Wednesday, December 18, 2013

கொஞ்சம் கடலை போட்டேன்!


சம்மர் வந்துருக்கு. ஒரு சில நாட்கள்  மட்டுமே கொளுத்தும் வெயில். 23 டிகிரி. இன்னிக்கு வெறும் 13. ஆனாலும் சம்மர், சம்மர்தானே?  இந்த வருசம் தோட்டப் பராமரிப்பு அவ்வளவா செய்யலை:( ஆனாலும் போன வருசச்  செடிகள் விசுவாசம் காட்டுனதும் மனசு நெகிழ்ந்துதான் போச்சு. நன்றிக்கடனைச் சொல்லித் தந்தன.


புதினா ஒரு சின்னக் காடு. தேவை இல்லையாம். இதுக்கு ஒரு கெட்ட குணம் இருக்காமே..... இருக்குமிடத்தில் உள்ள   மண்ணில் இருந்து சக்தியை எல்லாம் உறிஞ்சும் குணமாம். அக்கம்பக்கத்துச் செடிகள் பட்டினி கிடக்குமாமே!

ஆல்பைன்  அடிவாரத்தில்  வளரும் செடி ஒன்னு ரெண்டு வருசம் முந்தி வாங்கி வச்சேன். நல்லாப் பூத்துச்சு. நல்ல சிம்பிளான அழகு!
தாமரை மொட்டு விட ஆரம்பிச்சு இது நாலாவது பூ. எண்ணி நாலு நாளைக்குமேல் தாக்குப்பிடிக்கறதில்லை:(  அப்போ மஹாலக்ஷ்மி வாசம் நாலுநாளைக்குதானா?  அச்சச்சோ....

Salvia வில் பலநிறங்கள் இருக்குன்னு இப்பதான் தெரிஞ்சது.  நம்ம வீட்டில் கடந்த காலங்களில் சிகப்பு நிறப்பூக்கள் பூத்தன. இந்த முறை வாங்குன செட்டில்  சிகப்பு மட்டுமில்லாமல் வயலெட், க்ரீம் இப்படி சில நிறங்களில் மொட்டு வந்துருக்கு. போனவாரம் 'ஓனருக்குப் பிறந்தநாள். அதனால் பூச்செடிகள் டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கும் என்ற சேதி பத்திரிகை மூலம் கிடைச்சு அங்கே போனோம். எட்டு,இல்லைன்னா பத்து செடிகள் இருக்கும் தொகுப்பு ஒவ்வொன்னும் 2.80 டாலர்தான்.  அங்கிருந்த தாத்தாவிடம் பேச்சுக்கொடுத்தால் அவர்தான்  ஓனராம். வயசு அதிகமில்லை மறுநாள் 81 ஆவது பொறந்தநாள்.  நர்ஸரிக்கு லீவு விட்டுட்டாராம். இன்னும் மிடுக்கா எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்யறார்.


அட்டகாசமான ஒரு பெரிய தாமரைக்குளம் அழகான வெள்ளைப்பூக்களால் நிரம்பி இருக்கு.  அந்தக் குளத்துக்கு வயசு 85 தான். அவரோட அப்பா காலத்துலே தொடங்குன நர்ஸரியாம் இது.

'குளத்துலே நிறைய மீன்கள் இருக்கு பார்த்தியா'ன்னு கேட்டார். ஏராளமா இலைகளும் பூக்களுமா தண்ணீரை மறைச்சிருக்குன்னேன். நிலநடுக்கம் வந்தப்ப குளம் அதிர்ந்து (தரையில் பெருசாப் பள்ளம் வெட்டிய  குளம் அமைப்பு)  அதுலே இருக்கும் தண்ணீர் தளும்பி வெளியே  வர, அத்துடன் மீன்கள் எல்லாம் வெளியில் விழுந்து கிடந்தனவாம். நல்லவேளையா  அந்த சமயம் இவர் (பகல் 12.51)  இங்கே இருந்ததால் மீன்களை எடுத்து மறுபடி தண்ணீரில் விட்டாராம். இதுவே ராத்திரி நேர பூகம்பம் என்றால்  மீன்களெல்லாம் காலியாகி இருக்கும் என்றார்.  நடந்துவிட்ட பூகம்பம்  உள்ளூர் மக்கள் ஒவ்வொருவரையும் ஒரு விதத்தில் பாதிச்சுருக்கு:(


போனவருசத்து ஜிரேனியம், குளிருக்குத் தப்பிப்பிழைச்சு  இந்த வருசமும்  வஞ்சனை இல்லாமல் பூத்துருக்கு. ஃப்ராஸ்ட் விழாத இடத்தில் வச்சுருந்தேன்.

போனவருசத்துப்  பச்சைப்பூ  மீண்டும்  பூத்திருக்கு. ஆனால் மஞ்சள் பூவால்லெ இருக்கு!


வாசல் பக்கம் கேட் அருகில் காவலுக்கு நிற்பதைப்போல ரெண்டு ஹாலிஹாக். வெவ்வேற நிறம்.வெண்டைச்செடியின் இலைகள் போலவே இருக்குது. பூவும் அப்படித்தான்! ஆனால் மஞ்சள் நிறமில்லை.



ரோஜாக்களும் மல்லிகளுமா ஒரு பக்கம் கொள்ளை அழகு!
லாவண்டர் வழக்கம்போல்!


ஸாக்ஸஃப்ராஸ் கூட்டமாப் பூத்து வழிஞ்சது.

ஆர்ட்டிச்சோக் (Artichoke) கிழங்குகிடைச்சதேன்னு  நட்டு வச்சுருந்தேன். தளதளன்னு வளருது.பொறுத்திருந்து பார்ப்போம்.



அமைதி லில்லி வழக்கம்போல் வருசத்துக்கு ஒரே ஒரு பூ. நூறு குடம் தண்ணி ஊத்தி(னாலும் ஒரே )ஒரு பூ பூத்ததுன்னு பாடலாம்.  இதை எங்கூரு நாகலிங்கமுன்னு(ம்) சொல்லலாம். நடுவிலே லிங்கம்.  பின்பக்கத்துலே  வெள்ளைநாகம் போல் ஒரு குடை!  குறைஞ்சது ரெண்டு வாரம் வாடாமல் செடியிலே நிக்குது!

சமையலுக்கு ஊறவச்சுருந்த  கொண்டைக்கடலையில் ஒரு  ஏழெட்டு எடுத்து ஒரு தொட்டியில் போட்டு வச்சேன்.  செடி உயரமா வளர்ந்து  பூத்துக் காய்ச்சுருக்கு. பட்டுப்பூச்சியின் Pupa  / cocoon போல குண்டு குண்டா  தொங்கும் காய்க்குள்ளே பத்திரமா  ச்சனாவை வச்சுருக்கார் சாமி. பூனா வாழ்க்கையில் சீஸன் சமயம் செடியோடு  பிடுங்கின ச்சனா  கிடைக்கும். காயைப் பிரிச்சுத் தின்னுட்டு, தெருவில் அங்கங்கெ  ட்ராஃபிக் ஐலண்ட் போல உக்கார்ந்திருக்கும்  மாடுகளுக்குச் செடிகளை தின்னக் கொடுத்துருவோம்.


நெருங்கிய  தோழி ஒரு சமயம் கேட்டாங்க, ச்சனா நிலத்துக்குக் கீழே விளையுமான்னு..............  இல்லையே தோழி, இங்கே பாருங்க!





41 comments:

said...

அழகு. இத்தனையையும் எப்படித்த்தான் பராமரிக்கிறீர்களோ?

said...

அருமை டீச்சர். பல பூக்களை இப்பத்தான் பார்க்கிறேன். எதிர்காலத்தில் வளர்த்துப் பார்க்கிறேன். :-)

அப்புறம் டீச்சர் 'நர்ஸரி'யை 'நஸ்ரியா'ன்னு வாசிச்சுட்டேன். :-(

said...

படங்கள் அருமை!

என் கேள்வி!
நீங்கள் 1972-1975 ல் S.I.E.T -ல் அல்லது Stella Maris கல்லூரியில் படித்தீர்களா?

என் கேள்விக்கு கராணம்? சிறு வயதில் கோபாலுடன் உள்ள உங்கள் படம் பார்த்தேன். உங்கள் முகம் பார்த்த முகமாக இருக்கு!

நான் ஏன் பெண்கள் கல்லூரிக்கு வந்தேன் என்றால்..Because, durig that period, I had friends in both colleges; and I used to drop them at their college(s), on the way, when I go to my college!

இதற்கு பதில் சொல்லத் தேவையில்லலை--If this is an embarrassing question; you may please delete this! No problems! I understand that.

said...

வாவ் !!!! கலர் கலரா மலர்கள் கொள்ளை அழகுக்கா :) நான் எங்கூரில்மிளகா போட்டேன் ,மேத்தி போட்டேன் கொத்தமல்லி போட்டேன் :) மிளகா வெயில் பத்தததால் போயிந்தி :)
தக்காளி போட்டேன் எல்லாம் தளதளன்னு வந்திச்சு பழுக்க வேண்டிய சமையத்தில் சூர்யன் டாடா காட்டினத்தில் எல்லாம் பாழ் :( சோளமும் அப்படிதான் ..ஆனா நாம பேபி கார்னையாவது செய்து சாப்பிட்டோம்ல :) எங்க வீட்டு மீனுங்க வாட்டர் லில்லிசை விட்டு வக்க மாட்டேங்குறாங்க ..
இந்த கடலை செடியோட இங்கே இந்தியன் கடையில் பார்த்தேன் வேறு ஏதோன்னு அப்படியே வாங்காம விட்டிருக்கேன் ..இனி வாங்கி பார்க்கிறேன் .



Angelin.

said...

அழகான படங்கள்.

said...

mysore brindavanan போல நியுஸ்லாந்து brindavan.superb teacher.கண்ணுக்கு குளிர்ச்சி மனதுக்கு அமைதி

said...

பதிவைக் கண்டு
கண்களும் மனமும் குளிர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

said...

அனைத்து படங்களும் அற்புதம் அம்மா...

வாழ்த்துக்கள்...

said...

தோட்டம் கொள்ளை அழகு...

புதினா பச்சைபசேலென்று இருக்கிறது. பறிக்கத் துடிக்கிறது கை...:)

தோட்டத்துக்கு த்ருஷ்டி சுத்திப் போடுங்க டீச்சர்...:)))

said...

எதைச் சொல்ல எதை விட. அத்தனை பூக்களும் அழகு. பராமரித்த கைகளுக்குப் பாராட்டுகள்:)!

said...

அழகிய தோட்டம்.அதைப் படம் பிடித்திருக்கும் விதம் அதை விட அருமை.
கண்ணிற்கு விருந்தாகும் தோட்டம்.
நன்றி பகிர்விற்கு.

said...

செடிகள் எல்லாம் அழகு, பூக்கள் கண்ணுக்கு விருந்து.
கடலை மிக அழகு.
புதினாவுக்கு இப்படி ஒரு கெட்ட குணமா?

said...

அருமையான தோட்டம் .. பராமரிப்புக்குப் பாராட்டுக்கள்..!

said...

எல்லாமே அமோக விளைச்சல்தான், புதினா, கடலை உட்பட :-)

இங்கேயும் கடலை சீசன் ஆரம்பிச்சுருக்கு. வறுத்துத்தின்னது பத்தாதுன்னு, கத்தரிக்காய் முருங்கைக்காயோட கூட்டணி வெச்சு தீயலும் வெச்சாச்சு. இந்தக்குளுருக்கு அமர்க்களமாயிருக்கு.

said...

மலர்களுக்குள் அழகும் அமைதியும் ஒன்றாக இருக்கும். பார்த்தால் பசி தீரும்னு சொல்ற மாதிரி பூக்களைப் பார்த்தால் துயர் தீரும்.

எத்தனையெத்தனை நிறங்கள். எத்தனையெத்தனை விதங்கள். எத்தனையெத்தனை மணங்கள்.

படங்கள் ஒவ்வொன்னும் அழகோ அழகு.

said...

வாங்க அமர பாரதி.

நியூஸியின் தோட்ட நகரத்தில் வாழும்போது நாமும் கொஞ்சமாவது தோட்டத்தை பராமாரிக்கத்தானே வேணும், இல்லையா?

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ரிஷான்.

பாதியைத்தான் சொல்லி இருக்கேன். மீதி இன்னொரு நாளைக்கு. கன்ஸர்வேட்டரி செடிகளும் காக்டெஸ்ஸும் பாக்கி இருக்கே!

நஸ்ரியாவா....... அது என்ன? புதுச்செடியா?

எல்லாம் வயசுக் கோளாறு கேட்டோ:-))))

said...

வாங்க நம்பள்கி.

வருசம் கரெக்ட். ஆனால் அந்தக் கல்லூரிகள் இல்லையாக்கும்:-)

ஃப்ரீ பிக் அப் அண்ட் ட்ராப் எல்லாம் அப்போ அவ்வளவா இல்லையே!!

ஊர் வாய்க்கு ரொம்ப பயப்படணுமே:(

BTW 74 இல் எங்க கல்யாணம் நடந்துச்சு:-)

said...

வாங்க ஏஞ்சலீன்.

செடிகள் அதுக்கான பயன் தருமோ இல்லையோ.... அவைகளை வளர்ப்பதே மனசுக்கு மகிழ்ச்சிப்பா.

நம்ம வீட்டுலே பல வருசங்களுக்குப்பின் முத்ல்முதலா ஒரு காக்டெஸ் மொட்டு விட்டது. ஓடி ஓடி படம் எடுத்தேன்.

இன்னும்ரெண்டு நாளில் மலர்ந்துருமுன்னு ஆசையா இருந்தப்ப...... திடீர்னு குளிர் . ஃப்ராஸ்ட் வேற. மொட்டு அப்படியே கருகிப்போச்சுப்பா:(

நானும் மிளகாய் விதைகளைத் தூவி வச்சுருக்கேன்.

கொஞ்சம் கீரை விதைகளை (போனவருசச்செடியில் இருந்து எடுத்து வச்சவை) விதைச்சதில் கொஞ்சமா கீரை பறிச்சு ஒருநாள் சமைச்சேன்.

விஷக்கீரையா இருக்குமோன்னு கோபாலுக்கு சம்ஸயம். அதுக்காக விட்டுற முடியுமா? பக்கத்தில் இருந்து பார்த்து சாப்பிட வச்சேன்!

ஒருவாரம் ஆச்சு. ஒன்னும் ஆகலை:-)))

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

நன்றி.

said...

வாங்க சுபா.

இங்கே நம்மவீடுதான் சுமாரான தோட்டம். ஒவ்வொரு வீட்டுலே பார்க்கணும்....கண்ணுலே ஒத்திக்கறது போல இருக்கும்.

said...

வாங்க ரமணி.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசனைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

தினமும் புதினா சட்னி தாங்காது கேட்டோ:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அழகை ஆராதிக்கும் உங்கள் மனதுக்கு நன்றி.

இந்த வருசம் பராமரிப்பில் கோபாலின் கைகளுக்கும் பங்கு உண்டு:-)))

said...

வாங்க ராஜலக்ஷ்மி.

வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி.

உங்ககிட்டே சொல்லி இருக்கேனோ...... எங்க வீட்டிலும் ஒரு ராஜலக்ஷ்மி இருக்கான்னு!

செல்லமா ரஜ்ஜுன்னு கூப்பிடுவோம்:-)

said...

வாங்க கோமதி அரசு.

எனக்கும் முதலில் அதிர்ச்சிதான்! பெரிய இடத்தில் நட்டு வச்சால் தானே பரவிப் பெருகிருது!அப்படியே மண்ணில் உள்ள சக்தி முழுவதையும் உறிஞ்சி எடுத்துருதாம்:(

எவ்ளோதான் சட்னி செஞ்சு சாப்பிடுவது? மனசில்லா மனசோடு பாதியை வெட்டிப் போட்டாச்சு.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

பாராட்டுகளுக்கு நன்றி.

said...

செமத்தியாக இருக்கு அதுவும் அந்த ரோஜாவும்,வெள்ளை பூவும்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

நம்ம வீட்டுலே அடிக்கடி தீயல்தான்.

அடுப்பை மறந்துட்டு கணினியில் உக்காரக்கூடாது இனிமேல்:-)

பச்சைச் சனா நல்ல ருசி இல்லே! பூனாவை இதில் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்.

said...

வாங்க ஜிரா.

உண்மைதான் நீங்க சொல்வது.

ரசனைக்கு நன்றீஸ்.

said...

//கன்ஸர்வேட்டரி செடிகளும் காக்டெஸ்ஸும் பாக்கி இருக்கே!//

அப்படியே அந்த ராஸ்பெர்ரி என்னாச்சுன்னும் போடுங்க. பார்த்து ரொம்ப நாளாச்சே. இங்கேதான் கிடைக்க மாட்டேங்குது. கண்ணாலயாவது தின்னுக்கறேன் :-)

said...

superb !!!
gardening maadhiri oru relaxation nothing can give . photos arpudham

said...

அற்புத மலர்கள். அருமையான பராமரிப்பு.

said...

அழகிய பூந் தோட்டங்களைப் பார்க்கும் போது கடந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன .பூத்திருக்கும் பூக்கள் போலவே தங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துக்கள் தோழி .

said...

அத்தனை பூக்களும் அழகோ அழகு......

இங்கே குளிர் காலத்தில் இந்த சன்னாவும், பச்சைப் பட்டாணியும் உரித்து உரித்து பச்சையாகவே சாப்பிடுவது வழக்கம்! :) சில வட இந்தியர்கள் சன்னாவை கிலோ கணக்கில் வாங்கும்போது என்னதான் பண்ணுவாங்களோன்னு யோசித்தது உண்டு தில்லி வந்த புதிதில்! :)

said...

ஒவ்வொரு படமும் ஒரு புத்தாண்டு வாழ்த்து அட்டை போல் உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
(நேற்றிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களுடைய “ வீடு 'வா வா' ங்குது ” என்ற தொடரைப் படிக்கத் தொடங்கி இருக்கிறேன் )

said...

சுபெர்ப் படங்கள்.
மீன் விவரம் டச்சிங். அவனவன் சாப்பாட்டுக்கு ஆச்சுனு பாத்திருப்பான்.
கொண்டைகடலை செடியிலா வளருது? சத்தியமா மளிகை கடையில வளருதுனு நெனச்சேன். அப்போ துவரம்பருப்பு வகையறா எல்லாமே செடில வர்ர்றது தானா?
ஹிஹி. சம்மர்னதும் ஆசையா படிச்சேன். சம்மர்னாலே என்னானு கேக்க வேண்டியதா போச்சு இந்த நாலே வாரத்துல !

said...

'Green thumb' துளசி!
உங்களது பராமரிப்பில் செடிகள் பூத்துக் குலுங்குவதில் ஆச்சரியம் இல்லை.

உங்க வீட்டு நஸ்ரியா - ஸாரி, ஸாரி, பின்னூட்டம் படித்ததன் விளைவு! நர்சரி கொள்ளை அழகு. அதுவும் அந்தத் தாமரைப்பூ!

ச்சான என்று தான் சொல்லவேண்டுமா?

said...

அருமை. வாழ்த்துகள்.

கண்ணே பட்டிடும்போல இருக்கிறது. பார்த்து மகிழ்ந்தோம்.

said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!