Saturday, December 13, 2008

நிழல்கள். பட விமரிசனம்?

மகள் அனுப்பிய சில படங்களை நிழல்களுக்காக இங்கே போட்டுருக்கேன். படம் பார்த்துட்டு விமரிசனம் செய்யுங்க.












பிட்டு ஆசான்கள் கொடுத்த மாதிரிப் படம் போலவே ( ரொம்பத்தான் ஆகிக் கிடக்கு எனக்கு) ஒன்னு நம்ம கைவசம் இருந்துச்சு.





சங்கு சக்கர சாமி ஜிங்கு ஜிங்குன்னு ஆடாம இருக்கு பாருங்க.




தாமரை மொட்டு(கள்)





நிழலுருவம்

27 comments:

  1. பலூன் படம் அட்டகாசம்... !!!

    ReplyDelete
  2. சங்கரின் விமானம் போல் உள்ளது.


    அதே நேரத்தில் மாதவன் பொடும் சட்டை மாதிரியும் இருக்கிறது.

    ReplyDelete
  3. சாமிக்கே வெளிச்சம் போட்டு உள்ளபடத்தை பகுத்தறிவுவாதிகள் பார்த்தால் பெருமகிழ்ச்சி அடைவார்கள்

    ReplyDelete
  4. தாமரை இலை தண்ணீர் என்று சொல்வார்கள்.

    அழகாக படம்பிடித்து காட்டப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  5. கடைசிப்டம் கர்ணன் எடுத்ததா.. மேடம்

    ReplyDelete
  6. ஒவ்வொரு மாதமும் மகளை போட்டியில் கலந்துக்க வையுங்க.

    அத்தனையும் அருமை.

    படங்கள் 2,3,4..இக்காட்சிகள் கண்ணில் கிடைத்ததும் க்ளிக்கிட்டதற்கே தனியா பாராட்டணும்.

    உங்க கைவசமிருந்த கைவண்ணமும் தனித்த தாமரை மொட்டும் கவிதை.

    ReplyDelete
  7. மரநிழலும் காலை நீட்டியிருக்கு...அதனடியில் ஓய்வெடுக்கும் மனிதனும் காலை நீட்டியிருக்கிறான்!!

    இலங்கைத்தீவுக்குளிருந்து எட்டிப்பார்ப்பவன் என்ன சொல்கிறான்? போரை நிறுத்தியாச்சாமா?

    தாமரை மொட்டும்சிவப்பு மலரின் மகரந்த நிழலும் சூப்பர்.

    குழம்புங்க எதை அனுப்பன்னு!
    ஆனாலும் வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. உங்க வீட்டு தாமரையா? எனக்கும் பலூன் மற்றும் திருப்பதி சாமி தான் ரொம்ப பிடிச்சுது.

    இப்ப இங்க காலையில் 7 மணி..அங்க எத்தன மணி டீச்சர்? சும்மா தெரிஞ்சுக்க தான்.

    ReplyDelete
  9. பலூன் படமும், பூப்படமும் நல்லா இருக்கு!

    ReplyDelete
  10. பலூன் நிழல் படம் செம அட்டகாசமாக இருக்கு. வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  11. வாங்க சூர்யா.

    மகளுக்குச் சொல்றேன். அவள் சார்பில் நன்றி.

    ReplyDelete
  12. வாங்க SUREஷ்,

    எங்களுக்கு இப்போ சம்மர். ஹாலிடே சீஸனாம். அதுதான் வாங்கவாங்கன்னு கூப்புடுது ஏர் நியூஸிலாந்து:-)

    சாமிக்கு நான் போடலைப்பா வெளிச்சம். அவரே சூரியனை வரவழைச்சுக்கிட்டார். ஆன்மீக ஜோதி அது:-)

    கவனிக்கலையா? தாமரை இலையில் இங்கே தண்ணீர் ஒட்டுது!

    கர்ணன் மட்டுமா? நாங்க படுத்துக்கிட்டுப் படம் எடுக்க மாட்டோமா? :-)

    ReplyDelete
  13. வாங்க ராமலக்ஷ்மி.

    நன்றிப்பா.

    மகள் காதுலே போட்டாச்சு. இனி ஒவ்வொரு போட்டித் தலைப்பையும் விவரிச்சுச் சொல்லணும்:-)

    எக்கசக்கமா எடுத்துத் தள்ளிக்கிட்டு இருக்காள். டிஜிட்டல்தானே? போனாப் போட்டும்:-)

    ReplyDelete
  14. வாங்க நானானி.

    இது எதுவும் போட்டிக்கு இல்லைப்பா.

    ஊருக்கு முந்தி ஒன்னை அனுப்புனது பத்தாதுன்னு மகளுக்காக அனுப்புனதில் தவறானதை அனுப்பித் தொலைச்சுட்டேன்.

    மாத்தச் சான்ஸே இல்லைன்னு 'அடிச்சு'ச் சொல்லிட்டாங்க பிட்டுக்காரங்க.

    அதனால் ஆறுதல் (பரிசா) இங்கே அள்ளி வழங்கிட்டேன்.

    ஆனா ஒன்னு, எதைப் பார்த்தாலும் க்ளிக்கிக்கிட்டு இருக்கோம். எப்ப என்ன தலைப்பு வரப்போகுதுன்னு யாரு கண்டா? :-)))

    ReplyDelete
  15. வாங்க சிந்து.

    நம்மூட்டுத் தாமரைதான்ப்பா.

    உங்களுக்கும் எனக்கும் 9 மணி நேரம் வித்தியாசம்.

    ReplyDelete
  16. வாங்க தமிழ் பிரியன்.

    மகளுக்கு மெயில் அனுப்பிட்டேன்:-)

    (ரெண்டு வருசம் முந்தி ஹாட் ஏர் பலூன்லே போய், படமெல்லாம்(அவள்) எடுத்துப் பதிவெல்லாம் போட்டுருக்கேன்.)

    ReplyDelete
  17. வாங்க அமல்.

    மகள் சார்பில் நன்றி.

    ReplyDelete
  18. சிறந்த படங்கள். பலூன் படம் அருமை. நிழல்களை பற்றி ஒரு கவிதை எழுத தூண்டிவிட்டீர்கள்...

    ReplyDelete
  19. அம்மாவிற்காக மகள் போட்டி போடலாம் போல..., படங்கள் நன்றாகவுள்ளது.

    ReplyDelete
  20. வாங்க சுகு.

    கவிதையா? எழுதுங்க. எழுதுங்க.

    ஆனா..... உண்மையைச் சொன்னா.... நமக்குக் கவுஜ கொஞ்சம் அலர்ஜியாச்சே(-:

    ReplyDelete
  21. வாங்க காரூரன்.

    அவுங்கவுங்க தனித்தனியாப் போட்டி போடலாம். தாயும் மகளானாலும் வாயும் வயிறும் வேறுவேறு இல்லையா? :-))))

    ReplyDelete
  22. Hot Air Baloon, excellente! :)

    ReplyDelete
  23. //சங்கு சக்கர சாமி ஜிங்கு ஜிங்குன்னு ஆடாம இருக்கு பாருங்க//

    இயற்கைக் காட்சிக்கூட எளிதில் கிடைத்துவிடும்.ஆனால் வீட்டு காட்சிகள்? நல்லா இருக்கு.

    ReplyDelete
  24. //"நிழல்கள். பட விமரிசனம்?"//


    நல்லாத்தான் இருக்கு மேடம்

    ReplyDelete
  25. வாங்க சர்வேசன்..

    ஹாட் ஏர் பலூன்?

    எல்லாப் புகழும் மகளுக்கே:-)

    நன்றிப்பா.

    ReplyDelete
  26. வாங்க ரவிஷங்கர்.

    அது என்னவோ உண்மைதாங்க. சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் சூரிய ஒளி மிகச்சரியா இப்படி உள்ளெ வந்து ஒரு ஒளிஜாலம் காமிச்சுட்டுப் போகும்.

    உடனே கெமெராவை எடுத்துக்குவேன்.

    இனிமேல் அது எந்த நாளுன்னு குறிச்சுவச்சுப் பார்க்கணும்.

    ஒருமுறை ஷாண்டிலியர் கிறிஸ்டல் குண்டுலே ஒளி பட்டுத் தெறிச்சது. ஹைய்யோ...... விளக்க வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete
  27. வாங்க மிஸஸ் டவுட்.

    இதிலே என்ன சந்தேகம்?:-)))))

    ReplyDelete