Sunday, September 20, 2009

கோபால் வச்சக் கொலுவைப் பார்க்க வாங்க நீங்க!

இந்த வருசம் கொலுப்பெயர்ச்சி ஆகிப்போச்சுங்க. நல்லதா எதையாவது பார்க்கும்போது....எதுக்கும் இருக்கட்டுமுன்னு கொலுவுக்காகச் சேகரிச்சுவச்சுக்கும் பழக்கத்தையொட்டிச் சில சமாச்சாரங்களை வாங்கிவச்சுருந்தேன். நம்ம 'தீம்' என்னவோ எப்பவுமே ஒன்னுதான் என்றாலும் , ஒவ்வொருவருசமும் புதுசா ரெண்டு மூணு வேணும்தானே?

சிங்காரச்சென்னையில் பூம்புகாரில் கொலுப்பொம்மைகள் விற்பனைக்கு வந்ததுமேத் தோழி தொலைபேசி விவரம் சொன்னாங்க. சீக்கிரம் போய் வாங்கிக்கோ. லேட்டாப் போனா நல்லதெல்லாம் வித்துப்போயிருக்கும். மூக்கு முழி சரியில்லாத பொம்மைகள்தான் கிடைக்குமுன்னு பயமுறுத்தி வச்சுருந்தாங்க. நமக்குத்தான் 'கிடைக்கணும் என்பது கிடைக்காமப் போகாது' என்ற கொளுகை இருக்கே:-)

நம்ம கஷ்டகாலம் பாருங்க.... இவர்வேற ஊருலே இருக்கார். தாராளமா வாங்கலாமுன்னா....... விட்டுட்டாலும்...... போய்ச் சேர்ந்தோம். பயங்கரக் கூட்டம். வெவ்வேற மாவட்டங்களின் பொம்மைகளும் வச்சுருக்காங்க.

மண்பொம்மைதான் சம்பிரதாயமா வைக்கணுமுன்னாலும்...நமக்கு அதெல்லாம் ஆகி வர்றதில்லை. கனம் வேற கூடிரும். இதென்ன பிள்ளையாரா வாங்கிட்டுத் தண்ணியிலே கரைச்சுட்டுப் போறதுக்கு? (இன்னும் நம்வீட்டுலே புள்ளையாரைக் கரைக்கலை. சுத்தமானக் கடற்கரையைத் தேடிக்கிட்டு இருக்கேன்)

திரும்பிப்போகும்போது கூடவே கொண்டு போகணும். உடையாத பொம்மையா வேணும். கனமாவும் இருக்ககூடாது. -என் கண்டிஷன்.

மேற்படி சமாச்சாரத்தோடு விலையும் சல்லிசா இருக்கணும்.- இது கோபால்.

நடக்குங்கறீங்க? ஊஹூம்... நம்பிக்கை இல்லை.

மார்பிள் தூளால் செஞ்ச வேணு கோபாலன். அழகான திருத்தமான முகம். கையில் குழல். கொஞ்சம் கனம்தான். போகட்டும். ஒன்னே ஒன்னு கனமா இருந்தா என்ன ஆகிறப்போகுது? (என்னைமட்டும் இவர் இந்தியாவிலேயே விட்டுட்டாப் போகப்போறார்?)

புள்ளையார் பல ரகவேலைகளில் இருக்கார். கண்ணுக்குக் கண்ணாடி மாட்டிக்கிட்டுக் கணக்கெழுதும் 'கணக்குப்புள்ளையார்'. பக்கத்துலே சிலேட் வச்சுக்கிட்டு அ,ஆ எழுதிக் காமிக்கும் எலி. சூப்பர். (ஹிந்திப் படிக்கணுமுன்னு இதுக்குக்கூடத் தெரியுது பாருங்களேன்...... சமர்த்து) அதே இடத்தில் நாலு யானைகள் நடந்து போனாங்க..... கோபால் வேணுமுன்னு சொல்லி பில் போட்டுவாங்கிக்கிட்டார்.

தசாவதார செட் ஆசையா இருக்கு. ஆனால் மூக்கும் முழியும் சரியில்லே. கடைசியில் ஒரு ரெண்டடி உயரம் வரும் செட் பார்த்தேன். கொள்ளை அழகு. கனமும் இல்லை. காகிதக்கூழ் சமாச்சாரம். ஆனால்..... திரும்ப நியூஸிக்குக் கொண்டுபோவது கஷ்டம். பேக்கிங் செய்யும்போது ஒவ்வொன்னுக்கும் ஒரு அட்டைப்பெட்டின்னா பத்து ஆகிரும். சீச்சீ.....ரொம்பப் புளிப்பு இல்லே?


பித்தளை, வெண்கலம் அது இதுன்னு கீழ்த்தளத்திலும் மாடியிலும் வெளியில் பின்பக்க வெராந்தாவில் வச்சுருந்த பிரமாண்டங்களையும் ச்சும்மாப் போய்ப் பார்த்துட்டு ஒன்னும் வாங்கிக்காம வயிற்றில் பால் வார்த்தேன். விஷ்ணு விக்கிரகங்கள்தான் நிறைய. சிலது கொள்ளை அழகு. ஊர் திரும்பி வீட்டை வித்துட்டு வந்து வாங்கிக்கிட்டுப் போகணும்.

"வீடே இல்லேன்னா எங்கே கொண்டு வைப்பே?"

"ஏர்ப்போர்ட்லேயே ஒரு ஓரமா உக்கார்ந்துக்கிட்டால் ஆச்சு"

ஒரு மாமல்லபுரம் செட் கண்ணுலே பட்டுச்சு. ஐந்து ரதங்கள், பகீரதன் தவம், யானை, சிங்கம், கலங்கரை விளக்கம், குன்றுன்னு சுமாரா இருக்கு. பார்த்துக்கிட்டு இருக்கும்போதே...... 'சிவகாமி.....' கோபால் மனசுலே புகுந்துட்டாள் போல! வாங்கிட்டாருப்பா.

ஒரு அஞ்சு நிமிசத்துக்கு நான் எங்கே இருக்கேன்னு என்னாலயே நம்ப முடியலை! புத்தி தெளிவா இருக்கான்னு சோதிக்க (எனக்குத்தான்) ஒரு சின்னதா, பிங்க் நிறத்தில் பெரிய காதோடு மொட்டைப் பிள்ளையார் வாங்கிக்கிட்டேன். அம்புட்டுதான். பர்ச்சேஸ் முடிஞ்சது.

பொம்மைகளைப் பொதிஞ்சு தரும் இடத்துக்கு இன்னும் நாலைஞ்சு ஆட்களைப் போடக்கூடாதா? பணம் செலுத்தும் இடம் காத்து வாங்குது. இங்கேயோ...மூச்சு முட்டுது.

ஒருத்தர், பாம்பணையில் துயிலும் பரந்தாமனைப் பொதிஞ்சுக்கிட்டு இருந்தார். பக்கத்துலே பெருமிதத்தோடு நின்னவரைப் பார்த்ததும் புரிஞ்சு போச்சு. அமெரிக்கா(ய்) 'உங்களுதா? ஹைய்யோ...சூப்பர்'ன்னேன். அவர் கண்ணில் ஒரு மின்னல்.

"எவ்வளவு வாங்கினாலும் போதாது....."

"ஆமாம் ஸார். இட் நெவர் எண்ட்ஸ்"

(போயிட்டுப்போகுது. ஆண்களுக்கு மட்டும் ஆறுதல் வார்த்தைகள் வேண்டி இருக்காதா? ரெண்டு பேரும் மனசைத் தேத்திக்குங்கோ )


இவர் வரும்வரை (வெறும்) வேடிக்கை பார்க்கச் சொன்னார். பக்கத்துலே இருந்த மாமிக்கு ரெண்டு பொண்களாம். ஒருத்தர் 'கிருஷ்ணா' என்னும் தீம். இன்னொருத்தர் 'யெஸ்டெர்டே டுடே டுமாரோ'வாம். 'நீங்க?'ன்னாங்க. 'யானை அண்டு பூனை'. வழக்கம்போல் என்னும் சொற்களைச் சொல்ல மறந்துட்டேன்:-)

எண்ணி மூணே மூணு படிகள். நியூஸியில் இருந்து கொண்டுவந்தவைகளுடன் இவைகளையும் சேர்த்து ஒரு வழி பண்ணால் ஆச்சு. மரப்பாச்சியைக் கொண்டுவந்து வச்சது மட்டும் நான். மத்ததையெல்லாம் இவரே மடமடன்னு கொண்டுவந்து அடுக்கிட்டார். என் கிளியோப்பாட்ரா செட்லே இருந்த ஸ்பிங்க்ஸ் மட்டும் முழிச்சுக்கிட்டு உக்கார்ந்துருக்கு. எங்கே 'அவளை'க் காணோம்?

'ரொம்பக் கவர்ச்சியா இருக்குன்னு வைக்கலை'யாம்!

பாவம் கொலுவுலே உக்காரணுமுன்னு 'கச்சைக் கட்டிக்கிட்டு இருந்தாள்'

அதுவும் சரி....... என் தோழிகள் கொலுப் பார்க்க வருவாங்களே..... ஆம்பளைன்னா...ஒரு அடக்கம் வேணாம்?!!!

இந்தக் கலாட்டாவுலே சுண்டல் செய்யலை. பாதாம் ஹல்வா மட்டும் வச்சுக் கும்பிட்டாச்சு (இன்னும் திங்கலை. இப்பவேத் தின்னுட்டால்.... இன்னும் ஒன்பது நாளுக்கு ?????)



நீங்கெல்லாம் சோம்பல் பார்க்காம ஒரு நடை வந்துட்டுப் போங்கன்னு
அன்போடு அழைக்கின்றோம்.

49 comments:

  1. ஆஜர். அல்வா வாங்கீட்டுப்போக வந்தேன்.

    ReplyDelete
  2. //"கோபால் வச்சக் கொலுவைப் பார்க்க வாங்க நீங்க!"//

    வந்துட்டோம்!

    //'கணக்குப்புள்ளையார்'. பக்கத்துலே சிலேட் வச்சுக்கிட்டு அ,ஆ எழுதிக் காமிக்கும் எலி. சூப்பர்.//

    சூப்பரேதான், படத்துக்கு நன்றி!

    //(ஹிந்திப் படிக்கணுமுன்னு இதுக்குக்கூடத் தெரியுது பாருங்களேன்...... சமர்த்து)//

    :)!

    //'நீங்க?'ன்னாங்க. 'யானை அண்டு பூனை'. வழக்கம்போல் என்னும் சொற்களைச் சொல்ல மறந்துட்டேன்:-)//

    அடடா, பக்கத்திலே பதிவர் யாராவது இருந்திருந்தால் நாங்களே சொல்லியிருப்போமே:))!

    ReplyDelete
  3. //சிலது கொள்ளை அழகு. ஊர் திரும்பி வீட்டை வித்துட்டு வந்து வாங்கிக்கிட்டுப் போகணும்.//

    தஞ்சாவூர் வீட்டிலே இருந்த பொம்மையெல்லாம் இலவசமா கொடுத்துட்டு
    சென்னையிலே வந்து வாங்கிக்கலாம்னு நாங்க வந்த போது இதே போலத்தான்
    நாங்களும் ஃபீல் பண்ணினோம்.

    ஆனா, வங்கிகளிலே வீட்டுக்குத்தான் கடன் கொடுப்பாங்களாம், பொம்மை வாங்கிரதுக்கு
    தர மாட்டாகளாம்.

    அது சரி, எங்க காலனி சீப்ராஸ் பார்க்கிலே கொலு வச்சுருக்கு . நீங்க பார்க்க ஒரு விசிட்
    தாருங்களேன்.

    மீனாட்சி பாட்டி.

    ReplyDelete
  4. இப்பதான் வந்தேன்.
    கொலு நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. எனக்கு சுண்டலை பார்சல்ல அனுபிச்சுடுங்க

    ReplyDelete
  6. //திரும்பிப்போகும்போது கூடவே கொண்டு போகணும். //

    அப்டியா......... ?

    ReplyDelete
  7. \\கோபால் வச்சக் கொலுவைப் பார்க்க வாங்க நீங்க!"\\\

    அருமை..அழகு...அட்டகாசம்..சூப்பரு..தூள் ;)

    ReplyDelete
  8. ஜூனியர் ஜிகெ நல்லா இருக்கே.

    சிம்பிள் பியுட்டிஃபுல் கொலு.
    கிளியொவையும் வச்சு இருக்கலாம். நாங்களும் பார்த்திருப்போமில்லையா.

    ReplyDelete
  9. Golu Chinnatha nalla irukku.

    "Kannakku Pillayar" Super.

    ReplyDelete
  10. கணக்குப்புள்ளையார் சூப்பர் :-)

    ReplyDelete
  11. ஆனால் என்னை வளர்த்தவர்கள் நீங்கள்.

    வரவேற்பு பூங்கொத்து தேவியர் இல்லம் திருப்பூர். வளர்க நலமுடன்.


    நட்புடன்


    ஜோதி கணேசன். (ஜோதிஜி)


    தேவியர் இல்லம். திருப்பூர்.

    http://deviyar-illam.blogspot.com/

    ReplyDelete
  12. கொலு நன்றாக இருக்கு.

    ReplyDelete
  13. அட அல்வாவை கண்ணுல காட்டாமலே அல்வா கொடுத்துட்டீங்களே. சாமர்த்தியசாலி :)

    நல்லா இருக்கு கொலு.. நாங்க கிராமம் செய்துட்டிருக்கோம்..முடிச்சதும் செவ்வாய்க்கிழமை அழைக்கிறோம்.. :)

    ReplyDelete
  14. கொலு நல்லா இருக்கு. ஜூனியர் கோகியும்,சொர்க்கத்திலிருந்து டாட்டா காட்டும் கலர்ஃபுல் கோகியும் சூப்பர்.ஓடிப்பிடித்து விளையாடும் குட்டி யானைகளும், சமாளிக்க முடியாம அம்மா யானைய கூப்பிடும் அப்பா யானையும் ஆஹா..!.


    பாதாம் அல்வா காணோம். ஜிக்குஜூவை விசாரியுங்க:))).
    //ஆம்பளைன்னா...ஒரு அடக்கம் வேணாம்?!!!//

    இந்த பின்னூட்டம் யாருக்கு?. புரியலை.

    ReplyDelete
  15. வாங்க சின்ன அம்மிணி.

    ஆஸிக்கு அனுப்பி வைக்கட்டா?

    ReplyDelete
  16. வாங்க ராமலக்ஷ்மி.

    அப்பப்போப் பதிவர்களுடன் நகர்வலமும் உண்டுப்பா. ஆனால் இந்தக் கேள்வியை அப்போ யாரும் கேக்கலை!

    (நாங்க வேற யாரையும் கவனிக்காம எங்க 'உலகத்துலேயே' மிதப்போமே)

    ReplyDelete
  17. வாங்க மீனாட்சி அக்கா.

    உங்க வீட்டுக் கொலுவுக்கு வரும் எண்ணம் இருக்கு. இந்தவாரக் கடைசியில் வரவா?

    ReplyDelete
  18. வாங்க மாதங்கி.

    உங்க ஊருலே கொலு மட்டுமா எல்லாப்பண்டிகைகளையும் அமர்க்களமாச் செஞ்சு ஜமாய்க்குறாங்க. ஒன்னுமில்லா நியூஸிக்காரங்களுக்குத்தான் 'காற்றுள்ளபோதே....'ன்னு இருக்கு:-)

    ReplyDelete
  19. வாங்க ராம்ஜி யாஹூ.

    கட்டாயம் வந்துட்டுப்போங்க.

    ReplyDelete
  20. வாங்க அது ஒரு கனாக்காலம்.

    சுண்டல் யுகம் முடிஞ்சே போச்சு நம்ம வீட்டுலே. அதெல்லாம் பழங்காலம்.

    இப்போதும் பழம்காலம்தான்.

    கிழங்களாக ஆகிவருவதால் பழங்களே போதுமாம்:-)

    ReplyDelete
  21. வாங்க தருமி.

    எல்லாப் பண்டிகைகளையும் ஒரு ரவுண்டு கொண்டாடிட்டு மூட்டையைக் கட்டணும்!

    வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்.......???

    ReplyDelete
  22. வாங்க கோபி.

    கோபாலுக்குக் கோபியின் பின்னூட்டம் டானிக்:-)

    (இப்படியெல்லாம் புகழ்ந்தால்தான் இன்னும் வரப்போகும் விழாக்களுக்கு முதலெடுக்க முடியும்)

    ReplyDelete
  23. வாங்க நன்மனம்.

    *ர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது!

    ReplyDelete
  24. வாங்க கிரி.
    எனக்கும் பார்த்தவுடனே 'சட்'னு பிடிச்சுப்போனார் இந்த 'கணக்கு' :-)

    ReplyDelete
  25. வாங்க ஜோதி கணேசன்.

    கணேசனே கொலுவுக்கு வந்தது விசேஷம்:-)

    உங்க 'புதுவீடு' அட்டகாசமா இருக்கு.

    வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  26. வாங்க வல்லி.

    க்ளியோவைப் பார்க்க நேரில் வாங்க:-)

    ReplyDelete
  27. வாங்க குமார்.

    மஸ்கட்லே கொலு உண்டா? அங்கே மற்ற மதக்காரர்களுக்கு அவ்வளவா கெடுபிடி இல்லைன்னு கேள்வி.

    ReplyDelete
  28. வாங்க கயலு.

    நானும் அல்வாப் பாட்டிலைப் பார்த்ததோடு சரி!

    சின்னக் கைகள் நாலு இருக்கேப்பாக் கிராமம் சமைக்க.

    முடிஞ்சது படம் அனுப்பிவிடுங்க.

    ReplyDelete
  29. வாங்க ஐம்கூல்.

    அடக்கம் பொம்பளைக்கு மட்டுமா? கேட்டுக் கேட்டு அலுத்துப்போச்சு. அதான் ...... அப்படி ஒன்னு (நைஸா) போட்டுவச்சேன்:-)

    ReplyDelete
  30. சுண்டல் படங்களும் போட்டிருந்தா, சாப்பிட்டிருப்போம்ல.

    ReplyDelete
  31. கொலு களைகட்டியாச்சு போலிருக்கே. நவராத்திரி வாழ்த்துகள் துள்சிம்மா.

    அதெப்படி உங்களை மாதிரியே, எழுதற புள்ளையாருவை தேடிக்கண்டுபிடிச்சாரு கோபால்:)

    கொலுக்கான பாடல் பாடி அனுப்பி வைக்கிறேன்:) கேட்டுட்டு சுண்டல் படையுங்க.

    ReplyDelete
  32. //கோபால் வச்சக் கொலுவைப் பார்க்க
    வாங்க நீங்க!”//

    வந்து கணக்குப்புள்ளையாரைப் பார்த்து
    வியந்து ,படிக்கும் பிள்ளைகளுக்கு
    கணக்கு நல்ல வரவேண்டும் என்று
    வேண்டி வந்தேன்.

    எளிமையும் அழகும் நிறைந்த கொலு.

    ReplyDelete
  33. வாங்க சர்வேசன்.

    என்ன கிண்டலா? பதிவைப் படிக்கிறதே இல்லையா)))))))

    அதான் சுண்டலையெல்லாம் விட்டாச்சுன்னு சொல்லிட்டேனில்லே!

    மூணுநாளா பாதாம் ஹல்வா, அதிரசம், மைசூர்பான்னு வரிசைகட்டியிருக்கு பிரசாதங்கள். எல்லாம் துளித்துளிதான்:-)

    ReplyDelete
  34. வாங்க மது.

    அய்ய...... இதானே........ புள்ளையார் வாங்குனதெல்லாம் நான். கோபால் வகையில் மகாபலிபுரமும் நாலு யானைகளும்தான். அப்புறம் மெக்ஸிகோவில் இருந்து வாங்கிவந்த வால்நட் ஃபேமிலியும் கலர்ஃபுல் மியாவும்
    அவர் கணக்கு:-)

    ReplyDelete
  35. வாங்க கோமதி அரசு.

    'இந்தி' படிக்கும் புள்ளைகளுக்குக் 'கணக்கு' நல்லா வரணுமுன்னு வேண்டிக்குங்கப்பா:-))))

    ReplyDelete
  36. இம்ம், கொலுபொம்மை எல்லாம் நல்ல இருக்கு,ஆனா சுண்டல் பண்ணலைனு சொல்லி, எங்களை இப்படியா வெறுப்படிக்கறது, நல்ல கடலைப்பருப்பு சுண்டல் செய்து ஒரு பதிவு போட்டுருங்க. ஆமா இந்த கொலுசெட்டுக்கு முன்னாடி ஒருத்தர் பொம்மையாட்டமா இருந்தாரே அவரை கேட்டதா சொல்லுங்க.

    ReplyDelete
  37. இதோ வந்தாச்சு டீச்சர்..

    ReplyDelete
  38. teacher pls read my twenty fith blog at pitthan blog. thank u

    ReplyDelete
  39. வாழ்த்துகள்.

    கண்டிப்பாக சுண்டலுக்காக ஒரு விசிட் அடிக்கணும்.

    ReplyDelete
  40. வாங்க பித்தன்.

    நேத்துத்தான் தோழி வீட்டில் பாசிப்பருப்புச் சுண்டல்.

    ஒருநாள் கடலைப்பருப்புச் சுண்டல் செய்யச் சொல்லிறலாம், அதே தோழியிடம்!

    கொலுவுக்கு முன்னால் நிக்கமுடியலைன்னு உக்கார்ந்து இருக்குறவர்கிட்டேச் சொல்லியாச்:-)

    ReplyDelete
  41. வாங்க சிந்து.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  42. வாங்க வண்ணத்துப் பூச்சியாரே.

    கொலு, களைக்கட்டும்விதமா கலர்கலரா வாங்க:-)

    ReplyDelete
  43. கோபால் சார் வச்ச கொலு!
    கோவிந்தன் குலவும் கொலு!
    கோமகளை மறைத்த கொலு!
    கணேசன் கணக்கு எழுதும் கொலு!

    டீச்சரின் சதியாலே கிளியைப் பற்றக் காணோமே! :)
    ஸ்பிங்க்ஸ் காட்டி ஸ்பிரிங் ஏற்றும் கொலுவில் நான் என்செய்வேன்?

    பாதார விந்தங்கள் பற்றி விட்டுச் சுற்றி விட்டு
    பாதாமின் அல்வாவைப் பற்றிடுவேன் பற்றிடுவேன்!

    கொலுவுக்கு வந்தாப் பாடணுமாமே! அதான் டீச்சர்! அந்தப் பாதம் அல்வா, ஒன்பது நாள் சப்ளையைக் கொஞ்சம் இப்படிக் காட்டுங்க பார்ப்போம்! :)

    ReplyDelete
  44. வாங்க கே ஆர் எஸ்.

    அதென்னமோப்பா..... இதுவரை பாட்டிலைத் திறக்க வேளை வரலை!!!

    இந்த பாட்டில் 'அந்த' பாட்டில் இல்லை.

    பாதாம் ஹல்வா 'வந்த' பாட்டில்:-)

    கிளிக்குப் பயங்கர டிமாண்ட் இருக்கேப்பா!!!!

    பாட்டு சூப்பர்.

    இன்னிக்குக் வேர்க்கச்சாங் சுண்டல்.

    ReplyDelete
  45. //கோபால் சார் வச்ச கொலு!
    கோவிந்தன் குலவும் கொலு!//

    இப்படி ஒரு பாட்டு எழுதினால் அதற்கு மெட்டு போடாமல் இருக்கமுடியுமோ !

    அதனாலே சுப்பு தாத்தா காவடி சிந்து மெட்டுலே பாட்டு போட்டுட்டார் !

    இங்கே கேட்கவும்.
    http://www.youtube.com/watch?v=Dn0gfOpKoUI
    சுப்பு ரத்தினம்.




    http://www.youtube.com/watch?v=Dn0gfOpKoUI

    ReplyDelete
  46. வாங்க சுப்பு ரத்தினம்.

    ஆஹா....நன்றியோ நன்றி.

    ReplyDelete
  47. வாங்க தூயா.

    சிரிப்பான் சிரிப்பானா?

    நன்றிப்பா.

    ReplyDelete