கொஞ்ச நாளா ரெண்டும் தகராறு. ஒரு ஒத்துழைப்போ, ஒரு புரிதலோ இல்லாமல் எல்லாத்துக்கும் தாறுமாறா தறிகெட்டு ஓடுனா...........
கணினி முன்னால் உட்காரும்வரை மனசிலே வரிசை வரிசையாப் பதிவுகள் எழுதி எழுதி சேமித்தாலும் அதுக்கு வடிவம் கொடுக்க உக்கார்ந்தால் ஏதோ ஒரு இனம் புரியாத அலுப்பு. பேசாம வாசிச்சுக்கிட்டே இருந்துடலாமான்னு......... ஊரில் இருந்து கொண்டுவந்தவைகளைக் கையில் எடுத்திருக்கேன். தற்சமயம் ஒரு பக்கம் தி.ஜா.ராவின் சிறுகதைத் தொகுப்பு(1) இன்னொரு பக்கம் புலிநகக்கொன்றை
(அம்மாடியோ!!!!!)
போனவாரம் நம்ம கோபாலின் தகப்பனார் இவ்வுலக வாழ்வை நீத்தார். என்னதான் கல்யாணச்சாவு என்றாலும் வெற்றிடம் கொஞ்சம் வெருட்டத்தான் செய்கிறது:(
இதுவும் கடந்து போகும். போகணும். அதுக்காக அப்படியே விட்டு வைக்க முடியாது. இருக்கும் காலத்தின் அளவும் குறைஞ்சுகிட்டே போகுதே......
ஊஹூம்......... இது வேலைக்காகாது. சிலநாட்கள் மனசை அதன் பாதையிலே ஓடவச்சுட்டு மீண்டும் வருவேன். கண்ணைத் திறந்தாலே ஏகப்பட்ட சமாச்சாரங்கள் எழுதக் காத்திருக்குதே!
எழுத்தில்லையேல் இருப்பில் சுகமில்லை என்ற அன்புத்தோழியின் சொற்களை திரும்பத்திரும்ப மனசில் கொண்டு வந்து நிறுத்தியாறது.
Tuesday, November 15, 2011
உடம்பா இல்லை மனசா?
Posted by
துளசி கோபால்
at
11/15/2011 03:20:00 PM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
துளசி எனக்கும் இதே சலிப்பு தட்டுகிறது. எழுதுவது சுகம் தான். படிப்பது இன்னும் சுகம். ஒரு வாரம் கழித்து மீண்டும் எழுதவும்.
கோபாலுக்கும் உங்களுக்கும் எங்கள் வருத்தங்களைச் சொல்லிக்கிறேன் பா. நல்லா சாப்பிடுங்க. ஓய்வு எடுங்க. மனம் கலகலப்பானதும் மீண்டுமெழுதலாம்.
//வெற்றிடம் கொஞ்சம் வெருட்டத்தான் செய்கிறது:( //
நிறைவான வாழ்வு வாழ்ந்து சென்றிருந்தாலும் வெற்றிடம் நிரப்ப முடியாத ஒன்றல்லவா? எனது வருத்தங்களும்.
//"உடம்பா இல்லை மனசா?"//
இவை தகராறு செய்யும் போதெல்லாம் கணினியில் தொடரணுமா எனும் கேள்வி எழும். கூடவே பதிலாக நீங்கள்தான் மனதில் வருகிறீர்கள். என் போல பலருக்கும் என நினைக்கிறேன். மீண்டு வர பிரார்த்தனைகளும்.
அவ்வப்போது ஒரு சலிப்பு தட்டுவது சாதாரணம் தான்... அதற்காக எழுதாம விடலாமா... கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் எழுதுங்கள்....
கோபால் சாருக்கு எங்களது வருத்தங்களைத் தெரிவித்து விடுங்கள்...
அடுத்த பதிவுக்கான காத்திருப்புடன்....
கோபால்சாரின் அப்பாவிற்கு எங்கள் அஞ்சலி.
கொஞ்சம் புக் படிச்சுட்டு வாங்க.. நீங்க..
மாமனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் கணவரிடமும் எங்கள் அனுதாபங்களையும் வருத்தத்தையும் சொல்லவும். :((((
அன்பின் டீச்சர்,
கோபால் அண்ணாவுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களைச் சொல்லி விடுங்கள்.
கல்யாணச் சாவுன்னா என்ன டீச்சர்?
கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு திரும்ப வந்துடுங்க டீச்சர்..காத்துட்டிருக்கோம்ல :-)
//போனவாரம் நம்ம கோபாலின் தகப்பனார் இவ்வுலக வாழ்வை நீத்தார். என்னதான் கல்யாணச்சாவு என்றாலும் வெற்றிடம் கொஞ்சம் வெருட்டத்தான் செய்கிறது:( //
பெற்றோரை இழப்பது எந்த வயதானாலும் இழப்பு இழப்பு தான்.
இரங்கல்கள்.
முடிந்த போது எழுதுங்கள்.
இரங்கல்கள்.
இந்த அலுப்பையும் சலிப்பையும் எழுதித்தான் தீர்க்கவேண்டும்.
எழுதும்போது நான் தோல்வியில்லாதவன், துயரமில்லாதவன் - பின்தொடரும் நிழலின் குரலில் ஜெமோ
இரங்கல்கள்
வாருங்கள் உடம்பும் மனசும் சொல்லும்போது.
இரண்டுமே காரணமா இருக்கலாம். அதிகமான அலைச்சல், வேலை அதனால மன உளைச்சல்னு. அப்பப்பா கொஞ்சம் ப்ரேக் விடறது இதுக்குத்தான்.
மாமனார் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ப்ரேக் கே பாத் வாபஸ் ஆயியே. :))
உடல் நலமாக இருந்தாலும் மனம் சரியில்லை என்றால் எந்த வேலையும் செய்ய பிடிக்காது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள் பெரியவர்கள்.
மனதை பழைய நிலைக்கு கொண்டு வந்த பின் மறுபடியும் உற்சாகமாய் எழுதுங்கள்.
கோபல் சாரிடம் எங்கள் வருத்தங்களை சொல்லுங்கள்.
வருத்தங்கள் காலப்போக்கில் மாறட்டும். கோபால் சார் அப்பாவின் மறைவுக்கு எனது வருத்தங்களும் அஞ்சலிகளும்.
அதென்ன இருவருக்கும் ஒரே மாதிரி சிந்தனை. நிறைய படித்துக் கொண்டு இருக்கின்றேன். வெற்றிடமாய் இருக்கும் எண்ணங்களில் எதையாவது போட்டு நிரப்பிட ஒவ்வொரு காலகட்டத்திலும் இதே போன்ற வெறுமை உருவாகும் போலிருக்கு.
தலைவரிடம் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்துங்க.
காலம் காயங்களை ஆற்றும். கோபால் சாரிடம் என் வருத்தங்களை தெரிவித்து விடுங்கள். நல்ல ஓய்வுடன் அருமையான புத்தகங்களைப் படித்துவிட்டு புத்துணர்வுடன் வருக...
தங்கள் இருவருக்கும் இரங்கல்கள்
அந்த மரணம் கூட சற்று பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். மீண்டு(ம்) வருவீர்கள்
கொஞ்சம் இடைவெளி விட்டுத் தொடருங்கள்.
கோபால் சாருக்கு எங்கள் வருத்தங்களை தெரிவித்து விடுங்கள்.
தாத்தாவுக்கு என் அஞ்சலிகள்....முடியும்போது எழுதுங்கள் அக்கா!!
ஆழ்ந்த இரங்கல்கள் துளசியக்கா..
எத்தனை வயசானாலும் பெத்தவங்களோட இழப்பை ஈடு கட்ட முடியாதே..
சலிப்பு ஏற்படறது ஜகஜம்தாங்க்கா.. எனக்கும் சிலசமயம் தோணும் போதெல்லாம் writers blockன்னு பையர் சொல்லுவார். அதை நீக்கி கலகலப்பாக்கி வைக்கிறதும் அதே எழுத்துதான் :-))
நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.
தங்களுக்கும், கோபால் சாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
Pls convey my condolences to gopal
தங்களுக்கும் கோபால் சாருக்கும் என் ஆழ்ந்த அனுதபங்கள் மேடம்.
நீங்க குறிப்பிட்டுள்ளபடி இதுவும் கடந்து போகும்.
:-( Take care and get back teacher!!
எழுத்தில்லையேல் இருப்பில் சுகமில்லை/
காலம் மாறும்
கவலையும் தீரும்..
மீண்டு வர பிரார்த்தனைகள்.
மனதுயருற்று இருக்கும் இவ்வேளை உங்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
மீண்டும் துளசி நறுமணம் பரப்பட்டும். சிறிது ஓய்வுக்குப் பின் வாருங்கள். காத்திருக்கின்றோம்.
//இதுவும் கடந்து போகும். போகணும். அதுக்காக அப்படியே விட்டு வைக்க முடியாது. இருக்கும் காலத்தின் அளவும் குறைஞ்சுகிட்டே போகுதே......//
இன்பம், துன்பம் எல்லாமே கடந்து போகும். இது இயற்கையின் நியதியே. கடந்து போகும் இந்தத் துயரத்தின்
பாதிப்பு என்ற எண்ணமே மேற்கொண்டு செல்வதற்கு வழி வகுக்கிறது.
இருக்கும் காலத்தின் அளவு குறைஞ்சுக்கிட்டே போகுதே !! என்று நினைக்கும்பொழுதே அந்தக் காலத்திலே
நாம் செய்ய வேண்டிய வேலைகள் அதிகரித்துக்கொண்டே போகிறதே !!
வயதாக, வயதாக, சிலருக்கு மட்டுமே சுமைகள் குறைகின்றன. சிலருக்கு அதிகரிக்கின்றன. அவரவர்கள்
தாங்கள் எதிர்கொள்ளும் ப்ரச்னைகள் குறித்து எடுக்கும் அணுகுமுறை மட்டுமே இதனை நிதானிக்கிறது.
ஒண்ணுமே வேண்டாம். அந்த ஏழுமலையான் பார்த்துக்கொள்வான், அப்படின்னு விட்டுவிட முடிகிறதா !!!
மீனாட்சி
http://mymaamiyaarsongs.blogspot.com
கோபால் சாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன் போல மீண்டு வாருங்கள் அன்புடன் குலோ
எங்களது மனப்பூர்வ ஆழ்ந்த அனுதாபங்கள்.
\\இதுவும் கடந்து போகும். போகணும். அதுக்காக அப்படியே விட்டு வைக்க முடியாது. இருக்கும் காலத்தின் அளவும் குறைஞ்சுகிட்டே போகுதே....//..
\\\எழுத்தில்லையேல் இருப்பில் சுகமில்லை//
.... நிதர்சனமான வார்த்தைகள்
www.arutkavi.blogspot.com
\\இதுவும் கடந்து போகும். போகணும். அதுக்காக அப்படியே விட்டு வைக்க முடியாது. இருக்கும் காலத்தின் அளவும் குறைஞ்சுகிட்டே போகுதே....//..
\\\எழுத்தில்லையேல் இருப்பில் சுகமில்லை//
.... நிதர்சனமான வார்த்தைகள்
www.arutkavi.blogspot.com
அன்புக்கும், ஆறுதல் சொற்களால் மன அமைதியைக் கொண்டுவந்தமைக்கும் நட்புகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
என்றென்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.
Post a Comment