Tuesday, November 20, 2012

துளசி வதம்

அனைத்து நட்புகளுக்கும்  விழாக்காலத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள். என்னடா இவ.... தீவுளி போய் இம்மாநாளாச்சு இப்பச் சொல்றாளேன்னு பார்க்கறீங்களா? பரவாயில்லைங்க. அதான் கந்த சஷ்டி, கார்த்திகை தீபம்  விழாக்கள் எல்லாம் வரிசைகட்டி நிக்குதே!

போன வார இறுதியில் தெருக்கூத்து பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. விஷ்ணு புராணம்.  எதோ ஒரு அசுரனின் வதம்.  கூத்துக் கட்டியங்காரர்....அசுரனின் பெயர் குந்த மகராஜ்  என்றார். ஃபிஜி இந்தியர்கள் நடத்திய கூத்து என்பதால் எனக்குத் தலையும் புரியலை வாலும் புரியலை.

உங்களுக்காக விழுந்து விழுந்து தீபாவளிப் பலகாரங்கள் செஞ்சுக்கிட்டே இருந்ததில் நாட்கள் பறந்தது தெரியலை:-)

இதெல்லாம் போதுமான்னு பாருங்க!   நம்மூர் கோவிலில் நேத்துதான் அன்னக்கூட் விழா நடந்து முடிஞ்சது. இதுவும் தீபாவளியை ஒட்டி வரும் விழாதானே!







சொன்னால் நம்ப மாட்டீங்க.....மொத்தம்  பதினோராயிரம் அறைகள்  இருக்கும் 'மாளிகை'யில் ஏழாயிரத்து  ஐநூறு அறைகளுக்குச்  சின்னதும் பெருசுமாப் பாதிப்பு.  எல்லாம்  கடந்துபோன  நிலநடுக்கம்  ஆட்டி வச்ச கூத்து.  அங்கே (தாற்காலிகமாக)  வசிக்கும் மக்களுக்கு அதிகம் பாதிப்பு நேராத வகையில் பழுது பார்க்கும் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.  அரசு மருத்துவமனை.


இது ஒரு தனி உலகம். ஒரு ஒன்பது நாட்களாக  அநேகமா இங்கேதான் இருக்கேன். மகளுக்குக் கொஞ்சம் உடல்நிலை சரி இல்லை.  அறை சன்னலில் இருந்து பார்த்தால் அட்டகாசமான காட்சி. பேசாம இந்தப்படத்தைப் பிட்டுக்கு அனுப்பி இருக்கலாம், இல்லை?

பெரிய (குறு) நாவல் எழுதும் அளவுக்கு விவரங்கள் சேகரிச்சுக்கிட்டே இருக்கேன்.  தலைப்பு மட்டும்  முடிவு செஞ்சுட்டேன். அதான்  மேலே பார்த்தீங்களே!  உங்களை வதைக்காமல் விடுவதில்லையாக்கும் கேட்டோ!!

பின்குறிப்பு: தனி மடலிலும் பதிவின் பின்னூட்டங்களிலும் தீபாவளி வாழ்த்துகளை அனுப்பிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் அன்பும் , ஆசிகளும் நன்றிகளும் இத்துடன்.









15 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

gopalji eppo pathivu poduvar?
avarukkum konjam suthanthiram kodunga please.

ப.கந்தசாமி said...

வதம் நடக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வதம் செய்தாலும் துளிர்க்கும் திறமை துளசிக்கு உண்டு.
ஸோ நோ வொர்ரீஸ்.
மகள் நலம் பெற பிரார்த்திக்க உலகம் முழுதும் நல்ல மனங்கள் உண்டு.
அன்னக்கூட் எப்பொழுதும் போல வெகு அழகு.
சாப்பிட நான் ரெடி.
Qபிஜிக்காரங்களைப் புரிந்து கொள்வது கடினம் என்றூ எஙகோ படித்த நினைவு.

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் - கண் கொள்ளாக் காட்சி...

நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

மகள் நலம் பெற பிரார்த்தனைகள்...

மாதேவி said...

ஆகா! இவ்வளவு பலகாரங்கள்.

மகள் விரைவில் நலம்பெற வேண்டுகின்றேன்.

சாந்தி மாரியப்பன் said...

இவ்வளவு பிஸியிலும் எங்களுக்காக ரொம்பக் கொஞ்சமாகவாவது பட்சணம் செஞ்சதுக்கு பாராட்டுகள் துள்சிக்கா :-))

மகள் விரைவில் நலம் பெற்று வரட்டும்.

ஜோதிஜி said...

அலுக்காத வாழ்க்கையில் ஆயிரெத்தெட்டு விசேடங்கள். அனுபவித்ததை அப்படியோ வந்து தரும் போது







மகிழ்வாய் உணர்கின்றேன்.

ADHI VENKAT said...

மகள் விரைவில் குணமாக பிரார்த்தனைகள்.

எங்களை வதைத்தாலும் நாங்கள் விஷயங்களை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம்.....:))

அன்னக்கூட் விழா பிரமாதம். புத்தாண்டிற்கு போட்ட என் கணவரின் பதிவு. அதுவும் இந்த விழா தான் நினைக்கிறேன்.

http://www.venkatnagaraj.blogspot.com/2012/01/blog-post.html

Vijiskitchencreations said...

படங்கள் + இனிப்பு எல்லாம் பார்க்க மிக அழகு. மகள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

sury siva said...

அம்மாடியோவ் !1 இம்புட்டு பக்ஷணமா ? கை நிறைய அள்ளிக்கிட்டு வீட்டிலே கொண்டு போய் வச்சுருக்குது கிழவி.
கார்த்திகை பக்ஷணம் வந்திருக்குது அப்படின்னு எல்லோருக்கும்
கொடுப்போம் அப்படின்னு வேற சொல்லுது.

சுப்பு ரத்தினம்
www.subbuthatha.blogspot.in

ஸ்ரீராம். said...

அன்னகூட்..... உணவுக் கொலு!

Sundar said...

Tulsi acca, small request. Can you recommend decent hotel for a family of four to stay at Little India area four to five days in Singapore, please.
Sundar

அப்பாதுரை said...

தலைப்பைப் படிச்சு நடுங்கிட்டேன்.
நாவலுக்கு வெயிட்டிங்க்.

துளசி கோபால் said...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

மகளுக்கான உங்கள் பிரார்த்தனைகள் அனைத்துக்கும் நன்றி.

இப்போது அநேகமாக குணமாகிவிட்டாள் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனாலும் இன்னும் முன்று மாதங்களுக்காவது சிகிச்சைகள் தொடரவேணுமென்று மருத்துமனை சொல்கிறது.

நானும் ஆரம்ப அதிர்ச்சியில் இருந்து மீண்டு(ம்) வந்துகொண்டே இருக்கின்றேன்.

உங்கள் அனைவரின் அன்புக்கும் விசாரிப்புகளுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.