வந்துட்டேன்........
அறுபத்தியேழு நாட்கள்! பயணத்துக்குள் பயணமாய் நாலு சின்னப் பயணங்கள். நாலு மாநிலங்கள் கூடவே ஒரு வெளிநாடு :-)
சுத்தி சுத்தி எனக்கே களைப்பா இருக்கு! இங்கே வந்தபின்னும் கூட தினம் காலையில் விழிப்பு வந்ததும் கண்ணைத் திறக்குமுன் எந்த ஊரில் இருக்கேன் னு குழப்பம்தான். கனவிலும்கூட என்ன எங்கேன்னு தெரியாத கோவில்களுக்குப் போய்க்கிட்டே இருக்கேன்..... அடராமா..... இது என்ன... எனக்கு வந்த சோதனை!
வழக்கம்போல் விஸ்தரிச்சு எழுத வேணாமுன்னு தோணுது.... இப்படிச் சொல்லிட்டு எழுத ஆரம்பிக்கும்போது தானே விஸ்தாரமா வரும் வாய்ப்பும் உண்டு கேட்டோ :-)
இதுவரை போகாத சில இடங்களுக்குப் போய் வரும் வாய்ப்பு கிடைச்சது. அவைகளைப் பற்றிக் கொஞ்சம் அதிகமாயும், உள்ளூர் சமாச்சாரங்களைக் கொஞ்சம் குறைவாகவும் எழுதணும்!
சென்னையில் தங்கிய நாட்களில் பெரும்பாலும் குடும்பத்துடன்தான் நேரம் போனது என்றாலும் சிலபல நண்பர்களையும் சந்தித்தோம். உண்மையில் அவர்கள் வந்து நம்மை சந்திச்சாங்கதான். மனதுக்கு மிக நெருக்கமாய் உணர்ந்த நட்புகளை சந்திச்சது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! அதுக்கே என் மனம் நிறைந்த நன்றிகளை இங்கே சொல்லிக்கறேன்.
எதிர்பாராத விதமா, ஒரு கல்யாணத்தில் கலந்துக்க முடியாமல் பயணம் அமைஞ்சு போச்சு. அதுக்காக விடமுடியுமா? கல்யாணப் பொண்ணுக்கு நலுங்கு வைக்கும் சடங்கில் கலந்து கொண்டோம். மனநிறைவு !
பொறந்து முப்பதே நாளான ஒரு குட்டிப் பாப்பாவைப் பார்த்துட்டுப் பாப்பாவின் பாட்டி வீட்டில் விருந்து சாப்பிட்டு வந்தது கூடுதல் மகிழ்ச்சி!
அதிக நாட்கள் நம்ம ரஜ்ஜுவைக் கேட்டரியில் விடவேண்டி வந்தது ஒரு கவலைன்னா.... கேட்டரி ஓனர் லிஸா, பிஸினஸை இன்னொருத்தருக்கு வித்துட்டாங்கன்னது கூடுதல் கவலை. ஆகஸ்ட் மாசம் முதல் வாரம் வரை ( புது ஓனருக்கு ஒரு மாசம் பயிற்சி தரும்வரை) அவுங்க இருப்பங்களாம். அதுக்குப்பிறகு ரெண்டு வாரம்தான். ரஜ்ஜு சமாளிச்சுக்குவான்னு தைரியம் கொடுத்தாங்க.
மொதநாள் ராத்திரி இவர் பொட்டிகளை அடுக்கிக்கிட்டு இருந்ததைப் பார்த்து, இவனுக்கு சமாச்சாரம் தெரிஞ்சு போச்சு. பொழுது விடிஞ்சால் புடிச்சுக்கிட்டுப் போயிருவாங்க, இப்பவே 'எஸ்' ஆகணுமுன்னு ராத்ரியெல்லாம் ஜன்னல் கட்டையில் உக்கார்ந்துருந்தான். எப்படியும் ஜன்னல் திறக்கும்போது வெளியே குதிச்சுடணும்.... பாவம்.... புள்ளெ....
வழக்கம்போல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சிங்கையில் இறங்கினதும் ரெண்டரை மணி நேர இடைவெளியில் சென்னை விமானம். வழக்கமா போய்ச்சேரும் பத்துமணிக்குப் போய்ச் சேர்ந்ததோ?
இல்லையே..... இன்னும் பத்து நிமிட்டில் சென்னையில் தரை இறங்கப்போறோமுன்னு இருக்கும் நிலையில், அது பாட்டுக்கு வட்டம் போட்டுக்கிட்டே இருட்டில் சென்னையைச் சுத்திக் காமிச்சுட்டு இருந்துச்சா..... லேசாக் கண்ணயர்ந்துட்டோம்.....
தடக்னு தரையைத் தொட்ட சத்தம் கேட்டுக் கண்ணைத் திறந்தா..... கும்மிருட்டு..... இருட்டுலே எங்கெயோ போய்க்கிட்டு இருக்கோம்..... விமானத்தில் லைட்ஸ் போட்டாங்க.....
இதுபோய் நிக்குது ஒரு கார்கோ டெர்மினலில்..... நம்மையெல்லாம் சரக்குன்னு நினைச்சுத் தள்ளிவிடப் போறாங்களோ?
'பெட்ரோல் தீர்ந்து போச்சு. கொஞ்சம் போட்டுக்கிட்டுக் கிளம்பிடலாம் இன்னும் அரைமணி நேரத்தில்'னு விமானப்பணியாளர் வந்து சொல்லிக்கிட்டு முழிக்கிறார்!
ஆமாம் .... அம்மாநேரம் சுத்துனா பெட்ரோல் தீர்ந்துறாதா? சென்னையில் பெட்ரோல் இல்லையா என்ன? ஒருவேளை..... தரமாட்டேன்னுட்டாங்களோ?
சென்னைக்கு என்ன ஆச்சு? அங்கே விமானநிலையத்தில் எதாவது கலாட்டாவோ? குண்டு கிண்டு வச்சுட்டாங்களா என்ன?
எல்லோரும் செஞ்சதையே நாமும்...... செல்ஃபோனில் வேண்டப்பட்டவர்களுக்குச் சேதி அனுப்புதல்..... ஒரே சத்தம்..... ஒரே...பேச்சு....
நமக்காக வண்டியுடன் வந்து காத்துக்கிட்டு இருக்கும் சீனிவாசனுக்குச் சேதியைச் சொன்னோம்.
அந்த 'அரைமணி' ஒரு ஒன்னரை மணியாச்சு என்பது உண்மை. ஒரு வழியா சென்னையில் இறங்கி, பொட்டிகளை எடுத்துக்கிட்டு வெளியில் வரும்போது நடு ராத்திரி ஒன்னரை மணி.
முதலில் கண்ணில் பட்ட மெட்ராஸ் காஃபி ஹவுஸாண்டை நம்ம சீனிவாசனை வரச் சொல்லி, ஆளுக்கொரு காஃபி ஆச்சு. சின்ன பேப்பர் கப் காஃபி, நூத்தியம்பது ரூபாய்!
இப்படியா விலைவாசி ஏறிக்கிடக்கு? அம்மாடியோவ்.....
லோடஸ் வந்து சேர்ந்து செக்கின் செஞ்சு தலையணையில் தலை வைக்கும்போது மணி ரெண்டரை.
குட்நைட்............
தொடரும்............ :-)

'ரெண்டுவாரத்துக்கு ஒரு முறை ரஜ்ஜுவைப்போய் விஸிட் பண்ணிட்டு, அவனுக்கு வேண்டிய சாப்பாட்டுப் பொதிகளைக் கொடுத்துட்டு வரேன். கூடவே வீட்டுச்செடிகளையும் அப்பப்ப வந்து கவனிச்சுக்கறேன்'னு மகள் சொன்னதால், க்ருஷ்ணார்ப்பணமுன்னு கிளம்பிட்டோம்!
அன்றைக்கு ரம்ஸான் பெருநாள் என்பதால் குக்கீஸ் கொடுத்தாங்க, சிங்கை விமான நிலையத்தில். பழையகால மூங்கில் வீடு ஒன்னு 'கட்டி' வச்சுருந்தாங்க.
இல்லையே..... இன்னும் பத்து நிமிட்டில் சென்னையில் தரை இறங்கப்போறோமுன்னு இருக்கும் நிலையில், அது பாட்டுக்கு வட்டம் போட்டுக்கிட்டே இருட்டில் சென்னையைச் சுத்திக் காமிச்சுட்டு இருந்துச்சா..... லேசாக் கண்ணயர்ந்துட்டோம்.....
தடக்னு தரையைத் தொட்ட சத்தம் கேட்டுக் கண்ணைத் திறந்தா..... கும்மிருட்டு..... இருட்டுலே எங்கெயோ போய்க்கிட்டு இருக்கோம்..... விமானத்தில் லைட்ஸ் போட்டாங்க.....
இதுபோய் நிக்குது ஒரு கார்கோ டெர்மினலில்..... நம்மையெல்லாம் சரக்குன்னு நினைச்சுத் தள்ளிவிடப் போறாங்களோ?
'பெட்ரோல் தீர்ந்து போச்சு. கொஞ்சம் போட்டுக்கிட்டுக் கிளம்பிடலாம் இன்னும் அரைமணி நேரத்தில்'னு விமானப்பணியாளர் வந்து சொல்லிக்கிட்டு முழிக்கிறார்!
ஆமாம் .... அம்மாநேரம் சுத்துனா பெட்ரோல் தீர்ந்துறாதா? சென்னையில் பெட்ரோல் இல்லையா என்ன? ஒருவேளை..... தரமாட்டேன்னுட்டாங்களோ?
சென்னைக்கு என்ன ஆச்சு? அங்கே விமானநிலையத்தில் எதாவது கலாட்டாவோ? குண்டு கிண்டு வச்சுட்டாங்களா என்ன?
எல்லோரும் செஞ்சதையே நாமும்...... செல்ஃபோனில் வேண்டப்பட்டவர்களுக்குச் சேதி அனுப்புதல்..... ஒரே சத்தம்..... ஒரே...பேச்சு....
நமக்காக வண்டியுடன் வந்து காத்துக்கிட்டு இருக்கும் சீனிவாசனுக்குச் சேதியைச் சொன்னோம்.
அந்த 'அரைமணி' ஒரு ஒன்னரை மணியாச்சு என்பது உண்மை. ஒரு வழியா சென்னையில் இறங்கி, பொட்டிகளை எடுத்துக்கிட்டு வெளியில் வரும்போது நடு ராத்திரி ஒன்னரை மணி.
முதலில் கண்ணில் பட்ட மெட்ராஸ் காஃபி ஹவுஸாண்டை நம்ம சீனிவாசனை வரச் சொல்லி, ஆளுக்கொரு காஃபி ஆச்சு. சின்ன பேப்பர் கப் காஃபி, நூத்தியம்பது ரூபாய்!
இப்படியா விலைவாசி ஏறிக்கிடக்கு? அம்மாடியோவ்.....
லோடஸ் வந்து சேர்ந்து செக்கின் செஞ்சு தலையணையில் தலை வைக்கும்போது மணி ரெண்டரை.
குட்நைட்............
தொடரும்............ :-)
14 comments:
Welcome back...
Welcome back.
ஆஹா டீச்சர் வந்தாச்சு...
வாங்க..வாங்க... பார்க்க படிக்க waiting
முதல் கமெண்டா, தெரில ?
பிளைட்ல வர்றவங்க காஃபி க்கு 150 ஆன்னு கணக்கு பண்ணமாட்டாய்ங்கன்னு தப்பா கணக்கு பண்ணிட்டாய்ங்க ... பாவம் (நாம்).
Welcome back
இப்படி இடையில் நியூஸ் இல்லாம காணாமல் போக மாட்டீங்களே... என்ன ஆச்சுன்னு நினைத்துக்கொண்டிருந்தேன்.
வருக.. தொடர்க..
வாங்க ஸ்ரீராம், நன்மனம், அனுராதா ப்ரேம், விஸ்வநாத் & தெய்வா,
நன்றீஸ்.
ஆமாம்.... ஏன் பின்னூட்டம் எல்லாம் மெயில் பாக்ஸ்லே வர்றதில்லை? மாடரேஷன் இருந்தால் நம்ம தபால்பொட்டியிலே வந்து இன்னின்னார் இப்படியிப்படி பின்னூட்டி இருக்காங்கன்னு முந்தியெல்லாம் சொல்லுமே.....
இந்தப் பிரச்சனை நான் ஊருக்குப் போகுமுன்னே சிலநாட்கள் இருந்தது. சரியாகி இருக்கும் இந்த ரெண்டரை மாசத்துலேன்னு பார்த்தால் இன்னும் அப்படியே இருக்கே..... ஙே....
தேடிக்கொண்டே இருந்தேன். உங்கள் பழைய இடுகையிலும் கேட்டிருந்தேன். இவ்வளவு நாள் காணாமல் போனதில்லையே என்று நினைத்தேன்.
எழுதுங்க உங்கள் பயணத்தைப் பற்றி. ஒருவேளை ரொம்பத் தெரிந்தவர்களுக்குத்தான் பயண விபரம் கொடுத்திருந்தீர்களோ?
காலில் சக்கரம் கட்டிக் கொண்டு இருப்பீர்களோ
இத்தனை நாள் உங்கள் பதிவுகள் இல்லாமல் ஏங்கிப்போயிட்டேன். நல்வரவு . இது எனது முதல் பினனுட்டம்.
வாங்க... வாங்க....
உங்கள் பதிவுகளுக்காக வெயிட்டிங்... அதுவும் 67 நாள் பயணம் - எப்படியும் 200 பதிவுகள் வரணும் - உங்க லெவலுக்கு! :) I am waiting!
மெயில் பாக்ஸில் பின்னூட்டங்கள் இப்போதெல்லாம் வருவதில்லை. பதிவு வெளியிட்ட கையோடு Email follow up Comments Box-ல் க்ளிக் செய்து மின்னஞ்சலுக்கு கமெண்ட்ஸ் வரும் மாதிரி செய்து கொள்ளுங்கள். பழைய பதிவுகளிலும் நேரம் கிடைக்கும் போது இதைச் செய்து விட்டால் உங்கள் பதிவுகளுக்கு வரும் கமெண்ட்ஸ் மின்னஞ்சலுக்கு வரும். இப்போதைக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. நான் இப்படித்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்.
வருக வருக வருக
மறுபடியும் உங்கள் பதிவுகள் கண்டு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி :)
// வழக்கம்போல் விஸ்தரிச்சு எழுத வேணாமுன்னு தோணுது.... இப்படிச் சொல்லிட்டு எழுத ஆரம்பிக்கும்போது தானே விஸ்தாரமா வரும் வாய்ப்பும் உண்டு கேட்டோ :-) //
எதையும் சுருக்கி எழுதவே கூடாது. இது என் அன்பு வேண்டுகோள். :)
காபி 150 ரூபாய் டூ மச். ஏர்போர்ட்ல அப்படித்தான். கேட்டா ரெண்டு டாலர்னு சொல்வாங்க.
இந்த முறை லாங் ட்ரிப் ..ரஜ்ஜு கோவம் தீர்ந்ததா :)
மகள் ஒர்க் எக்ஸ்பீரியன்ஸ் ஒரு cattery யில் செஞ்சா 10 நாள் .அதில் எல்லாமே கம்பி வழியா இவளை மியாவ்ன்னு கூப்பிட்டு ஹக் பண்ண சொல்லுவாங்களாம் :) உள்ளே க்ளீன் பண்ண போனா கட்டி பிடிச்சிக்குங்களாம் .
வாங்க ஏஞ்சலீன்.
ரஜ்ஜு இப்பெல்லாம் வீடு தங்கறதே இல்லை. காலையில் தூக்கத்தில் இருக்கும் என்னைப் பிடுங்கியெடுத்து ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சதும் வீட்டை விட்டுப்போய், ராத்ரி ஒன்பது இல்லே பத்து மணிக்கு வீடு வர்றான். எங்கியே வேலைக்குச் சேர்ந்துருக்கு போல! ஐடி கம்பெனியோ என்னவோ.... லாங் அவர்ஸ் !
Post a Comment