Friday, April 13, 2012

கணி காணும் நேரம்......

செயிண்ட் கிறிஸ்டோஃபர் சர்ச்சு முற்றத்தில் காலு குத்தும்போள் க்ருத்யம் சமயம் பந்த்ரெண்டு. ஈஸ்ட்டர் விஷூ ஆகோஷிக்கான் வரான் பரஞ்ஞுருந்நு நம்மடே கேரளா க்ளப்பின் க்ஷணக்கத்திலூடே.

நாங்க உள்ளே நுழையும்போதே, காலையில் ஆரம்பிச்ச ஈஸ்ட்டர் பெருநாள் விழா திருச்சபை நிகழ்ச்சிகள் முடிஞ்சிருந்தாலும் கூட்டம் இன்னும் கலைஞ்சு போக ஆரம்பிக்கலை. சர்வீஸ் முடிஞ்சதும் ஈஸ்டர் எக் (சாக்லேட் முட்டைகள்) ஹாட் க்ராஸ் பன், கேக், காஃபி, ஜூஸ் இதெல்லாம் வழங்க, சர்ச்சின் திருச்சபை ஏற்பாடு செஞ்சுருந்துச்சு. அவர்கள் மனம் எங்கே நொந்துபோகுமோன்னு நாங்களும் பங்கெடுத்தோம்.

எங்களுக்கு இந்த ஹாலை பகல் 12 மணிக்கு ஒதுக்கித் தந்துருந்தாங்க. அவுங்க வசதிக்கு அடுக்கி வச்சுருந்த இருக்கைகளையெல்லாம் எங்கள் வசதிக்கு மாற்ற வேண்டி இருந்தது. அதுக்குள்ளே நம்ம மக்களும் வந்து சேர ஆரம்பிச்சாங்க. பரபரன்னு எல்லோருமா ஒத்துழைச்சு ஆடியோ, மைக், சேர்ஸ், க்ளப்பின் பேனர் எல்லாம் சரியாக்கினோம். ஒரு வட்ட மேசையில் விஷுகணிக்கான ஒருக்கங்கள் செஞ்சாங்க.
இந்த ரெண்டு வருசமா க்ளப்பின் செயல்பாடுகளை எல்லாம் இளைஞர் அணிவசம் ஒப்படைச்சாச்சு. இளைய தலைமுறையும் குறை சொல்லமுடியாத விதம் நேர்த்தியா எல்லாக் காரியங்களையும் கவனிச்சுப் பார்த்து செய்வதை பெரியவங்களா லக்ஷணமா பார்த்து ரசிச்சுக்கிட்டு இருந்தோம்.

ஊரில் நடப்பது போல் அவ்ளொ சம்ப்ரதாயமா இங்கே நடத்திக்க முடியாதுன்னாலும் தேங்காய், பழங்கள், வெள்ளரி, அரி, கிருஷ்ணன் படம் & பொம்மை, நிலவிளக்கு, ஊதுபத்தின்னு ஓரளவுக்கு எல்லாம் இருந்துச்சு. சாஸ்திரத்துக்கு ஒரு சின்ன உருளிகூட இருந்துச்சுன்னா பாருங்க.

ஆடியோ செட் செஞ்சு முடிச்சதும் அருமையான பாட்டு..........

இது குருவாயூர் க்ஷேத்ர குஞ்ஞு கிருஷ்ணனுக்காக பூந்தனம் நம்பூதிரி (Poonthanam Nambudiri) இயற்றியது. விஷூ திவசம் கண்ணால் காணும் முதல் காட்சி இந்தக் கணி!

கணி காணும் நேரம் கமல நேத்ரெண்டெ
நிறமேறும் மஞ்ஞத்துகில் சார்த்தி
கனகக் கிங்கிணி வளகள் மோதிரம்
அணிஞ்ஞு காணேணும் பகவானே


மலர்வாதில் காந்தன் வசுதேவாத்மஜன்
புலர்காலே பாடி குழலூதி
சிலுசிலே என்னு கிலுங்கும் காஞ்சன
சிலம்பிட்டோடிவா கணி காணாம்

சிசுக்களாயுள்ள சகிமாரும் தானும்
பசுக்களே மேய்ச்சு நடக்கும்போள்
விசக்கும்போள் வெண்ண கவர்ந்துண்ணும் க்ருஷ்ணா
வஸத்துவா உண்ணி கணி காணாம்

பாலஸ்த்ரீகடே துகிலும் வாரிக்கொண்ட்
அரயாலின் கொம்பத்திரிருன்னோரோ
சீலக்கேடுகள் பரஞ்ஞும் பாவிச்சும்
நீலக்கார்வர்ணா கணி காணாம்


எதிரே கோவிந்தன் அரிகே வந்நொரோ
புதுமயாயுள்ள வசனங்கள்
மதுரமாம் வண்ணம் பரஞ்ஞும் தான்
மந்த ஸ்மிதவும் தூகி வா கணி காணாம்

பாட்டுப்பாடக் கொஞ்சம் வருமுன்னா பாடிப்பாருங்க. அதுக்குத்தான் வரிகளை எழுதிவச்சேன். இந்தப்பாட்டை எல்லாப்பிரபல பாடகர்களும் பாடி இருக்காங்க. (காலப்போக்கில் சின்னச்சின்ன சொல் மாற்றங்கள் இந்தப்பாடலில் வந்துருக்கு) ஆனாலும் எளிமையா இனிமையாப் பாடும் இந்த சகோதரிகளின் பாட்டு உங்களுக்காகவே:-)))

எல்லோரையும் வரவேற்று ஹேப்பி ஈஸ்ட்டர் விஷூ சொல்லிட்டு அடுத்த முக்கிய நிகழ்ச்சிக்குக் கடந்தோம். ஐட்டம் நம்பர் ஒன்னுன்னு முதல் நிகழ்ச்சி விருந்துதான். சாப்பாடு ஈஸ்டருக்கும் கலைநிகழ்ச்சிகள் விஷூவுக்கும் என்று ஒரு புரிதல்.
ஸெலின் என்ற புதிய இளைஞர் உணவு தயாரிப்புக்கான பொறுப்பை ஏற்று அருமையா உதவி இருந்தார். அவர் தலைமையில் இளைஞர் பட்டாளம் ஒன்னு முதல்நாள் இரவு இங்கே வந்து சமைச்சு வச்சுட்டுப் போயிருக்காங்க. கடந்த ரெண்டு வருசமா இங்கே 'படிக்க வரும்' இந்தியர்கள் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது. பஞ்சாப் மாநில மக்கள்தான் இதிலும் முதலிடம். ரெண்டாவது இடத்துலே இருப்பது கேரளா மாநிலம். யாருக்கும் நிலநடுக்கம் பயம் இல்லை போல!!!!! ஆனால்...தமிழ் நாட்டுலே இருந்து யாரையும் காணோம்!

கிச்சடி போல ஒரு சோறு, சிக்கன் கறி, சன்னாக்குழம்பு, காளன் என்னும் மோர்க்கறி, பப்படம், தயிர்ப்பச்சடி, ஊறுகாய், வெள்ளரி கேரட் ஸாலட் என்று தயாரிப்பு.
சாப்பாடு ஆனதும், மேடை நிகழ்ச்சிகள் தொடங்குச்சு. விழாவுக்கான ஆசிஉரை, சாமிப்பாட்டு, கோஷ்டி கானமா கொலைவெறி பாட்டு, ஏதோ ஒரு தமிழ்சினிமாப் பாட்டுக்கு ஒரு சிறுமியின் நடனம், ஒரு ஹிந்திப்பாட்டுக்கு இன்னொரு சிறுமியின் நடனம், உள்ளூரில் பரதநாட்டியம் கற்றுக்கொள்ளும் மாணவியரில் நால்வர் சேர்ந்து ஆடிய நாட்டியம்(இது விருந்தினர் நிகழ்ச்சி) இளைஞர்களின் ஓரங்க நாடகம், ஊரைவிட்டுப்போகும் ஒரு குடும்பத்துக்கான பிரிவு உபசாரம் இப்படி கலந்து கட்டுனவை.


ஆனா எந்த விழாவா இருந்தாலும் அதுலே தவறாமல் நடைபெறும் ஒரு நிகழ்ச்சி உண்டு. அது புதிய நபர்களை மேடைக்கு அழைத்து மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஐட்டம். போன விழாவுக்கும் இந்த விழாவுக்கும் இடையில் இங்கே வந்து சேர்ந்தவர்களைக் கண்டுக்க இது நல்ல வழி கேட்டோ:-). அவுங்களும் மேடையில் தங்களை அறிமுகப்படுத்திக்கிட்டு நாலு வார்த்தை பேசுவாங்க. பெஸ்ட் பார்ட் என்னன்னா.... பார்வையாளர்கள் அவுங்களிடம் குறுக்குக் கேள்விகேட்டு சில விஷயங்களைத் தெரிஞ்சுக்குவோம்! எந்த ஊர், என்ன படிக்க வந்துருக்காங்க, எந்தக் கலையில் ஆர்வம், திறமை இருக்கு இப்படி. அடுத்து வரும் விழாக்களுக்கு ஆர்ட்டிஸ்ட் சேகரம்:-)
இந்த முறை இதுலே மேடைக்கு வந்தவங்க சிலர் பழைய ஆட்கள் என்றாலும் ஊருக்குப்போய் கலியாணம் முடிச்சு மறுபாதிகளோடு திரும்பி வந்தவங்க.

மூணரைமணி அளவில் விழாவை முடிச்சோம். நல்ல கூட்டம்தான். ஏகதேசம் நூறு ஆட்கள் வந்திருந்தாங்க. அடுத்த கால்மணி நேரம் இருக்கைகளை எடுத்த இடத்தில் அடுக்குதல். பை பை சொல்லிக் கிளம்பும் நேரம் இதே ஹாலை நாலுமணிக்கு புக் செஞ்சுருந்த இன்னொரு குழு வந்து சேர ஆரம்பிச்சாங்க.
இவுங்களும் அதே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் 'நாலு மலையாளி இருந்தால் ஏழு சங்கம்' என்ற கணக்கின்படி நம்மூரில் நாலு குழுக்கள் இருக்கு இப்போதைக்கு!

நம்மது ரிஜிஸ்ட்டர்டு சங்கம் கேட்டோ! ( ஹா எந்தொரு பொங்கச்சம்!!!!) போயிட்டுப்போறது............. போங்க!

புதுவருஷம் எல்லோருக்கும் நல்லதா இருக்கணுமுன்னு பரம்பொருளை வேண்டிக்கறேன்.
www.save-malayalam.com
புத்தாண்டு, விஷூ, பைஸாகி கொண்டாடும் அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.


இன்றைய ஸ்பெஷலா கிஷ்மு பாயஸம். சம்ப்ரதாயமா இருக்கட்டுமேன்னு (நம்ம ஷார்ட்கட்டை எல்லாம் விட்டுட்டு,) உருளியில் செஞ்சேன். சிங்கையில் இருந்து கோபால் வாங்கி வந்த பஞ்சாங்கமும் படிச்சாச்சு:-))))


31 comments:

  1. ரீச்சர்
    அங்ஙன கணின்னுதான் சொல்லணுமோ? கனி இல்லையா?

    ReplyDelete
  2. நாலு மலயாளி இருந்தா ஏழு சங்கம்! இங்கதான் அப்படீன்னா போற எடத்திலும் அப்படித்தானா?

    ReplyDelete
  3. வாங்க கொத்ஸ்.

    அதே அதே! கணி ஒருக்கும்போள் 'கனி' யும் வைக்கணும், கேட்டோ:-))))

    ReplyDelete
  4. வாங்க பழனி கந்தசாமி ஐயா.

    எங்கே இருந்தால் என்ன? அவுங்கவுங்க குணவிசேஷம் விட்டுப் போகுதா சொல்லுங்க!!!!

    ReplyDelete
  5. இங்க வரவங்க அல்லாருக்கும் சென்னையிலிருந்து இனிய புத்தாண்டு தமிழ் வாழ்த்துகள் சொல்லிக்கிறேன்.
    விஷுக் கனி காண்போர்க்கும் தனியான வாழ்த்துக்கள்.

    பரம்பிதா எல்லோரையும் ரக்ஷிக்கட்டும்.

    ReplyDelete
  6. இனிய விஷயங்களைப் பகிர்ந்ததற்கு நன்றி.....

    நாலு மலையாளி - ஏழு சங்கம்.

    நமக்கும் அதுவே! :(

    பாடல் நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்டு ரசித்தேன்.

    ReplyDelete
  7. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் அனைவருக்கும்..

    'கிஷ்'+'மு'=கிஷ்மு.. ரைட்டு.

    அதை மிதக்க விட்டுர்க்கறது உங்க ஸ்பெஷலான மைசூர் பாயசம் போல இருக்கே :-)

    ReplyDelete
  8. டீச்சருக்கு மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு, விஷூ இனிய வாழ்த்துக்கள் ;-)

    கிஷ்மு பாயஸம் - எடுத்துக்கிட்டேன் ;-))

    ReplyDelete
  9. வாங்க வல்லி.

    பரம & பரம் எல்லோரையும் விட்டுறமாட்டாங்க:-)))))

    ஈஸ்வரோ ரக்ஷிது!

    ReplyDelete
  10. வாங்க வெங்கட் நாகராஜ்.

    சிம்பிள் ட்யூன்தான். ரோஷ்ணிக்குச் சொல்லிக் குடுங்க.

    ரசிப்புக்கு நன்றி.

    ReplyDelete
  11. வாங்க அமைதிச்சாரல்.

    ஆஹா..... இது 'அது' அல்ல!

    டௌரிகல்யாணத்தில் கிஷ்மு கேட்ட முழு முந்திரிப்பருப்பு போட்ட ஜவ்வரிசி பாயஸமாக்கும் கேட்டோ:-)))))

    வெல்லப்பாகு, உங்க கண்ணை ஏமாத்திருச்சு:-)

    ReplyDelete
  12. வாங்க கோபி.

    இனிப்புக் கொஞ்சம் கம்மியா இருந்திருக்குமே!

    ReplyDelete
  13. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. வாங்க காஞ்சனா,

    வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

    என்றும் அன்புடன்,
    துளசி & கோபால்

    ReplyDelete
  15. விஷு கனி படங்கள், பாடல், செய்திகள் எல்லாம் அருமை.
    பாடல் எனக்கு மிகவும் பிடித்தபாட்டு.
    உங்களுக்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    அனைவருக்கும் புத்தாண்டு, விஷூ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. பாயசம் எடுத்துகிட்டேன்.... விழா பற்றிய தகவல்களும் தெரிந்து கொண்டாச்சு.

    எங்க வீட்டிலும் விஷுக்கனி கண்டு, பாயசம், மாங்காய் பச்சடி, பஞ்சாங்கம் படித்தல் என இனிமையாக கழிந்தது.

    புத்தாண்டு வாழ்த்துகள் டீச்சர்.

    ReplyDelete
  18. ஹா எந்தொரு பொங்கச்சம்!!!!) போயிட்டுப்போறது............. போங்க!/

    இனிய நந்தன புத்தாண்டு வாழ்த்துகள்..

    ReplyDelete
  19. அனைவருக்கும் புத்தாண்டு, விஷூ இனிய வாழ்த்துகள்...

    ReplyDelete
  20. புத்தாண்டு வாழ்த்துகள்..:)

    ReplyDelete
  21. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ துளசி கோபால்.

    ReplyDelete
  22. late aa vandhaalum latestaa vandhutten.

    ungalukkum gopalukkum vishu vaazhthukkal.

    enga veetukkaararum intha paattai madhyamavathi ragathile padi kamicharu.

    meenachi paati

    ReplyDelete
  23. வாங்க கோமதி அரசு.

    நானூறு வருசத்துக்கு முந்திய பாட்டுன்னாலும் இப்பவும் அதோட பெருமை கொஞ்சம்கூடக் குறையலை பாருங்க!!!!!

    உங்களுக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  24. வாங்க மாதேவி.

    உங்களுக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  25. வாங்க ரோஷ்ணியம்மா.

    உங்களுக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள்.

    நம்மூர்லே மாங்காய் கிடைக்காது. ஆனால் மாம்பழக்கூழ் வச்சு எதாவது செஞ்சுருக்கலாம்தான்...... மாம்பழக் கூட்டான்.....

    ReplyDelete
  26. வாங்க இராஜராஜேஸ்வரி.

    உங்களுக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள்.

    இத்திரி பொங்கச்சப் பரச்சல்கூடி வேணுமாயிருந்நு:-))))

    ReplyDelete
  27. வாங்க பாசமலர்.

    உங்களுக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  28. வாங்க கயலு.

    உங்களுக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  29. வாங்க ஸாதிகா.

    வாழ்த்துகளுக்கு நன்றி சகோ!

    உங்களுக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  30. வாங்க மீனாட்சி அக்கா.

    லேட்டுன்னு ஒன்னும் இல்லைக்கா. இதைவச்சே ஒரு மாசம் ஓட்டிடலாம்:-))))

    உங்களுக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete