Friday, September 24, 2021

பதினேழு முடிஞ்சு பதினெட்டு ஆரம்பம்......

நம்ம துளசிதளம், கோமாவில்  இருக்கு ! எப்பவாவதுதான்  விழிப்பு வருது. உடனே மீண்டும் கோமா  நிலை.....     இந்த வருஷத்தில் இதுவரை வெறும் ஒன்பதே பதிவுகள்தான்.  இதுதான் பத்து...........  போதுமடா சாமி.....  இப்படி ஒரு நிலை....

என்னதான் கோவிட் முடக்கிப்போட்டுருச்சுன்னாலும் பொழுது விடியறதும் பொழுது முடியறதும் நிக்குதா ? அதுபாட்டுக்கு அது......

அந்தக் கணக்கில்  பதினேழு முடிஞ்சு பதினெட்டாவது  வயசில் அடி எடுத்து வச்சுருக்கு நம்ம துளசிதளம் !

இனியாவது  எழுந்து உக்கார்ந்து  எழுதறதுதான் நல்லது....

பார்க்கலாம், எப்படி போகப்போகுதுன்னு.....

ம்ம்ம்ம்ம்  சொல்ல விட்டுப்போச்சே.... இன்றைக்குத்தான் நம்ம கோபாலுக்கும் பொறந்தநாள் !

கோவிட் காரணம் மூடி வச்சுருக்கும் கோவிலில்  தரிசனம் கிடைச்சதும் பாக்கியம்!   ஒரு லெவல் படியிறங்கி இருக்கோம்.

பெருமாளே.... காப்பாத்து....



13 comments:

ராமலக்ஷ்மி said...

துளசி தளத்திற்கும், கோபால் சாருக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

எழுதத் தொடங்குங்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிமா,
தளத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் எழுத்து இன்னும் மெருகேறி வரும்.
நாட்டை விட்டு வெளியே வராததும்,
உடல் நலம் சரியில்லாமல் போவதும் எல்லோரையும்
படுத்துகிறது.

இனி சரியாகட்டும்.
அன்பின் கோபாலுக்கு அக்காவின் வாழ்த்துகள். என்றும் நிறைவோடு, ஆரோக்கியத்தோடு
மகிழ்ச்சியாகவும்,
உங்களோடு பல்லாண்டு வாழ வேண்டும்.

ஸ்ரீராம். said...

தளத்துக்கும் கோபால் சாருக்கும் வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள்...

Thulasidharan thilaiakathu said...

வாழ்த்துகள் துளசிக்கா. தளத்திற்கும் கோபால் அவர்களுக்கும். பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!

கீதா

கிரி said...

வாழ்த்துகள் மேடம் :-) .

கோபால் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

Sandhya Gopal said...

Wish Gopal Sir a very Happy Birthday! Thulasithalam to grow more and more too..

மாதேவி said...

துளசி தளத்துக்கும் திரு.கோபால் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

தொடர்க உங்கள் பணி. மகிழ்கிறோம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மகிழ்ச்சி, மென்மேலும் வளர வாழ்த்துகள்.

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் .

Bhanumathy Venkateswaran said...

உங்கள் கணவருக்கும், தளத்திற்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

விரைவில் பதிவுகள் தொடரட்டும். காண ஆவல்.

துளசி கோபால் said...

வணக்கம் நட்புகளே!

உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி !