Tuesday, July 15, 2008

மொய் மொய் moi moi

மொய் மொய்ய்ன்னு பிடுங்கி எடுக்கறேனா? இதுவும் பூமியில் இருந்து தோண்டி எடுத்தது தான். இதுக்கு மவொரி உருளைக்கிழங்குன்னு பெயர்.
அழுத்தமான பர்ப்பிள் நிறத்துலே பிடிக்கருணைக் கிழங்குபோல வங்க்கர பங்க்கரயா( கோணல் மாணல்) இருக்கு. சாதாரண உருளைக்கிழங்குலே இருக்கும் சக்தியைவிடப் பலமடங்கு antioxidant இருக்காம். நல்ல ஹெல்த் ஃபுட்ன்னு இதுக்கு ஒரு மகிமை.



230 வருசமா இங்கே பயிரிட்டு வர்றாங்களாம். எப்படி இங்கே வந்துச்சுன்றதே தெரியலை.




1642 டச்சுக்காரர் ஏபல் டாஸ்மென் வந்து எட்டிப் பார்த்துட்டுப் போயிட்டார். அதான் அவர் வந்த கப்பலை ஒரங்கட்டுமுன்பே மவொரிகள் போய் சண்டைபோட்டு நாலுபேரை மேலே அனுப்பிட்டாங்களே. சரியான 'கொலைகாரன் பேட்டை'(Murderer's Bay) ன்னுட்டு பயந்து ஜகா வாங்கிட்டார்.



ஃப்ரெஞ்சுக்காரர் de surville 1769 வருசமும் கேப்டன் குக் அவரது ரெண்டாவது பயணத்தில் 1773 வருசமும் இங்கே வந்தப்ப உருளைக்கிழங்கை நட்டாங்களாம். அது இப்ப நாம் பொதுவா பயன்படுத்தறோமே அந்த வகைகள். அதென்ன வர்றவங்க எல்லாம் உருளையை நட்டு வைக்கிறது? இப்படிக் கதை இருக்க இந்த விசேஷ உருளை எப்படி வந்துச்சுன்றதே இதுவரை எங்கேயும் பதியப்படலை.



இங்கே வெவ்வேறு மவொரி குழுக்கள் இருக்கும் பகுதிகளில் இதுக்கு வெவ்வேற பெயர் இருக்கு. Urenika Tutai Kuri , peruperu . பெயர் வித்தியாசம் இருந்தாலும் சரக்கு என்னவோ ஒன்னுதான்:-))))



மவொரிகள் சின்ன அளவில் அவங்களுக்குள்ளே மட்டுமே விளைவிச்சுக்கிட்டு இருந்தது இப்போப் பரவலா வெளி உலகைப் பார்க்க ஆரம்பிச்சுருக்கு.


ஒரு கடையில் இதை வச்சுருந்தாங்க. பக்கத்தில் ஒரு விளம்பரம்.
Maori Potato. High in antioxidant. புதுசா ஒன்னு வந்துறக்கூடாதே எனக்கு! கிலோ 10 டாலர். சாதாரண உருளைக்கிழங்கு 4 கிலோ நாலரைக்குப் போட்டுருக்கு. 20 கிலோ சாக்கு வாங்குனா எட்டு இல்லை ஒம்போது டாலருக்கு எடுக்கலாம். அவ்வளோ வாங்கி வச்சுக்கிட்டு யாரு தின்றது சொல்லுங்க!



மொய் மொய்யைச் சமைச்சுப் பார்க்கலாமுன்னு ஒரு அஞ்சாறு வாங்குனேன். நகத்துலே சுரண்டி எடுக்கக்கூட முடியாம ரொம்ப மெல்லிய தோலா இருக்கேன்னு அப்படியே வேகவச்சேன். பாத்திரத்தில் இருந்த தண்ணீர் ஒரு காப்பர் ஸல்பேட் நிறத்துக்கு மாறிச்சு.
வெந்ததைத் தோல் உரிச்சால் பர்ப்பிள் நிறமா அழகா ( ??!!) இருக்கு. எல்லாத்துக்கும் மசாலா சேர்க்குற மாதிரி இதுக்கும் போடவான்னு வந்த ஆசையை அடக்குனேன். முதல்முறை கொஞ்சம் கவனமா இருக்கலாம். நம் கைவண்ணம் காமிக்கறதெல்லாம் அப்புறமா இருக்கட்டுமே...

உப்பும் மிளகுத்தூளும் தூவித் தின்னு பார்க்கணும்.



பொதுவா நமக்கு நல்லாச் சமைக்க வந்தாலும் பரிமாறும்போது கூடுதல் அலங்காரம் செய்யாம அப்படியே ஒரு பாத்திரத்தில் எடுத்து பரிமாறிடறோம் இல்லையா? ஆள் பாதி அலங்காரம் பாதின்னு சும்மாவா சொல்லி இருக்கு. ஒன்னுக்கும் உதவாததையெல்லாம் கார்னிஷ்னு சொல்லி எப்படி எச்சில் ஊறவைக்குறாங்க பாருங்க அங்கங்கே. எனக்கு அலங்காரம் வராதுன்னு தெரிஞ்சும்(நான் ரொம்ப சிம்பிள் மனுசி) பர்ப்பிளுக்கு மேட்ச்சா ஒரு ஆரஞ்சு இருக்கட்டுமேன்னு காரட் ஒன்னை எடுத்து நறுக்கி நடுவிலே வச்சேன்.


ருசியும் நல்லாவே இருக்கு. ஆனா பர்ப்பிள் கலரைத் திங்க மனசில் கொஞ்சம் உறுதி ஏற்படுத்திக்கணும். கயலு வேற நீலமா இருந்தால் விஷம்'னு கவிதை பாடிக்கிட்டு இருக்காங்க:-))))

39 comments:

  1. இதை பார்க்கவே பயமா இருக்கு துளசி மேடம், எங்கே சாப்பிடறது? :) :)

    ஆனாலும் ரொம்ப சிரமப்பட்டு விதவிதமான ரெசிப்பி ட்ரை பண்றீங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //Urenika Tutai Kuri , peruperu . பெயர் வித்தியாசம் இருந்தாலும் சரக்கு என்னவோ ஒன்னுதான்//

    டீச்சர் , பேருலேயே பெரு பெரு ன்னு
    இருக்கே.அதனாலே இது எங்க ஊருலேந்து வந்ததுதான்.

    உலகத்துக்கே உருளையை உருட்டி குடுத்தது பெரு.

    ReplyDelete
  3. OK! me the SECOND!!!!
    நிஜமாவே வயங்கரபயங்கரமா இருக்கு.
    ருசி நல்லாத்தனிருக்கும் போல.
    கலிபோர்னியாவில் இருக்கும் போது
    ஸேஃப்வேயில் உருளையில் நிறைய விதங்கள் பார்த்திருக்கிறேன். இந்த பர்ப்பிள் உருளையும் கண்டிருக்கிறேன்.
    சமைத்ததில்லை. நம்ம மசாலா போட்டும் ஒரு ஃப்ரை பண்ணிடுங்களேன்?

    ReplyDelete
  4. கலர் தான் கொஞ்சம் யோசிக்க வைக்குது..

    ReplyDelete
  5. //கலர் தான் கொஞ்சம் யோசிக்க வைக்குது..//ன்னு தூயா சொல்றாங்க. உண்மைதான் நாவற் பழ கலரில். ஆனால் டேஸ்டுக்குதான் உத்திரவாதம் கொடுத்து விட்டீர்களே!

    ReplyDelete
  6. ருசியா, உடம்புக்கு நல்லதா இருந்தா எந்த கலரா இருந்தாலும் சாப்டுற வேண்டியதுதான்.

    ReplyDelete
  7. உங்க ஊரைப் பற்றி செய்தி போட்டு இருக்காங்களே

    http://thatstamil.oneindia.in/news/2008/07/15/world-indian-catholic-pilgrims-missing-newzealand.html

    உண்மையா ?

    ReplyDelete
  8. வாங்க க.ஜூ.

    சமைக்கவும் முந்திவரும் உங்கள் ஆர்வம்/ஆர்வக்கோளாறு என்னை வியக்க வைக்கின்றது:-)

    நானிருக்க பயம் ஏன்? தின்னுதான் பாருங்க. ஒன்னும் ஆகாது.

    தின்னு பார்த்த நான் 24 நாள் கழிச்சும் உயிரோடுதான் இருக்கேனாக்கும்:-)

    அந்தக் கயலு வேற நீலக்கலர் விஷமுன்னு பதிவெல்லாம் போட்டுக்கிட்டு இருக்காங்க......

    ReplyDelete
  9. வாங்க 'பெரு'சு.

    பெருபெருன்னதும் விருவிருன்னு வந்துட்டீங்களே!

    உலகத்துக்கு உருளை சப்ளை மொத்தமும் நீங்கதானா?

    அதான் லோகம் முழுசும் வாய்வுப் பிடிப்புலே 'Gas' லே பறக்குதா? :-)))

    ReplyDelete
  10. வாங்க நானானி.

    தாமிர மெடல்தான். பரவாயில்லை.முதல் மூணுக்குள்ளே இருக்கீங்க:-)))

    (ஒலிம்பிக்ஸ் வருது இன்னும் 23 நாள் & 8 மணி நேரத்துலே)

    மசாலா போட்டுப் பார்க்கணும். நிறத்துலே எடுபடுமான்னு பார்க்கலாம்.

    ReplyDelete
  11. வாங்க தூயா.

    கலர்?

    கண்ணை மூடிக்கிட்டு விழுங்கலாமே:-)

    ReplyDelete
  12. வாங்க ராமலக்ஷ்மி.

    அட! இந்த நாகப்பழம் நினைவுக்கு வரலை பாருங்க!

    நன்றிப்பா. எடுத்துக் கொடுத்ததுக்கு.

    நாக்குலே ஒட்டுவதில்லை இது.

    ReplyDelete
  13. வாங்க பிரேம்ஜி.

    அப்படி சொல்லுங்க. உடம்புக்கு ரொம்பவே நல்லதாம்.

    ஆனா...பர்ஸுக்கு? (-:

    ReplyDelete
  14. வாங்க கோவியாரே.

    அதையேன் கேக்கறீங்க.!!! சிட்னி(World Youth Day)
    போற வழியில்( நாலைஞ்சுநாள் தங்கறோமுன்னு விஸிட்டர் விஸாவுலே வந்துட்டு 35 பேர் காணாமல்(!!!) போயிட்டாங்க. ஒருசிலர் இங்குள்ள சீக்கியர்கள் சங்கத்துக்கு ஃபோன் அடிச்சு உதவி கேட்டாங்களாம். இங்கேயே தங்கிக்க விருப்பமாம்.

    இங்கே இருக்கும் இந்தியர்களுடைய உதவியைப் போலீஸ் கேக்குது. புடிச்சுக்கொடுங்கன்னு.

    இன்னிக்கு இங்கத்து கருத்துப் பகுதிக்கு சுட்டி (காபி & பேஸ்ட்) கீழே கொடுத்துருக்கேன். பார்த்துட்டுச் சிரிங்க:-)

    http://nz.messages.yahoo.com/nz-news/nz-top-stories/12160/


    நீங்க கொடுத்த சுட்டியில் செய்தியும் காணோம்:-)))))

    ReplyDelete
  15. என் கவிதையின் தாக்கம் நினைச்சு ரொம்ப மகிழ்ச்சி.. ஆமா துளசி இது நீலம் இல்லையே பர்ப்பிள் தானே அதுவும் நாவல் பழம்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் அத நினைச்சுக்கிட்டு சாப்பிடலாம் தான். ஆனா உங்க ஊருக்கு வரும்போது தான் உங்க கையாலதான் சாப்பிடனும்..

    ஆரஞ்சு பர்ப்பிள் கலர் மேட்சா இருக்க்கா அதுல ஒரு சுரிதார் தச்சுறலாமா?

    ReplyDelete
  16. போட்டோவில மொய்மொய் பாத்துட்டு நாவல் பழக்கலரா இருக்குன்னு நானும் நெனச்சேன். ரங்கமணிக்கு இந்தக்கலர்ல இருக்க முட்டைக்கோஸைக்கூட என்னமோ பிடிக்காது. நானானி அம்மா சொன்ன மாதிரி மசாலா ஏதாவது போட்டுப்பாக்கணும்.

    ReplyDelete
  17. எல்லாம் எடுபடும்....ஃப்ரை ட்ரை
    பண்ணிப்பாருங்க! அங்கு வந்தெல்லாம்
    ருசி பாக்கமுடியாது.ஸ்ஸ்ஸோ....எனக்கொரு
    பார்சேல்ல்ல்ல்ல்ல்!!!

    ReplyDelete
  18. இன்னிக்குத்தான் டீச்சர் இந்தக் கலர்ல இப்படியொரு கிழங்கைப் பார்க்குறேன்..
    பீட்ரூட்டையும் வச்சு அலங்கரிச்சிருக்கலாமே ? சுவை எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லையே?

    ReplyDelete
  19. பிரசண்ட் டீச்சர்! :). நலமா?

    //ஆனா பர்ப்பிள் கலரைத் திங்க மனசில் கொஞ்சம் உறுதி ஏற்படுத்திக்கணும்.//

    ருசி நல்லா இருக்குன்னு உத்தரவாதம் சொல்லீட்டீங்க. ஸோ, நோ இசூஸ். :). கடலை மாவுக்குள்ள மறச்சு, பஜ்ஜி போட்டா என்ன டீச்சர்.

    அடர் நிறத்துல(Deep coloured) இருக்க எல்லாக் காயுமே சத்து அதிகம் கொண்டதாம். பீட்ரூட், காப்சிகம், காரெட் etc..

    ReplyDelete
  20. கமல் படம் பார்த்தேன் அப்படின்னு போட்டு 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' பத்தி எழுதினீங்கன்னு நினைக்கிறேன், டீச்சர்..

    இப்போ உருளை கிழங்கையே 'ஊதா நிறமா' மாத்திட்டீங்களே..

    'உலகம் சுற்றும் வாலிபர்' லேந்து 'நினைத்ததை முடிப்பவர்'க்கு மாறிட்டீங்களா? :-))

    முட்டை கோசுல கூட இது போல சாயப்பட்டறை இருக்கு.. டேஸ்டு கூட நல்லவே இருக்கும்.

    இது போல பதிவுகள் போட்டு எங்க கிட்ட 'சாப்பாட்டுராமன் நான்' அப்படின்னு ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிடுறீங்க!! :)))

    ReplyDelete
  21. //ஆனா பர்ப்பிள் கலரைத் திங்க மனசில் கொஞ்சம் உறுதி ஏற்படுத்திக்கணும்//

    new zeland dictionary சொல்லுது.
    karuparera
    a Māori potato cultivar, Solanum tuberosum - a waxy potato with purple skin
    and very clearly defined bright yellow patches around the eyes.
    Best for boiling and microwaving. See also kōwiniwini.

    அந்தக் கலர் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.
    இருக்கவே இருக்கு ஆன்டியால், ஸிஃப்ரான்=ஸிடி,
    எலக்ட்ரால் பெளடர், drips. So trial costs nothing என்று செய்து சாப்பிட்டுப்
    பார்க்கலாம்.

    அது சரி ! பாரதியார் பாட்டு " சாகா வரம் அருள்வாய் ! "
    கேட்டிருக்கிறீகளோ ! ஓ.எஸ்.அருண் அற்புதமாகப்
    பாடியிருக்கிறார்.

    எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், பாரதியார் காலத்திலேயே
    இந்த மெள்ரி பொடாடோ இந்தியாவில் இருந்திருக்கும்போல்
    தெரிகிறது.

    இது பற்றிய ஏகப்பட்ட சமாசாரங்கள் its value as an anti oxidant
    வ்லையில் கிடைக்கின்றன. ந்யூ சீயில் ஒரு 200 வருடமாக
    கிடைக்கும் இதை வேகவைத்து ஜூஸ் செய்து சாப்பிடுகிறார்களாம்.

    http://www.nzherald.co.nz/location/story.cfm?l_id=139&objectid=10376555

    http://www.syrup.net.nz/syrupblog/?p=26

    இதை சாப்பிடுபவர்கள் ஒரு ஆயிரம் ஆண்டு கூட இருக்கமுடியுமாம்.
    so much of anti oxidant value.
    ஆகையால், இதை தேவ லோக கிழங்கு எனவும் கூறலாம்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  22. வாங்க கயலு.

    //ஆரஞ்சு பர்ப்பிள் கலர் மேட்சா இருக்க்கா அதுல ஒரு சுரிதார் தச்சுறலாமா?//

    இப்படியெல்லாம் ஆகுமுன்னு ஞானதிருஷ்டி இருந்்தாலே முந்தியே போன பயணத்தில் தச்சுக்கிட்டு வந்தாச்சு.

    காஞ்சீபுரம் பட்டு. பளிச்சுன்னு இருக்கு துப்பட்டா:-))))

    ReplyDelete
  23. வாங்க சின்ன அம்மிணி.

    அப்ப தங்கு மட்டும் ஒன்னே ஒன்னு வாங்கி வேகவச்சுத் தின்னு பாருங்க.

    இங்கே இது ஒரு வசதி. ஒரே ஒரு பூண்டு, வெங்காயம், உருளைன்னுக்கூட வாங்கிக்கலாம்:-)

    ஒன்னே ஒன்னு அது கண்ணெ கண்ணுன்னு மைக்ரோவேவில் வேகவச்சுக்கலாம்:-)

    ReplyDelete
  24. நானானி,

    உங்க வாக்கு பலிக்கப்போகுது:-)

    ReplyDelete
  25. வாங்க ரிஷான்.

    பீட்ரூட்டா?

    ஐய்ய........... முக்கால்வாசி ஆம்புளைங்க கலர் ப்ளைண்டு என்பது உண்மைதானா? :-))))

    ஊஹூம்.... சரிப்படாது.

    ஆமாம். மேலே மேலே அது இதுன்னு அளவு கூடிப்போனா இங்கே யார் இருக்கா திங்க?

    ReplyDelete
  26. வாங்க புதுவண்டு.

    நலம்தான்.

    கடலைமாவுக்குள்ளே மறைச்சு பஜ்ஜியா?

    ஆஹா....சூப்பர் ஐடியா. எனக்குத் தோணலை பாருங்க! ஒருநாள் செஞ்சுறலாம்.

    வரவர நம்ம வகுப்பு மாணவர்கள் குருவுக்கு மிஞ்சுன சிஷ்யர்களா அறிவு வளர்ச்சியிலே மேலேமேலே ஏறிக்கிட்டு இருக்காங்க.

    டீச்சருக்கு இதைப் பார்க்க ஆனந்தமா இருக்கு.

    ReplyDelete
  27. வாங்க தமாம் பாலா.

    உணவின்றி உயிரேது?

    ('கோட்டி வித்தலு கூட்டுக் குறைக்கு' இது எங்க பாட்டியின் தெலுங்குப்பழமொழி)

    எத்தனைதான் வித்தைகள் காமிச்சாலும் எல்லாம் ஒரு சான் வயித்துக்குத்தான் என்று பொருள்.

    அதான் சரித்திரத்தோடு சமையல் வகுப்பையும் நடத்திக்கிட்டு இருக்கேன்:-)

    சாப்பாடு இல்லைன்னா நாமே சரித்திரம் ஆயிருவோம்:-)

    ReplyDelete
  28. வாங்க சுப்பு ரத்தினம்.

    ஹோம் ஒர்க் நல்லாவே செய்றீங்க.

    இந்த தேவலோகக் கிழங்கு.......

    வெள்ளையர் வருமுன்னே இங்கத்து மவோரிகள் இதைத்தான் தின்னு 35 இல்லே 40 வயசுவரை மட்டுமே உயிர் வாழ்ந்துருக்காங்க:-)))))

    ReplyDelete
  29. துள்சி அக்கா, உருளை கிழங்கு மாதிரியா இருக்கு?
    அப்ப சிப்ஸ் பண்ணி பாத்தீங்களா?
    (ஜொள்ளு)

    ReplyDelete
  30. ///துளசி கோபால் said...
    வாங்க தமாம் பாலா.
    உணவின்றி உயிரேது?
    ('கோட்டி வித்தலு கூட்டுக் குறைக்கு' இது எங்க பாட்டியின் தெலுங்குப்பழமொழி)////

    ரொம்ப சரி.. நீங்க சொன்னது :))
    'தெலுங்கன் தின்னு கெட்டான்,****ன் உடுத்து கெட்டான்' என்று சொல்ல கேட்டிருக்கிறேன். புஷ் அண்ணாச்சி கூட இந்தியர்கள் ஹெவியா சாப்டுறதால வெல வாசி ஏறிடுச்சுன்னு சொல்றாரு!

    'கடுப்புலோப்பல இல்லு கட்டுகுனி கோபாலுன்னாடு,ஒக கோபலுன்னாடு அக்கட உன்ன பாண்டுரங்கடு இக்கட உன்னாடு' என்றும் ஒரு தெலுங்கு பாட்டு கேட்ட நினைவு!

    தொடரட்டும் உங்கள் நளபாகம் !!

    ReplyDelete
  31. வாங்க திவா.

    சிப்ஸ்?

    நோ ச்சான்ஸ்.

    கட்டுபடி ஆகாது:-))))

    ReplyDelete
  32. வாங்க தமாம் பாலா.

    //ஒக கோபலுன்னாடு அக்கட//

    ஆமாங்க. எப்படிக் கரெக்டாச் சொல்லிட்டீங்க.

    இல்லுகட்டுக்குன்ன கோபாலை நேனு பெள்ளி சேசுக்குண்டினி:-))))

    ReplyDelete
  33. //சிப்ஸ்?

    நோ ச்சான்ஸ்.

    கட்டுபடி ஆகாது:-))))
    //

    உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    வொய் நாட்? டேஸ்ட் மட்டும் பாருங்க. சாப்பிட வற்புறுத்தலே!

    ReplyDelete
  34. கறுப்பு, காப்பர் சல்ப்பெட், பர்ப்பிள், பஜ்ஜி, சிப்ஸ் - ஆகா - ஆகா - ஆராய்ச்சிக்கு முனைவர் பட்டம் கொடுத்து விடலாம். கண்ணில் எது பட்டாலும் அதற்கு ஒரு பதிவு - அருமையாக - வாசகர்களைக் கவர்ந்திழுக்கும் வண்னம் - வண்ணப் புகைப் படங்களோடு - போட துளசியால் மட்டும் தான் முடியும். பாராட்ட்டுகள்

    ReplyDelete
  35. தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிங்க சீனா.

    ReplyDelete
  36. திவா,


    ஹைய்யோ ஹைய்யோ....

    ReplyDelete
  37. //பர்ப்பிள் கலரைத் திங்க மனசில் கொஞ்சம் உறுதி ஏற்படுத்திக்கணும்//

    உண்மை தான் மேடம்

    ReplyDelete
  38. வாங்க கிரி.

    நாவல்பழமுன்னு நினைச்சுக்கலாமுன்னு இருக்கேன்.:-)

    இதுவும் ஒரு வகையில் நாவல்ட்டி தானே? :-)

    ReplyDelete