Thursday, May 11, 2006

லாபமும் நஷ்டமும்

ச்சும்மா ஒரு லிஸ்ட் போட்டுப் பார்த்தேன். எது கிடைக்குது எது கிடைக்காமப் போயிருச்சுன்னு.எதுலேயும் கணக்கு சரியா இருந்தாத்தானே நல்லது. அதான்.........


நஷ்டம்:


அரைப்பவுன் தங்கம்

மாசாமாசம் பத்து கிலோ அரிசி

கம்ப்யூட்டர்

மாணவமாணவிகளுக்கு இலவசப் பாடப் புத்தகம், சைக்கிள்

கந்து வட்டி ஒழிப்பு

வேலைவாய்ப்பு இல்லாத குடும்பத்துலே ஒருத்தருக்கு வேலை வாய்ப்பு

32 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்

விவசாயிகளின் கூட்டுறவு வேளான் கடன் வட்டி முழுவதும் ரத்து

அய்யோ சொல்லி மாளலை, இன்னும் ரொம்ப இருக்கு.

500 ரூபாய்க்கு பலசரக்கு சாமான்கள்

பசுமாடு


லாபம்:


கலர் டிவி

கேபிள் கனெக்ஷன்

ரெண்டு ஏக்கர் நிலம்

ரெண்டு ரூபாய்க்குக் கிலோ அரிசி

இன்னும் என்னென்னப்பா?

யாராவது சொல்லுங்களேன்.

31 comments:

  1. நஷ்ட கணக்குல கேபிள் கனேக்ஷன் மாச வாடகை ஒரு அடிசன்.

    ReplyDelete
  2. நியூசிலாந்தில் இருக்கும் உங்களுக்கு எதுக்கு அந்தக்கவலை. லாபம் அரசியல் வாதிகளுக்கு. நஷ்டம் தமிழக மக்களுக்கு.

    வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

    வீழ்வது தமிழக மக்களாக இருந்தாலும் வாழ்வது அரசியல் வாதிகளாக இருக்கட்டும்

    ReplyDelete
  3. நன்மனம்,
    நன்றிங்க.
    இந்தமுறை எக்கச்சக்க வாக்குறுதிங்களாப் போச்சா ,
    அதான் ஞாபகம் வச்சுக்க முடியலை(-:

    ReplyDelete
  4. ஏங்க சூப்பர்சுப்ரா,

    இது என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. நான் இங்கெ இருந்தாலும்
    என் சொந்தபந்தம், உடன்பிறப்புங்க, என் மக்கள் எல்லாம் அங்கேதானுங்க
    இருக்காங்க.
    அவுங்களுக்காக நான் கவலைப்படலேன்னா எப்படிங்க?

    'யாவரும் கேளிர்'

    ReplyDelete
  5. அக்கா, லாபக் கணக்குல போட்ருக்கிறதெல்லாம் நெஜமாவே குடுத்துருவாங்களா??? ;)

    ReplyDelete
  6. நஷ்டமும் லாபமும் பட்டியல் போட்டது தேர்தல் ஆரம்பித்த பிறகு தானே.உண்மையில் நடப்பது என்ன என்று எப்போதுமெ நமக்கு விளங்குமா என்பது கேள்வி தான்.

    ReplyDelete
  7. பொன்ஸ்,

    இதென்ன இப்படிக் கேட்டுட்டீங்க?
    அப்படி 'வாக்கு'க்குக் கொடுத்த 'வாக்கு'த் தவறுவாங்களா என்ன?

    ReplyDelete
  8. லாபமும் நஷ்டமும் பார்க்க இன்னமும் ஒரு 5 வருடம் பொறுத்திருக்கவேண்டும்.:)

    ReplyDelete
  9. என்னங்க வல்லி,
    உங்களுக்கும் கேள்வியா?
    அப்படி எல்லாம் ஏமாத்த மாட்டாங்க. தரேன்னா தந்துருவாங்க.

    ReplyDelete
  10. தீவு,

    போங்க. விளையாடாதீங்க.

    அஞ்சு வருசம் காத்துருக்கணுமா? அப்ப சீரியல் எப்படிப் பாக்கறது?
    சோறு எப்படித் தின்றது?

    ReplyDelete
  11. நஷ்ட லிஸ்ட்டுல இந்த ரெண்டு விட்டு போச்சுங்க...

    1.கேஸ் ஸ்டவ்
    2.தமிழக அரசை விமர்சித்து எழுதப்படும் பதிவுகள்


    :)

    ReplyDelete
  12. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை.! வோட் பொடும் முன்னாலேயும் கேட்டோம், பின்னாலும் கேட்போம்.கிடைக்குமா என்பதே இப்போதைய விசாரம் மோளே.

    ReplyDelete
  13. ஏங்க துளசி,

    இதென்னா எல்லாருக்குமா கிடைக்கப் போவுது நீங்க லாப நஷ்டம் கணக்கு பாக்க..

    இது யாருக்கு கிடைக்குதோ அதுக்குண்டான சிலவ குடுக்கறது எங்கள மாதிரி இன்கம் டாக்ஸ் கட்டற ஆளுங்கதான்.. NRIகளுக்கு எங்க கஷ்டம் எங்க தெரியப்போவுது:(

    ReplyDelete
  14. என் சொந்தபந்தம், உடன்பிறப்புங்க, என் மக்கள் எல்லாம் அங்கேதானுங்க
    இருக்காங்க.//


    ஏங்க, அவங்கல்லாம் வறுமை கோட்டுக்கு கீழயா இருக்காங்க இதெல்லாம் கிடைக்கறதுக்கு. கிடைக்கறதுக்கு தகுதி இருந்தாத்தான நஷ்டம்னு சொல்லிக்கலாம்?

    ReplyDelete
  15. கொடுத்த வாக்குகள் நாளை நிறைவேற்றப் படும். அந்த 'நாளை' எதிர்நோக்கி இருப்போம்.

    ReplyDelete
  16. நன்றி சமுத்ரா.

    நல்லவேளை விட்டுப் போனதை எடுத்துக் கொடுத்தீங்க.

    ReplyDelete
  17. வல்லி,

    நீங்க பாட்டுக்குக் கேள்வி கேட்டுக்கினே இருங்க.அதான் நம்ம உரிமை ஆச்சே.
    நமக்கெதுக்கு பதிலைப் பத்துன'விசாரம்'?

    ReplyDelete
  18. என்னெங்க டிபிஆர்ஜோ,
    இப்படி நினைச்சுட்டீங்களே(-:
    தமிழகமக்கள் எல்லாம் என் சொந்தபந்தமுன்னு இருக்கற என்னை இப்படியா...........?

    //NRIகளுக்கு எங்க கஷ்டம் எங்க தெரியப்போவுது//

    அடதேவுடா! கஷ்டத்துலே இந்த 'எங்க, உங்க' வித்தியாசம் எல்லாம் கிடையாதுங்க.
    அதுவும் இந்த 'டாக்ஸ்' விஷயத்துலே.
    இங்கே எங்க அம்மா,'கறந்துருது'. எல்லாம் 'சமூகப்பணி'க்காம்!!!!!!

    ( புதுப் படம் நல்லாவே இருக்கு)

    ReplyDelete
  19. மணியன்,
    அந்த 'நாள்'ளும் வந்திடாதோ!!!

    ReplyDelete
  20. கேள்வி கேட்பதுதான் சுகம், துளசி.நாம பதில் சொல்ல வேண்டாமே.! நம்ம கேள்வியும் வோட் போட்ட வறுமைக் கோட்டுக்காகத்தான்.அதுதான் வெய்யிலில் நின்று நம்பி வோட் Pஒட்ட மினியம்மாக்களுக்காக.. காலை வணக்கம் துளசி.

    ReplyDelete
  21. மானு,
    எனக்கும் அதே கவலைதான். ஆனா நம்ம டிபிஆர் ஜோ, என்னா கேள்வி கேட்டுட்டாரு பாருங்க.
    ஹூம்... நல்ல எண்ணத்தைப் புரிஞ்சுக்கினாச் சரி:-))))

    ReplyDelete
  22. நல்லதே சொல்லுவோம். :-}

    ReplyDelete
  23. எல்லாம் கூட்டிக் கழிச்சுப் பாத்தா கணக்கு சரியா வரும்னு சொல்லுவாங்களே!

    அது இதானா!

    நம்ம ஜோஸப் சார் என்ன இப்படி பிரிவினை பண்றாரு!??

    :-))

    ReplyDelete
  24. //2.தமிழக அரசை விமர்சித்து எழுதப்படும் பதிவுகள்
    //

    சமுத்ரா,
    எந்த ஆளுங்கட்சியா இருந்தாலும் இதுக்கு ஒரு குறைவும் வராதுன்னு தோணுது..:)

    ReplyDelete
  25. துளசி,

    என் கேள்வியை பின்வலிக்கிறேன் (தமிழ் சரியா? ஒரு வேளை இந்த வார்த்தை மலையாளமோ.. என்னவோ போங்க. ஊர் ஊரா சுத்தி இப்ப எழுதறது என்ன மொழின்னே சில சமயத்துல விளங்கமாட்டேங்குது).

    ReplyDelete
  26. டிபிஆர்ஜோ,
    இது மலையாளம்தான் போல. எனக்கும் இதே கதிதான். எல்லாம் கலந்துகட்டிப் பேசறதா ஆகிப்போச்சு.

    'தருமி'வேற தமிழ் சரியா எழுதணுமுன்னு 'சொல்லி' இருக்கார்.

    ஆமாம், நீங்க ஏன் உங்க கேள்வியை பின்வாங்கணும்/பின் இழுக்கணும்? ஏன் வாபஸ் வாங்கணும்?
    அய்யய்யோ, இது இந்தியா இல்லே உருதா?
    போட்டும்,உங்க கருத்தை நீங்க சொல்லிட்டீங்க. அது பத்தி 'விவாதம்' போகலைன்னாலும் புலம்பலாவது
    நடக்குதே! :-))))

    ReplyDelete
  27. SK,

    பாவங்க, ஜோசஃப் ஐயா. பின் வலிச்சுட்டார் பாருங்க:-)))

    ReplyDelete
  28. பொன்ஸ்,

    'தங்க மழை' நல்லா இருக்கே!

    ReplyDelete
  29. துளசி, நான் தமிழ் தான்.தமிழ் தான்.தமிழ் தான்.புலம்பினாலும்,கேட்டாலும் பதில் சொல்லும் நீவீர் வாழ்க.

    ReplyDelete
  30. மூர்த்தி,

    வாங்க வாங்க.
    இந்த 15000 வேற இருக்கா?
    மறக்கப் பார்த்தேனே! நல்லவேளை,ஞாபகப்படுத்தினீங்க.
    நன்றிப்பா

    ReplyDelete
  31. //500 ரூபாய்க்கு பலசரக்கு சாமான்கள்//
    அதவிடுங்க, இனி 'பணப் புழக்கம்' குறையுமாமே ! :)

    ReplyDelete