இன்னிக்குத்தான் விஷயம் உண்மைக்குமே விளங்குச்சு. என்னவா? ஐய்யோ, இந்தத் தமிழ்மணத்துக்குஎப்படி அடிமையாக் கிடக்குறோம்ன்றது!
காலையில் இருந்து தமிழ்மணத்தைக் 'க்ளிக்' செஞ்சுசெஞ்சு இதோ பாருங்க,ஆள்காட்டிவிரல் எப்படித்தேஞ்சுபோய் கிடக்குதுன்னு.
எப்பப்பார்த்தாலும் 'கேன்னாட் ஃபைண்ட் ......'வர்றப்ப மனசு திக்.
மழைகிட்டே மயிலை அனுப்பிக் கேட்டாச்சு. அங்கேயும் இதே கதியாம். அப்புறம் சிநேகிதி அவுங்கவழியிலே வந்து 'தமிழ்மணம் வேலை செய்யுதா?'ன்னு கேட்டாங்களா, அப்ப ஒரு அல்ப சந்தோஷம்.இடுக்கண் நமக்குமட்டுமில்லைன்னு:-))))
சரி. இப்பக் கட்டக்கடைசியா வந்து பார்த்துட்டுப் போவோமுன்னு வந்தா, ஆஹா...'ஜகஜக'ன்னு ஜொலிக்கிறார்இந்த வார நட்சத்திரம். போனவார நட்சத்திரம் எப்பப் போனார்?
போச்சு. குலுக்கல் ஒரேடியாக் குலுங்கிருச்சு போல.
ரொம்ப அடிக்ட்டா ஆயிட்டோம்பா. இப்ப என்னா செய்யறது?
இதுக்குப் போய் ஒரு பதிவான்னு யாரும் கட்டையைத் தூக்கிட்டு வராதீங்க. மனசுலே இருக்கறதைக் கொட்டலைன்னா ராத்தூக்கம் போயிறாது?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அதையேன் கேக்கறீங்க... காலைல இருந்து வேலையே ஓடலை...:)
ReplyDeleteமேலிடத்துல கேட்டா, "இன்னும் ஓரிரு மணித்துளிகளில் அதாவே வரும்னு நினைக்கிறேன்... இதுமாதிரி முன்னாடியே ஒருக்க நடந்திருக்கு"ங்கற மாதிரி ஏதோ சொல்றாங்க. நம்பகவலை அவங்களுக்கெங்க புரியும்:)
முத்தமிழ்மன்றம் பக்கம் போனா - சோதனை ஓட்டம் முடிஞ்சுது, அப்புறம் பார்க்கலாங்கறாங்க.
அப்புறம் மதி பக்கம்போய், 'தமிழ்ப்பதிவுகள்' டெக்னோகிராட்டி சுட்டியைப் பிடிச்சு கொஞ்சநேரம் ஓட்டிட்டிருந்தேன். அப்பதான் ரம்யா... என்னோட பதிவுல்ல ஒரு பின்னூட்டம் விட்டு வயத்துல பாலவார்த்தாங்க...:)
ஆதலால் நண்பர்களே "........"
நன்றி!
எல்லாம் நம்ம நட்சத்திரமான நேரம் டீச்சர். என்ன சொல்றது இதுக்கு மேல.
ReplyDeleteஅன்பு &ராகவன்,
ReplyDeleteஎல்லாம் ஒரு நன்மைக்கே!
தமிழ்மணம் எப்படி நம்ம தமிழ்மனங்களிலே இடம்புடிச்சிருக்குன்னு தெரிஞ்சுபோச்சுல்லே:-)
periyamma this is not fair...when i asked u "is thamizmanam working " u didn't respond
ReplyDeletei'm mad @ u.
அடக்கடவுளே!
ReplyDeleteசிநேகிதி,
எப்பக் கேட்டீங்க?
தமிழ்மணம் இப்ப வேலை செய்யுதே!