Thursday, February 04, 2010

ருக்கு ருக்கு ருக்கு அரே பாபா ருக்கு (குஜராத் பயணத்தொடர் 15)

பஞ்ச் த்வார்க்காவில் நாலு பார்த்தாச்சு. இன்னும் ஒன்னு பாக்கி. அது ருக்மணி கோவில். ஒஹா துறைமுகத்திலிருந்து த்வார்க்கா போகும் வழியில் இருக்கும் தனிக்கோவில். புருசனை விட்டுட்டுத் தனியாகப் பனிரெண்டு வருசம் தவம் இருக்கும்படி ஆச்சாம். காரணம்? துர்வாச முனிவரின் சாபம்.

ஊன்னா ஆன்னா சாபம் கொடுப்பதே இந்த முனிவர்களுக்கு வேலையாப் போச்சு. காரணம் ரொம்ப நிசாரம்.. துர்வாசரை தங்கள் மளிகைக்கு விருந்துக்கு வரச்சொல்லி அழைச்சாங்களாம் க்ருஷ்ணன் தம்பதியர். வரேன், இல்லை வரலைன்னு ஏதாவது சொல்லி இருக்கலாமுல்லே? கண்டிஷன் ஒன்னு போட்டு, அப்படிச் செஞ்சால் வரேன்னாராம். எப்படி?

தன்னை ஒரு வண்டியில் (சரி அப்ப இதுக்குப் பெயர் தேர்) உக்காரவச்சு, குதிரைக்குப் பதிலா நீங்க ரெண்டு பேருமா இழுத்துக்கிட்டுப் போனால் வரேன்னார். த்வாரகைக்கே அரசன், அவன் பட்ட மகிஷி ருக்குவுடன் நிபந்தனைக்கு ஒத்துக்கிட்டு இழுத்துக்கிட்டு அரண்மனைக்குப் போறான். நடுவழியில் ருக்குவுக்கு தண்ணி தவிக்குது. புருஷனிடம் சொல்றாள். தன்னுடைய சக்தியால் கங்கையை வரவழைச்சு ஒரு டம்ளர் தண்ணி மனைவிக்குக் கொடுத்தார் க்ருஷ்ணர். தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடுத்தால் தப்பா? சொல்லுங்க இது ஒரு தப்பாங்கறேன்?

தண்ணி குடிக்க ஒரு நிமிசம் தேரை நிறுத்தி இருப்பாங்க போல! தன்னை மதிக்கலைன்னு துர்வாசருக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருது. உடனே சபிச்சுட்டார். உங்கூர்லே தண்ணியே கிடைக்காமப் போகட்டும். அடப்பாவமே..........பரிகாரம் சொல்லுங்கோன்னு கெஞ்சுனதும் 'நீ புருசனைவிட்டுப் பனிரெண்டு வருசம் தனியா இருந்து தவம் செஞ்சால் சாப விமோசனம் கிடைக்கும்'

உலகையே காப்பவனுக்குப் பெண்டாட்டியா இருந்தாலும் ரிஷியின் சாபத்துலே இருந்து தப்ப முடியலை பாருங்க.

ரெண்டு த்வார்க்காவிலும் ருக்மணிக்குச் சந்நிதி இல்லாத காரணம் இதுதான்.
ஊரைவிட்டு ஒன்னேகால் மைல் தள்ளி ஒரு இடத்துலே தவம் செய்யறாங்க. அங்கே இருக்கும் கோவில்தான் இது. வளாகத்துக்குள்ளே இடம் நிறைய இருக்கு. எல்லாம் திறந்தவெளி. கடலோரம்தான். பார்க்கிங் செஞ்சுக்க விடலாம். போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாம இருக்கும். ஆனால் (பாதுகாப்பைக் கருதி) தெருவில்தான் வண்டி நிறுத்தணும். கோவில் மதில் சுவரையொட்டியே ரோடின் ரெண்டுபக்கமும் டூரிஸ்ட் பஸ்கள் ஏராளமா நிக்குது.
வளாகத்தில் ஹோமகுண்டம் ஒன்னு இருக்கு. அதுக்கு முன்னால் வரிசையா ஒரு கூட்டம். கோவில் படியேறிப்போனால் கருவறை தொடங்கி முன்மண்டபம் முடிய நெருக்கித்தள்ளி நிக்கும் பக்தர்கள். கோவில் கதையை மைக் மூலம் சொல்லுவது காதில் விழுது. முன்மண்டபத்தின் இடது மூலையில் சின்னதா ஒரு சந்நிதி. எட்டிப்பார்த்தால் ஹனுமன். இங்கே என்ன பண்ணறார்? தவம் இருக்கும் ருக்குமணிக்குக் காவல்.
கதையைக் காதால் கேட்டுக்கிட்டே வெளியே கோவிலைச் சுற்றிவந்தோம். மணற்கற்களால் கட்டிய கோவிலின் எல்லாப் பக்கங்களிலும் அற்புதமான செதுக்குச்சிற்பங்கள்.கமலபீடமும், யானைகள் வரிசையும் மானிடர் வரிசைகளுமா.... இவைகளுக்கு மேல் வரிசைகளில் தெய்வச்சிற்பங்கள். அன்னியர் படையெடுப்பால் உடைந்ததும் காலப்போக்கால் அழிந்ததும் போக மீதி இருப்பவைகள். படம் எடுத்துக்கொண்டே சுற்றிப் பார்த்து முன்பக்கம் வந்தால்..... படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதுன்னு ஒரு அறிவிப்பு.
அறியாமல் செய்த பிழையை அந்த அரி மன்னிக்கணும்.
பிரசங்கம் முடிஞ்சு தரிசனம் தொடங்கி இருக்கு. முன்மண்டபத்துக்கு ஏறவே ஒரு ஏழெட்டுப்படின்னா, இங்கிருந்து இன்னும் பத்துப் படிகள். கூட்டம் ஓயட்டுமுன்னு நிக்க முடியாது. நாமும் கூடவே போய்ப்பார்த்துடலாமுன்னு வரிசையில் நின்னோம். மெள்ள நகர்ந்து போய் ருக்மணிகிட்டே போயாச்சு. இன்னும் ரெண்டுபேர் நமக்கு முன்னால்.

புதிதாக வந்த கூட்டமுன்னு நினைச்சு, ' எல்லோரும் பத்து நிமிசம் அப்படியே உக்காருங்கோ. ருக்குவின் கதையைக் கேளுங்கோ'ன்னு பண்டிட் ஆரம்பிக்கறதுக்கும், எங்களை முட்டிமோதி திமுதிமுன்னு ஒரு கூட்டம்
அந்தச் சின்ன இடத்தில் பாயவும் சரியா இருக்கு. எல்லாம் நமக்குப் பின்னால் வரிசையில் வந்தவங்க. வரிசையைக் காணோம்! சட்னு அந்த வட்ட மண்டபத்தின் சுவத்தையொட்டி ஒரு ஓரமா நாங்க நகர்ந்துட்டோம்.
பண்டிட்டின் கண்களில் மகிழ்ச்சி. கதைகேட்கக் கூட்டம் கூடுச்சுன்னு. 'உக்காருங்க அப்படியப்படியே உக்காருங்க, முன்னொரு காலத்துலே.... கிருஷ்ணன் த்வார்காவை......'

நிமிஷமா வந்த கூட்டம் நிமிஷமா மறைஞ்சதுதான் அதிசயத்திலும் அதிசயம். 'சீக்கிரம் ஆகட்டும் பஸ் கிளம்பப்போகுது'ன்னு யாரோ சவுண்ட் வுட்டுருக்காங்க.

'அட! யாருக்கும் பத்து நிமிசம் நின்னு சாமி கதை கேக்க நேரமில்லை'ன்னு சொல்லிக்கிட்டே பல்லிகளாட்டம் சுவரோடு ஒட்டியிருந்த எங்களைப் பார்த்தார். மெள்ளவந்து ருக்மணி முன்னால் நின்னோம். போகட்டும் ரெண்டு பேருன்னா ரெண்டு பேர்னு மைக்ரோ ஃபோனை கவுண்ட்டரில் வச்சுட்டு, 'இந்த ருக்மணி தேவி.....'

'தெரியும். 12 வருசம் தவமிருந்த இடம். துர்வாசர் சாபம். தாகம் குடி நீர்' னு தந்தி மொழியில் சொன்னேன். அவர் கண்களில் கனிவு. 'எந்த ஊர்? தமிழ்நாடு.' இவுங்கெல்லாம் மனித உளவியலை ரொம்ப நல்லாப் புரிஞ்சுவச்சுருக்காங்க. அனுபவப்பாடம்தான். எத்தனை மக்களை தினமும் பார்க்கறாங்க!!!

இங்கே குடிதண்ணீர் ஒரு பிரசாதம். அனுமன் சந்நிதிக்குப் பக்கத்திலே தண்ணீர் இருக்கு. இங்கே சாமி கும்பிட்டு முடிச்சதும் அங்கே போய் குடிச்சுட்டுபோகணும். தண்ணீர் கைங்கர்யத்துக்குக் கொஞ்சம் தானம் செய்யுங்க. உங்க பிள்ளைகளுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

(அச்சோ.....குறி பார்த்து அடிச்சுட்டார்! உளவியல்!)

'டக்'ன்னு ஒரு தொகையை எடுத்து நீட்டுனார் கோபால். 'கொஞ்சம் இருங்க. ரசீது தரேன்.'

'ஆமாம். இங்கே மட்டுமே நல்ல தண்ணீர் கிடைக்குதுன்னு ஒருத்தர் சொன்னாங்க. கிணறு இருக்குதானே?' இது நான்'

"கிணறா? அதெல்லாம் இல்லைம்மா. காசு கொடுத்துத் தண்ணி வாங்கறோம். தினம் டேங்கர்லே கொண்டுவந்து கொடுக்கறாங்க. அதுக்கு இப்பெல்லாம் செலவு கூடிப்போச்சு. நீங்க ஒரு டேங்கர் லாரி தண்ணிக்கான செலவு 1500 கொடுத்துட்டீங்கன்னா, ஏகாதசி, அமாவாசை, இல்லைன்னா நீங்க சொல்லும் எதாவது விசேஷ தினத்தில் காலை முதல் பகல் ரெண்டு வரை வரும் பக்தர்களுக்கெல்லாம் உங்க பெயரில் குடிதண்ணீர் விநியோகம் செய்வோம்."

சுத்துவட்டாரம் 20 கிலோ மீட்டருக்கு இங்கே மட்டுமே நல்ல தண்ணீர் கிடைக்குமுன்னு கீதாவின் ஆன்மீகப் பதிவுலே படிச்சதும், க்ருஷ்ணன் அருளால் கிணறு ஒன்னு தோன்றி அதிலிருந்து குடிநீர் வருதுன்னு நாந்தான் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு இருக்கேன். ஒரு கிளாஸ் தண்ணி வரவழைச்சதுக்கே பெண்டாட்டிக்கு 12 வருச தண்டனை. கிணறே வரவழைச்சுட்டாலும்.........க்க்கும்

இன்னொரு சமயம் பார்க்கலாமுன்னு கோபால் தயங்குனதும், 'பரவாயில்லை அடுத்த முறை செய்யுங்கோ'ன்னு ஒரு மஞ்சள் துண்டை எடுத்து இவர் கழுத்தில் போட்டு ஆசீர்வதித்தார். ஸ்ரீ ருக்மணி மாதாஜி மந்திர், த்வார்க்கான்னு அதில் அச்சடிச்சு இருந்துச்சு. அது மட்டும் இல்லைன்னா...... 'யாருக்காவது' கொடுத்துருப்பேன்.

வெள்ளையாச் சக்கரைத்தூளை தூவிய கடினமான பூரி மாதிரி ரெண்டை எடுத்து எனக்குப் பிரஸாதமாத் தந்தார். அதை முந்தானையில் வாங்கிக்கணுமாம். துப்பட்டா வேற எதுக்குன்னு வாங்கிக்கிட்டேன். இவ்வளவு பேச்சும் அந்த ருக்குவின் முன் நின்னபடி. தரிசனமோ தரிசனம்தான். இவளும் அழகான வெண்பளிங்குச் சிலை. உசரமும் ரெண்டே காலடிப் புருசனுக்குத் தகுந்தமாதிரி ரெண்டே அடி!

படி இறங்கும்போது மறக்காம தண்ணீர் வாங்கிக் குடிச்சுட்டுப் போங்கோன்னு ஞாபகப்படுத்தினார். தண்ணீர் அறையில் ஒரு தட்டில் ஏழெட்டு பித்தளை டம்ப்ளர்களும், ஒரு ஜக்கில் தண்ணீரும் வச்சுக்கிட்டு ஒருத்தர் உக்கார்ந்துருந்தார். நம்ம பயணம் இன்னும் முடியலை. பாதிதான் ஆகி இருக்கு. ரிஸ்க் எடுக்கணுமான்னு.... கண்ணால் பேசுனோம். ஒரே சமயம் தலைகள் வலமும் இடமும் ஆடியன:-)

வளாகத்தை விட்டு வெளியேறுமுன் கோவிலை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். இளம்பச்சை விளக்கு போட்டுருக்காங்க. அந்த அந்தி இருட்டில் கோவில் கோபுரம் சோகமா.... ..........என்னதான் கதை, புராணம் என்றாலும் அந்த அத்துவானக் காட்டிலே குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத இடத்தில் தனிமையில் ஒரு பெண் தவமிருந்ததை நினைச்சால்.............. நெஞ்சு கலங்கிருச்சு.


கொசுறுத் தகவல்: கிருஷ்ணன் எட்டு மனைவியருடன் த்வார்காவை ஆட்சி செய்தானாம்!

பயணம் தொடரும்..............:-)))))

56 comments:

  1. எல்லாக்காலங்களிலும் தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுப்பதுதான் பிரச்சினை போலிருக்கு. அது கங்கையோ.. காவிரியோ :-)).

    ReplyDelete
  2. //வளாகத்தை விட்டு வெளியேறுமுன் கோவிலை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். இளம்பச்சை விளக்கு போட்டுருக்காங்க. அந்த அந்தி இருட்டில் கோவில் கோபுரம் சோகமா.... ..........என்னதான் கதை, புராணம் என்றாலும் அந்த அத்துவானக் காட்டிலே குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத இடத்தில் தனிமையில் ஒரு பெண் தவமிருந்ததை நினைச்சால்.............. நெஞ்சு கலங்கிருச்சு.//

    :)

    12 ஆண்டு கிருஷ்ணனுக்கு கொண்டாட்டம் அதைப் பற்றி மூச்சு விட மாட்டேன்கிறிங்களே !

    :)))))))))

    ReplyDelete
  3. வாங்க அமைதிச்சாரல்.

    பாய்ண்டை 'கப்'னு புடிச்சுட்டீங்க!!!

    ReplyDelete
  4. வாங்க கோவியார்.

    அதெல்லாம் மூச்சு விட்டாச்சு. அந்தக் கொசுறுத் தகவலைப் பார்க்கலையா?

    ReplyDelete
  5. பஞ்ச துவாரகை என்பது நீங்க குறிப்பிடுவது அல்ல துளசி, எழுதணும்னு நினைச்சு மறந்து மறந்து போகுது.

    மூல துவாரகை, இப்போ கிருஷ்ணரை நீங்க பார்த்தது

    பேட் துவாரகை, கடலுக்கு நடுவே
    கோமதி துவாரகை, \\
    டகோர் துவாரகை= பரோடாவுக்கருகே உள்ளது, இங்கே தான் ஒரு பக்தனுக்காக மூல துவாரகையில் உள்ள ஒரிஜினல் கிருஷ்ணர் இருக்கிறார் என்பது ஐதீகம்.

    நாத துவாரகை, ராஜஸ்தானில் உள்ளது.

    ReplyDelete
  6. சிலர் காங்க்ரோலி/ ராஜஸ்தானில் உள்ள கிருஷ்ணரைத் தான் பஞ்ச துவாரகையில் ஒன்றாகச் சொல்லுவதுண்டு. கோமதி துவாரகையும் இதுதான் என்பவரும் உண்டு. நீங்க குறிப்பிடுவது பஞ்ச துவாரகையில் வருதானு தெரியலை, எனக்குத் தெரிஞ்சவரையில் அவை பஞ்ச துவாரகைகள் அல்ல.

    ReplyDelete
  7. வாங்க கீதா.

    அச்சச்சோ.....

    த்வார்க்கா, பெட் த்வார்க்கா, கோபிதலாப், நாகேஷ்வர், ருக்மிணி இது அஞ்சையும் பார்த்தால்தான் த்வார்கா விஸிட் பூர்த்தியாகும்னு பண்டிட் சொன்னதை நாந்தான் தப்பாப் புரிஞ்சுக்கிட்டேன் போல இருக்கு:(

    விளக்கத்துக்கு நன்றிப்பா.

    டீச்சரே கப்ஸா விட்டமாதிரி ஆகிருச்சே!!!!

    ReplyDelete
  8. அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர்.
    பதிவு அப்பறம் படிச்சுக்கறேன்.

    ReplyDelete
  9. அரே பாபா ருக்கு ! அவ பாவம் ருக்கு.. :(

    கோவி கண்ணன் அந்த கண்ணனுக்கு சப்போர்ட்டுக்கில்ல வரார்..

    கொசுறுதகவல் இருந்ததோ சரியா போச்சு..

    ReplyDelete
  10. "இவளும் அழகான வெண்பளிங்குச் சிலை. உசரமும் ரெண்டே காலடிப் புருசனுக்குத் தகுந்தமாதிரி ரெண்டே அடி!"
    புருசனை விட்டுட்டுத் தனியாகப் பனிரெண்டு வருசம் தவம் இருந்தும் உசரம் கூடலையா :))

    ReplyDelete
  11. ருக்கு கதை சோகம்,கடவுளின் மனைவியாக இருந்தாலும் கஷ்ட பட வேண்டி உள்ளது.


    உங்களுக்கு,இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்!!

    ReplyDelete
  12. ம்ம்...சாபம் அப்புறம் அதுக்கு ஒரு வழி என்ன கொடுமை டா சாமீ ;))

    மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர் ;))

    ReplyDelete
  13. //த்வார்க்கா, பெட் த்வார்க்கா, கோபிதலாப், நாகேஷ்வர், ருக்மிணி இது அஞ்சையும் பார்த்தால்தான் த்வார்கா விஸிட் பூர்த்தியாகும்னு பண்டிட் சொன்னதை நாந்தான் தப்பாப் புரிஞ்சுக்கிட்டேன் போல இருக்கு:(//

    உண்மைதான், தப்பாய்த் தான்புரிஞ்சுக்கிட்டீங்க! :))))) மறுபடி உறுதிப்படுத்திக்கிட்டேன், பஞ்ச துவாரகை நான் சொன்னவையே.

    அப்புறமா அந்த பண்டிட் ஜாதி பத்திக் கேட்டதுக்கும் காரணம் இருக்கு.
    பிராமணர்கள் என்பதை இங்கே தமிழ்நாட்டில் தான் ஜாதியாய்ப் பார்க்கிறோம். வட மாநிலத்தில் வர்ணரீதியாகப் பார்ப்பார்கள். அந்த பண்டிட் ஏன் உங்க கிட்டே கேட்டாரென்றால் ஒருவேளை நீங்க அங்கே தர்ப்பணம், பித்ரு காரியம் போன்றவை செய்ய நினைத்தால் வழிமுறைகள் மாறும். பிண்டம் வைப்பது என்பதிலிருந்து பிராமணர்களுக்கு ஒருமுறை(இந்தியா பூராவும் உள்ள பிராமணர்கள் அடங்குவார்கள்) மற்ற வர்ணத்தவருக்குக் கொஞ்சம் மாறும். மந்திரங்களிலும், செய்முறைகளிலும் மாற்றங்கள் உண்டு. அதனாலேயே கேட்கப் படுகின்றது. மற்றபடி நீங்க என்ன ஜாதி எனத் தெரிந்து கொண்டு அவர் என்ன செய்யப் போகிறார்?? இல்லையா????? பொதுவாகவே அரசாங்கம் எல்லாத்திலேயும் ஜாதியைக் கேட்பதைப் பொருட்படுத்தாமல் குறிப்பிடும் நாம இம்மாதிரி தனி நபர் கேட்டால் கொஞ்சம் சங்கடப் படுகிறோமோ?? ஆச்சரியத்துக்கும், ஆய்வுக்கும் உள்ள விஷயமாய்த் தெரியுது இல்லை?? :))))))))))))))))))

    இந்தப் பின்னூட்டம் வெளியிடுவது உங்கள் விருப்பம்போல்! எனக்கு ஆக்ஷேபணை எதுவும் இல்லை! :)))))))))))))

    ReplyDelete
  14. இப்போத் தான் வல்லியோட பதிவிலே பார்த்தேன், இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் துளசி.

    ReplyDelete
  15. கொசுறு தகவலில் கிருஷ்ணனை பழி வாங்கிட்டீங்களே!!

    ReplyDelete
  16. கட்டிய மனைவியை 12 ஆண்டுகள் தவம் செய்ய சொல்லிவிட்டு, எட்டு மனைவியருடன் வாழ்ந்தார். சும்மாவா சொன்னாங்க கிருஷ்டு ரொம்ப பொல்லாதவன்னு. நல்ல பதிவு டீச்சர். ருக்மனியின் கோவிலை நாங்களும் தரிசித்த மாதிரி இருந்தது. நன்றி.

    ReplyDelete
  17. வாங்க சின்ன அம்மிணி.

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    ஆனால் பதிவையும் படிக்கணும்,ஆமா:-)

    ReplyDelete
  18. வாங்க கயலு.

    கண்ணன் இயல்பை கண்ணனன்றி வேறு யாரறிவார்:-)))))

    ReplyDelete
  19. வாங்க மாதேவி.

    இதென்ன புதுசா தகவல்? தலைவனைப் பிரிஞ்சு இருந்தால் தலைவிக்கு பசலை நோய் வந்து உடல்தான் இளைக்கும்.

    உசரமும் கூடுமா?????

    ReplyDelete
  20. வாங்க கோமதி அரசு.

    அதான் விதி. யாரையுமே விடாது!!!

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  21. வாங்க கோபி.

    புலன்களை அடக்கித் தவம் செய்யும் ரிஷி முனிவர்களுக்குக் கோபத்தை அடக்க முடியலை பாருங்களேன்.

    எனக்கு வர்ற கோவத்துக்கு............


    வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  22. கீதா,
    எனக்கும் உங்க பின்னூட்டம் வெளியிட ஒரு பிரச்சனையும் இல்லை.

    தெரியாத விவரங்கள் சொல்லி இருக்கீங்க. தெரிஞ்சுக்கிட்டா எங்களுக்கும் நல்லதுதானே?

    இப்போ இது அந்த பஞ்ச் இல்லை என்றபடியால் இன்னொரு ஒரிஜனல் பஞ்சுக்கும் ஒருமுறை போய்வரணும்.

    பாவம். கோபாலுக்குத்தான் வயித்துலே புளியும் கிலியும்:-)

    ReplyDelete
  23. வாழ்த்துகளுக்கு நன்றி கீதா

    ReplyDelete
  24. வாங்க வல்லி.

    44வது ஹனிமூன் கொண்டாடிட்டு மெதுவா வாங்கப்பா.
    எஞ்சாய் யுவர் டே!!!

    ReplyDelete
  25. வாங்க குமார்.

    பட்டமகிஷி பட்ட கஷ்ட்டங்களைப் பாருங்க!

    ருக்குவின் தாகம் கூட க்ருஷின் சதியோன்னு இருக்கு:-))))

    ReplyDelete
  26. என்ன துளசி முத்தழகன் துவாரகாதீஷ் ஐ பாத்துட்டு வந்தேளா? ருக்மணி, சத்யபாமா ஜாம்பவதின்னு ராணிகள் இருந்தாலும் காதலி ராதிகாவிடம் தான் சாவி யாமே!!பெஹன் சொல்லுவர்கள், ராதிகா ராணி கிட்ட சாவி வாங்கிதான் மற்ற சன்னதி கதவுகள் திறப்பார்கள் என்று. பேட் த்வாரகா அவன் இல்லம் , மூல த்வாரகை அவன அரண்மனைனு என் ஃப்ரெண்ட் சொல்லி கேள்வி.மிஸஸ் சிவம் சொல்லறமாதிரி பரோடா பக்கத்துல தான் ஒரிஜினல் விக்ரஹம் என்று சொல்லுவார்கள். அம்பாஜி, ஸ்ரீநாத்ஜி, சோம்னாத் போனேளா?

    ReplyDelete
  27. வாங்க பித்தனின் வாக்கு.

    அந்த இடம் ஜிலோன்னு இப்பவும் இருக்கு. அதுவும் கோவில் மூடுனபிறகு.....

    பாவம் ருக்கு.

    பொல்லாதவன் அவன்.

    ReplyDelete
  28. வாங்க ஜெயஸ்ரீ.

    இன்னும் ராஜஸ்தான் பக்கம் போகலை.

    பார்க்கலாம், எப்போ வாய்க்குதுன்னு!

    எட்டு நாளைக்கு மேல் ட்ரிப் தாங்கறதில்லை.

    ReplyDelete
  29. துவாரகா விஜயம் அமர்களமாகப் போகிறது. நேரில் போகாமலே புண்ணியம் தேடிக்கொள்பவர்கள் நாங்கள் தான் !!

    நாளை பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் நலத்திற்கும் வளத்திற்கும் வாழ்த்துகள் !!

    ReplyDelete
  30. கடைசி போட்டோ நல்லா இருக்குங்க. இவ்வளவு பச்சையா போட்டோ எடுப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல்லை.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  31. ஹாப்பி பர்த்டே டீச்சர்..!
    பயணக் கட்டுரை அருமை...

    ReplyDelete
  32. வாங்க மணியன்.

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    தங்கள் சகோதரிக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)களைச் சொல்லுங்கள்.

    பயணம் படிக்கப் போரடிக்கலைன்னு நம்பிக் கொண்டிருக்கின்றேன்:-)

    ReplyDelete
  33. வாங்க ஜவஹர்.

    நல்லவேளை.... அங்கே நீலக்கலர் போடலை:-))))

    ReplyDelete
  34. வாங்க பத்மஜா.

    வாழ்த்துகளுக்கும் அருமை என்று அருமையாகச் சொன்னதுக்கும் நன்றி.

    ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லைதானே?
    :-)))))))

    ReplyDelete
  35. //இப்போ இது அந்த பஞ்ச் இல்லை என்றபடியால் இன்னொரு ஒரிஜனல் பஞ்சுக்கும் ஒருமுறை போய்வரணும்.

    பாவம். கோபாலுக்குத்தான் வயித்துலே புளியும் கிலியும்:-)//

    ம.ம. வுக்குப் புரியலையே???

    ReplyDelete
  36. துளசி, ருக்மணி கதைக்குப் பின்னால் எத்தனை கதையோ. 12 வருஷமா!!!
    ரொம்பப் பாவம். அவள் என்னதான் மஹாலக்ஷ்மியா இருந்தாலும்
    பொறுமைக்கும் எல்லை இல்லையா. சொன்ன மாதிரி கிருஷ்ணனின் லீலை.
    இல்லை என்றால் இப்படி நடக்கக் காரணமே இல்லை.
    இந்த வருத்தத்தைத் தவிர பதிவும் படங்களும் அற்புதம்பா.
    என்ன ஒரு சிற்பக்கலை. அதிசயம்தான். இப்போ முடியுமா இதெல்லாம்.!

    ReplyDelete
  37. இந்த மாதம் கலைமகளில் உங்களைப்பத்தி வந்தி ருக்கு, தெரியுமா?!

    ReplyDelete
  38. Wish you a very very Happy Birthday! The last picture is simply superb.

    ReplyDelete
  39. பேட் துவாரகையில் உங்கள் குலம், கோத்திரம் சொன்னால் உங்கள் மூதாதையர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும், உங்கள் முன்னோர்களில் யாரு, எப்போ, துவாரகை வந்துட்டுப் போனாங்க என்ற தகவலும் கிடைக்கும்!:)))))))))) யாருமே வரலைனா வரலை யாரும், நீங்க வந்ததுதான் பதிவாகும்னு சொல்லிடுவாங்க. இதை எவ்வளவு தூரம் நம்பலாம்னு தெரியலை. ஆனால் மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கிருஷ்ணர் மத்ராவை விட்டு விட்டு துவாரகைக்குக் குடியேற்றம் செய்தபோது வந்த ஜோதிடர்கள் கொண்டு வந்த பழைய ஜோதிடப் புத்தகங்களில்(இப்போ அச்சுப் போட்டு வைச்சிருக்காங்க) நம்ம பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம் சொன்னால் அப்படியே நம் ஜாதகம் வரும். எங்க வீட்டில் அனைவரின் ஜாதகமும் அந்தப் புத்தகத்தில் உள்ள ஜாதகக் குறிப்போடு ஒத்துப் போன அதிசயத்தையும் நேரிலேயே பார்த்திருக்கோம். எங்களுக்குக் காட்டிய அலுவலக நண்பர் குடும்பம் பரம்பரை ஜோதிடம். அவங்க வீட்டிலேயே இந்தப் புத்தகம் ஆயிரம் வருடங்களுக்கு மேலே தொடர்ந்து வருது என்றும் சுவடிகளைப்பார்த்துப் பார்த்துப் பின்னர் அச்சுப் பதிக்க ஆரம்பித்ததும் அச்சில் வந்ததாகவும் அதற்கான குறிப்புகளும் இருப்பதாகவும் சொன்னார்.

    ReplyDelete
  40. டகோர் துவாரகா

    ஹிஹிஹி, ஒரு சின்ன விளம்பரம்

    ReplyDelete
  41. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் துளசி கோபால்.

    ReplyDelete
  42. Many many more happy returns of the Day Ma'm.

    ReplyDelete
  43. இந்தக்கட்டுரையை படிச்சப்போ நானும் இந்த இடங்களுக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு ஃபீலிங்கி. அந்த யானை சிற்பங்கள் அமோகம் போங்க. அப்போவே 3டி சிற்பங்கள் நம்ம மக்கள்ஸ் செதுக்கி இருக்காங்க பாருங்க. ”படங்களை எடுப்பதை தடை செய்த மக்கு பிளாஸ்திரிகள் எதாவது தியேட்டரில் நம்ம ஊர்ப்படங்கள் பார்க்கும்படி நேரட்டும்”-துர்வாசர் ரேஞ்சில் சபிக்கிறேன்.

    ReplyDelete
  44. கீதா,

    புரியலையா!! அச்சச்சோ.....

    செலவு, இன்னொருமுறை என்னைக்கட்டி இழுப்பது. எல்லாத்துக்கும் மேலே லீவு கிடைப்பது ன்னு இருக்கேப்பா.

    மூணு இடம் போகுமுன்னே பார்க்கணுமுன்னேன்.

    த்வாரகை, உடுப்பி, காசி.

    ஒன்னு ஆச்சு இன்னும் ரெண்டைக் காமிச்சுட்டாப் போயிடுவாள்ன்னு கனவெல்லாம் கண்டாரே.......

    இப்போ ..... ?????

    ReplyDelete
  45. வாங்க வல்லி.

    அதான்ப்பா..... எல்லோரையும் ஆட்டிவைப்பவன் அவளையும் விட்டுவைக்கலை(-:

    எப்படியோ பாரபட்சமில்லைன்னு காமிச்சுக்கத்தான்.

    ReplyDelete
  46. வாங்க ஷைலூ.
    நலமா? ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு?

    வந்தி 'ருக்கா'????

    பேஷ் பேஷ். தகவலுக்கு நன்றிப்பா:-)

    ReplyDelete
  47. வாங்க சந்தியா.
    நன்றிப்பா.

    ReplyDelete
  48. கீதா,

    ஜோதிடக்குறிப்பு அதிசயமா இருக்கே!!!!!

    விளம்பரம் இங்கே இலவசம்:-)

    ReplyDelete
  49. வாங்க மாதேவி.

    வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  50. வாங்க அநன்யா.

    புது முகம்? நலமா?
    துளசிதளத்துக்கு நல்வரவு.

    வரும்போதே 'துர்வாசி' ரேஞ்சா? ஹாஹாஹாஹா

    எல்லாப் படமும் எல்லா மொழிகளிலும் சுத்திச்சுத்தி வருதேப்பா.

    பாகப்பிரிவினைகூட அஸ்ரானி , சிவாஜி ரோலில் நடிச்சு குஜராத்தியில் ஒரு முறை பார்த்துருக்கேன்:-)

    ReplyDelete
  51. //ஜோதிடக்குறிப்பு அதிசயமா இருக்கே!!!!!//

    உண்மைதான், எங்க குடும்பத்து நபர்கள் அனைவரின் ஜாதகங்களையும் பரிசோதனை செய்தோம், மேலும் எங்க பெண்ணின் கல்யாணம் எப்படி நடக்கும்னு அந்த அலுவலர்( என் கணவரிடம் வேலை பார்த்தவர்) சொன்னாரோ அதன்படியே நடந்தது! சொல்லப் போனால் அவரிடம் என் கணவர் சவாலே விட்டார். நடக்காது ஐயா, இந்த இடத்தில் இந்த கிரஹம் இப்படி இருக்கிறது. நீங்க தலைகீழா நின்னாலும் நடக்காது என்று அவர் பணிவாகவே சொன்னார். அவர் சொன்னாப்போலத் தான் நடந்தது! இப்படிப் பல அதிசயங்கள் எங்களோடஐந்து வருடத்துக்கும் மேலான குஜராத் வாழ்க்கையிலே நடந்திருக்கு! :)))))))))

    ReplyDelete
  52. @teacher

    Vazhtha vayathu illai vanangukiren. Neenda naal vazha prarthikiren

    ReplyDelete
  53. //சுத்துவட்டாரம் 20 கிலோ மீட்டருக்கு இங்கே மட்டுமே நல்ல தண்ணீர் கிடைக்குமுன்னு கீதாவின் ஆன்மீகப் பதிவுலே படிச்சதும், க்ருஷ்ணன் அருளால் கிணறு ஒன்னு தோன்றி அதிலிருந்து குடிநீர் வருதுன்னு நாந்தான் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு இருக்கேன்.//

    நான் சொன்னது உண்மையே, இந்த விஷயத்தை முதலில் சரியாப் படிக்கலை. ருக்மிணி கோயிலின் பண்டிட் குடி இருக்கும் இடம் அருகே கிணறு ஒன்று உண்டு. அதில் மட்டுமே நல்ல குடிநீர் கிடைத்து வந்தது. இப்போ இல்லைனு நம்பறேன்.

    அப்புறம்

    @எல்கே, கடவுளையே வாழ்த்தும்போது மனிதர்களை வாழ்த்தக்கூடாதா என்ன??? தாராளமாய் உங்களுக்கு வாழ்த்தி வணங்கும் வயதே! வாழ்த்தியே வணங்குங்கள், தப்பே இல்லை! :))))))))))))))))))))))))

    ReplyDelete
  54. வாங்க எல் கே.

    நன்றி & நன்றி

    ReplyDelete
  55. கீதா,

    எண்ணிக்கை உயர்வுக்கான நன்றிகள்:-)))))

    ReplyDelete