Tuesday, December 24, 2013

Merry Christmas from Christchurch


வருசத்துக்கான  கிறிஸ்மஸ் தாத்தா ஊர்வலம் போன டிசம்பர் 8, ஞாயிறு நடந்தது. பொதுவா எல்லா வருசமும் ஊர்வலத்தில் ஊர்ந்துவரும் சமாச்சாரம் ஒரேமாதிரிதான் என்றாலும்,  அதையெல்லாம் கண்டுக்காம முடிஞ்சவரை நாமும் தவறாமல் கலந்துக்குவோம். எல்லாம் வேடிக்கை பார்க்கத்தான்.

சின்னப்புள்ளைங்களுக்கு  பயங்கர உத்ஸாகம், கொண்டாட்டம்தான்    நம்மூட்டுலேயும்  எதுன்னாலும் கொண்டாடும் மனம் இருக்கே!
நாலு மணி நேரத்துக்கு மெயின் ரோடில் போக்குவரத்து நிறுத்திட்டாங்க. ரெண்டு பக்கமும் குழந்தையும் குட்டிகளுமா மக்கள்ஸ். தெருக்கள்  எப்போதும் படு சுத்தம் என்பதால்  நட்டநடுத்தெருவில் கூட உக்கார்ந்துக்கலாம், இங்கே!

சீனர்களின் கூட்டம்  (வழக்கம் போல்) ஏராளம். அதில் ஃபலூன்டாபா ( Falun Dafa)  என்ற பிரிவினரை எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. என்ன ஒரு ஒழுங்கு , கம்பீரம், நிதானம்! தாமரைப்பூவில் மஹாலக்ஷ்மி இருக்காள்:-)

எங்கூரின் சரித்திரத்தில் முதல்முறையாக  நம்ம இந்தியன் க்ளப் பங்கேற்றது.  அவரவர்களின் பாரம்பரிய உடைகளுடன் பரேடில் போகலாமுன்னு  முடிவு செஞ்சாங்க. இங்கே முதன்மையா இருந்தது பாஞ்சாபிகள். பல்லே பல்லே பல்லேன்னு  பாங்ரா உடுப்போடு ஆடிக்கிட்டே போனாங்க. குழுவின் கடைசிப்பகுதியில்  முண்டும் செட்டுமா சேட்டன்மாரும் சேச்சிமாருமாக ஒரு  பத்திருவது பேர். இந்திய மூவர்ணக்கொடியை ஊர்வலத்தில் பார்த்தபோது மனசுக்கு மகிழ்ச்சியா இருந்தாலும்......  கூடவே ஒரு நியூஸிக்கொடியையும்  கொண்டு போயிருக்கலாம். இருநாடுகளின் உறவு பலப்படுமில்லையா?








சீனர்களைப் பாருங்க. எங்கிருந்தாலும் அந்த நாட்டோடு பின்னிப் பிணைஞ்சுடறாங்க. (இந்த குணம் நாம்  அவர்களிடமிருந்து  கற்றுக்கொள்ளத்தான் வேணும்!) ச்சிங்  ச்சிங்ன்னு சிங்க டான்ஸும், ட்ராகன்  டான்ஸுமா எனக்குப்பிடிச்ச சமாச்சாரத்தை  நல்லா ரசிச்சேன்:-)


ஸேண்ட்டா  பரேடு ஊர்வலத்தில் இந்தவருசம் புதுசா இருந்த ஃப்ளோட்களின் படம் போட்டுருக்கேன் பாருங்க. மற்றவை எல்லாம்  இந்த 26 வருசமாப் பார்த்துக்கிட்டே இருப்பதுதான். ஆனாலும் சின்னப் பிள்ளைகளுக்கு எவ்வளவு மகிழ்ச்சி!!! அதுகளைப் பார்த்து நமக்கும் மகிழ்ச்சியே!



உமக்கென்ன  கொம்பா முளைச்சிருக்கு?   எஸ்ஸு:-)



ஸ்ப்ரிங் ஃப்ரீ ட்ராம்போலின்!


ஜப்பானீஸ் அவுங்க ட்ரம்மை விடலை! அடிச்சு நொறுக்கினாங்க:-)




ரேடியோ லாலிபாப் முதல்முறையா ஊர்வலத்தில் வந்தாங்க. 1979இல் மருத்துவமனைகளில் நோயாளியாக இருக்கும் குழந்தைகளுக்காக  Surrey, England இல் முதல்முறையாக  ஆரம்பிச்ச ஒலிபரப்பு,  முதல்முறையாக  இங்கிலாந்தைவிட்டு மற்ற நாடுகளுக்கு  வர ஆரம்பிச்சது.  முதல் கிளை 1985 இல் அஸ்ட்ராலியா. அங்கே வந்தால் எங்களுக்கும் கட்டாயம் வரத்தான் வேணும். வந்துருச்சு!

அமெரிக்காவிலும் பல நகரங்களில் ஆரம்பிச்சு  குழந்தைகளை மகிழ்விக்கிறாங்க.  ரொம்ப நல்ல சமாச்சாரம், இல்லையோ!


கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனிகள் இடைவிடாம கட்டிடம் கட்டி நகரில் தொழில் விருத்தியாகி வரும்சமயம்.......  அடகுக்கடைஒன்னு விளம்பரம் கொடுத்துக்கிட்டே ஊர்வலத்தில் போகுது... அட ராமா!


ஜெட் எஞ்சின்கள் , பயணம் போகணும் என்பதை நினைவூட்டின. ஸேண்ட்டா கூட  உலகெங்கும் சுத்திவர அவரோட ஸ்லெட்ஜ் வண்டிக்கு இந்த எஞ்சின்கள்தான் பயன்படுத்தறாராம்:-)


எலி ஏஞ்சலீனா பேலே ஆடிக்கிட்டுப்போனாள்.  க்யூட்:-)


வெள்ளைக்கார  கழைக்கூத்தாடி?



மை லிட்டில் போனீஸ்........  ஹைய்யோ  என்ன ஒரு அழகு!

ஸேண்ட்டாவும் ரெய்ன்டீர்களும்.

இந்த ஊர்வலங்களும்  ஃப்ளோட்டுகளும் மக்களுக்கு கிறிஸ்மஸ் ஸ்பிரிட்டை ஏத்துவதற்குத்தான். கடைக்காரர்கள்பலரும் ஸ்பான்ஸார் செய்கிறார்கள்.  வருசம்முழுசும் இருக்கும் வியாபாரத்தின் லாபம்   எராளமான ஸேல்கள் , தள்ளுபடிகள் இருந்தாலுமே இந்த டிசம்பரில் மட்டும்  முப்பது சதவீதமாம்!

ரொம்ப வருசங்களுக்குப்பின் பொம்மைக்கடைகளுக்கு விஸிட் செஞ்சால்.....பில்டிங் இண்டஸ்ட்ரி கொழிக்கும் சமயம்,இந்த வருசம்  பொம்மைக்கடைகளில்  விற்பனைக்கு வந்து குவிஞ்சிருக்கும்  கிறிஸ்மஸுக்கான  பொம்மைகள்  எல்லாம் டிக்கரும் லோடரும் க்ரேனுமா இருக்கு. வழக்கமான ட்ராக்ட்டரை கொஞ்சம் பின்னுக்குத் தள்ளிருச்சு பாருங்க!

கிறிஸ்மஸ் தினம் ஹால் கிடைக்காத காரணத்தால்  டிசம்பர் 21 மாலை  நம்மகேரளா க்ளப்பில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம். வெஜிட்டேரியன்களுக்கு  ஒரு பனீர் வெஜிடபிள் குழம்பு கிடைச்சது. ஆடலும் பாடலுமா அமர்க்களம்தான்.  இந்த வருசம் க்ளப்பின் சிறார்களைக் கொண்டு ஒரு நேட்டிவிட்டி நாடகம்.  குட்டி ஏஞ்சல் கண்ணைப் பறிச்சாள்:-)

கூட்டம் அவ்வளவா இல்லை எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு க்ரூப் ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம்:-)

. நிறையப்பேர் ஊருக்குப் போயிருக்காங்க. நெசம்தானான்னு பார்க்க இதோ நாங்களும் கிளம்பறோம்.  ஒரு மாசத்துக்கு லீவு விட்டாச்சு. எல்லோரும்  கிறிஸ்மஸ் பண்டிகையையும்  அதைத் தொடர்ந்து வரும் ஆங்கிலப் புத்தாண்டையும்,பொங்கல், புத்தகத்திருவிழா என்று வரிசையாக வரப்போகும் பண்டிகைகளையும்    இனிமையாகக்  கொண்டாடி மகிழுங்கள்.

அனைவருக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.

நம்பள்கி சொல்வது போல் இது அனைவருக்குமான  திருவிழா. சர்ச்ச்சில்  மிட்நைட் சர்வீஸ் போகும் மக்கள்ஸ் கொஞ்சம்பேர்தான். அநேகமா எல்லோரும் முதியோர்களே!  மற்ற அனைவருக்கும் இது'காவோ, பீவோ மஜா கரோ' திருவிழாதான்!

அனைவருக்கும் என்றால் செல்லங்கள் உட்பட. நம்ம ரஜ்ஜு இன்னிக்கே  அவனுடைய அபார்ட்மெண்டுக்குப் போயிட்டான்.  பெயரே எனக்குப் பிடிச்சுப்போச்சு.ஸெயிண்ட் க்ளாஸ் (ST.Claws)  நம்ம வழக்கமான  கேட்டரியில் (கோகி போகும் இடம்)  இடம் கிடைக்கலை:(

ரஜ்ஜுவின்  கிறிஸ்மஸ் கிஃப்ட்  இந்த வருசம் (புருவம் வச்ச ) ஒரு யானை!  அதில் சவாரி செய்ய அவனுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. சிங்கவாலும்,  ஸீலயன்  பாதங்களுமா  நல்லாத்தான் இருக்கு இந்த குஷன்.

டிசம்பர் தொடக்கத்துலேயே சின்னதா நம்ம வீட்டையும் விழாவுக்காக அலங்கரிச்சோம்:-)

23 comments:

said...

படங்கள் பிரமாதம்...

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அம்மா...

said...

Happy christmas and avery happy newyear Thulasi. HAVE A VERY SAFE TRIP.

said...

எல்லோரும் கிறிஸ்மஸ் பண்டிகையையும் அதைத் தொடர்ந்து வரும் ஆங்கிலப் புத்தாண்டையும்,பொங்கல், புத்தகத்திருவிழா என்று வரிசையாக வரப்போகும் பண்டிகைகளையும் இனிமையாகக் கொண்டாடி மகிழுங்கள்.//

அனைத்து வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் சாருக்கும் , மகளுக்கும் வாழ்த்துக்கள்.
விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து வாருங்கள்.

said...

நான் எப்போதும் பதிவுகளைப் படித்துக் கொண்டே அதில் உள்ள படங்களை ரசிப்பேன். இந்தத் தடவை உங்கள் பதிவைப் பார்த்ததும் ஆவலில், முதலில் படங்களைப் பார்த்துவிட்டுத்தான் பதிவைப் படித்தேன். சாலையோரத்தில் அமர்ந்திருப்பது கோபால் சார். எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

said...

ஊர்வலத்தைப் பார்த்ததுபோன்ற உணர்வை உங்கள் எழுத்தும் படங்களும் ஏற்படுத்தின. சந்தோஷப்படுத்தியமைக்கு நன்றி.

said...

கொஞ்சம் ஆணித்தரமாக எழுதுங்கள்: கிறிஸ்துமஸ் என்றால் இந்தியாவில் உள்ளவர்கள் ஒரு மத விழா என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இல்லை--இது எல்லோருக்கும் உள்ள திருவிழா என்று!

மேலை நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து அமெர்க்காவில் இந்த கிறிஸ்துமஸ் லீவு நாட்களில் அதிகமா மன அழுத்தம் வந்து மருத்துவர்களைப் பார்ப்பது பாதிரியார்கள்; ஒரு பய இங்கு இந்த சமயத்தில் சர்ச் பக்கம் போகமாட்டன். பாதிரி மட்டும் தனியே அம்போ என்று இருப்பார்; பாவம்! தனிமை வாட்டி வதைக்கும்.

இது இங்க ஒரு ஜாலி சீசன். எங்கள் வீட்டில் குழந்தைகள் வளரும் வரை வீட்டினுள் கிறிஸ்துமஸ் மரம் வைப்போம். என் மகள் அதை அப்படி அலங்கரிப்பாள். சாண்டா பரிசுகளை எதிர்பார்ப்பார்கள். பத்தாவது வந்தற்கு அப்புறம் அவளே நிறுத்தி விட்டாள். இங்கு கிறிஸ்துமஸ் குழந்தைகளுக்காக!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க வல்லி.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

கூடுதல் படங்களை(உங்க ஃப்ர்ண்டோடது!) இப்போ சேர்த்துருக்கேன்.

said...

வாங்க கோமதி அரசு.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க தமிழ் இளங்கோ.

ரெண்டரை கிலோமீட்டர் தூரம் பரேடில் நடக்கணும்.

ஊர்வலம் ஒரு புள்ளியில் நம்மைக் கடந்து போக ஒன்னரை மணி நேரமாகும். அதான் இவர் எப்பவும் உக்கார்ந்துடுவார். நம்ம அவுட்டோர் ஆசனங்கள் எல்லாம் கொண்டு போய் போட்டுக்கலாம். ஆனால் அன்று நேரமில்லாமல் போச்சு.

பிள்ளைகளோடு பிள்ளையா தரையில் உக்கார்ந்து அனுபவிப்பதும் ஒரு மகிழ்ச்சிதான்:-)

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க அமுதவன்.

விழாக்காலம் என்றாலே மகிழ்ச்சிதானே!

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க நம்பள்கி.

உண்மை உண்மை

இது காவோ பீவோ மஜா கரோ விழாதான்.

உங்கள் பின்னூட்டம் பார்த்தபிறகு கூடுதல் படங்களையும் சில வரிகளையும் சேர்த்துருக்கேன்.

said...

அழகானப் படங்கள்.... சிறப்பான தகவல்கள். என அனைத்தும் அருமை..

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் டீச்சர்...

said...

வணக்கம்
அம்மா.
படங்கள் மிக அருமையாக உள்ளது இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

said...

குழந்தைகளை சந்தோஷபடுத்தி விட்டால் போதும்.அது மற்றவர்களையும் சந்தோஷபடுத்திவிடும்.உங்களுக்கும் சாருக்கும் மகளுக்கும் மற்ற அனைவருக்கும் HAPPY CHRISTMAS & HAPPY NEW YEAR

said...

//இந்திய மூவர்ணக்கொடியை ஊர்வலத்தில் பார்த்தபோது மனசுக்கு மகிழ்ச்சியா இருந்தாலும்...... கூடவே ஒரு நியூஸிக்கொடியையும் கொண்டு போயிருக்கலாம். இருநாடுகளின் உறவு பலப்படுமில்லையா?//
வாஸ்தவம்தாங்க .
ஆனாலும் ஊர்வலத்தில் தமிழ் முகங்களை தேடுவதை தவிர்க்க முடியலை

அந்த குட்டி ஏஞ்சல் ச்சோ ச்சுவீட் .

ரஜ்ஜுவின் gift அழகோ அழகு .

Merry christmas !!!!

awaiting !!!! :)))))))

said...

ரொம்ப சோக்கா சொல்லிக்கீறீங்க...
படங்களாம் ரொம்ப அருமையா கீது...

said...

அருமை.....

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.....

said...

அழகிய விழா.

அனைவருக்கும் விழாக்கால வாழ்த்துகள்.

said...

Photos அருமை!

said...

புத்தாண்டுப் பரிசாக கண்ணுக்கு விருந்து கொடுத்திருக்கிறீர்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

said...

உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

said...

வழக்கம் போலவே படங்கள் அத்தனையும் அருமை. நிகழ்வுகள் அத்தனையும் கண்முன்னே இருந்ததுபோன்ற உணர்வு. பகிர்வுக்கு நன்றிங்க.

உங்களுக்கும் கோபாலுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.