்குப் போகலாம்!!

தொடரும்......... :-)

21 comments:

said...

சுவாரஸ்யமான வர்ணனை.

said...

அருமை நன்றி

said...

அம்மா வேகமான வர்ணனை மற்றும் வேகமான கிரிவலம் . படங்களும் அருமை ..

கார்த்திகை தீப திருவிழாவில் இங்கு அர்த்த நாரீஸ்வரர் வலம்வருவது கண்கொள்ளா காட்சி ...( அன்றுமட்டும் வலம் வருவார் )

அண்ணாமலைக்கு அரோகரா .........

said...

பதிவைப் பார்த்துட்டு, நித்தியானந்த ஸ்வாமி தரிசனத்துக்குக் கிளம்பிட்டீங்களோன்னு நினைச்சாலே பகீர்னு இருந்தது.

டீச்சர்... அந்த சர்க்கரைப் பொங்கல் கோபு, சக்ரபாணி கோவிலை விட்டு ராமஸ்வாமி கோவிலுக்கு ஒரு வருடம் முன்னால் போய்ட்டு அப்புறம் முடியாமல் இப்போ சென்னைக்கு வந்துட்டாராம். நான் ராமஸ்வாமி கோவிலில் அவருடைய மூத்த சகோதரர் பாபுவைப் பார்த்தேன்.

இந்தத் தடவை உங்கள் பதிவுகளை (நீங்கதான் இரண்டு முறை எல்லா இடத்துக்கும் போனவங்களாச்சே) படித்துவிட்டு அதற்கேற்றவாறு திட்டமிட்டு, ஒரு நாளில் 3 திவ்யதேசங்களைத் தவிர மிச்சம் 8 திவ்யதேசங்கள் + 2 திருவரசு (தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமழிசை ஆழ்வார்) + 1 அவதாரஸ்தலம் (பெரியவாச்சான்) + சுவாமிமலை, பட்டீஸ்வரம், திருவிடை மருதூர், இன்னும் சில கோவில்களை கவர் செய்தேன். மறுநாள் விட்டுப்போன 3 திவ்யதேசங்கள், கும்பகோணம் கோவில்கள் எல்லாம், ஐவர்பாடி, திருச்சேறை ருணவிமோசனர் எல்லாம் சேவித்தேன்.

said...

நிதானமா பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் ...

said...

ஆஹா.... பயணத்தில் நானும் தொடர்கிறேன்.

said...

கிரிவலம் சென்றுள்ளேன். இன்று மறுபடியும் உங்கள் தொடர் பதிவுகளின் வாயிலாக செல்லும் பாக்கியம்.

said...

நாமும் கிரிவலத்தில் பங்கு கொண்டோம்.

said...

நடுவில் ஒரு பயணத்தில் இருந்ததால பதிவுகளுக்கு வரமுடியல. பொறுத்துக்கொள்க.

திருவண்ணாமலைல இத்தன லிங்கத்த காட்டுறாங்களா? திருவண்ணாமலை சுத்தி வரும் போது மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடிய இடம் வருமே. அதை யாரும் உங்களுக்கு சொல்லலை போல.

கிரிவலமெல்லாம் இப்ப ரொம்ப பிரபல்மாயிருச்சு. ரோடுகள் என்ன... பிளாட்பாரங்கள் என்ன... முழுநிலா அன்னைக்கு வழிநெடுக கடைகள் என்னன்னு.

நித்தியானந்தா மட்டுமல்ல... எல்லா ஆனந்தாக்களும் மாட்டுற வரைக்கும் தான்.

said...

ஓ.... அந்த இடம் 'அவதாரஸ்தலமா'? பலே பலே

said...

வாங்க ஸ்ரீராம்,

நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க செந்தில்பிரசாத்.

காரில் போனால் வேகமான கிரிவலம்தான்! :-)

அர்த்தநாரீஸ்வரர் சட்னு வந்துட்டு உடனே திரும்பிப் போயிடுவாராமே! தீபத்திருநாளில் கூட்டம் அம்முமே.....

வலையில் கிடைச்சால் பாத்துக்க வேண்டியதுதான் நாங்க.....

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

என்னால் ரிஸ்க் எடுக்க முடியாதே! வெளியில் பார்த்ததே போதும்! அவதார ஸ்தலமல்லவா !

கோபு அங்கே இல்லைன்னு, இன்னொரு வாசகநண்பர், போய் வந்து சொன்னார். இந்த முறையும் சக்கரைப்பொங்கல் வழிபாடு செய்தோம். இன்னொரு பெரியவர்தான் நடத்திக்கொடுத்தார்.

உங்க பயணம் அருமையா இருந்தது கேட்டு சந்தோஷம். அப்ப நம்ம துளசிதளத்துலே எழுதறது, சிலருக்காவது பயன்படுதுன்னு தெரியுதே! ஆஹா....

said...

வாங்க அனுராதா பிரேம்.

நிதானம் ப்ரதானம்.... அம்மம்மா அடிக்கடி சொல்வாங்க.!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நீங்க வடக்கு, நாங்க தெற்குன்னு பாகம் பிரிச்சுக்கிட்டோம் போல !!! ஹாஹா

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

கூடவே வர்றீங்க ! ரொம்ப மகிழ்ச்சி!

said...

வாங்க மாதேவி.

வருகைக்கு நன்றி !

said...

வாங்க ஜிரா.

பயணங்கள் எப்பவுமே புத்துணர்ச்சி தருபவையே! கிடைச்சால் விடக்கூடாது !

நடந்து போயிருந்தால் யாராவது சொல்லி இருப்பாங்க.... காரில்..... நோ ச்சான்ஸ்...

ஆப்டாதவரை ஆனந்தம்தான் !

said...


அம்மா இதோ உங்களுக்குகாக பார்த்து மகிழ இந்த வருட கார்த்திகை பெருவிழா


https://thiruvannamalai.in/tiruvannamalai-photos/tiruvannamalai-karthigai-deepam/karthigai-deepam-2018/karthigai-maha-deepam-live-photogallery/

said...

வாங்க செந்தில்பிரசாத்!

வாவ்!!!! அருமையான தொகுப்பு !

...அந்த அர்த்தநாரீஸ்வரர் ச்சான்ஸே இல்லை!!!

மனம் நிறைந்த நன்றிகள்!