முழி பெயர்க்கலாம் வாங்க :-)
விடுமுறை எடுத்துக்கிட்டுப் பயணம் போய் வரலாமுன்னு நினைக்கும்போதே மனசில் வந்து நிக்குது இந்தியா! உலகத்துலே இன்னும் நாம் பார்க்காத நாடுகள் எத்தனையோ இருக்க, அது ஏன் எப்பப் பார்த்தாலும் இந்தியா? அடடா.... அப்படியா? இந்தியாவையே இன்னும் முழுசாப் பார்த்து முடிக்கலையே.... இதை முதலில் முடிச்சுக்கிட்டு வேற நாடுகளுக்குப் போனால் ஆச்சு, இல்லையோ?
சரியாப் போச்சு. விடாம வருசாவருசம் போனாலும் இந்தியாவை முழுசுமாப் பார்க்க இந்த ஜன்மம் போதுமா என்ன? இருக்கட்டும். ஏற்கெனவே 108 திவ்யதேசங்களைத் தரிசிக்கணுமுன்னு ஆரம்பிச்சு வச்சுருப்பதையாவது முடிச்சுட்டோமுன்னா ஓரளவு பாரதநாட்டைப் பார்த்த பயன் கிடைக்காதா என்ன?
இதுவரை எத்தனை பார்த்துருக்கோமுன்னு கணக்குப் போட்டுப் பார்த்தால் 73. அதுலே சரியாப் பார்க்காத ரெண்டு கோவில்களைப் பற்றி எழுதலை. அவைகளையும் இன்னொருக்காப் பார்த்துட்டு வரணும். இந்தப் பயணத்தில் இன்னும் கொஞ்சம் போய்வரலாம்னு திட்டம். வழக்கம்போல் திட்டமிடல் பொறுப்பைக் கோபாலிடம் கொடுத்தேன். ஆஃபீஸில் செய்யும் அதே வேலையை வீட்டிலும் கொஞ்சம் செஞ்சால் என்ன? ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். கூடியவரை ஒரு ஊரில் இரண்டுநாட்கள் தங்கவேணும்.
எத்தனை நாள் லீவு எடுக்கமுடியும் என்ற கணக்கெல்லாம் போட்டு, வழக்கம்போல் நம்ம ராஜலக்ஷ்மிக்கு இடம் கிடைக்குமான்னு பார்த்துட்டு, ஏர்லைன்ஸ் டிக்கெட் புக் பண்ணி, 59 கிலோ பொட்டிகளுடன் ஜனவரி 17 க்கு வண்டி கிளம்பிருச்சு :-)
முதலில், சிங்கை வரை உள்ள பயணம்....போரடிக்கும் பத்தரை மணி நேரம். முதல் அரை மணி நேரத்தில் நிலம் தாண்டிக் கடல் வந்துரும். அண்டை நாட்டைத் தாண்டவே அஞ்சு மணி நேரம் இப்படி..... இரவு நேரமுன்னாக் கொஞ்சம் தூங்கித் தொலைக்கலாம். ஆனால் இது பகல் நேரப் பயணம். எதாவது க்ளிக்கலாமுன்னா.... மேகக்கூட்டங்களைத்தவிர வேறொன்னும் காணோம். தேவர்கள் நடமாட்டம் Nil.
சினிமாப்ரேமிகளுக்கு சிலபல படங்கள். முந்திபோல இல்லாமல் தமிழ், மலையாளம், தெலுகு கன்னடா ன்னு வகைக்கு ஒன்னு. ஹிந்திப்படம் மட்டும் ஒரு மூணு. சினிமா பார்க்கும் ஆர்வம் இப்போ அறவே அற்றுப் போனதால்....வாசிக்க எதாவது ஆப்டுமான்னு துழாவினால் எங்கூர் தினசரியைத்தவிர ஒன்னும் இல்லை. கொஞ்சநேரம் பிரிச்சு மேய்ஞ்சுட்டு நடைப்பயிற்சிக்குக் கிளம்பினேன். அதுக்குள்ளே லஞ்சு விளம்பிட்டாங்க. ஸ்பெஷல் மீல் என்பதால் ஊருக்கு முன்னாடி வந்துரும்.
அரைச் சப்பாத்தி இருக்கு. அப்ப மீதி? நம்ம கோபாலுக்கு! சுமாரான ருசி. ரெண்டு குலோப்ஜான் கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால்... இதுவும் ஹல்திராம் டின் வகைன்னு தோணுச்சு.
விமானம் கிளம்புனது முதல் அங்கங்கே சின்னக்குழந்தைகளின் அழுகுரல் என்றாலும் கூட இன்னொரு பக்கத்தில் ஒரு குழந்தை இடைவிடாமல் கத்தலும் கதறலுமா..... தாங்க முடியாமல் கண்ணைத் திருப்பினால்... நம்மூர்ப் பாப்பா. ஒன்னும் சொல்றதுக்கில்லை. வயசு ஒன்னரை இருக்கும்.
அடுத்த நடைப்பயிற்சியில் கேரளத்துக்காரர் ஒருவர் பரிச்சயமானார். என்னைத் தெரியுமாம்! நம்ம கேரளா அசோஸியேஷனில் பார்த்திருக்காராம். கொஞ்ச நேரம் சம்ஸாரிச்சுப் பொழுதை போக்கிட்டு இருப்பிடம் வந்தேன். கொஞ்ச நேரத்தில் அவர் திரும்ப வந்து 'சேட்டனை' நலம் விசாரிச்சுப் போனார்
ஒவ்வொரு நாலு மணிக்கும் ஒரு முறை சாப்பாடுன்னு ஒரு சிஸ்டம் எதுக்கு? இன்னொருமுறை வந்த சாப்பாடும் மஹா போரிங்:-( அட்டையைப்போல இன்னொரு அரைச்சப்பாத்தி. வெறும் ச்சனாவைப் பொறுக்கித் தின்னு வச்சேன். எல்லாம் இது போதும், போ.
பத்தரை மணி பறந்தபின் சிங்கை வந்து சேர்ந்தோம். டெர்மினல் 3. சென்னைக்கு விமானம் டெர்மினல் இரண்டில் இருந்து போவதால் ரயில் பிடிச்சு அங்கே போனோம். இப்போ சில வருசங்களா ட்ரான்ஸிட் பயணிகளுக்கு நாப்பது சிங்கப்பூர் டாலர்களைச் சாங்கி கொடுக்குது. ஆண்டுக்கு ஒருமுறை என்ற கணக்கு. ஏற்கெனவே போன பயணத்தில் கிடைச்ச நாப்பதைக் கோபால் செலவு செய்யாமல் வச்சுருந்தார். இப்போ நாங்க ரெண்டு பேர், எண்பது கிடைக்கும். வாங்கி வச்சுக்கிட்டால் திரும்பி வரும்போது நிதானமா செலவு செஞ்சுக்கலாமேன்னு அதுக்கான வரிசையில் கோபால் போய் நின்னார்.
நான் சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்னப்ப, திடுக்கிடவைக்கும் பரிச்சயமான கதறல். ஐயோன்னு கண்ணை ஓடவிட்டால்..... பாப்பாவும் அம்மாவும் இருக்காங்க. சென்னைக்கு வர்றாங்க போல! திகிலோடு அருகில் போய் எந்த ஊருக்குப் போறீங்கன்னு பேச்சுக் கொடுத்தேன். காலிக்கட்! இப்பத்தான் நிம்மதியா ஒரு பெருமூச்சு விட்டேன். சென்னைன்னு மட்டும் சொல்லி இருந்தாங்கன்னா.... என்ன ஆகி இருப்பேன்னு தெரியாது. இன்னொரு நாலரை மணி நேரம் தாங்க காதுகளுக்கு சக்தி இல்லை.
சாங்கி விமான நிலையம் வழக்கமான பரபரப்போடும் அழகோடும் இருக்கு! குரங்கைத் தேடினேன். காணோம் :-( சீனப் புத்தாண்டுக்கான அலங்காரங்கள் செய்ய இன்னும் நாள் இருக்கு. திரும்பி வர்றபோது பார்க்கலாம்.
நமக்கு இன்னும் ரெண்டுமணி நேரம் போகணும், சென்னை விமானம் ஏற. கோபாலின் புண்ணியத்தால் SIA லவுஞ்சுப்போய் கொஞ்சநேரம் வலை மேய்ஞ்சு, மெயில் செக்செஞ்சுன்னு ஓய்வு. சின்னதா கொஞ்சம் ஸ்நாக்ஸ்னு நேரம் போயிருச்சு. சென்னை விமானத்தில் ஏறி உக்கார்ந்தாச். நம்மவர் தூங்க ஆரம்பிச்சார்.
விமானப்பணிப்பெண்களின் சேவை ஆரம்பிச்சுப் பரபரப்பான நேரம், மெனுகார்ட் (சின்னப் புத்தகம் ஒரு பத்து பக்கத்துக்கு) கிடைச்சது. நமக்கு வேற தனிச் சாப்பாடுதான் என்றாலும் என்ன இருக்குன்னு புத்தகத்தைப் புரட்டினால்.... தமிழெழுத்துக்கள். ரொம்ப சந்தோஷம்தான். ஆமாம்.... தமிழை இப்படி முழி பெயர்த்து வச்சுருக்காங்களேன்னு..... ரொட்டிகளை மற்றும் பரவல்.... ஙே....... என்னத்தை பரவலாக்கறாங்க? ப்ரெட் அண்ட் ஸ்ப்ரெட் என்பதின் தமிழாக்கம்.
நீங்களே பாருங்க.... இங்லீஷ் & தமிழ் பக்கங்களை :-) இது என்ன மாதிரி டிஸைன்னு புரியலை.
சாபா புலுசு (தெலுகு) = மீன் குழம்பு (தமிழ்)
தமிழ் எழுத்துருக்களைப் பார்க்கும் திருப்தி மட்டும்தான், போங்க. தெரியாமத்தான் கேக்கறேன் சரியானபடி மொழி பெயர்க்கும் ஒரு நபர்கூடவா அவுங்களுக்குக் கிடைக்கலை? இந்த அழகில் தட்டச்சுப்பிழை வேற.... 'வருந்துறோம்' !!!!
இதிலும் ராச்சாப்பாடு ஒன்னு ஊருக்கு முன்னாடி வந்துருச்சு. ரொம்பவே சுமார். விக்கல் போண்டா ஒன்னு !
ஒருவழியா இந்திய நேரம் இரவு பத்துமணிக்குச் சென்னையில் இறங்கி, சடங்குகள் முடிச்சு வெளியில் வந்து ப்ரீபெய்ட் டாக்ஸி எடுக்கப்போனால்.... சொல்லிவச்ச மாதிரி அதற்கான கவுன்ட்டர்கள் எல்லாம் காலி. எதோ தகராறு போல. ஜனம் அலைபாயுது. கேட்டால் 'வண்டி இல்லை ஸார்'! பேசாம நம்ம ட்ராவல்ஸ் வண்டியையே வரச்சொல்லி இருக்கலாம். ஜஸ்ட் அறைக்குப்போய்ச் சேர வேண்டியதுதான் என்பதால் வழக்கம் போல மறுநாள் முதல் வண்டியை சீனிவாசனுடன் அனுப்புங்கன்னு சொல்லி வச்சுருந்தோம்.
வெளியே வந்ததும் தனியார் வண்டிகளின் ட்ரைவர்கள் நம்மைச் சூழ்ந்துக்கிட்டாங்க. அதில் ஒரு வண்டியை ஏற்பாடு செஞ்சுக்கிட்டு லோட்டஸ் வந்து சேர்ந்தோம். நம்ம வழக்கமான அறையே நமக்காகக் காத்திருந்தது. என்னமோ வீட்டுக்கு வந்து சேர்ந்தாப்போல ஒரு உணர்வு!
நியூஸி வீட்டை விட்டுக் கிளம்பி சரியா 21 மணி நேரமாகியிருக்கு. நல்லாத் தூங்கி எழுந்து நாளை வேலைகளைப் பார்க்கணும். நம்ம சீனிவாசனை ஒன்பது மணிக்குத்தான் வரச்சொல்லி இருக்கோம். நிதானமா ஊர்சுற்றலை ஆரம்பிக்கலாம்:-)
குட்நைட்.
தொடரும்.........:-)

48 comments:
மகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க. தங்களது பயண ஆரம்பமே அசத்தல். உங்களோடு நாங்களும் வருகிறோம்.
உங்கள் நடை, வழக்கம் போல... ரசித்துப் படித்தேன். ;-) டின்னரைத் தமிழில் போட்டவர்கள் எதற்காம் ரொட்டிகளை மற்றும் பரவினார்கள்! நீங்க தனியா உட்கார்ந்து சிரிக்க, இங்கு பகிர்ந்துகொள்ள உதவும் என்று நினைச்சிருப்பாங்களோ!! :-)
இங்க ஐங்கரன்ல ஒருநாள் கொஞ்ச நேரம் உலாவக் கிடைத்தது. சீடீகளில் இருந்த தமிழ்... தமிழ் எழுத்துகளே அல்ல. எப்பிடித்தான் ஃபாண்ட் தேடிப் பிடிச்சு டைப் பண்றாங்களோ!
மீட் செய்யலாம்னு நினைச்சேன். பயண ப்ளான் தெரியலை.
ரெடியாகிவிட்டோம்
முன்பு பயணக்கட்டுரைகளில் நான்
மணியன் இரசிகன்
இப்போது தங்கள் இரசிகன்
படங்களுடன் பதிவு அற்புதம்
தொடர்கிறோம்
பயணம் இனிதே தொடர் நல்வாழ்த்துக்கள்
நான் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த தொடர். படங்களோடு பயணக் கட்டுரைகளை வலைப்பதிவில் எழுதுவதை உங்களிடமிருந்து கற்றுக் கொண்டவன் நான். வழக்கம்போல பதிவினில் உங்கள் எல்லாப் படங்களும் மிகவும் நேர்த்தி.
எனக்கு வெளிநாடுகள் செல்லும் வாய்ப்பு அமையவில்லை. இனிமேலும் இல்லை. உங்கள் சுவாரஸ்யமான தொடர் மூலம் பலநாடுகள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி. தொடர்கின்றேன்.
விக்கல் போண்டா ஹா ஹா.
Missed you in lotus. Probably next time
படங்களாலேயே தாக்குகிறீர்கள்.
உங்களின் வழியாக நாங்கள் உலகை காண்கிறோம் ...
எல்லாமே அசைவம், எனக்கு வேணாம்! :)
தங்கள் வலைப்பூவின் வாசிப்பாளன் முதன் முறையாக பின்னூட்டம் இடுகிறேன்.
தினமும் வலைப்பூவின் வாசல் வந்தால் 'இன்று போய் நாளை வா' கதையாக, பொங்கல் விடுமுறை நீடிக்கப் பட்டுள்ளதாகவே செய்தி.
பயணக் கட்டுரைகளின் ரசிகன் நான் (முக்கியமாக உங்கள் நடையில்). தொடர்கிறேன்.
உங்கள் பதிவுகளைப் படிப்பதைவிடப் படங்களைப் பார்ப்பதே சுகம் வாழ்த்துக்கள்
ஹப்பா ஆரம்பிச்சாச்சு.வெல்கம் ஹோம் துளசி.புதுசு புதுசா அழகான படங்கள்.
ரஜ்ஜு பைபை சொல்ற படம் இல்லையே. எவிஎம் மீல்ஸ் பார்க்கும் போதே அலுப்பு தட்டுகிறது.
பயணம் இனிமையாகத் தொடர வாழ்த்துகள்.
படங்கள் எல்லாமே அழகு அக்கா !,
பூட்டுங்களை சாங்கி ஏற்போர்டிலும் மாட்டிவச்சாச்சா..நான் பிரான்சில் பார்த்திருக்கேன் ..
அது சப்பாத்தியா அவ்வவ் tortilla wraps மாதிரி இருக்கு பார்க்கிறதுக்கு .எனக்கும் ப்ளைட் உணவுக்கும் ரொம்ப தூரம் ! எப்பவும் பிரச்சினை என்னை தேடி வரும் ! நமக்கெல்லாம் நேந்திரம் சிப்ஸ் ஒரு பாக்கெட் போதும் இல்லைன்னா 4 மேரி பிஸ்கட் கொஞ்சம் சீஸ் .
காலிகட் சத்தம் :) ஹா ஹா உண்மைதான் பிள்ளைங்களும் பாவம் மேலே ப்ளைட் போகப்போக காது வலிக்கும் ..அந்த வலிக்கு அங்கே நமக்கும் ரணமாகும் காது ..
எனக்கு இருக்கிற தமிழும் மறந்திடும் போலிருக்கே !!அதென்னா ஐஸ்க்ரீம் ..அதை உறைபனிகூழ்னு போட்டிருக்கணும் :)
இரவு உணவுக்கு ..இராபோஜனமா // திருவிருந்தா கொடுக்கறாங்க ?
தொடர்கிறேன் ..அப்புறம் அந்த ரெட் சல்வார் வித் நேவி ப்ளூ பார்டர் ஷால் என்கிட்டயும் இருக்கே ..கலர் காம்போ சூப்பர்
ஆஹா... இம்முறை சீக்கிரமாவே ஆரம்பிச்சுட்டீங்க போல! :)
படங்கள் அசத்தல்....
முழி பெயர்த்துருக்காங்களே!
தொடர்கிறேன்.
மனிலா பெயரைப் படத்தில் பார்த்து, இரண்டு நாள் முன்பாக அங்கிருந்து வந்தது நினைவுக்கு வந்தது. நீங்கள் அதுக்கும் தள்ளியிருந்து வருகிறீர்கள். விமானத்தில் கொடுக்கும் உணவுக்குப் பதிலாக, நமக்கெல்லாம் (AVML) புளியஞ்சாதமும், மிளகாய்ப்பொடி இட்லியும்தான் சரி.
அம்மா அருமை ....தொடர்க....
தொடர்கிறேன் அம்மா...
சற்று நேரம் வாசிக்காமல் என்ன போட்டிருக்காங்கனு பாத்துட்டு மட்டும் வரலாம்னு வந்தேன் .முழுதும் படிச்சுட்டு பின்னூட்டமும் அனுப்பிட்டு தான் நகர்ந்தேன். ஆவலோடு பயணிக்க காத்திருக்கேன். தனி மடல் அனுப்பி உள்ளேன் பதிலளிக்கவும்.
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
துளசிதளமும் ஜனவரி 16 முதல் நேற்றுவரை ஃபிப்ரவரி 28 வரை விடுமுறையில்தான் இருந்தது. நீங்கள் அப்படி ஒன்னும் முக்கியமான எதையும் விட்டுடலைன்னுதான் நினைக்கிறேன். தொடர்வதற்கு நன்றி.
வாங்க இமா.
தமிழ் தமிழ்ன்னு பெருமை பேசிக்கிட்டு, இப்படித் தமிழின் காலை வாரிவிட்டுடறாங்களேன்னு எரிச்சல்தான் வருதுப்பா.
வாங்க புதுகைத்தென்றல்.
நாங்களும் உங்களை சந்திக்கலாமுன்னுதான் இருந்தோம். ஆனால் கோவில்கள் யாத்திரை முடிஞ்சு திரும்ப சென்னைக்கு வந்தபின் எதிர்பாராத சில நிகழ்ச்சிகளால் நினைச்சது நடக்கலை. அடுத்தமுறையாவது சந்திக்கணும்.
வாங்க ரமணி.
ஆஹா... இப்படி ஒரு ரசிகரா!!!! என்ன தவம் செய்தேன்!
வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க தமிழ் இளங்கோ.
வெளிநாடு செல்ல வாய்ப்பு இனிமேல் இல்லைன்னு சொல்லாதீங்க. நாளை நடப்பதை யார் அறிவார்?
தங்களை மீண்டும் சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
பின் குறிப்பு: உங்க மெயில் ஐ டியை தனிப் பின்னூட்டமா அனுப்புங்க. வெளியிட மாட்டேன். ஆனால்.... உங்களுக்கு ஒரு ஆல்பம் அனுப்புவேன்:-)
வாங்க வடுவூர் குமார்.
விக்கல்.... உண்மைதான் :-)
வாங்க தெய்வா.
அடுத்தமுறை சந்திச்சால் ஆச்சு!
வாங்க ஸ்ரீராம்.
வலி இல்லாத தாக்குதல்தான், இல்லையோ:-)
வாங்க அனுராதா ப்ரேம்.
அப்டீங்கறீங்க? நன்றீஸ்ப்பா.
வாங்க கீதா.
மெனு கார்டில்தான் அசைவம். நம்ம முன்னால் இருக்கும் தட்டுகளைப் பாருங்க. எல்லாம் நான்வெஜ் கலரில் இருக்கும் வெஜ் ஐட்டங்கள்தான். ஹிந்து வெஜிடேரியன் மீல்ஸ்.
வாங்க சுரேஷ்குமார்.
ஆஹா... இப்போதாவது உங்களை வெளிப்படுத்துனது மகிழ்ச்சி. பயணக்கட்டுரை ரசிகர் என்றால் நம்ம துளசிதளத்தில் நிறையவே இருக்கு. நிதானமா நேரம் கிடைக்கும்போது வாசிங்க. அப்பப்ப ஒரு சொல் சொல்லுங்க.
வாங்க ஜி எம் பி ஐயா.
வணக்கம். நலமா? 'படம் பார்த்துக் கதை சொல்' வகை நல்லா இருக்குதானே:-) வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க வல்லி.
ரஜ்ஜு ஒன்னும் சொல்லாம அவன் அறைக்குள் போயிருச்சு. கோவமா இருந்துருக்கும் போல :-(
ஏர்லைன்ஸ் சாப்பாட்டின் தரம் இப்பெல்லாம் ரொம்பவே மோசம்:-( சாலட் கூட சுமார் ரகமே.
வாங்க ஏஞ்சலீன்.
அந்தப் பூட்டு... நெசமா வைக்கலை. ச்சும்மா ஒரு போஸ்டர்தான்:-)
அடுத்த முறை தனிப்பட்ட முறையில் ஒரு பாக்கெட் பிஸ்கெட் தூக்கிட்டுப் போகப்போறேன். போதும் போதுமுன்னு ஆகிருச்சு.
எல்லாத்தையும் விட எரிச்சலான விஷயமுன்னா.... சாப்பாடு ட்ரேயைத் திருப்பி எடுக்கவே ஒரு மணி ஒன்னரை மணி நேரம் எடுத்துக்கறதுதான். நாம் அசைய முடியாம கிடப்போம். கட்டாமல் கட்டி வைப்பது ..... ஐயோ.
வாங்க வெங்கட் நாகராஜ்.
ஒரு பத்துநாள் கழிச்சுதான் ஆரம்பிச்சு இருக்கேன். தனிமடல்களில் ஏன் இன்னும் எழுத ஆரம்பிக்கலைன்னு ' மிரட்டல்கள்' வந்தது உண்மை:-)
வாங்க நெல்லைத்தமிழன்.
மணிலாவா? ஆஹா.... பேசாம அவிச்ச மணிலாக்கொட்டை கொடுத்துருந்தாக்கூட நல்லா இருக்கும். குறைஞ்சபட்சம் வேகவச்ச காய்கறிகள் கூட பரவாயில்லை. கறிகள் என்ற பெயரில் கொடுமைதான் போங்க:-(
வாங்க செந்தில் குமார்.
வருகைக்கு நன்றி.
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
தொடர்வது மகிழ்ச்சி.
வாங்க சசிகலா.
எட்டிப் பார்க்க வந்தவங்களைக் கட்டிப் போட்டாச் :-)
தனிமடலுக்கு பதில் அனுப்பி இருக்கேன், பாருங்க.
Hae thulasi madam back. Daily unga blog thorandhu paapen. Yemaatrama irukkum.
Ini yemaatram irukaadhu.. Ungaloda sendhu oor suthalaam. Jolly
ஒவ்வொரு படமும் ஒரு துணுக்குச் செய்திக்கான சமாச்சாரமாக உள்ளது. குறிப்பாக தமிழ் மொழிக்கொலை.
இந்தத் தங்களில் ஆரம்பப் பயணக்கட்டுரையை இன்று இப்போதுதான் என்னால் அதுவும் அகஸ்மாத்தாக பார்க்க முடிந்தது.
தங்களின் இந்த வலைத்தளத்தில் Follower ஆக Provision இல்லாமல் உள்ளது. அதனால் என் Dash Board இல் இந்தப்பதிவு காட்சியளிக்கவில்லை.
நல்லபடியாக ஊர் போய்ச்சேர்ந்தது அறிய மகிழ்ச்சி. படங்களும் பதிவும் சுவாரஸ்யமாக உள்ளன.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தங்கள் இருவரையும் (07.02.2016 அன்று) நேரில் சந்தித்ததில் எனக்கு சந்தோஷம். தாங்கள் உள்ளே நுழைந்ததும் முதன் முதலாக தங்கள் கண்களில்பட்ட என்னை, முதன் முதலாக மட்டுமே நேரில் பார்த்தும்கூட, என்னை பெயர்சொல்லி மிகச்சரியாக அடையாளம் காட்டியது எனக்கு மிகவும் வியப்பளித்தது.
அதுதவிர நான் எப்போதோ 2011 இல் வெளியிட்டிருந்த ’ஏழைப்பிள்ளையார்’ என்ற பதிவினை நினைவு கூர்ந்து தங்கள் கணவரிடம் சொன்னது மேலும் ஆச்சர்யமாக இருந்தது.
பயணக்கட்டுரை மேலும் விரிவாகத் தொடரட்டும். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வாங்க சிவா.
இவ்வளவு ஆர்வமா துளசிதளம் வாசிக்கத் தயாரா இருக்கீங்க!!!!
மெத்த மகிழ்ச்சி. வாங்க ஊர் சுத்தலாம்:-)
வாங்க ஜோதிஜி.
கதை சொல்லும் படங்களா!!!!
நன்றீஸ்.
வாங்க வை கோ ஐயா.
உங்களைத் தெரியாதவர்கள் வலை உலகில் இருக்காங்களா என்ன?
திருச்சின்னதும் உங்க வீட்டு ஜன்னலில் இருந்து மலைக்கோட்டை தெரியும் என்ற விவரம் டான் னு நினைவுக்கு வந்துருதே! அதுவும் மலைக்கோட்டையைச் சுத்தி இருக்கும் பிள்ளையார்கள் பற்றிய விவரங்கள் மறக்கக் கூடியதா என்ன?
எப்போ வந்தாலும் எனக்கு அந்த மாணிக்க விநாயகர்தான் காட்சி கொடுக்கறார்.பன்னிருவருக்கும் இவரே அத்தாரிட்டி போல:-)
உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைச்சது எனக்கும் மகிழ்ச்சியே!
உங்க இமெயில் ஐடியை இங்கே தனிப்பின்னூட்டமாத் தெரிவித்தால் நல்லது. அன்றையப் படங்களின் ஆல்பத்தின் சுட்டியை அனுப்ப வசதியாக இருக்கும். பின்னூட்டம் வெளியிடமாட்டேன்.
துளசி கோபால் said...
//வாங்க வை கோ ஐயா.//
வணக்கம் மேடம்.
//உங்களைத் தெரியாதவர்கள் வலை உலகில் இருக்காங்களா என்ன?//
என்னைத் தெரியாதவர்கள் எவ்வளவோ பேர்கள் இருக்கலாம் மேடம். மொத்தம் 3000 பதிவர்கள் இருப்பார்கள் என வைத்துக்கொண்டால், ஒரு 300 பேருக்கு மட்டுமே (10% only) ஒருவேளை என்னைத் தெரிந்திருக்கலாம். அதிலும் ஒரு 30 பேர்கள் மட்டுமே (Just 1% only) தொடர்ச்சியாக என் பதிவுகளுக்குப் பின்னூட்டமிட வருகிறார்கள் என்பதே உண்மை.
//திருச்சின்னதும் உங்க வீட்டு ஜன்னலில் இருந்து மலைக்கோட்டை தெரியும் என்ற விவரம் டான் னு நினைவுக்கு வந்துருதே! அதுவும் மலைக்கோட்டையைச் சுத்தி இருக்கும் பிள்ளையார்கள் பற்றிய விவரங்கள் மறக்கக் கூடியதா என்ன?//
மிகவும் சந்தோஷம். திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்றுகொண்டு தங்கள் கணவருடன் திருச்சி மலைக்கோட்டையை ரஸித்தபடி சற்று நேரம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தேன். தாங்கள் இங்கு திருச்சிக்கு வருகை தந்த சமயம் என் வீட்டில் சமய சந்தர்ப்பங்கள் சரியாக இல்லை. (அப்போது, வீட்டிலுள்ள அனைவருக்குமே உடல்நலம் சரியில்லாமல் இருந்தது) அதனால் தங்களையும் தங்கள் கணவரையும் என் வீட்டுக்கு வருகை தருமாறு என்னால் அழைக்க இயலவில்லை. Otherwise நான் என்னுடைய வீட்டு விலாசம் + ஃபோன் நம்பர் முதலியவற்றை அவரிடம் அப்போதே எழுதிக்கொடுத்து என் வீட்டுக்கு வருகை தருமாறு தங்களைக் கட்டாயம் அழைத்திருப்பேன். மேலும் தங்களின் Further Tour Programs என்னவோ ஏதோ என நினைத்தும் நான் கொஞ்சம் தயங்கினேன்.
//எப்போ வந்தாலும் எனக்கு அந்த மாணிக்க விநாயகர்தான் காட்சி கொடுக்கறார். பன்னிருவருக்கும் இவரே அத்தாரிட்டி போல:-)//
வெளியூரிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வருவோர் அவரை தரிஸித்தாலே போதும். ஒவ்வொரு பிள்ளையாராகப்போய்ப் பார்க்க பொறுமையோ, நேர அவகாசமோ, தேக செளகர்யங்களோ இடம் கொடுக்காதுதான். மேலும் நம் வாகனங்களை ஆங்காங்கே பார்க் செய்யவும் இடமில்லாமல் இப்போதெல்லாம் மிகவும் ட்ராஃபிக் ஜாம் ஆகி விடுகின்றன. பெரும்பாலும் இந்த நெருக்கடியான பகுதிகளில் நாம் நடந்தேதான் செல்ல வேண்டியுள்ளது.
//உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைச்சது எனக்கும் மகிழ்ச்சியே!//
எனக்கும் மகிழ்ச்சியே. நான் நேரில் சந்திக்க வாய்ப்புக் கிடைத்த 40வது பதிவர் தாங்கள். நான் சந்தித்துள்ள மற்ற 39 பேர்களைப்பற்றியும் ஏற்கனவே என் பதிவினில் வரிசையாக தொடராக எழுதியுள்ளேன். இதோ முதல் பகுதிக்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html
>>>>>
ஆஹா! ரொம்ப நாளாச்சு உங்க வீட்டாண்ட வந்து. இதோ வந்துட்டோம்...அடுத்த பயனக் குறிப்பு அதுவும் பாரத மாதாஜிக்கி ஜே நு வந்துட்டீங்க...
படங்கள் வழக்கம் போல செம போங்க. சாங்கி அழகு! விக்கல் போண்டா ஹஹஹஹ் நல்ல பெயர்..அத்தனை ட்ரையா இருந்துச்சா...தமிழாக்கம்..சிங்கப்பூர்ல தமிழ் தேசிய மொழிகளில் ஒன்று நு சொல்லுவாங்களே. ஸ்கூல்ல கூட பாடம் உண்டே அங்க நிறைய இலக்கியவாதிகள் கூட உண்டே...அப்படியும் இப்படியா...ஹும்...
சரி அடுத்த முறை வரும் போது சொல்லுங்க சந்திக்கலாமேன்னுதான்...
ஜாலியா தொடர்கின்றோம்.
வாங்க வை கோ ஐயா.
நாற்பது லக்கி நம்பர்னு நினைக்கிறேன்:-)
மற்ற முப்பத்தியொன்பது பதிவர்களைப் போய் இனிமேல்தான் வாசிக்கணும்.
வாங்க துளசிதரன்.
தொடர்வது மகிழ்ச்சி. நன்றீஸ்.
Post a Comment