Wednesday, May 29, 2019

அகஸ்தியர் கோவில் (பயணத்தொடர், பகுதி 97 )

முஸ்கி :  ஒருமாத லீவு முடிஞ்சதுன்னு நினைவூட்டிய நண்பர் விஸ்வநாத் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி !

மறுநாள் காலையில் எல்லாம் வழக்கம்போல். ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு வந்து, செய்ய வேண்டியவை என்னென்னு பார்த்தால்.... ரிப்பேர் வேலை ஒன்னு இருக்குன்னார்.  ஒரு பெட்டியை பூட்டமுடியலை.  ஸிப்பை இழுத்துப் பூட்டுப்போடும் இடத்தில் உடைஞ்சுருக்கு.
ஏர்லைன்ஸ்காரர்கள் பொட்டிகளைத் தூக்கித்தூக்கி வீசியடிக்கறாங்க பாருங்க......  அதுவும்  'கண்ணாடி, கவனம் தேவை'ன்னு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தோமோ....  தொலைஞ்சது. ஃபுட்பால் விளையாடிட்டுத்தான்  பொட்டியைத் திருப்பித் தருவாங்க.....
பாண்டிபஸார் வணிகவளாகத்துக்குள் பெட்டி ரிப்பேர் பண்ணித்தர நம்ம கடை ஒன்னு இருக்கே!  பெரியவர் பெயர் இஸ்மாயில்னு நினைவு.  அவராண்டை கொண்டு கொடுத்தால் போதும். போனோம். வேலை ஆச்சு.  அங்கே பக்கத்துலேயே கொஞ்சம் அலங்கார லேஸ் வகைகளை வாங்கிக்கிட்டு வந்தோம்.
பகல் சாப்பாட்டுக்குக் கிளம்புனவங்க..... பிக்பஸாருக்குள் முதலில் நுழைஞ்சோம். இந்த ரெண்டு லிட்டர்  குக்கர் ஒன்னு 'பார்க்கணும்'  இந்த OPOS Cooking  பைத்தியம் பிடிச்சதுமுதல்  இப்படித்தான். அமெரிக்கப்பயணத்தில் ஒரு சின்ன குக்கர் வாங்கியாந்தேன்.  அப்புறம் பார்த்தால் அது மூணு லிட்டராம். ரெண்டேதான் வேணுமுன்னு ஒத்தைக் காலில் நிக்கறாங்க 'அந்த வகை' சமையல் நிபுணர்கள்!

நம்மவரோ..... எடை எடைன்னு புலம்பிக்கிட்டே இருக்கார். அதான் ச்சும்மாக் கண்ணுலே பார்த்துட்டாவது வரலாமுன்னு போனால்.....  'சரி. வாங்கிக்கோ. ஆனால் வேறெதுவும் இனி 'எங்கேயும்' வாங்கக்கூடாது'ன்னு 'கைகேயன் ' மாதிரி சத்தியம்  செய், செய்ன்னா.....   சரின்னு தலையை ஆட்டி வச்சேன் .
எதிர்வாடையில் பகல் சாப்பாடு ஆச்சு, பாவ்பாஜியும் பேல்பூரியுமா.... எதோ புது ரெஸ்ட்டாரண்டு.....

இனி 'நோ ஷாப்பிங்'னு அறைக்கு வந்துட்டோம்.
சாயங்காலம் ஆனதும்  இவர்தான் ஆரம்பிச்சார்......  'வெளியே போயிட்டு வரலாமா'ன்னு....  :-)

எப்பவும்  கலகலன்னு சந்தடியா இருக்கும் பாண்டிபஸாருக்குப் பின்னாடி இருக்கும் தெருவில் அப்படி ஒரு அமைதி நிறைஞ்ச கோவிலை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.....  நம்ம கீதா கஃபேயின் எதிர்வாடைக்குப் போயிடணும்.  அங்கே இருந்து  சிவஞானம் தெருவழியே போனால் ஒரு நாலு நிமிட் நடைதான் ராஜாத் தெரு.
அந்தக் காலத்துலே இப்படி எல்லாம்  போக்குவரத்து கிடையாது. அகலமான பாண்டிபஸார் சாலையைக் குறுக்கே கடப்பதெல்லாம்  ஜூஜுபி. எல்லாம் ஒரு  நாப்பத்தி ஆறு வருசங்களுக்கும் முந்தியாக்கும், கேட்டோ! ரங்கநாதன் தெருவில் கைவீசி நடந்து மாம்பலம் ஸ்டேஷன் போய்வரலாம் தெரியுமோ!!!!

அகஸ்தியர் கோவில்னுதான் அப்ப சொல்லிக்கிட்டு இருந்தோம். அகஸ்தியருக்கும் அவர் மனைவி லோபாமுத்திரைக்கும் ஒரு சந்நிதி.  இந்தாண்டை புள்ளையார் சந்நிதி.  நிறைய மரங்கள். அவ்ளோதான் கோவிலே!

கொஞ்சம் இருட்டாக்கூட இருக்கும் பகல் வேளைகளிலும்.....
கோடைவெயிலில் மரநிழலில்   நிம்மதியா உக்கார்ந்து அரட்டையடித்த நாட்கள் பல !

ஒவ்வொரு இந்தியப்பயணத்திலும் ஒருக்காப் போய்வரணுமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தது இன்றைக்கு வாய்த்தது.  கொஞ்சம் மழையா இருக்கேன்னு தயக்கம் இருந்தாலும், பரவாயில்லைன்னு கிளம்பிப்போனோம்.  ஆட்டோதான்.
ராஜகோபுரம் எல்லாம் கட்டி இருக்காங்க!


கடந்து உள்ளே நுழைஞ்சால்  பளிங்குத்தரையும் கொடிமரமுமா, சுத்திவர சந்நிதிகளும் எல்லாத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்ததைப் போல் பெரிய  தகரக்கூரையுமா இருக்கு!   மழையின் சுவடே கோவிலுக்குள் இல்லை!  மரங்கள் எல்லாம் எங்கே?

ஒரு  சந்நிதிக் கட்டடத்தில்  ஒரு பக்கம் ஸ்ரீசுப மங்கள கல்யாண வரதராஜர், இன்னொரு பக்கம் ஸ்ரீலக்ஷ்மிநாராயணர்னு டூ இன் ஒன் !
அடுத்தாப்லெ துர்கை தேவி. பட்டர்கள் அவுங்கவுங்க சந்நிதி வாசலில் உக்கார்ந்தபடி ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கலாம்.
நெருக்கமா சந்நிதிகள்....  சிவனும் பார்வதியும்...  ஸ்ரீ சுந்தர வணிபேஸ்வர் மற்றும் ஸ்ரீ சுந்தர வடிவாம்பிகை என்ற பெயரில் !
முருகன் வள்ளி தேவசேனாவுடன், ஐயப்பன், ஹனுமன், நவகிரஹங்கள், நம்ம புள்ளையார் சித்திபுத்தியுடன்.....  இப்படி எல்லாக் கடவுளர்களையும் ஒருங்கிணைச்சாச்சு.  எங்கடா  நம்ம அகஸ்தியரைக் காணோமேன்னு பார்த்தால்  பாவம்..... அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டுருக்கார்.


நவக்ரஹ மண்டபம்தான் ரொம்பவே அழகு! எல்லோரையும் எதாவதொரு க்ரஹம் புடிச்சு ஆட்டுதே......
நவக்ரஹ சந்நிதிக்கு நேரா இருப்பவர் புள்ளையார்!
தனிக்கோவில் போல.... சுத்திவர வெராண்டா வச்ச  உயரமான  சந்நிதி. சந்நிதியைச் சுத்தியும் (கோஷ்டத்தில்)  வெராண்டாவின் வெளிப்புறச் சுத்துச்சுவரிலும்..... அடடா.....  ராமாயணமும் மஹாபாரதமும்! 
அம்பு பறக்குதுப்பா ! கஜமுகாசுரனுடன் போர் !
ஆமாம்....  தினைப்புனம் காத்த வள்ளியை யாராவது பார்த்திருக்கோமோ?  இங்கே  புள்ளையார் தம்பிக்கு உதவி பண்ண கதையும் இருக்கு!


சும்மாச் சொல்லக்கூடாது.....  சின்னச்சின்னச் சிற்பங்களா இருந்தாலும் புராணக்கதைகள் எல்லாம் புரியும் வகையில் செதுக்கி இருப்பதோடு, பெயர்கள், சம்பவங்கள் எல்லாம் சுருக்கமாப் போட்டுருக்காங்க. சின்னப்பிள்ளைகளுக்குக் கதை சொல்லி விளக்கலாம். இளமனசில் சட்னு பதிஞ்சுரும்.


இந்தச்சிற்பங்கள் எல்லாம் எனக்குமே புதுசாத்தான் இருக்கு. கோவிலுக்கு வயசு ஒரு எழுபத்தியஞ்சுக்கு மேலேன்னு சொன்னாலும், இதெல்லாம் சமீபத்துச் சமாச்சாரமாத்தான் இருக்கணும். நான் பார்த்த காலத்தில் இதெல்லாம் இல்லவே இல்லை.....
நம்ம சென்னையிலேயே கூட  நவகிரஹக் கோவில்கள் இருக்கு. கிரஹதோஷம் இருப்பவர்கள், சட்னு போய்க் கும்பிட்டுக்கலாமுன்னு   கொஞ்சவருஷங்களாத் தகவல்கள் வந்தபடி இருக்குன்றதை யாராவது கவனிச்சீங்களா?   போரூர் சாலையில் போகும்போது கேது தலம்னு பார்த்த நினைவு இருக்கு.  இந்தக் கணக்கில் இந்த அகத்தியர் கோவில்  சந்திரனுக்குள்ளதாம்! 

 வலையில் கொஞ்சம் தேடிப்பார்த்தால்   அவுங்கவுங்க வெவ்வேற பட்டியல் போட்டு வச்சுருக்காங்க! எதை நம்பலாம்?  நம்பினால்தானே சாமி? பேசாம எல்லா கிரஹங்களுக்கும் அதிபதியான சிவனை வணங்கினால் போதாது?  பொதுவா சிவன் கோவில்களில்தான்  நவகிரஹ சந்நிதிகள் இருக்கும்.   நவகிரஹத்தலங்களில் அந்த சிவனையே பின்னுக்குத் தள்ளிட்டு கிரஹமூலவரை நோக்கியே சனம் பாயும் என்பதை நம்ம கும்மோண நவகிரஹத்தல பயணத்தில் பார்த்தோமே.... நினைவிருக்கோ?

விதிவிலக்காக ஒரு சில வைணவத்தலங்களில் நவகிரஹ சந்நிதிகள் இருக்கு, நம்ம மதுரைக் கூடலழகர் கோவில் போல!  பொதுவா வைணவர்களுக்கான நவகிரஹத் தலங்கள் திருநெல்வேலிக்குப் பக்கம் நவதிருப்பதி என்ற பெயரில் இருக்கு. இந்த ஒன்பது கோவில்களும் நம்ம திவ்யதேசப் பட்டியலில் இருப்பதால் டூ இன் ஒன் என்று போயிட்டு வரலாம்,  தோஷமும் போச்சு, தரிசனமும் ஆச்சுன்னு !அங்கெல்லாம்  அந்தந்தப் பெருமாள்தான் (மூலவர்) கிரஹ அதிபதியாக இருக்கார்.  அவரையே வணங்க தோஷம் விலகும்! 

இங்கே  அகஸ்தியர் கோவிலில் எல்லா விழாக்களையும் ரொம்ப நல்லமுறையில் கொண்டாடறாங்க. ஆடி மாச ஸ்பெஷல்ஸ் என்னன்னு போட்டுருப்பதையும் பார்த்தேன்.
என்னோட வியப்பு என்னன்னா.... இது  அறநிலையத்துறை நிர்வாகம் செய்யும் கோவிலாம். அட!   அதிலும் இறைநம்பிக்கையோடு இருக்கும் நல்லவங்களும் தப்பித்தவறி இருக்காங்க போல!
நல்ல கோவிலும், நல்ல தரிசனமுமா அமைஞ்சது, ரொம்பவே மகிழ்ச்சி!

வாசலிலேயே  ஆட்டோ கிடைச்சது.  கீதா கஃபேயில் டின்னர் (பூரி உருளைக்கிழங்கு) முடிச்சுட்டு லோட்டஸ் திரும்பினோம்.

மறுநாள்  'வெளிநாட்டுப் பயணம்' போறதால் அதுக்குத் தேவையானவைகளைத் தனிப்பெட்டியில் வச்சுட்டு, மற்றவைகளை இங்கே விட்டுவச்சுட்டுப் போகும் பெரிய பெட்டிகளில் அடுக்கி வச்சதில்  கொஞ்சம் பிஸியாகிப் போச்சு.

எல்லோரும் பாஸ்போர்ட், விஸா எல்லாம் சரி பார்த்துக்குங்க. நாளைக்குக் கிளம்பலாம் :-)

தொடரும்....  :-)


15 comments:

said...

காலையில் முக நூல் திறந்தவுடன் உங்கள் பதிவு கண்டு முக மலர்ச்சி அம்மா.

said...

அகத்தியர் கோவில் கண்டு கொண்டோம்.
பயணத்திற்கு வருகிறோம்.

துளசிதளலீவில் முன்பு படிக்காமல்விட்ட உங்கள் பயணங்களை முடித்துவிட்டேன்.நன்றி.

said...

நன்றி
நன்றி

said...

ஆஹா.... "மீண்டும் துளசி" என்ற தலைப்பு பொருத்தமா இருக்குமோ?

ஆக இந்தப் பயணம் நிறைவை நோக்கிச் செல்கிறது. வாழ்த்துகள்.

said...

ஆஹா வந்துடீங்க லா..சூப்பர் ...


படிக்க நானும் ஓடி வந்துட்டேன் ...

said...

உங்கள் பதிவினால் நாங்கள் சென்று வந்த ஹளபேடு பயணத் தொடரை எழுத ஆரம்பித்துவிட்டேன்...முடியும் போது வந்து பாருங்கள் ...


https://anu-rainydrop.blogspot.com/2019/05/blog-post_28.html

said...

வாங்க செந்தில்பிரசாத்.

மனம் நிறைந்த நன்றி !

said...

வாங்க மாதேவி.

ஆஹா...... அப்படியா ! இந்தாங்க போனஸ் மார்க் இருபது !

நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்.

நினைவூட்டலுக்கு நன்றி.

உண்மையில் ஒன்னும் எழுதாம 'சும்மா இருந்தது'கூட ஒருவிதத்தில் சுகமே :-)

ஆனால்.... மனசு மட்டும் விடாமல் எழுதிக்கிட்டேதான்.... எப்பவும் !

said...

வாங்க நெல்லைத்தமிழன்.

எங்கே முடிவை நோக்கி? அடுத்த நாட்டுக்குப் போயிட்டு வந்துருவேன் :-)

said...

வாங்க அனுபிரேம்.

உங்க சுட்டியில் போனால் ஒரு நரசிம்ஹர்தான் இருக்கார். பேஜ் ஓப்பனாகலை. என்னன்னு பாருங்க

said...

இதுவரை நாங்கள் பார்த்திராத கோயிலுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

said...

இரண்டு மூன்று நாட்களாகவே உங்க நினைப்புதான் டீச்சர். நலமாக இருக்கீங்களா? உங்க பதிவை பழைய உற்சாகத்துடன் பார்த்ததில் மகிழ்ச்சி. இப்படியொரு கோவில் இருப்பது குறித்து இப்போதுதான் அறிகிறேன். நன்றி டீச்சர்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

சென்னையில் ஏராளமான கோவில்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு பத்துப்பதினைஞ்சுக்குத்தான் பெயரும் புகழும்!

நான் இன்னும் மண்ணடி பக்கம் இருக்கும் கச்சாலீஸ்வரன் கோவிலுக்குப் போகலை.... ஒரு பயணத்தில் வட சென்னை வச்சுக்கணும் !

said...

வாங்க கீதமஞ்சரி,

இன்னும் நிறைய இருக்குப்பா.....